Tamil News Updates: “கலைஞர் பேனா நினைவு சிலையை சீமான் உடைத்தால், அதுவரை எங்கள் கைகள் என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா? கை அவருக்கு மட்டும்தான் இருக்கா?”, என்று அமைச்சர் சேகர் பாபு கலைஞர் நினைவு சிலைக்கு எதிராக சீமான் எழுப்பிய கண்டனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Union Budget:
2023- 2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.

Gold Silver Price:
சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,338 என்றும் சவரனுக்கு ரூ.42,704 என்றும் விற்கப்படுகிறது. மேலும், 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,823 என்றும் சவரனுக்கு ரூ.46,584 என்றும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.74.50க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிலோவிற்கு ரூ.74,500 என்று விற்கப்படுகிறது.
Petrol Diesel Price:
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63, டீசலின் விலை ரூ.94.24 ஆகவும் விற்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. தீபாவிடம், சசிகலா மீதான அவருடைய குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, சசிகலா மீதான குற்றச்சாட்டுகளில் மாற்றம் இல்லை; நான் சொன்னது எல்லாம் உண்மைகள். மேற்கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயங்கள் என்று கூறினார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வீடாக மாற்றி வைத்திருக்கிறேன். அந்த வீட்டில் நிறைய வேலைப்பாடுகள் இருக்கிறது. நிறைய பாழடைந்து இருக்கிறது அதையெல்லாம் சரிசெய்யாமல் அங்கே குடியிருப்பது கஷ்டம்.
வேதா நிலையம் மீண்டும் அதிகாரம் மையமாக மாற வாய்ப்பு இருக்கா என்ற கேள்விக்கு ஜெ. தீபா அது கடவுல் கையில் இருப்பதாகக் கூறினார்.
எதிர்காலத்தில் அரசியலுக்கு வர எண்ணம் இருக்கா என்ற கேள்விக்கு, ஜெ. தீபா கடவுள் கையில் இருப்பதாகக் கூறினார்.
மேலும், ஓ.பி.எஸ்-ஐ அரசியல் தொடர்பாக சந்திக்கவில்லை, குடும்ப நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் கொடுக்க சந்தித்ததாக ஜெ. தீபா கூறினார்.
விசி.க தலைவர் திருமாவளவன், “வி.சி.க காங்கிரஸ் இல்லாமல்கூட தமிழ்நாட்டில் தி.மு.க அரசியல் செய்யும்; சமூகநீதி அரசியலில் தி.மு.க தோழமைக் கட்சிகள் நேர்க்கோட்டைல் பயணிக்கின்றது. தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியை எதிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், சிவகங்கை கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மு.க. ஸ்டாலின்: “தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சிகாக உருவாக்கப்பட்டது போன்று தோற்றமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாபெரும் கல்வி புரட்சி ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உயர் கல்வியையும் தாண்டி ஆராய்ச்சி கல்வியும் வளர வேண்டும். மாணவர்கள் படித்து உலகளவில் உயர்வது இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை – வேலூர் விஐடி பல்கலை நடைபெற்ற மாணவர் விடுதி திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இரட்டை இலை முடங்க எப்போதும் நான் காரணமாக இருக்க மாட்டேன். சுயேட்சை சின்னம் கிடைத்தாலும் எங்கள் தரப்பு வேட்பாளர் போட்டியிடுவது உறுதி. சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்போம் – ஓபிஎஸ்
இபிஎஸ் அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டி
ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதை கூற முடியாது – கு.ப.கிருஷ்ணன், ஓபிஎஸ் அணி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவிப்பு
சசிகலாவிடம் உறுதியாக ஆதரவு கேட்போம்” – ஓபிஎஸ்
ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் போட்டி
பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால்,
அறிவித்த வேட்பாளரை திரும்ப பெறுவோம் – ஓபிஎஸ்
செந்தில் முருகனுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதன்பிறகு என்ன செய்வோம் என்பதை அறிவிப்போம் – ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 2ம் நாள் மனுத்தாக்கல் நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2ம் நாள் வேட்புமனுத்தாக்கல் நிறைவு
இன்று தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உட்பட 5 பேர் வேட்புமனுத்தாக்கல்
தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லா தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 6-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு பெற்றதாகவும், 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபடும் என உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது; அறிக்கைக்காக காத்திருக்கிறோம் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதானி குழுமத்தின் 9 நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்ததால், டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்த அதானி தற்போது 14-வது இடத்திற்கு சரிந்துள்ளார். 10-வது இடத்தில் இருந்த அம்பானி 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று காலை தங்கள் வேட்பாளரை அறிவித்திருந்தார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் எங்கு எப்படி அமைக்கப்பட உள்ளது? என்ற கேள்விக்கு விரிவான விளக்கம் அளித்துள்ள பொதுப்பணித்துறை, முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகளுடன் அமையவுள்ளது என பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும் மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி திருவுருவச்சிலை கட்டமைப்பை முன்னுதாரணமாக வைத்து அமைக்கப்படவுள்ளது;
மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 2-வது வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இபிஎஸ் சார்பில் திறக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில், பிரதமர் மோடி உள்ளிட்ட எந்த பாஜக தலைவரின் படங்களும் இடம்பெறவில்லை. மேலும் தேசிய முற்போக்கு கூட்டணி என்று பெயரும் மாற்றப்பட்டதால், பாஜக தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்திய ஒற்றுமைப் பயணத்தை நிறைவு செய்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லிக்கு திரும்பினார்.
வேலூருக்கு வரும் தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அச்சடித்து வெளியிட இருந்த சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்க நிறுவனரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அனுமதியின்றி 55 பனை மரங்களை திமுக பிரமுகர் உரிய அனுமதியின்றி வெட்டியுள்ளார்.
மரங்களை வெட்டி 40 நாட்கள் கடந்தும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டுகின்றனர்.
குறிப்பிட்ட அரசு நிறுவனங்களில் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும், பொதுமக்களின் பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
“கலைஞர் பேனா நினைவு சிலையை சீமான் உடைத்தால், அதுவரை எங்கள் கைகள் என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா? கை அவருக்கு மட்டும்தான் இருக்கா?”, என்று அமைச்சர் சேகர் பாபு கலைஞர் நினைவு சிலைக்கு எதிராக சீமான் எழுப்பிய கண்டனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
டாஸ்மாக் நிறுவனம் ரூ.7,986 கோடி வரி செலுத்த வேண்டுமென்ற வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூரில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஆகியவையின் கீழ் ரூ.784 கோடி மதிப்பில் 5,351 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.எஸ்.தென்னரசு, ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளராக உள்ளார்.
தமிழகத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதை பறைசாற்றும் விதமாக, இன்று முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லாரிகள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீது, அதில் 80 அடி சாலையை அமைக்க வலியுறுத்தி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 108 வேட்பாளர்கள் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையடுத்து, கேரளா மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், கேரளாவில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.