scorecardresearch

News Highlights: ஈகோவை ஒதுக்கி விட்டு ரஜினியுடன் இணையத் தயார்- கமல்ஹாசன்

Tamil News : வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம்

kamal haasan

Tamil News Today : கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நலனுக்காக ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார். மக்களுக்காக எந்த ஒரு ஈகோவையும் விட்டுக்கொடுத்து, நானும் ரஜினியும் இணைய தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்தார் படேல் நினைவு தினம் : நாட்டின் அமைதி, ஒற்றுமையை காக்க படேலின் வழிமுறைகள் நம்மை ஊக்குவிக்கின்றன பிரதமர் மோடி ட்வீட்.

மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11.25க்கு காணொலி காட்சி முறையில் நடைபெறவுள்ளது. ஈரோட்டில் பேருந்து மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை. கஸ்பாபேட்டையில் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை

இந்தியா – சீனா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள லடாக் பாதுகாப்பை அதிகரிப்பதில், ஒருங்கிணைந்த நிலைப்பாடுடன் இருப்பதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒவ்வொரு நாடும், தமது பாதுகாப்பை வலுப்படுத்தி வருவது புதிது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து உற்சவம் பக்தர்களின்றி தொடங்கியது. ரங்கநாதர் கோயிலில் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, ராப்பத்து என 20 நாள்கள் நடைபெறும்

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
Highlights

  22:12 (IST)15 Dec 2020
  பசுமை தீர்ப்பாய நிபுணர் குழுவில் கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

  தேசிய பசுமைத் தீர்ப்பாய நிபுணர் குழு உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக முன்னாள் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  21:49 (IST)15 Dec 2020
  இலங்கை கடற்படையினரால் இன்று ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 36 பேர் சிறைபிடிப்பு

  தூத்துக்குடியைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் ஒரு விசைப்படகு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இதையடுத்து, இன்று ஒரே நாளில் 5 படகுகள் மற்றும் 36 மீனவர்களை இலங்கை கடற்பனையினர் சிறைபிடித்துள்ளனர்.

  21:45 (IST)15 Dec 2020
  சென்னை கிண்டி சாலையில் திடீர் பள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

  சென்னை கிண்டி – கத்திபாரா சாலையில் திடீரென 7 அடி நீளம், 2 அடி அகலத்தில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  21:15 (IST)15 Dec 2020
  அரியர் மாணவர்களுக்கு தேர்வு; சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

  அரியர் வைத்திருந்து கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசால் பாஸ் அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் தேர்வு அறிவித்துள்ளது. இறுதி செமஸ்டர் தவிர பிற செமஸ்டரில் வைத்துள்ள அரியர் வைத்திருப்பவர்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண்களை உயர்த்திக்க்கொள்ள தேர்வு வைக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். டிசம்பர் 21 முதல் ஜனவரி 6ம் தேதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலை ஒப்படைக்க உறுப்புக் கல்லூரிகளுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

  20:35 (IST)15 Dec 2020
  புதிய கட்சி தொடங்கலாம் என்று எண்ணம் – இயக்குநர் பார்த்திபன்

  புதுச்சேரியில் ஒத்த செருப்பு படத்திற்கு மாநில அரசின் சிறந்த படத்துகான விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், புதிய கட்சி தொடங்கலாம் என்று எண்ணம் இருக்கிறது. எனது கட்சியின் பெயர் புதிய பாதை என்று தெரிவித்துள்ளார்.

  20:26 (IST)15 Dec 2020
  விருதுநகரில் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ-க்கு கொரோனா

  விருதுநகரில் கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  19:02 (IST)15 Dec 2020
  தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

  சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி மற்றும் இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்படுள்ளார். தமிழக காவல் தலைமையக ஐ.ஜி.யாக ஜோஷி நிர்மல் நியமனம். காவல்துறை செயலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். TANGEDCO லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பிராஜ் கிஷோர் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவு ஏடிஜிபியாக அமரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் பிரிவு-1 காவல் கண்காணிப்பாளராக சுதாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  18:47 (IST)15 Dec 2020
  புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை ஆகும். அது ஏழை, எளிய மாணவர்களின் ஆரம்ப கல்வியைக் கூட தடுக்க திட்டம். உதவித் தொகையை நிறுத்துவது மாணவர்களின் கல்வியை தடுப்பதற்கு சமம்” என்று விமர்சித்துள்ளார்.

  17:53 (IST)15 Dec 2020
  ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார்; மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

  கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “மக்களுக்கு நன்மை பயக்கும் என்றால் எந்த ஈகோவையும் விட்டுவிட்டு நாங்கள் ஒத்துழைப்போம். கண்டிப்பாக இங்கே ஒரு மாற்றம் வேண்டும். அவரும் அதை சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர்களுடைய கொள்கைகள் என்னவென்று இன்னும் தெளிவாக சொல்லவில்லை. ஒற்றை வார்த்தையில் சொல்வதையெல்லாம் முழு கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. சொல்லட்டும் பிறகு நாங்கள் பேசுவோம். நாங்கள் இருவருமே போனில் கிடைக்கக் கூடியவர்கள்தான். அதனால், நாங்கள் உதவி செய்ய முடிந்தால் உதவி செய்வோம். ரஜினியுடன் இணைந்து செயல்படத் தயார்” என்று தெரிவித்துள்ளார்.

  17:42 (IST)15 Dec 2020
  எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்; பிரதமர் மோடி உரை

  மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 3 வாரங்களாக போராடி வரும் நிலையில், குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, “எதிர்க்கட்சிகளின் சதியால் தவறாக வழிநடத்தப்பட்டு விவசாயிகள் டெல்லி அருகே கூடியுள்ளனர். புதிய வேளாண் திருத்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் விவசாயிகளின் நிலங்கள் மற்றவர்களால் பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், நீங்கள் பால் விற்பனை செய்வதால் பால் உரிமையாளர் உங்கள் கால்நடைகளை ஓட்டிச் சென்விட்டாரா? உழவர் நலனில் அரசாங்கம் எப்போதும் உறுதியுடன் உள்ளது. நாங்கள் விவசாயிகளுக்கு உறுதியளித்து அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வோம்” என்று கூறினார்.

  17:28 (IST)15 Dec 2020
  சூரப்பாவுக்கு எதிரான டிராஃபிக் ராமசாமி வழக்கு தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

  அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா பல்கலைக்கழக மானிய விதிகளுக்கு முரணாக சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து டிராஃபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐ ஐ டி இயக்குனர், இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீன் பதவிகள், துணைவேந்தர் பதவிக்கு இணையானது என்பதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

  16:25 (IST)15 Dec 2020
  கன்னியாகுமரியில் 24ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளுர் விடுமுறை

  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளுர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

  16:24 (IST)15 Dec 2020
  ஐ ஐ டி போட்டித் தேர்வுகளில் தமிழக அரசு சார்பில் பயிற்சி வகுப்புகள்

  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஐ ஐ டி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக தில்லியில் உள்ள நெக்ஸ்ட்ஜென் வித்யா என்ற தனியார் நிறுவனத்துடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டுள்ளது.

  பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

  16:22 (IST)15 Dec 2020
  இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது

  தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  15:11 (IST)15 Dec 2020
  18 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  18 தொழில் நிறுவனங்களுடன் ரூ.19,955 கோடி முதலீட்டில் 26,509 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன – முதல்வர்  அறிவிப்பு. 

   

  15:09 (IST)15 Dec 2020
  ரஜினி தேர்தல் சின்னம் – மக்கள் மன்றம் விளக்கம்

  தேர்தல் சின்னம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை  ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்க வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்தது.  

  15:06 (IST)15 Dec 2020
  கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

  கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

  15:02 (IST)15 Dec 2020
  எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 100 உயர்த்துவதை உடனடியாக கைவிட வேண்டும் – கே. எஸ் அழகிரி</div>

  கொரோனா தொற்று காரணமாகவும் பொருளாதார வீழ்ச்சியினாலும் தவறான கொள்கை முடிவுகளாலும் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் இந்நிலையில் ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 100 உயர்த்துவதை உடனடியாக மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்தது. 

   

  14:53 (IST)15 Dec 2020
  மினி கிளினிக் பார்வை நேரம்.
  மினி கிளினிக் பார்வை நேரம்.
   

  14:33 (IST)15 Dec 2020
  குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்</div>

  இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார் என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார். 

  14:27 (IST)15 Dec 2020
  நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும் – கமல்ஹாசன்

  புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்..   

  13:39 (IST)15 Dec 2020
  சென்னை ஐஐடியில் 183 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

  சென்னை ஐஐடியில் டிசம்பர் 1ம் தேதியில் இருந்து இதுநாள் வரையில் 183 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

  13:38 (IST)15 Dec 2020
  குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல – ரவிக்குமார் எம். பி

  கொரோனவைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சனை எழுப்புவார்கள் என்ற பயமே இதற்குக் காரணம்.நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தகர்க்கும் இம்முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று விழுப்புரம் எம். பி ரவிக்குமார் தெரிவித்தார்.   

  13:36 (IST)15 Dec 2020
  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்திடுக – மு. க ஸ்டாலின்

  கூடலூரில் காட்டு யானை தாக்கி கவுன்சிலர் ஆனந்தராஜும் அவரது மகனும் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது! அதிமுக அரசின் அலட்சியத்தால் கூடலூரில் இப்படி 10 பேர் பலி! கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்திடுக என்று மு. க ஸ்டாலின் தெரிவித்தார்.   

  13:35 (IST)15 Dec 2020
  மூலை முடுக்குக்கெல்லாம் நம் கட்சியை கொண்டுபோய் சேர்த்துள்ளது – எல், முருகன்

  வேல் யாத்திரை தமிழகம் முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது ! தமிழகத்தின் மூலை முடுக்குக்கெல்லாம் நம் கட்சியை கொண்டுபோய் சேர்த்துள்ளது.  இதற்கு முழு காரணமும் நம் தொண்டர்களும், தடைகளை தாண்டிய அவர்களின் அயராத முயற்சிகளும்தான்! என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.  

  12:49 (IST)15 Dec 2020
  கணவருக்கு தூக்கு தண்டனை!

  மனைவி மற்றும் 6 மாத சிசுவை கொலை செய்த வழக்கு . 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தில் கணவருக்கு தூக்கு தண்டனை விதித்தது தேனி மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றம். 

  12:47 (IST)15 Dec 2020
  ஆயுஷ் மருத்துவர்கள் விளம்பரம்!

  கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என குறிப்பிட்டு ஆயுஷ் மருத்துவர்கள் விளம்பரம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு

  12:46 (IST)15 Dec 2020
  பகல்பத்து உற்சவம்!

  வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல்பத்து உற்சவம் பக்தர்களின்றி தொடங்கியது .  ரங்கநாதர் கோயிலில் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, ராப்பத்து என 20 நாள்கள் நடைபெறும். திருவிழாவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒருமணி நேரத்திற்கு 600 பேருக்கு மட்டுமே அனுமதி .  கொரோனா சூழல் காரணமாக டிச.24 மாலை 6 மணி முதல் டிச.25 காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 

  12:44 (IST)15 Dec 2020
  ஐஐடி கொரோனா ஹாட்ஸ்பாட்!

  மாஸ்க் அணியாதவர்களுக்கு சென்னை ஐஐடி ஒரு பாடமாக அமைந்துவிட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் சென்னை ஐஐடி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது என்று  சுகாதாரத்துறை பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

  12:30 (IST)15 Dec 2020
  தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

  .5% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது. 

  11:42 (IST)15 Dec 2020
  ரஜினி அரசியல் பிரவேசம்!

  நடிகர் ரஜினி தனது கட்சியின் சின்னமாக பாபா முத்திரை கேட்பதாக தகவல் .தேர்தல் ஆணையத்தில் மக்கள் சேவை கட்சி என பெயர் பதிவு .ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ரஜினி தரப்பு பாபா முத்திரையை கேட்பதாக தகவல்.  வரும் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாக உள்ளது. 

  11:39 (IST)15 Dec 2020
  பிரிட்டன் வெளியுறவு செயலர் டொமினிக் ராப் சந்திப்பு !

  டெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடன் பிரிட்டன் வெளியுறவு செயலர் டொமினிக் ராப் சந்திப்பு நிகழ்ந்து வருகிறது.

  11:38 (IST)15 Dec 2020
  பைசர் தடுப்பூசி,!

  அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் கூட்டாக தயாரித்த இந்த தடுப்பூசி, கொரோனா வைரசுக்கு எதிராக 95 சதவீதம் செயலாற்றுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பணி முதலாவதாக இங்கிலாந்திலும், 2-வதாக அமெரிக்காவிலும் தொடங்கியுள்ளது.  இந்தியாவில் தங்கள் தடுப்பூசியை அனுமதிக்க கோரி பைசர்,  மருத்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது.  இந்நிலையில் இந்த தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என மத்திய அரசு வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது.அதிகமான விலையும், தடுப்பூசியை பாதுகாப்பாக வைத்திருக்கும் குளிர் சங்கிலி கட்டமைப்பு இல்லாததும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது

  11:37 (IST)15 Dec 2020
  விஞ்ஞானி ரோடம் நரசிம்மா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

  இந்திய விண்வெளித்துறை விஞ்ஞானி ரோடம் நரசிம்மா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் . ரோடம் நரசிம்மா மிகச்சிறந்த விஞ்ஞானி, அறிவியலில் புதுமையை புகுத்துவதில் ஆர்வம் மிக்கவர் என புகழாரம். 

  11:36 (IST)15 Dec 2020
  குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து .  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவருக்கு கடிதம். 

  10:33 (IST)15 Dec 2020
  3 கட்டங்களாக தேர்வுகள்!

  ரயில்வே துறையில் உள்ள 1.4 லட்சம் காலிபணியிடங்களை நிரப்ப, நாளை முதல் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும்  மத்திய அரசு அறிவிப்பு. 

  10:32 (IST)15 Dec 2020
  வருமான வரித்துறையினர் சோதனை!

  சென்னையில் சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன் இல்லத்தில் இருந்து ரூ.1.37 கோடி பறிமுதல் . 3 கிலோ தங்க நகை, ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், வைரம் கைப்பற்றப்பட்டுள்ளன.

  10:29 (IST)15 Dec 2020
  ஜெகத்ரட்சகன் துணைவியார் மரணம்!

  முன்னாள் மத்திய அமைச்சர், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர், ஜெகத்ரட்சகன் துணைவியார் அனுசுயா ஜெகத்ரட்சகன் இன்று காலை மரணம்

  09:40 (IST)15 Dec 2020
  கொரோனா தடுப்பூசி!

  இந்தியாவிலும் விரைவில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சர்வதேச கொரோனா வைரஸ் குறும்பட விழாவில் கலந்து கொண்ட ஜவடேகர், இரண்டாவது தடுப்பூசி ஊசி போடப்பட்டு, உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என தெரிவித்தார்.

  09:18 (IST)15 Dec 2020
  ‘ஆட்டோ’ சின்னம்!

  நடிகர் ரஜினியின் அரசியல் கட்சிக்கு ‘மக்கள் சேவை கட்சி’ என பெயரிடப்பட்டிருப்பதாக தகவல.  ரஜினி கட்சிக்கு ‘ஆட்டோ’ சின்னம் ஒதுக்கீடு என தகவல்!

  09:17 (IST)15 Dec 2020
  மெரினாவில் குப்பை!

  நேற்று ஒரே நாளில் மெரினாவில் மக்கள் கூட்டம் குவிந்ததால், குப்பைகளும் குவிந்தன; குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம், 8 மாதங்களுக்குப் பிறகு பொது மக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது

  Tamil News : இந்த ஆண்டு நமது ராணுவ வீரர்கள் நிகழ்த்திய சாதனைகளை நினைத்து வருங்கால தலைமுறையினர் பெருமைப்படுவர் என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

  நேற்றைய செய்திகள்

  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்வாளர்கள் குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு. நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல்.

  Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

  Web Title: Tamil news live today dmk sardar vallabhbhai patel farmers protest vj chitra cm edappadi

  Best of Express