Tamil News : முதல்வர் பழனிசாமி இன்று மீண்டும் பிரசாரம் தொடங்குகிறார். நாமக்கல்லில் பிரசாரம் செய்யும் அவர், தமிழக அரசின் சாதனைகளை கூறும் வகையில் ரிப்போர்ட் கார்ட் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் வேண்டுமானால் சாதனையாளராக இருக்கலாம். ஆனால், அவர் அரசியலில் ஜீரோதான் என்று முதல்வர் பழனிசாமி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் சிவகங்கை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம். தடையை மீறி ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் குட்டை இருந்தது புதிய தலைமுறையில் செய்தி வெளியான நிலையில் நடவடிக்கை.
டெல்லியில் தேசிய பொது பயண அட்டையின் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அட்டையைக் கொண்டு விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் மெட்ரோ ரயிலின் எக்ஸ்பிரஸ் சேவையைப் பயன்படுத்தலாம் . டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை மூலம் பிற மார்க்க மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் பயணிக்கலாம். வாகன நிறுத்த கட்டணம், மெட்ரோ ரயில் நிலைய கடைகளில் பொருள்களை வாங்கவும் பொது அட்டையைப் பயன்படுத்தலாம்.
Live Blog
Today Tamil News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையுடன் இணைந்திருங்கள்
பிரிட்டனில் புதிதாக 30,501 பேருக்கு கொரோனா பாதிப்பு; 316 பேர் உயிரிழப்பு. மொத்தம் 22.88 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 33வது நாளாக விவசாயிகள் போராட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா 326 ரன்களுக்கு ஆல் அவுட். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2வது இன்னிங்சில் விளையாடவுள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.
Web Title: Tamil news live admk cm candidate rajnikanth health political party dmk new year
டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாம விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விவசாய சங்கங்கள் மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்கிறோம். அழைப்பின் நோக்கம் குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி, “நடிப்பில் கமல்ஹாசன் சாதனையாளராக இருக்கலாம். ஆனால், அவர் அரசியலில் ஜீரோதான்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பார்களில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை
நாளை நாமக்கல்லில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அரசின் சாதனைகளை “ரிப்போர்ட் கார்டு” வடிவில் மக்கள் இடத்தில் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் தற்போது 15 பாலங்கள் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அதிமுக எதுவும் செய்யவில்லை என மா. சுப்பிரமணியம் பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும் பாலம் கட்டப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் சென்னையில் 86 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் தற்போது 15 பாலங்கள் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், “இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று உள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக 9 மாதங்களுக்குப் பிறகு ரோப்கார் வசதி இன்று மீண்டும் தொடங்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டு கால சபாத்தத்தின் சிறந்த உத்வேக வீரர் ( ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் ) இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனிக்கு வழங்கப்பட்டது.
கோவிட்-19 தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கப் பெற்றவுடன் அதனை சீராக விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் இருந்து திரும்பிய 13 பேரின் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
ஐசிசியின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் விருது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. .
நடப்பு கல்வியாண்டி 10 , 11 , 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவத்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.கரீமாபேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!” என்று தெரிவித்தார்.
திமுக தலைவர் மு. க ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார். இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆறுதல்!” என்று தெரிவித்தார்/
இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்திக்கேட்டு வேதனை அடைந்தேன். சென்னையிலிருந்து புறப்பட்டு உலகின் தலைசிறந்த இசை அமைப்பாளராக திகழும் திரு.ரகுமான் அவர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் அவருடைய தாயார். ஆழ்ந்த இரங்கல் என்று உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவத்தார்.
”மக்கள் வரிப்பணத்தை – மக்களுக்கே திரும்ப வழங்கும் ரூ.2500 பொங்கல் பரிசு & டோக்கன் வழங்கும் பணிகளில்
முறைகேடுகளுக்கு இடமளிக்கக்கூடாது;அதிமுகவினர் மூலம் டோக்கன் வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும்” என்று மு. க ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
pic.twitter.com/quQXlI65g4
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமானார். பல சிரமங்களுக்கு மத்தியில் இசைப்புயலை உருவாக்கிய கரீமா பேகம் இறைவனடி சேர்ந்தார்
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்து பேசினார்.
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைக்கும் வாய்ப்பு தற்போது எனக்குக் கிடைத்துள்ளது. 18 நகரங்கள் இன்று மெட்ரோ சேவையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு எளிதான வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அமெரிக்க தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய போட்டியில், உலகிலேயே எடை குறைந்த செயற்கைக்கோளை உருவாக்கி வெற்றி பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த சாதனை மாணவர் ரியாசுதீன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் என அமைச்சர் வேலுமணி ட்விட்டரில் பதிவு செய்தார்.
பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.
புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடும் இந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையில் அடிப்படையில் மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.
8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம். விவசாயிகள் போராட்டத்திற்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு- காவல்துறையினர் குவிப்பு.
கேரளா மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை செல்ல இன்று மாலை 6 மணி முதல் http://sabarimalaonline.org என்ற தளத்தில் முன்பதிவு செய்யலாம். மகர விளக்கு பூஜைக்காக டிச.31ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
உயர்நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இசைக்கருவிகளை எடுத்துச் செல்ல இசையமைப்பாளர் இளையராஜா தரப்பினர் வந்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாக தகவல்
திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 9 மாதங்களுக்கு பிறகு, இன்று மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கியது.
இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து . இளையராஜா மனஉளைச்சலில் இருப்பதால் வர இயலவில்லை இளையராஜாவின் செய்தித்தொடர்பாளர் தகவல் .
டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்பு.
தமிழகத்தில் உருமாறிய கொரோனாவை தடுப்பது தொடர்பாக முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது . ஆட்சியர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளார்
சென்னையில் மதியம் 1 மணிக்கு முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசுகிறார் தமிழக பாஜக தலைவர் முருகன் . அதிமுக-பாஜக இடையே முதல்வர் வேட்பாளர், கூட்டணி தொடர்பாக பிரச்னை இருக்கும் நிலையில் சந்திப்பு நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
234 சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை நியமித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் . புதிய பொறுப்பாளர்களுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர விஜயகாந்த வேண்டுகோள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து ஜி.கே.வாசன் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாகப் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என ட்வீட்.