Tamil Nadu weather updates Chennai weather : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் கோவை, விராலி மலை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கோவை மாவட்டம் பீளமேடு, உடையாம்பாளையம், சௌரிபாளையம், ராமநாதபுரம், நரசிம்மநாயக்கன் பாளையம், வடவள்ளி, சுந்தராபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் இரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மழைப்பொழிவு
தஞ்சை மாவட்டத்தின் புதுக்கோட்டையில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பெங்கலூரில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் டி.ஆர்.எம்.எஸ் பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்செங்கொடு, மதுக்கூர் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தஞ்சையின் அதிராம்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் பிரதான பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வானிலை அறிக்கை: நீலகிரி, கோவையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசனாது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவக்கூடும். குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
04ம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வீசும் காற்றின் அளவு அதி தீவிரமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil