Tamil Nadu Weather Updates in Tamil: அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.
சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது. புயலால் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மற்றும் பிற குழுக்கள் அனுப்பப்படவுள்ளது. தொடர்ந்து வட உள்தமிழக மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 20:37 (IST) 10 Dec 2022ஈரோடு, கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு - 30க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு
ஈரோடு, கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். பெருந்துறை அருகே உள்ள தனியார் துணி உற்பத்தி மில்லில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்
- 20:12 (IST) 10 Dec 2022திருவள்ளூர், ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவள்ளூர், ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிச்சாட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
- 19:58 (IST) 10 Dec 2022மாண்டஸ் புயலுக்கு 5 பேர் உயிரிழப்பு
மாண்டஸ் புயல் குறித்து அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மாண்டஸ் புயலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 98 கால்நடை விலங்குகள் உயிரிழந்துள்ளன. மீனவர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை.
216 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புயலால் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன” என்றார்.
- 19:54 (IST) 10 Dec 2022சென்னை விமான நிலையத்தில் 4.16 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 4.16 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
இதனை துபாயில் இருந்து கடத்தி வந்த இருவரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
- 19:50 (IST) 10 Dec 2022விஷால் படத்தின் டீசர் டிசம்பர் 12 வெளியீடு
நடிகர் விஷால் நடித்துள்ள லத்தி படத்தின் டீசர் டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் விஷால் போலீஸ் ஆக நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
- 19:46 (IST) 10 Dec 2022முத்தையா புதிய படத்தின் பெயர், “காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்”
இயக்குனர் முத்தையா தனது புதிய படத்துக்கு காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எனப் பெயரிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் கதாநாயகனாக ஆர்யா நடித்துள்ளார்.
- 19:22 (IST) 10 Dec 202212 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நாளை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவை, ஈரோடு, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் ஆகும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
- 19:21 (IST) 10 Dec 202212 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நாளை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவை, ஈரோடு, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் ஆகும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
- 19:02 (IST) 10 Dec 2022இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சர் தேர்வு
இமாச்சலப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு தேர்வாகியுள்ளார்.
துணை முதல் அமைச்சராக முகேஷ் அக்னிஹோத்தாரி தேர்வாகியுள்ளார். இதனை சத்தீஸ்கர் முதல் அமைச்சர் பூபேஷ் பாகவல் தெரிவித்தார்.
- 18:42 (IST) 10 Dec 2022சில்லா சில்லா புதிய சாதனை
அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் துணிவு. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிரக் பாடல் வெள்ளிக்கிழமை வெளியானது.
அனிருத் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 1 கோடி பார்வையை நெருங்கி புதிய சாதனை படைத்துள்ளது.
- 18:33 (IST) 10 Dec 2022ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே மெதுவாக செல்கின்றனர்.
இந்த ரம்மியமான காட்சியை காண சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.
- 18:20 (IST) 10 Dec 2022காசிமேடு படகுகள் சேதம்
சென்னை காசிமேடு துறைமுகத்தில் புயல் காரணமாக 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன.
மேலும் 200க்கும் மேற்பட்ட படகுகள் கடலி
- 17:53 (IST) 10 Dec 2022ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் தேர்வு?
ஹிமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு தேர்வாகியுள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 12ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று கடந்த முறை இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.
- 17:41 (IST) 10 Dec 2022மாண்டஸ் புயலால்மெட்ரோ நிறுவனத்தின் 3 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை அறிவித்துள்ள மெட்ரோ நிறுவனம் சென்னை, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ₨3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதடைந்துள்ளதாகவும், அதனை சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.
- 17:01 (IST) 10 Dec 2022குஜராத் முதல்வராகிறார் பூபேந்திர படேல்
குஜராத் சட்டமன்ற பாஜக குழு தலைவராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காந்தி நகரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு பூபேந்திர படேல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் குஜராத் மாநில முதல்வராவது உறுதியாகியுள்ளது
- 16:49 (IST) 10 Dec 2022பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது - அண்ணாமலை
பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு என்றும் கூறியுள்ளார்
- 16:48 (IST) 10 Dec 2022பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது - அண்ணாமலை
பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு என்றும் கூறியுள்ளார்
- 15:51 (IST) 10 Dec 2022உக்ரைனில் 1,100 இந்திய மாணவர்கள்!
மருத்துவ கல்வியைத் தொடர மீண்டும் இந்திய மாணவர்கள் உக்ரைன் திரும்புகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் எடுத்துள்ளதா? என்ற கேள்விக்கு, உக்ரைனில் இப்போதும் 1,100 இந்திய மாணவர்கள் உள்ளனர் என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
- 15:50 (IST) 10 Dec 2022தமிழ்நாட்டில் 77,656 பேர் தற்கொலை!
கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில், 2.50 லட்சம் பேர் 18-29 வயதுடையவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் மட்டும் 77,656 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 15:15 (IST) 10 Dec 2022காசிமேட்டில் ஜெயக்குமார் ஆய்வு!
சென்னை காசிமேடு துறைமுகத்தில் புயல் பாதிப்பை ஆய்வு செய்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
- 15:13 (IST) 10 Dec 20221214 நாட்களுக்கு பிறகு ஒருநாள் சதமடித்த விராட் கோலி!
வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தனது 72வது சர்வதேச ஒருநாள் சதத்தை விளாசினார் விராட் கோலி. இந்த சதத்தை 1214 நாட்களுக்கு பிறகு பதிவு செய்துள்ளார்.
92 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவிதத்தார்.
- 15:10 (IST) 10 Dec 2022மெரினாவை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்!
போலீசாரின் தடுப்பை மீறி கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் மெரினாவை நோக்கி படையெடுத்துவருவதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
மெரினா மணல் பரப்பில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பொதுமக்கள் ஆட்டம்போட்டு வருகின்றனர்.
- 15:05 (IST) 10 Dec 2022துப்புரவு பணியாளர்களுக்கு மழை பாதுகாப்பு ஆடைகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சியில் 103 துப்புரவு பணியாளர்களுக்கு மழை பாதுகாப்பு ஆடைகளை நகர்மன்ற தலைவர் டி.என்.முருகன் வழங்கினார்.
- 15:05 (IST) 10 Dec 2022ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழப்பு!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 15:03 (IST) 10 Dec 2022ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழப்பு!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 14:48 (IST) 10 Dec 2022மாண்டஸ் புயல் பாதிப்பு: தென்சென்னையில் முதல்வர் ஆய்வு!
மாண்டஸ் புயல், மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின். கொட்டிவாக்கத்தில் புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்பு, சேதங்களை பார்வையிடுகிறார்.
- 14:47 (IST) 10 Dec 2022இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன்!
வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தனது முதலாவது சர்வதேச ஒருநாள் சதத்தை விளாசிய இந்திய தொடக்க வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். அவர் 126 பந்துகளில் 23 பவுண்டரி, 9 சிக்சருடன் 210 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார்.
சச்சின், சேவாக், ரோகித்துக்கு பிறகு இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றுள்ளார்.
- 13:44 (IST) 10 Dec 2022மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளாது
- 13:30 (IST) 10 Dec 2022வலுவிழக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் 96 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 13:29 (IST) 10 Dec 2022ஸ்டாலின் ஆலோசனை
மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- 12:55 (IST) 10 Dec 2022உடனடியாக நிவாரணம்
மாண்டஸ் புயல் பாதிப்பில் இருந்து சென்னை முழுமையாக மீண்டுள்ளது. மாண்டஸ் புயல் தாக்கத்தால் பெரிய அளவில் சேதம் இல்லை, புயல் சேத விவரங்கள் முழுமையாக கணக்கிட்ட பிறகு, உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 12:44 (IST) 10 Dec 2022மாலைக்குள் மின் விநியோகம்
சென்னை, காசிமேட்டில் புயல், மழை பாதித்த இடங்களில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், இன்று மாலைக்குள் முழுமையாக மீண்டும் மின் விநியோகம் கொடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
- 12:15 (IST) 10 Dec 2022ஈஞ்சம்பாக்கம் பகுதியில் ஸ்டாலின் ஆய்வு
மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்
மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்ட்-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார். pic.twitter.com/JGV4SRfHxx
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 10, 2022 - 12:11 (IST) 10 Dec 2022கொட்டிவாக்கம் பகுதியில் முதல்வர் ஆய்வு
சென்னையில் கொட்டிவாக்கம் பகுதியில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
- 12:02 (IST) 10 Dec 2022பிள்ளை சாவடி பகுதியில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
புயல், மழையால் பாதிக்கப்பட்ட பிள்ளை சாவடி பகுதியில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
ஆய்வுக்கு பிறகு அமைச்சர் பொன்முடி- செய்தியாளர் சந்திப்பு
மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்
உடனடியாக கற்கள் கொட்டி கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடல் அரிப்பை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
- 11:21 (IST) 10 Dec 2022வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு
3வது ஒருநாள் கிரிக்கெட் - இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு
முதல் இரு போட்டிகளிலும் வென்று ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்றுள்ளது
- 11:20 (IST) 10 Dec 2022தேவனேரி பகுதியில் சிமெண்ட் சாலைகள் சேதம்
புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசியதால் மாமல்லபுரத்தில் மின்கம்பங்கள் சேதம் .
தேவனேரி பகுதியில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடை
அலைகள் பலத்த சீற்றத்துடன் கரைப்பகுதியை நோக்கி வந்ததால் கடல் அரிப்பு.
ராட்சத அலைகள் தாக்கியதால் தேவனேரி பகுதியில் சிமெண்ட் சாலைகள் சேதம்.
- 11:20 (IST) 10 Dec 2022சைதாப்பேட்டையில் சுவர் இடிந்து பெண் பலி
சைதாப்பேட்டையில் சுவர் இடிந்து பெண் பலி
சென்னை, சைதாப்பேட்டையில் புயலின் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து
- 11:19 (IST) 10 Dec 2022சிறுவளையம் ஏரி நிரம்பி சாலையில் வெள்ளம்
மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு ராணிப்பேட்டையில் வெளுத்து வாங்கிய பலத்த மழை
சிறுவளையம் கிராமத்தில் முக்கிய சாலை வெள்ளநீரில் மூழ்கியதால் மக்கள் அவதி
சாலையை மூழ்கடித்து வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
சிறுவளையம் ஏரி நிரம்பி சாலையே தெரியாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
- 10:33 (IST) 10 Dec 2022அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு - சேகர்பாபு
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு
மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன
400க்கும் மேற்பட்ட மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
வடசென்னையை பொறுத்தவரை மிக குறைந்த அளவிலான மக்களே முகாம்களில் தங்க வைப்பு
பாதுகாப்பு காரணங்களுக்காக தான் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் சேகர்பாபு
- 10:32 (IST) 10 Dec 20228 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
- 10:17 (IST) 10 Dec 2022இன்று 3வது ஒருநாள் போட்டி
3வது ஒருநாள் - இந்தியா Vs வங்கதேசம்
3வது ஒரு நாள் கிரிக்கெட் - வங்கதேசம், இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை
- 10:08 (IST) 10 Dec 2022தென்சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
மாண்டஸ் புயல், மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தென்சென்னையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்
- 09:50 (IST) 10 Dec 2022மாண்டஸ் புயல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
மாண்டஸ் புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
சென்னை, தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
புயல் பாதிப்பு நிலவரம், நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இன்று அல்லது நாளை புயல் பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல்.
- 09:00 (IST) 10 Dec 2022வண்டலூர் பூங்கா இன்று மூடல்
வண்டலூர் பூங்கா இன்று மூடல் மாண்டஸ் புயல் எதிரொலி - வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடல் - பூங்கா நிர்வாகம் அறிவிப்ப
- 08:51 (IST) 10 Dec 2022வண்டலூர் பூங்கா இன்று மூடல்
மாண்டஸ் புயல் எதிரொலி - வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடல் - பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
- 08:50 (IST) 10 Dec 2022சென்னையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
சென்னையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு. லட்சுமி(45), ராஜேந்திரன்(25) ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு .
- 08:50 (IST) 10 Dec 2022சென்னையில் இயல்புநிலை திரும்பியது
சென்னையில் இயல்புநிலை திரும்பியது. மாண்டஸ் புயல் கரையை கடந்த பின் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது சென்னை
- 08:49 (IST) 10 Dec 2022“இன்று மதியத்திற்குள் சீரான மின்விநியோகம்“
இன்று பிற்பகலுக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் - அமைச்சர் செந்தில்பாலாஜி மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிப்பு
- 07:33 (IST) 10 Dec 2022மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இன்று பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க உள்ளது - வானிலை ஆய்வு மையம்
- 07:32 (IST) 10 Dec 2022மாண்டஸ் புயல் - விமான சேவையில் மாற்றம்
மாண்டஸ் புயல் எதிரொலியாக நள்ளிரவில் சென்னை வந்த 7 விமானங்கள் ஐதராபாத், பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 20 விமானங்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு காலதாமதமாக புறப்பாடு
- 22:50 (IST) 09 Dec 2022ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
அனைத்து அலுவலர்களும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும்" "பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனே அகற்ற நடவடிக்கை தேவை" "பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" புயல், மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
- 22:17 (IST) 09 Dec 2022மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. புயலின் வெளிப்புற பகுதி தற்போது கரையை கடந்து வருகிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் கண் பகுதி கரையை கடக்க தொடங்கும் புயல் கரையை நெருங்கியதால் தரைக்காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது
மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது கரையை கடக்க துவங்கியுள்ள மாண்டஸ் புயலின் சூறைக்காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 22:16 (IST) 09 Dec 2022மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்
கனமழை மற்றும் சூறாவளி காரணமாக சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டள்ளது.
- 21:34 (IST) 09 Dec 2022பன்னாட்டு விமான சேவை ரத்து
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து 6 பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 27 உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 20:57 (IST) 09 Dec 2022மாண்டஸ் புயல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
மின் துண்டிப்பு ஏற்பட்டால், மாற்றாக ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்களை போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகளில் ஐசியூ, வெண்டிலேட்டர், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
பாதிப்பு அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் ஆம்புலன்சுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- 20:55 (IST) 09 Dec 2022மாமல்லபுரத்தை நெருங்கும் புயல் : கடல் சீற்றம் அதிகரிப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், மாமல்லபுரத்தை நெருங்கும் நிலையில், நள்ளிரவு கரையை கடக்கிறது. இதனிடையே மாண்டஸ் புயல் காணமாக வட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
- 20:26 (IST) 09 Dec 2022அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அடுத்த 3 மணி நேரத்திற்கு பல்லாவரம், ஆலந்தூர், எழும்பூர், கிண்டி, வாலாஜாபாத், மாம்பலம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், வேளச்சேரி, மாதவரம் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 20:21 (IST) 09 Dec 2022புயல் கரையை கடக்கும் நேரம்; அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் முக்கிய அப்டேட்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “இன்று இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 3 மணிக்குள் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
- 20:04 (IST) 09 Dec 2022மாமல்லபுரத்தை நெருங்கும் 'மாண்டஸ்' புயல்
மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 20:02 (IST) 09 Dec 2022டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக வனத்துறை சார்ந்த பணிகளுக்கு நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
- 20:01 (IST) 09 Dec 2022சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தம்
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைசாலை வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மற்ற இடங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- 19:16 (IST) 09 Dec 2022மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் ஆய்வு
சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
- 19:04 (IST) 09 Dec 2022வெளியானது அஜித்தின் துணிவு சில்லா சில்லா பாடல்
அஜித்குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் துணிவு. ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் முதல் சிங்கிள் டிராக் பாடல் சில்லா சில்லா வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார்.
- 18:54 (IST) 09 Dec 2022பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் மு.க. ஸ்டாலின் ஆய்வு
மாண்டஸ் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் முக. ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
- 18:52 (IST) 09 Dec 2022மெரினா கடற்கரையில் கடல்அலை சீற்றம்
மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.
- 18:26 (IST) 09 Dec 2022அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெங்கு மழை பெய்யும்?
வண்டலூர், செய்யூர், குண்மிடிப்பூண்டி, திருக்கழுக்குன்றம், உத்தரமேரூர், அமைந்தகரை, அயனாவரம், செங்கல்பட்டு, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- 18:12 (IST) 09 Dec 2022கோடியக்கரையில் 200 அடி கடல் உள்வாங்கியது
மாண்டஸ் புயல் உருவாகியுள்ள நிலையில் நாகப்பட்டினம் கோடியக்கரையில் கிட்டத்தட்ட 200 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
- 18:01 (IST) 09 Dec 2022மல்லிபட்டினத்தில் உள்வாங்கிய கடல்
மாண்டஸ் புயல் உருவாகியுள்ள நிலையில் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மல்லிபட்டினம் துறைமுகத்தில் கிட்டத்தட்ட 15 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
- 17:54 (IST) 09 Dec 2022சென்னை, மாமல்லபுரத்தில் கடல் அலைகள் சீற்றம்
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, மாமல்லபுரத்தில் கடல் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றன.
இதுவரை 10-12 கி.லோ மீட்டர் வேகத்தில் மணிக்கு நகர்ந்துவந்த புயல் தற்போது மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது.
- 17:46 (IST) 09 Dec 2022கள்ளக் குறிச்சி மாவட்டத்துக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
- 17:37 (IST) 09 Dec 2022சென்னையை நெருங்கிய மாண்டஸ் புயல்
மாமல்லபுரத்தில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 17:30 (IST) 09 Dec 2022மாண்டஸ் புயல்.. மின்சாரம் நிறுத்தப்படுமா?
சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும். மாண்டஸ் புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மின்சார அறிக்கைகள் வெளியாகின. அதில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சார விநியோகம் அளிக்கப்படும்.
காற்று அதிகமாக வீசும் இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் மீண்டும் விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
- 17:05 (IST) 09 Dec 2022மாண்டஸ் புயல் எதிரொலி: அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
- 16:36 (IST) 09 Dec 2022மாண்டஸ் புயல் எதிரொலி: அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்
அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், வேலூர், நீலகிரி, தென்காசி, விருதுநகர், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 16:33 (IST) 09 Dec 2022சென்னை புறநகர் ரயில்கள் இயங்கும் - தெற்கு ரயில்வே தகவல்
மாண்டஸ் புயல் இரவு கரையைக் கடக்க உள்ள நிலையில், சென்னை புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தகவல்
- 16:30 (IST) 09 Dec 2022சென்னை மண்டல பேரிடர் தடுப்பு மையம் 24 மணி நேரமும் இயங்கும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
மாண்டஸ் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள புறநகர் ரயில்பாதை, மேம்பாலங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளது, மேலும் சென்னை மண்டல பேரிடர் தடுப்பு மையம் 24 மணி நேரமும் இயங்கும்;
ரயில் பயணிகளுக்கான உதவி எண்கள்,
044-25330714; 044-25330952 - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- 16:29 (IST) 09 Dec 2022புயல் கரையைக் கடக்கும் வரை மக்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?
புயல் கரையைக் கடக்கும் வரை மக்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்வி சான்றிதழ் ஆகிய முக்கியமானவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான அத்தியாவசியப் பொருட்கள், பால், காய்கறி உள்ளிட்டவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். முகாம்களில் பாதுகாப்பாக தங்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும்போது பாதிப்பு வரும்வரை காத்திருக்காமல் முன்கூட்டியே அங்கே போய் தங்கிக்கொள்ள வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் முகநூல், ட்விட்டர் பக்கங்களில் டி.என். ஸ்மார்ட் செயலியின் மூலம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவுரைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி, தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும். எரிவாயு கசியாதபடி சிலிண்டரை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும்போது, ஜன்னல், வாசல் கதவுகள், சரியாக மூடப்பட்டுள்ளதா என உறுதி செய்துகோள்ளுங்கள். வீட்டின் மின் இணைப்பு, சுவிட்சுகள், அணைக்கப்பட்டதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பினிகள் உரிய மருந்துகளை தவறாமல் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டார்ச் லைட், குடிநீர், மருந்து அடங்கிய அவசர உதவிப் பெட்டகம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் கரையைக் கடக்க உள்ளதால், கடற்கரைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும், தேவையில்லாமல் சாலையில் செல்வதைத் தவிர்க்க வேண்டும், புயலை செல்ஃபி எடுப்பது தவிர்க்க வேண்டும்.
- 16:12 (IST) 09 Dec 2022மாண்டஸ் புயல்: கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 16:09 (IST) 09 Dec 2022மாண்டஸ் புயல் காரணமாக வெறிச்சோடிய சென்னை இ.சி.ஆர் சாலை
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இ.சி.ஆர் சாலையில் போக்குவரத்து குறைவாக உள்ளது. இதனால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் இ.சி.ஆர் சாலை, தற்போது மாண்டஸ் புயல் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
- 16:07 (IST) 09 Dec 2022மாண்டஸ் புயல் எதிரொலி: கடல் கொந்தளிப்பால் கடல் நீரில் மூழ்கிய சாலைகள்
மாண்டஸ் புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முதல் காட்டுப்பள்ளி வரை சாலைகள் கடல் நீரில் மூழ்கி உள்ளன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
- 16:03 (IST) 09 Dec 2022மாண்டஸ் புயல் எதிரொலி; நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15:58 (IST) 09 Dec 2022சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15:56 (IST) 09 Dec 2022கனமழை: 15 மவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்... 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்!
மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பொழியும் என தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் என 15 மாவட்டங்களுக்கு 15 மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதே போல, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- 15:50 (IST) 09 Dec 2022வேலூர், செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் ,செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15:49 (IST) 09 Dec 2022காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் டிச. 10-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் டிசம்பர் 10-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15:45 (IST) 09 Dec 2022சென்னையில் வீசும் பலத்த காற்று; ஜார்ஜ் கோட்டை தேசிய கொடி சேதம்
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி சேதம் அடைந்தது.
- 15:42 (IST) 09 Dec 2022மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல்
மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.
இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 14:39 (IST) 09 Dec 2022மாண்டஸ் புயல் - 25 விமான சேவை ரத்து!
மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமானநிலையத்தில் 25 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 14:36 (IST) 09 Dec 2022அச்சுறுத்தும் மாண்டஸ் புயல்... எப்போது கரையை கடக்கும்?
நேற்று முதல் மக்களை அச்சுறுத்தி வரும் மாண்டஸ் புயல் இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 14:26 (IST) 09 Dec 2022"மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும்": மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு!
"மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும்." என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 14:25 (IST) 09 Dec 2022'மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்' - சென்னை காவல் ஆணையர்!
"மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்; தேவையான மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கான குழுக்கள் என அனைவரும் தயாராக உள்ளனர்.
புயல் கரையை கடக்கும் முன்பாகவே மீட்பு குழுவினர் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர்." என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
- 14:02 (IST) 09 Dec 2022புதுச்சேரி - சென்னை இடையே பேருந்து சேவை ரத்து!
புதுச்சேரியில் இருந்து சென்னை மற்றும் காரைக்காலுக்கு இயக்கப்படும் புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
- 13:37 (IST) 09 Dec 20221 1/2 கிமீ அணிவகுத்த கார்கள்!
சென்னை விமான நிலையத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை கார்கள் அணிவகுத்து நின்று வருகின்றன.
மல்டிலெவல் கார் பார்கிங்கில் செயல்படும் கட்டண சாவடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மழையால் விமானத்தை தவறவிடக்கூடாது என முன்கூட்டியே வரும் பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.
- 13:23 (IST) 09 Dec 2022'180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது': சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. "இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும். இன்று மதியம் முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். இன்று மணிக்கு 70 கி.மீ. வேகம் வரை காற்று வீசும்
கரையை கடந்த 3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும். இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்." என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
- 13:01 (IST) 09 Dec 2022பேருந்துகள் இன்றிரவு இயங்காது
மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இன்றிரவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 13:01 (IST) 09 Dec 2022ஆம்னி பேருந்துகள் இயங்கும்
ஆம்னி பேருந்துகள் இன்றிரவு வழக்கம்போல் இயங்கும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் அறிவித்துள்ளார். "ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், வார இறுதிநாள் என்பதாலும், பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 12:37 (IST) 09 Dec 20223 ஏரிகள் திறப்பு
மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய 3 ஏரிகளில் இருந்து தலா 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
- 12:37 (IST) 09 Dec 2022தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதைத் தவிர்க்கவும்; நீர் நிலைகள் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 12:27 (IST) 09 Dec 2022சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்க உள்ள நிலையில் மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 11:52 (IST) 09 Dec 2022அதி கனமழை எச்சரிக்கை
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது. இதனால் சென்னையை ஒட்டிய மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 11:52 (IST) 09 Dec 2022உள்வாங்கிய கடல்
தூத்துக்குடி பீச் ரோட்டில் சுமார் 30 அடி தூரம் வரை கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- 11:51 (IST) 09 Dec 2022மயிலாடுதுறையில் கடல் சீற்றம்
மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி கிராமத்த்தில் 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுகிறது. வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 11:51 (IST) 09 Dec 2022பேருந்துகள் இயக்கப்படாது
கடற்கரை ஒட்டிய பகுதிகள், அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படாது என போக்குவரத்து துறை கூறியுள்ளது.
- 11:21 (IST) 09 Dec 202210 வீடுகள் இடிந்து சேதம்
மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக மரக்காணம் அருகே கடல் சீற்றம் காரணமாக 10 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
- 11:19 (IST) 09 Dec 2022ரெட் அலர்ட்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுவைக்கு அடுத்த சில மணி நேரம் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- 11:19 (IST) 09 Dec 2022சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்
மாண்டஸ் புயல் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
- 10:34 (IST) 09 Dec 20225ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
மாண்டஸ் புயல் எதிரொலி - கடலூரில் தரைக்காற்று வேகம் அதிகரிப்பு கடலோர பகுதிகளில் 60கி.மீ. வேகத்தில் வீசும் காற்று கடலூர் துறைமுகத்தில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- 10:34 (IST) 09 Dec 2022ழல் ஆகிய ஏரிகளில் இருந்தும் தலா 100 கனஅடி உபரி நீரை வெளியேற்ற முடிவு
செம்பரம்பாக்கம்-புழல் ஏரிகள் இன்று திறப்பு செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரு ஏரிகள் மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறப்பு சென்னையில் மழை தொடர்வதால்,ஏரிகளை திறக்க பொதுப்பணித்துறை திட்டம் செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்தும் தலா 100 கனஅடி உபரி நீரை வெளியேற்ற முடிவு
- 09:29 (IST) 09 Dec 2022தீவிர புயலாக உள்ள மாண்டஸ்
தீவிர புயலாக உள்ள மாண்டஸ், சென்னையில் இருந்து 270 கி.மீ தொலைவில் உள்ளது; அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் வடமேற்கு திசையில் நகர்ந்துவரும் இப்புயல், இன்று நள்ளிரவு - நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் .
- 09:28 (IST) 09 Dec 20227 விமானங்கள் ரத்து
சென்னையில் இருந்து 7 விமானங்கள் ரத்து; கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா, மும்பை செல்லும் விமானங்கள் ரத்து கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா நகரங்களில் இருந்து வரும் விமானங்களும் ரத்து காற்றின் வேகத்தை பொறுத்து விமான போக்குவரத்து இருக்கும் என தகவல்.
- 09:28 (IST) 09 Dec 2022கடல் நீர் உள்ளே புகும் அபாயம்
நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் மாண்டஸ் புயலால், கடல் கொந்தளிப்பு கடல் சீற்றத்தால் மீனவர்கள் அச்சம்; 20க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் உள்ளே புகும் அபாயம்
- 09:27 (IST) 09 Dec 2022அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்
தீவிர புயலாக உள்ள மாண்டஸ், அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் - வானிலை ஆய்வு மையம்
- 09:07 (IST) 09 Dec 2022புயல் குறித்த அப்டேட்
mandous update pic.twitter.com/9czGizdHHJ
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 9, 2022 - 07:14 (IST) 09 Dec 2022விடுமுறை அறிவிப்பு
புயல் எச்சரிக்கையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
- 07:14 (IST) 09 Dec 2022நடைபயிற்சிக்கு அனுமதி இல்லை
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு தடை. தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு இதே போல் மாநகராட்சி பூங்காக்களிலும் நடைபயிற்சிக்கு அனுமதி இல்லை.
- 07:13 (IST) 09 Dec 2022அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
- 07:13 (IST) 09 Dec 2022விடுமுறை அறிவிப்பு
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச. 09) விடுமுறை அறிவிப்பு
- 07:12 (IST) 09 Dec 2022மழை நிலவரம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்குன்றம், பொன்னேரியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஆவடியில் 3 செ.மீ, பூவிருந்தவல்லி, சோழவரம், தாமரைப்பாக்கம் பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
- 07:12 (IST) 09 Dec 2022விடுமுறை அறிவிப்பு
புயல் எச்சரிக்கையால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு
- 22:48 (IST) 08 Dec 2022தீவிர புயலாக வலுப்பெற்றது மாண்டஸ்
வங்க கடலில் தென்கிழக்கே நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல்
- 22:47 (IST) 08 Dec 2022திருவள்ளுவர் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
மாண்டஸ் புயல் - டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாளை நடைபெற இருந்த டிப்ளமா தேர்வுகள் 16ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
- 22:46 (IST) 08 Dec 2022திருவள்ளுவர் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
மாண்டஸ் புயல் - டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாளை நடைபெற இருந்த டிப்ளமா தேர்வுகள் 16ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
- 21:42 (IST) 08 Dec 2022மாண்டஸ் புயல் : கடல் அலை 14 அடி உயரம் எழும்பும் என எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளைய தினம் செனையில் கடல் அலைகள் 14 அடி உயரம் வரை எழும்பும் என்று கூறப்படுகிறது. மேலும் புயல் கரையை கடக்கும்போது கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் பொதுக்கள் எச்சரக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
- 20:27 (IST) 08 Dec 2022மாண்டஸ் புயல் எச்சரிக்கை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் நாளை(9.12.2022) 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- 20:23 (IST) 08 Dec 2022சென்னையில பூங்காக்கள் - விளையாட்டு திடல்கள் மூடல்
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
- 19:42 (IST) 08 Dec 2022மாண்டஸ் புயல் - சென்னை மக்களின் அவசர தேவைக்கான எண்கள் அறிவிப்பு
மாண்டஸ் புயல் - சென்னை மக்களின் அவசர தேவைக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913, 044-2561 9206, 044-2561 9207, 044-2561 9208, 9445477205 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 19:07 (IST) 08 Dec 2022மாண்டஸ் புயல் எச்சரிச்கை : மெரினா கடற்கரையில் இருந்து மக்கள் வெளியேற்றம்
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், மக்கள் யாரும் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- 19:04 (IST) 08 Dec 2022மாண்டஸ் புயல் எச்சரிக்கை : அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நடைபெறும் மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பல்கலைகழக நிர்வாகம் கூறியுள்ளது.
- 18:42 (IST) 08 Dec 2022புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (9.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
- 18:41 (IST) 08 Dec 2022"புயலை எதிர்கொள்ள 12 குழுக்கள் தயார்"
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 18:40 (IST) 08 Dec 2022புயல் எச்சரிக்கை : பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள்
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
- 18:37 (IST) 08 Dec 2022புயல் எச்சரிக்கை : இரவு நேர பேருந்துகளை இயக்க தடை
புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேர பேருந்துகளை இயக்கக்கூடாது எனவும், போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 17:29 (IST) 08 Dec 2022கமழை எச்சரிக்கை: தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தமிழகத்தில் நாளை(9.12.2022) சென்னை, திருவள்ளூர்,கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர்,செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
- 08:49 (IST) 08 Dec 2022சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம்
காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம். புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே நாளை புயல் கரையை கடக்க வாய்ப்பு - வானிலை மையம்
- 08:47 (IST) 08 Dec 2022இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
- 17:52 (IST) 07 Dec 20229 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு தயார்
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தயார் நிலை வைக்கப்பட்டுள்ளது.
- 17:16 (IST) 07 Dec 2022அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் கனமழை
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து சென்னையை நோக்கி வருவதனால், தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும்.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- 15:20 (IST) 07 Dec 2022கடலூர், மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இன்று மாலை வலுபெறக்கூடும் புயலின் காரணமாக, நாளை (டிசம்பர் 8) அன்று கடலூர், மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
- 15:08 (IST) 07 Dec 2022தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னைக்கு வருகை
சென்னையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை வரவிருப்பதால், கனமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
- 13:14 (IST) 07 Dec 2022சென்னையை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னைக்கு 770 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி வருவதால், இன்று மாலை புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 12:34 (IST) 07 Dec 2022மோட்டார் களை தயாராக வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு
அடுத்து வரவிருக்கும் கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் மாதம் பெய்ய கனமழையினால், மழைநீர் தேங்கிய இடங்களுக்கு மோட்டார்கள் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.
- 12:19 (IST) 07 Dec 2022பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை கனமழைக்கு வாய்ப்பு
தமிழக கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் டிசம்பர் 08ஆம் தேதி, பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை கனமழை முதல் மிதமான கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- 11:01 (IST) 07 Dec 2022வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது
புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து, நாளை புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
- 10:31 (IST) 07 Dec 2022சென்னை கடற்கரைகளில் சீற்றத்துடன் காணப்படும் கடல் அலைகள்
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது.
பட்டினப்பாக்கம் கடற்கரையில் இயல்பை விட மூன்று அடி கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.