scorecardresearch

முதல்முறை மது அருந்திய இளைஞர் மரணம்; புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்

ஏற்காட்டில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது முதன்முறையாக மது அருந்திய இளைஞர் மரணம்; இறந்தவருக்கு அன்னப்பூரணி என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர்

முதல்முறை மது அருந்திய இளைஞர் மரணம்; புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்

சேலம், ஏற்காடு அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது முதன்முறையாக மது அருந்திய இளைஞர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

இறந்தவர், 23 வயதான ஏ சந்தோஷ்குமார். இவர் சேலம், மல்லூர் வெங்கம்பட்டி நகரில் வசிப்பவர். டீடோட்டலரான சந்தோஷ், தனது தந்தையுடன் சொந்த ஊரில் இறைச்சிக் கடை நடத்தி வந்தவர்.

இதையும் படியுங்கள்: ‘அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’: பா.ஜ.க-வில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்

சந்தோஷ் தனது ஆறு நண்பர்களுடன் ஏற்காட்டில் உள்ள ரிசார்ட்டுக்கு சென்றிருந்தார். மது அருந்தியதால் சந்தோஷ் அசௌகரியம் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது நண்பர்கள் மற்றும் சில உள்ளூர்வாசிகள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து ஏற்காடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஏற்காடு காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களின் முதற்கட்ட விசாரணையில், அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என தெரிய வந்துள்ளது. புத்தாண்டை தனது நண்பர்களுடன் கொண்டாட விரும்பி ஏற்காடு அருகே ரிசார்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார். சந்தோஷ் மது அருந்தியது அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் கூட தெரியவந்தது.

“சந்தோஷ் இதற்கு முன் மது அருந்தியது இல்லை என்பதால், அசௌகரியமாக இருந்துள்ளார் மற்றும் வாந்தி எடுத்துள்ளார். ஆனால் அதையும் மீறி அவர் குடித்துக்கொண்டே இருந்தார். அப்போது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு கடைசியில் மயங்கி விழுந்தார். அவரது நாடித் துடிப்பு குறைவாக இருந்ததால், அவரை நண்பர்கள் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ​​வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் இரவு 11-11:30 மணியளவில் நடந்திருக்கலாம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

இறந்த சந்தோஷூக்கு அன்னபூரணி என்ற மனைவியும், ஏழு மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu youth dies drinking alcohol first time new year eve