/tamil-ie/media/media_files/uploads/2019/04/Untitled-4.jpg)
Tamil New Year 2019 Live Updates
Tamil New Year 2019 Live Updates : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்று பிற்பகல் 1 மணி 7 நிமிடத்திற்கு விகாரி வருடமானது வசந்த ருதுவுடன், உத்தராயண புண்ணிய காலத்தில் பிறக்கிறது.
சுக்ல பட்சத்தில் ஆயில்ய நட்சத்திரம் 2ம் பாதம், கடக ராசி, கடக லக்னம், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாசல்படியில் கோலமிட்டு, மஞ்சள், குங்குமம் சாந்து பூசி, மாவிலைத் தோரணங்கள் கட்டி விடுவது வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும்.
இன்றைய தினத்தில் சமைக்கும் சமையலானது 6 சுவைகளில் இருக்க வேண்டும் என்பதற்காக மாங்காய் பச்சடி, நீர்மோர், பருப்பு, பாயாசம், உளுந்து வடை ஆகியவற்றை சாதத்துடன் பரிமாறுவது வழக்கம். இதில் வேப்பம் பூ பச்சடி உணவு முக்கியத்துவம் பெறுகின்றது.
Live Blog
அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ் மக்களுக்கு தன்னுடைய வாழ்த்து செய்தியை கூறீயுள்ளார்.
நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிறக்கக்கூடிய இந்த வருடம் எல்லோர் வாழ்விலும்மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்கிறேன்.
— President of India (@rashtrapatibhvn) 14 April 2019
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டு மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தன்னுடைய வாழ்த்துகளை கூறும் வகையில் தமிழில் இடம் பெற்றிருந்தது வாழ்த்து செய்தி
Dear Tamil sisters and brothers,
Praying for a wonderful year ahead. pic.twitter.com/NXZ3WkXsL0
— Chowkidar Narendra Modi (@narendramodi) 14 April 2019
பாசமும்,நேசமும் இனிதோடு,
நாளைய சூரியவிடியலின்
துணையோடு,பல வெற்றிப்படிகளின் கனவோடு,கல்வியும் கலையும் அறிவோடு,உண்மையும் உழைப்பும் உயிரோடு,உறுதிமிகு தமிழா விழிப்போடு,நாளைய உலகம் வெல்க துணிவோடு.தமிழோடும்,தமிழரோடும் உறவாடு!நல் உறவோடு! #தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு சொந்தங்களே! pic.twitter.com/UJ2XJHSUCC— Harbhajan Turbanator (@harbhajan_singh) 14 April 2019
ஆரோக்கியத்துடன் நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் - கேப்டன் வாழ்த்து
உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு, நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு, இருப்பவர்கள்- இல்லாதவர்கள் என்ற வேறுபாடின்றி அமைதியாக, ஆரோக்கியத்துடன் எல்லா வளமும், நலமும் பெற்று அனைவரும் வாழ வேண்டும்.
இதயமார்ந்த #விகாரி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். pic.twitter.com/DfVESPXcEx
— Vijayakant (@iVijayakant) 14 April 2019
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்துகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இனிய தமிழ்ப் புத்தாண்டு புரட்சிப் புத்தாண்டாக மலரவும், தமிழும் தமிழரும் சிறக்கவும் செழிக்கவும் வாழ்த்தும் உங்கள் நான்.
— Kamal Haasan (@ikamalhaasan) 14 April 2019
நடிகர் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவருமான ரஜினிகாந்த் அனைவருக்கும் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏻
— Rajinikanth (@rajinikanth) 14 April 2019
அறுவடை எல்லாம் முடிந்து விளைச்சல் பொருட்கள் வீடு வந்து சேரும் நாளில் தான் சித்திரைத் திருநாளும் வருகின்றது. வாழ்வில் வளங்கள் என்றும் நிறைந்திருக்க வேண்டும் என்பதைப் போல, குறைவில்லா உணவுச் செல்வத்துடன் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று சமையல் செய்யப்படும். 6 சுவை உணவுகள் அதில் இருக்குமாறு கவனித்துக் கொள்வார்கள். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, காரம், உவர்ப்பு என ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு உணவு பரிமாறப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights