/tamil-ie/media/media_files/uploads/2020/12/aiadmk-news-edappadi-k-palaniswami.jpg)
Tamil News : அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நாளை காலை 8.50 மணிக்கு கூடுகிறது.
கூட்டத்துக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 302 பேர் பங்கேற்கிறார்கள். பொதுக்குழுவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிகளின் செயலாளர்கள், ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட மொத்தம் 3,500 பேர் கலந்து கொள்கிறார்கள்.
தமிழக சட்ட சபைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் நாளை நடைபெறும் பொதுக்குழு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி. நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி என முதற்கட்ட தகவல்
வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு" -வருமான வரி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல் சசிகலா விடுதலையாக உள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் சசிகலா தரப்பு வலியுருத்தல்.
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதித்திருப்பது விதிமீறல் என மத்திய உள்துறை அமைச்சகம் கண்டித்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாகடிதம் எழுதியுள்ளார்.கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட தளர்வுகளுடன் கூடிய கொரோனா நெறிமுறைகளில், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக அஜய் பல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள மத்திய உள்துறை செயலாளர்,மத்திய அரசின் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனக்கூறி, தமிழக அரசு விதித்த உத்தரவை மாற்றி பிறப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.
Live Blog
Tamil News Updates : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததையடுத்து, அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் தோன்றிய புதிய கொரோனா நோய் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,139 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது நாட்டில் 2,25,449 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
Professor Chitra Ghosh made pioneering contributions to academics and community service. I recall my interaction with her, when we discussed many subjects including declassification of files relating to Netaji Bose. Saddened by her demise. Condolences to her family. Om Shanti. pic.twitter.com/2sflRB8mPb
— Narendra Modi (@narendramodi) January 8, 2021
பேராசிரியர் சித்ரா கோஷின் மறைவிற்கு பிரதமர் மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி மற்றும் பணிகள் குறித்து ஆலோசிக்கவே பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்கும் சசிகலா வெளியே வருவதற்கும், எவ்வித சம்பந்தமும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தியேட்டர்களில் 100 % இருக்கைக்கு அனுமதி அளித்துள்ளது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாணைக்கு வந்தபோது, பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% அனுமதியா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பரிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர் லக்விக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதியவகை கொரோனா தொற்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 82ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 71 பேர் உருமாறிய கொரோனா வைரசால் பாதிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 11 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக் கொண்ட பிறகு நாங்கள் செலுத்திக் கொள்கிறோம் என்று ராஷ்டிரிய ஜனதா தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக வரும் 11ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய அரசு பிரதிநிதியாக பாஸ்கர் ராமமூர்த்தி நியமனம் . மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு பாஸ்கர் ராமமூர்த்தி தற்போது, சென்னை ஐஐடியின் இயக்குனராக உள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும், சென்னை ஐஐடி இயக்குனராகவும் செயல்படுவார்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் புகழாரம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி . கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் பாராட்டுக்கள்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது . தமிழகம் முழுவதும் 190 இடங்களில் ஒத்திகை நடைபெறுகிறது . சென்னையில் நடைபெறும் ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்கிறார்.
அமேசான் நிறுவனரை முந்தி உலகின் முதல் பணக்காரர் ஆனார் டெஸ்லாவின் சிஇஓ எலோன் மஸ்க் . சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் 10,913 பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
பொள்ளாச்சியில் ஜன.10ம் தேதி கனிமொழி எம்.பி. தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்.
சென்னை மெரினாவில் 900 ஸ்மார்ட் கடை ஒதுக்கீடு செய்ய ஜனவரி 20,21 -ல் குலுக்கல் முறையில் தேர்வு. குலுக்கல் நடைபெறும் இடம், நேரம் பின்னர் அறிவிக்கப்படும் .சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights