Tamil Nadu weather today latest updates Nilgiris flood : தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கனமழை காரணமாக பலத்த சேதாரமடைந்த நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அதிகபட்ச மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
கோவையின் சின்னக்கல்லாறு மற்றும் சோலையாறு பகுதியில் நேற்று 4 செ.மீ மழை பதிவானது. வால்பறை, வால்பாறை தாலுகா, சின்கோனா, நடுவட்டம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவானது. நீலகிரியின் அவலாஞ்சி, நாமக்கலின் இருச்சங்கோடு, நீலகியின் தேவலா, ஜி பஜார் மற்றும் திருவாரூர், தஞ்சை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
மேலும் படிக்க : போக்கு காட்டிய மழை இறங்கி வந்தது : சென்னையில் மழை…
சென்னை வானிலை
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நுங்கப்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம் ஆகிய பகுதிகளில் மாலை பரவலாக மழை பெய்தது.
ஒகேனக்கல் வெள்ளம்
கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் கர்நாடக அணைகள் முழுவதும் நிரம்பத் துவங்கின. உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு கர்நாடகாவை வந்தடைந்தது. கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து மேட்டூருக்கு வரும் நீரின் வரத்து 2.25 லட்சம் கனாடி என்ற அளவை எட்ட உள்ளா நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களின், காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலில் அருவிகளே தெரியாத அளவிற்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. மேலும் மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்ட தொங்குபாலம் முற்றிலும் நீரில் மூழ்கியது. சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவியில் குளிக்கத்தடை
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைய வேண்டிய காலத்திலும் கூட, கனமழை மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டி வருகிறது. தொடர் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா, கர்நாடகா, மற்றும் தமிழகத்தின் மலை வாஸ்தலங்களுக்கு தற்போது மக்கள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும் படிக்க : கேரள வெள்ளம்... நிலச்சரிவில் சிக்கி 92 பேர் பலி மீட்பு நடவடிக்கைகள் துரிதம்