/tamil-ie/media/media_files/uploads/2019/06/cats-4.jpg)
chennai weather today
Tamil Nadu Weather man post: தமிழ்நாடு வெதர்மேன்' என்றழைக்கப்படும் பிரதீப் ஜான், மழை விவரம் குறித்து நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மகாராஷ்டிராவின் கடற்கரை பகுதியில் கடுமையாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பல்கர் டவுனில் மிக மிக கடுமையான மழை பெய்து வருகிறது. ஒரே நாளில் 455 mm மழை அங்கு பெய்திருக்கிறது. மும்பை பகுதியில் 200mm மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. பருவமழை காரணமாக குடகு, ஹசன் மற்றும் சிக்மகளூர் மாவட்டத்தின் காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைய துவங்கும். மேற்கு கடற்கரை மற்றும் மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதிகளுக்கு ஜூலை மாதம் சிறப்பானதாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
சென்னையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் - வானிலை ஆராய்ச்சி மையம்
/tamil-ie/media/media_files/uploads/2019/06/z1127-300x217.jpg)
ஜூலையின் 2வது மற்றும் 3வது மூன்றாவது வாரத்தில் நிறைய ஆக்ஷனை நிச்சயம் பார்க்கலாம். அது எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்க்கலாம்.
ஆகையால், தமிழகத்தில் அதிகம் அணைகள் அமைந்துள்ள மலைத் தொடர்ச்சி பகுதிகளில், ஜூலை மாதம் மழையை எதிர்பார்க்கலாம். சென்னை மற்றும் உள் பகுதிகளில் கூட நல்ல மழை பெய்யும்.
சென்னையில் நேற்று மழை பெய்தது போல், கடல் காற்று மீண்டும் சென்னைக்கு மழையை கொண்டு வரப் போகிறது. வறட்சியான சூடான காற்று, ஈரப்பதம் நிறைந்த கடல் காற்றை சந்திக்கும் போது, இந்த மழையை நாம் பெறப் போகிறோம்.
மேலும் படிக்க : சென்னையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் – வானிலை ஆராய்ச்சி மையம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.