scorecardresearch

விகாரி வருடப் பிறப்பு Live Updates : குடியரசுத் தலைவர், பிரதமர் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

Happy Puthandu 2019, Importance of Tamil New Year Live : இன்றைய தினத்தில் சமைக்கும் சமையலானது 6 சுவைகளில் இருக்க வேண்டும்.

விகாரி வருடப் பிறப்பு Live Updates : குடியரசுத் தலைவர், பிரதமர் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
Tamil New Year 2019 Live Updates

Tamil New Year 2019 Live Updates : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்று பிற்பகல் 1 மணி 7 நிமிடத்திற்கு விகாரி வருடமானது வசந்த ருதுவுடன், உத்தராயண புண்ணிய காலத்தில் பிறக்கிறது.

சுக்ல பட்சத்தில் ஆயில்ய நட்சத்திரம் 2ம் பாதம், கடக ராசி, கடக லக்னம், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் இந்த புத்தாண்டு பிறக்கிறது.  புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாசல்படியில் கோலமிட்டு, மஞ்சள், குங்குமம் சாந்து பூசி, மாவிலைத் தோரணங்கள் கட்டி விடுவது வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும்.

இன்றைய தினத்தில் சமைக்கும் சமையலானது 6 சுவைகளில் இருக்க வேண்டும் என்பதற்காக மாங்காய் பச்சடி, நீர்மோர், பருப்பு, பாயாசம், உளுந்து வடை ஆகியவற்றை சாதத்துடன் பரிமாறுவது வழக்கம். இதில் வேப்பம் பூ பச்சடி உணவு முக்கியத்துவம் பெறுகின்றது.

மேலும் படிக்க : tamil new year movie release : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக திரைக்கு வந்துள்ள புதுப்படங்கள் லிஸ்ட்!

Live Blog

அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற‌ நம்பிக்கை மக்களிடம் உள்ளது.


14:40 (IST)14 Apr 2019

உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் – குடியரசுத் தலைவர்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ் மக்களுக்கு தன்னுடைய வாழ்த்து செய்தியை கூறீயுள்ளார். 

14:39 (IST)14 Apr 2019

பிரதமர் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டு மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.  அதில் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு தன்னுடைய வாழ்த்துகளை கூறும் வகையில் தமிழில் இடம் பெற்றிருந்தது வாழ்த்து செய்தி 

13:36 (IST)14 Apr 2019

தமிழோடும் தமிழரோடும் உறவாடு நல் உறவோடு – ஹர்பஜன் சிங் புத்தாண்டு வாழ்த்துகள்

12:48 (IST)14 Apr 2019

ஆரோக்கியத்துடன் நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் – கேப்டன் வாழ்த்து

ஆரோக்கியத்துடன் நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் – கேப்டன் வாழ்த்து

11:35 (IST)14 Apr 2019

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஷூ கனி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஷூ கனி தரிசனம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் விஷூ கனி தரிசனம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிச் சென்று, முருகனை வழிபட்டு வருகின்றனர்.

11:35 (IST)14 Apr 2019

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஷூ கனி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஷூ கனி தரிசனம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் விஷூ கனி தரிசனம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிச் சென்று, முருகனை வழிபட்டு வருகின்றனர்.

10:55 (IST)14 Apr 2019

தமிழும் தமிழரும் சிறக்கவும் செழிக்கவும் வாழ்த்துகள் – நடிகர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்துகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

10:09 (IST)14 Apr 2019

ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவருமான ரஜினிகாந்த் அனைவருக்கும் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

10:07 (IST)14 Apr 2019

புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம் ?

அறுவடை எல்லாம் முடிந்து விளைச்சல் பொருட்கள் வீடு வந்து சேரும் நாளில் தான் சித்திரைத் திருநாளும் வருகின்றது. வாழ்வில் வளங்கள் என்றும் நிறைந்திருக்க வேண்டும் என்பதைப் போல, குறைவில்லா உணவுச் செல்வத்துடன் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று சமையல் செய்யப்படும். 6 சுவை உணவுகள் அதில் இருக்குமாறு கவனித்துக் கொள்வார்கள். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, காரம், உவர்ப்பு என ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு உணவு பரிமாறப்படும். 

மேலும் படிக்க : தமிழ் புத்தாண்டு அன்று என்ன சமைக்கலாம் ?

தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். இம்மாதத்தோடு வசந்த காலம் நிறைவடைகிறது. மேலும் சித்திரை மாதப் பிறப்பை ‘சைத்ர விஷூ புண்ணிய காலம்’ என்பார்கள். ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது, சித்திரை முதல் நாள். சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை. பல்குண-சைத்ர மாதமாகிய சித்திரையை ‘வசந்த ருது’ என்பார்கள். சூரியன் இம்மாதத்தில் தான் உச்சநிலையினை அடைந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. சித்திரை மொத்தம் 31 நாட்களைக் கொண்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil new year 2019 live updates vihari thamizh puthandu vaazhthukal