Advertisment

Tamil News Highlights: நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Earthquake tremors magnitude of 6.1 felt across Delhi & NCR - டெல்லியில் நில அதிர்வு - ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவு

tamil news

Petrol and Diesel Priceசென்னையில் பெட்ரோல்டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும்டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பலமான நில அதிர்வு உணரப்பட்டது.

கனமழை எச்சரிக்கை- 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி, தேனி , மதுரை, சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.  மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நேபாளில் நிலநடுக்கம்: குலுங்கிய டெல்லி

அண்டை நாடாள நேபாளத்தில் இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் டெல்லியிலும் எதிரொலித்தது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுக்கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.

நெல்லை, தென்காசி பள்ளிகளில் நாளை விடுமுறை

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில்

நாளை(04-11-2023) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நடிகை கவுதமி புகார் - ஒருவர் கைது

நடிகை கவுதமிக்கு சொந்தமான சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், தலைமறைவாக இருந்த பலராமன் என்பரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமின்

பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமின் கிடைத்துள்ளது. தென்காசியில் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது, அனுமதி மீறி கூட்டம் நடத்தியதாகவும், போக்குவரத்தை மீறியதாகவும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும் இவர் மீது மற்ற வழக்குகள் இருப்பதால் சிறையில் இருந்து வெளிவருவது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : அரசு பஸ்ஸில் நெல்லைக்கு அழைத்துச் செல்லப்படும் பா.ஜ.க அமர்: அம்பை கோர்ட்டில் ஆஜர்

தீபாவளி போனஸ் - அமைச்சர் உறுதி

தீபாவளி போனஸ் 20% வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் முத்துச்சாமி உறுதியளித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், நீக்குவதற்கும் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வருமானவரி சோதனையை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளாது : துரைமுருகன்

வருமானவரித் துறை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடுகளில் சோதனை செய்து வருகிறது. வருமானவரித் துறையின் சோதனையை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளாது- துரைமுருகன், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” -தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வருமான வரி சோதனை குறித்து முன்பே தகவல் வெளியானது எப்படி? அதிகாரிகள் விசாரணை

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், இந்த சோதனை குறித்த தகவல் முன்பே வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், வருமான வரி சோதனை குறித்த தகவல் வெளியானது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 வெவ்வேறு வழக்குகளில் அதிக இடங்களில் சோதனை மேற்கொள்ள ஐ.டி. அதிகாரிகள் சென்னையில் வந்து தங்கி இருந்த நிலையில், தமிழக அமைச்சர் ஒருவர் வீட்டில் சோதனை நடைபெறும் முன்பே தகவல் வெளியாகி இருந்தது எப்படி என விசாரணை நடைபெற்று வருகிறது.

5 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்பு 

திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும் நீலகிரி, கோவை, ஈரோடு , திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பேரணி- தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர் மேலானது- வைரமுத்து

இந்தியன்-2 படத்தின் இன்ட்ரோ

இந்தியன்-2 படத்தின் அறிமுகம் (AN INTRO) இன்று மாலை 5:30 மணிக்கு வெளியாகிறது.

ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் வெளியிடுவதாக பட நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி வரும் 23ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும். ஜனவரி 1ம் தேதி வரை இது திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ₹300 விலையிலான தரிசன டிக்கெட் வரும் 10ம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது

11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

Tamilnadu

பாரா ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் வருமான வரித்துறை அதிகாரிகள்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அப்பாசாமி குடியிருப்பில் அதன் சி.இ.ஓ. கிருஷ்ணன் வீட்டில் சோதனை காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை அப்பாசாமி ரியல் எஸ்டேட் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை 

கோவையில் காலை முதல் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

செளரிபாளையம் பகுதியில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் சோதனை 4 வாகனங்களில் வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை பீளமேடு பகுதியில் உள்ள Sheffield tower என்ற நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு. 

காசா க்ராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் தொடர்புடைய இடங்களில் சோதனை

காசா க்ராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை காசா கிராண்ட் நிறுவனம் தொடர்பாக அடையாறு தலைமை அலுவலம், நிர்வாகிகள் வீடு என 2 இடங்களில் சோதனை

அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1666 கன அடியாக அதிகரிப்பு

முல்லை பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1666 கன அடியாக அதிகரிப்பு.  இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 124.60 அடியாக அதிகரித்துள்ளது

சென்னை, விழுப்புரத்தில் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

சென்னை அண்ணா நகர் (மேற்கு) பகுதியில் உள்ள சிண்டிகேட் பேங்க் காலனியில் உள்ள கட்டுமான தொழிலதிபர் கமலாக்கர் என்பவர் வீட்டில் வருமானவரி துறை சோதனை. சென்னை அமைந்தகரை செனாய் நகர் பகுதியில் ஈஸ்ட் பார்க் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் வருமானவரித்துறை சோதனை. சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பைனான்சியர் ஒருவரின் வீட்டில் சோதனை. 

விழுப்புரம் : சண்முகபுரத்தில் உள்ள கோல்டன் மார்பில் உரிமையாளர் பிரேம் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

காசா க்ராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் தொடர்புடைய இடங்களில் சோதனை

சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை காசா க்ராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் தொடர்புடைய இடங்களில் சோதனை திருவான்மியூரில் உள்ள காசா க்ராண்ட் கட்டுமான நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை

அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது!

கார்த்திகா - மாரிசெல்வம் கொலை வழக்கில் தந்தையை  தனிப்படை போலீசாரால் கைது

தூத்துக்குடி : காதல் திருமணம் செய்த புது மணத்தம்பதி கார்த்திகா - மாரிசெல்வம் கொலை வழக்கில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் தனிப்படை போலீசாரால் கைது

அதிமுக தொடக்கநாள் பொதுக்கூட்டம்: 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தஞ்சை திலகர் திடலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்க இருந்த அதிமுக தொடக்கநாள் பொதுக்கூட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு மழை காரணமாக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ரியல் எஸ்டேட் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை

காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது

அமைச்சர் ..வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை. சென்னை, திருவண்ணாமலையில் 40 இடங்களில் சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மருத்துவமனையில் அனுமதி: நேரில் சென்று பார்த்தார் நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி நள்ளிரவு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார் நடிகர் விஜய்.

 தமிழகத்தில் காலை 7 மணி வரை 23 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

 திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment