monsoon updates: தென்மேற்கு பருவ மழையானது வழக்கமாக கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதியே தொடங்கும். ஆனால் இம்முறை ஜூன் 7 ஆம் தேதி தான் தென்மேற்கு பருவமழையானது தொடங்கியது.இந்நிலையில் தற்போது கேரளா மற்றும் தமிழக எல்லையோரங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
குறிப்பாக கேரளாவில் எர்ணாகுளம்,திருச்சூர், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் கனமழைக்கு இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று முதல் (11.6.19) அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இன்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.40 கி.மீ முதல் 60 கிமீ வரை கடலில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபி கடலிலும் தென்மேற்கு பருவ மழை வலுப்பெற்றுள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய, அனைத்து மாவட்டங்களிலும், தென் மேற்கு பருவமழை துவங்கியுள்ளது.அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம், கேரளா, கர்நாடகாவில், அரபிக்கடல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில், கன மழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!
Tamil nadu Weather Forecast: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இருப்பினும் வட தமிழகத்தில் இன்னும் வெயில் குறைந்தபாடில்லை.
முக்கியமாக, அரபிக்கடலில் மாலத்தீவு அருகே, உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம், அரபிக் கடலில் இன்று புயலாக மாறுகிறது. புயலுக்கு, 'வாயு' என்ற, பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்றிரவு 9 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 30-40 கி.மீ வேகத்தில் காற்று, மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.
மேற்கூறிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
சென்னையைப் பொறுத்த அளவு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னைவாசிகளுக்கு, இது மேலும் சோகத்தை வரவழைத்திருக்கிறது.