தமிழகத்தில் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, கோவை ஆட்சியர் ராசாமணி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் தங்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை பெறுகிறார்கள்.
முக்கிய செய்திகளின் ஹைலைட் இங்கே
முன்களப் பணியாளர்களாக பணியாற்றும் உயர் அதிகாரிகளும் கொரோனா பாதிப்பில் சிக்குவது அதிர்ச்சியை அதிகரிப்பதாக இருக்கிறது. தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாண்டி கொரோனா பரவல் இருந்து வருகிறது.
மதுரையில் 21 நாட்களாக நீடித்த முழு ஊரடங்கு நேற்றிரவுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமல். மதுரையில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2,667 பேர் குணமடைந்துள்ள நிலையில், 124 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,46,431 ஆக அதிகரிப்பு. கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,80,248 ஆக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 78,39,676 ஆக அதிகரிப்பு.
கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது!
இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு!
கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும். pic.twitter.com/PmIkyh47zg
— M.K.Stalin (@mkstalin) July 14, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை முடிவு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், 2 சார்பு ஆய்வாளர்கள் உட்பட 5 பேரிடம், இன்று 2 ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வெப்பமானி மூலம் மற்றவர்களை பரிசோதித்து வந்த ஊழியருக்கு கொரோனா.ஏற்கனவே மாநகராட்சி அலுவலகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ – வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது
* செந்தில்வாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
ஈரான் நாட்டில் சிக்கித்தவித்த 40 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்பினர்
* தமிழக அரசு எடுத்த தொடர் நடவடிக்கையின் காரணமாக, தற்போது 40 மீனவர்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு – அமைச்சர் ஜெயக்குமார்
சபரிமலை ஐயப்பனுக்கு கோவில் நடை ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப் பட்டது. எனினும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தந்திரி கண்டரரு மகேஷ்வரரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் நடையை திறந்தார்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வர தடைவிதிக்கப் பட்டுள்ளது. இதனால் சபரிமலை கோவில் பணியில் உள்ள தேவசம் போர்டு ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு நடை திறக்கப்பட்டது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக காவலர் ரேவதியிடம் சிபிஐ விசாரணை
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் ரேவதி
மேலும் 5 காவலர்களிடம் சிபிஐ விசாரணை நடத்திய பின் ரேவதியிடம் விசாரணை
எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு நாளை தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணை
அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய டிஜிபிக்கு பார் கவுன்சில் கடிதம்
* காவல் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்க டிஜிபி, காவல் ஆணையருக்கு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கோரிக்கை
‘டெல்லியில் மேலும் 1,647 பேருக்கு கொரோனா’
டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,647பேருக்கு கொரோனா பாதிப்பு; மேலும் 41 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
* மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 1,16,993; மொத்த உயிரிழப்பு – 3,487
‘மேட்டூர் அணை நீர்திறப்பு அளவு 12 ஆயிரம் கனஅடியாக குறைப்பு’
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 13,000 கனஅடியிலிருந்து 12,000 கனஅடியாக குறைந்தது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொரோனாவால் பாதிப்பு!
கோவை ஆட்சியரை தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 3,176 பேருக்கு கொரோனா பாதிப்பு; மேலும் 87 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
* மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 47,253; மொத்த உயிரிழப்பு – 928
கேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 623 பேருக்கு கொரோனா; அதில் 157 பேர் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள்
மொத்தபாதிப்பு எண்ணிக்கை 9,553 ஆக அதிகரிப்பு; 4,880 பேர் சிகிச்சையில் உள்ளனர்
– முதல்வர் பினராயி விஜயன்
சாத்தான்குளம் கொலை வழக்கு : உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
‘மகாராஷ்டிராவில் மேலும் 7,975 பேருக்கு கொரோனா’
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7,975 பேருக்கு கொரோனா பாதிப்பு; மேலும் 233 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
* மொத்த பாதிப்பு எண்ணிக்கை – 2,75,640 ஆக அதிகரிப்பு
மின்கட்டணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் ஜூலை 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக இன்று அறிவிக்கப்பட்ட கொரோனா உயிரிழப்புகள்
சென்னை-23
மதுரை-5
திண்டுக்கல்-5
வேலூர்-4
குமரி-4
க.குறிச்சி-4
விருதுநகர்-3
சிவகங்கை-3
செங்கல்பட்டு-3
தூத்துக்குடி-2
காஞ்சிபுரம்-2
தேனி-2
விழுப்புரம்-2
திருவள்ளூர்-1
தி.மலை-1
ராமநாதபுரம்-1
கோவை-1
தஞ்சை-1
ஈரோடு-1
விழுப்புரம்-97
வேலூர்-97
தஞ்சை-77
க.குறிச்சி-75
தேனி-59
ராணிப்பேட்டை-64
கடலூர்-59
புதுக்கோட்டை-50
அரியலூர்-43
கிருஷ்ணகிரி-29
நீலகிரி-25
திருப்பூர்-25
சேலம் -24
திருப்பத்தூர் – 20
தென்காசி – 17
நாமக்கல் – 12
திருவாரூர் – 9
ஈரோடு – 9
தர்மபுரி – 9
நாகை – 7
கரூர் – 3
பெரம்பலூர் – 3
சென்னை – 1,291
மதுரை – 341
தூத்துக்குடி – 269
திருவள்ளூர் – 278
விருதுநகர் – 175
செங்கல்பட்டு – 186
நெல்லை – 164
காஞ்சிபுரம் – 163
குமரி – 135
தி.மலை – 124
ராமநாதபுரம் – 119
திண்டுக்கல் – 119
கோவை – 104
சிவகங்கை – 100
திருச்சி -99
சென்னையில் மேலும் 1,291 பேருக்கு கொரோனா
* தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்தனர்
* சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,205 பேருக்கு கொரோனா
* 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்.
தமிழகத்தில் மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று
* கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு
* தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்று
* தமிழகத்தில் ஒன்றரை லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி
* மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம்
* கடந்த பிப்ரவரி மாதம் முரளிதரராவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தார் வீரப்பனின் மகள் வித்யா ராணி
கேரளாவில் இன்று ஒரேநாளில் 623 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த பாதிப்பு 9,553ஆக உயர்வு
* கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,634 பேர் குணமடைந்துள்ளனர் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
மக்கள் சுய கட்டுப்பாட்டோடு இருந்தால்தான் கொரோனா நோய் பரவலை தடுக்க முடியும்
* கடலில் வீணாக கலக்கும் உபரிநீரை பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் – முதலமைச்சர் பழனிசாமி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்லூரிகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை. செப்.17 முதல் பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும்
– அமைச்சர் கே.பி.அன்பழகன்
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்; இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16 வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்.
ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை.
ஐரோப்பியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நமது கூட்டுப் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க ஐரோப்பிய முதலீடு, தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கிறோம் – பிரதமர்
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்
வகுப்புகள் தொடங்குவது குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை
tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்
பொறியியல் கலந்தாய்வுக்காக சான்றிதழ் சரிபார்ப்புக்காக வரும் மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2020-21 ஆம் கல்வியாண்டில் 465 கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விளையாட்டு பிரிவை சேர்ந்த மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக நேரில் வர வேண்டும்.
மாணவர்கள் வீட்டிலிருந்தே சான்றிதழ் சரிபார்க்க வசதியாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 8000 மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் ஆன் லைனிலேயே சான்றிதழை சரிபார்த்தனர்
இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம். பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
– கே.பி.அன்பழகன், உயர்கல்வித்துறை அமைச்சர்
மதுரை மாநகர், கோரிப்பாளையம், அண்ணா நகர், புதூர், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,596ஆகவும், பலி எண்ணிக்கை 21ஆகவும் உயர்வு!
உலக இளைஞர் திறன் நாளை முன்னிட்டும், மத்திய அரசு தொடங்கிய திறன் இந்தியா திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு தொடக்க நாளையொட்டியும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இளைஞர்களுக்கு உரையாற்றினார். இந்திய இளைஞர்கள் தங்களுடைய திறமையை மேம்படுத்துவதன் மூலம், வேலை வாய்ப்பை பெருக்கும் நோக்கத்தோடு திறன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக முதல்வரரை விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ராஜராஜன் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. தந்தை மகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர் என முதல்வர் கூறியதால் அவரை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.
தமிழக அரசு பெற்ற கொரோனா நிவாரண நிதி விவரங்களை வெளியிடக் கோரிய வழக்கில், கொரோனா நிவாரண நிதியாக பெறப்பட்ட நன்கொடை எவ்வளவு? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நன்கொடை விவரங்களை தெரிவிப்பதில் அரசுக்கு என்ன சிரமம் ? என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
கூகுள் நிறுவனம், ஜியோ நிறுவனத்தில் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய உள்ளது என்றும் ஜியோவின் 7.7% பங்குகளை கூகுள் வாங்க உள்ளது என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
‘கருப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்ட நாத்திகன் என்கிற சுரேந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி, கொரொனா தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.10,000 கோடி செலவிட்டுள்ளன. இதில் தமிழக அரசு மட்டும் ரூ.6,000 கோடி செலவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே கல்விளையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல். சிறுமியின் உடல் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மாணிக்கபுரத்தைச் சேர்ந்த முத்தீஸ்வரன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமி, “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தழிழகத்திற்கு மத்திய அரசு ரூ.672 கோடி வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக அரசு ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான வழக்கில், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எந்த அவசரமும் காட்டவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான அசையும் சொத்துக்களை கையகப்படுத்தவே அவசர சட்டம் இயற்றப்பட்டதாவும்
வீட்டைக் கையகப்படுத்தும் நடைமுறையில் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பான உயர்நீதிமன்ற கருத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் சென்னை மண்டலத்தில் 98.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவனந்தபுரம் மண்டலம் 99.28% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு 98.23% தேர்ச்சியுடன் 3ம் இடம் பிடித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தடை செய்யப்பட வேண்டும். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,676ஆக உயர்ந்துள்ளது.
திருப்போரூர் அருகே துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் கைதாகியுள்ள திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் ஜாமீன் கோரி செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.மாணவர்கள் தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
12ம் வகுப்பு மறுதேர்வு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், 12ம் வகுப்பு மறுதேர்வு உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவைப்படும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு பகுதிகளில் தேர்வு மையங்கள் இருந்தால் வேறு மையங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து சோதனை நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிசிஐி தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. பிசிஜி மருந்தை 60 – 95 வயது முதியவர்களுக்கு வழங்குவதன் மூலம் இறப்பு விகிதத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சனம் செய்து யூ டியுப் சேனலில் வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கந்த சஷ்டி கவசம் சர்ச்சை வீடியோ தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இது குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்தது. மனுதாரர் தரப்பில் மதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக வீடியோக்கள் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயராஜ், பென்னிக்சுக்கு உடல் தகுதிசான்று வழங்கிய சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெண்ணிலா மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் முன்பு ஆஜராகி உள்ளார்.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 15,814 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 62,552 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை காளை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்குகிறது. காணொலி மூலம் திமுக தலைவர்கள் மு.க ஸ்டாலின் நிர்வாகிகளுடன் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரம் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓசூரில் ரூ.20.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர், பழனிசாமி கிருஷ்ணகிரி இன்று முதல் பணியாக பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தேர்தல் நடத்தும் விதிமுறையில் திருத்தங்கள் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டையும் ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு, திமுக தலைவர் ஸ்டாலின், கடிதம் எழுதியுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்டோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ள அதிகாரம் படைத்த பழைய நடைமுறையே தொடரவும், தற்போதைய திருத்தம், குந்தகம் விளைவிக்கும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்கப்படும் என தெரிகிறது.
சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79 ஆயிரத்து 662 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று மட்டும் ஆயிரத்து 858 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 15 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., அரசு குணமடைந்து வீடு திரும்பினார். தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த எம்.எம்.ஏ அரசு நலமுடன் வீடு திரும்பினார்.