Tamil Nadu Weather Updates in Tamil: அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.
சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது. புயலால் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மற்றும் பிற குழுக்கள் அனுப்பப்படவுள்ளது. தொடர்ந்து வட உள்தமிழக மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஈரோடு, கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். பெருந்துறை அருகே உள்ள தனியார் துணி உற்பத்தி மில்லில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்
திருவள்ளூர், ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிச்சாட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மாண்டஸ் புயல் குறித்து அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மாண்டஸ் புயலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 98 கால்நடை விலங்குகள் உயிரிழந்துள்ளன. மீனவர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை.
216 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புயலால் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன” என்றார்.
சென்னை விமான நிலையத்தில் 4.16 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
இதனை துபாயில் இருந்து கடத்தி வந்த இருவரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நடிகர் விஷால் நடித்துள்ள லத்தி படத்தின் டீசர் டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் விஷால் போலீஸ் ஆக நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
இயக்குனர் முத்தையா தனது புதிய படத்துக்கு காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எனப் பெயரிட்டுள்ளார்.
இந்தப் படத்தின் கதாநாயகனாக ஆர்யா நடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அவை, ஈரோடு, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் ஆகும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இமாச்சலப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு தேர்வாகியுள்ளார்.
துணை முதல் அமைச்சராக முகேஷ் அக்னிஹோத்தாரி தேர்வாகியுள்ளார். இதனை சத்தீஸ்கர் முதல் அமைச்சர் பூபேஷ் பாகவல் தெரிவித்தார்.
அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் துணிவு. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிரக் பாடல் வெள்ளிக்கிழமை வெளியானது.
அனிருத் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 1 கோடி பார்வையை நெருங்கி புதிய சாதனை படைத்துள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே மெதுவாக செல்கின்றனர்.
இந்த ரம்மியமான காட்சியை காண சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் புயல் காரணமாக 100க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன.
மேலும் 200க்கும் மேற்பட்ட படகுகள் கடலி
ஹிமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு தேர்வாகியுள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 12ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று கடந்த முறை இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.
மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை அறிவித்துள்ள மெட்ரோ நிறுவனம் சென்னை, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ₨3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதடைந்துள்ளதாகவும், அதனை சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.
குஜராத் சட்டமன்ற பாஜக குழு தலைவராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காந்தி நகரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு பூபேந்திர படேல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் குஜராத் மாநில முதல்வராவது உறுதியாகியுள்ளது
பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு என்றும் கூறியுள்ளார்
மருத்துவ கல்வியைத் தொடர மீண்டும் இந்திய மாணவர்கள் உக்ரைன் திரும்புகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் எடுத்துள்ளதா? என்ற கேள்விக்கு, உக்ரைனில் இப்போதும் 1,100 இந்திய மாணவர்கள் உள்ளனர் என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில், 2.50 லட்சம் பேர் 18-29 வயதுடையவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் மட்டும் 77,656 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் புயல் பாதிப்பை ஆய்வு செய்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தனது 72வது சர்வதேச ஒருநாள் சதத்தை விளாசினார் விராட் கோலி. இந்த சதத்தை 1214 நாட்களுக்கு பிறகு பதிவு செய்துள்ளார்.
92 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவிதத்தார்.
போலீசாரின் தடுப்பை மீறி கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் மெரினாவை நோக்கி படையெடுத்துவருவதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
மெரினா மணல் பரப்பில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பொதுமக்கள் ஆட்டம்போட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சியில் 103 துப்புரவு பணியாளர்களுக்கு மழை பாதுகாப்பு ஆடைகளை நகர்மன்ற தலைவர் டி.என்.முருகன் வழங்கினார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாண்டஸ் புயல், மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின். கொட்டிவாக்கத்தில் புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்பு, சேதங்களை பார்வையிடுகிறார்.
வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தனது முதலாவது சர்வதேச ஒருநாள் சதத்தை விளாசிய இந்திய தொடக்க வீரர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். அவர் 126 பந்துகளில் 23 பவுண்டரி, 9 சிக்சருடன் 210 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார்.
சச்சின், சேவாக், ரோகித்துக்கு பிறகு இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளாது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் 96 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாண்டஸ் புயல் பாதிப்பில் இருந்து சென்னை முழுமையாக மீண்டுள்ளது. மாண்டஸ் புயல் தாக்கத்தால் பெரிய அளவில் சேதம் இல்லை, புயல் சேத விவரங்கள் முழுமையாக கணக்கிட்ட பிறகு, உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, காசிமேட்டில் புயல், மழை பாதித்த இடங்களில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், இன்று மாலைக்குள் முழுமையாக மீண்டும் மின் விநியோகம் கொடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்
மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்ட்-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார். pic.twitter.com/JGV4SRfHxx
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 10, 2022
சென்னையில் கொட்டிவாக்கம் பகுதியில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
புயல், மழையால் பாதிக்கப்பட்ட பிள்ளை சாவடி பகுதியில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
ஆய்வுக்கு பிறகு அமைச்சர் பொன்முடி- செய்தியாளர் சந்திப்பு
மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்
உடனடியாக கற்கள் கொட்டி கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடல் அரிப்பை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
3வது ஒருநாள் கிரிக்கெட் – இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு
முதல் இரு போட்டிகளிலும் வென்று ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்றுள்ளது
புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசியதால் மாமல்லபுரத்தில் மின்கம்பங்கள் சேதம் .
தேவனேரி பகுதியில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடை
அலைகள் பலத்த சீற்றத்துடன் கரைப்பகுதியை நோக்கி வந்ததால் கடல் அரிப்பு.
ராட்சத அலைகள் தாக்கியதால் தேவனேரி பகுதியில் சிமெண்ட் சாலைகள் சேதம்.
சைதாப்பேட்டையில் சுவர் இடிந்து பெண் பலி
சென்னை, சைதாப்பேட்டையில் புயலின் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து
மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு ராணிப்பேட்டையில் வெளுத்து வாங்கிய பலத்த மழை
சிறுவளையம் கிராமத்தில் முக்கிய சாலை வெள்ளநீரில் மூழ்கியதால் மக்கள் அவதி
சாலையை மூழ்கடித்து வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
சிறுவளையம் ஏரி நிரம்பி சாலையே தெரியாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்ப்பு
மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன
400க்கும் மேற்பட்ட மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்
வடசென்னையை பொறுத்தவரை மிக குறைந்த அளவிலான மக்களே முகாம்களில் தங்க வைப்பு
பாதுகாப்பு காரணங்களுக்காக தான் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
3வது ஒருநாள் – இந்தியா Vs வங்கதேசம்
3வது ஒரு நாள் கிரிக்கெட் – வங்கதேசம், இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை
மாண்டஸ் புயல், மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தென்சென்னையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்
மாண்டஸ் புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
சென்னை, தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
புயல் பாதிப்பு நிலவரம், நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இன்று அல்லது நாளை புயல் பாதித்த இடங்களில் முதல்வர் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தகவல்.
வண்டலூர் பூங்கா இன்று மூடல் மாண்டஸ் புயல் எதிரொலி – வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடல் – பூங்கா நிர்வாகம் அறிவிப்ப
மாண்டஸ் புயல் எதிரொலி – வண்டலூர் பூங்கா இன்று ஒருநாள் மட்டும் மூடல் – பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு. லட்சுமி(45), ராஜேந்திரன்(25) ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு .
சென்னையில் இயல்புநிலை திரும்பியது. மாண்டஸ் புயல் கரையை கடந்த பின் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது சென்னை
இன்று பிற்பகலுக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் – அமைச்சர் செந்தில்பாலாஜி மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிப்பு
மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இன்று பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க உள்ளது – வானிலை ஆய்வு மையம்
மாண்டஸ் புயல் எதிரொலியாக நள்ளிரவில் சென்னை வந்த 7 விமானங்கள் ஐதராபாத், பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 20 விமானங்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டு காலதாமதமாக புறப்பாடு
அனைத்து அலுவலர்களும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும்” “பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனே அகற்ற நடவடிக்கை தேவை” “பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” புயல், மழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. புயலின் வெளிப்புற பகுதி தற்போது கரையை கடந்து வருகிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் கண் பகுதி கரையை கடக்க தொடங்கும் புயல் கரையை நெருங்கியதால் தரைக்காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது
மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது கரையை கடக்க துவங்கியுள்ள மாண்டஸ் புயலின் சூறைக்காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.