Tamil News Live Updates : மேகதாது அணை : கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல ஆண்டுகளாக ஆலோசனை நடத்தி வருகிறது கர்நாடக அரசு. தமிழக மக்களுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் மேகதாது அணை திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடம் இல்லை என்று அறிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் எடியூரப்பா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Stan Swamy
எல்கார் பரிஷாத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய செயற்பாட்டாளர் உடல்நலக் குறைவால் நேற்று மதியம் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.
சமூக செயற்பாட்டாளர், பாதிரியார் ஸ்டான் சுவாமி மும்பையில் மரணம்
Petrol Diesel Price Today
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ. 93.91க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:12 (IST) 06 Jul 2021ஜே.இ.இ. மெயின் தேர்வு குறித்து அறிவிப்பு
இந்தியாவில் ஜே.இ.இ. மெயின் 3வது கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறதுஎன்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
- 20:21 (IST) 06 Jul 2021தமிழகத்தில் 3,479 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று ஒரேநாளில், தமிழகத்தில் 3,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 73 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
- 19:00 (IST) 06 Jul 2021கொடைக்கானலில் பூங்காக்களை தற்காலிகமாக மூட உத்தரவு
கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர எந்த தடையும் இல்லை என்று கூறியுள்ள மாவட்ட நிர்வாகம் கொடைக்கானலில் பூங்காக்களை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது.
- 18:59 (IST) 06 Jul 2021ஸ்டான் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசு தலைவருக்கு கடிதம்
"ஸ்டான் சுவாமி மீது பொய் வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மறைவு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவருக்கு கடிதம் எடுதியுள்ளனர்.
- 18:16 (IST) 06 Jul 2021டிப்ளமோ படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்
தமிழகத்தில் டிப்ளமோ படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், நேற்று வரை 12261 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 9933 பேர் முழுமையாக பூர்த்தி செய்து சமர்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது
- 18:11 (IST) 06 Jul 2021மத்திய அமைச்சருடன் ஆலோசனை : அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய அமைச்சர் துரைமுருகன்,
முதலில் எங்களுக்கு உச்ச நீதிமன்றம் இவ்வளவு டி.எம்.சி தண்ணீர் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரையில் நமக்குக் கிடைக்கவேண்டிய 40, 50 டி.எம்.சியில் 8 டிஎம்.சி கூட கிடைக்கவில்லை அதனால் உடனடியாக கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரை விடச் சொல்லுங்கள் என்று கேட்டேன். உடனடியாகப் பேசுவதாகச் சொன்னார்.
இரண்டாவது பிரச்சினை காவிரியில் மேகதாது பிரச்சினை. எங்களிடம் எதுவும் கேட்காமல், பேசாமல் நேரடியாக உங்களிடம் வந்து உங்களிடம் டிபிஆர் அறிக்கையை அளித்துச் செயல்படுவதும், மத்திய அரசைப் பொறுத்தவரை சரியான அணுகுமுறை அல்ல என்பது எங்களது வாதம். அடுத்து மார்கண்டேய நதியில் ஒரு அணை கட்டியுள்ளார்கள். தன்னிச்சையாக அணை கட்டுகிறார்களே. இதற்கு என்ன பொருள். நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்றோம். 2017ஆம் ஆண்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட்டது.
தாமிரபரணி ஆறு திட்டம் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டோம். அனைத்தையும் புரிந்து வைத்துள்ளார். எங்களுக்கு ஆச்சர்யப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அனைத்துப் பிரச்சினைகளையும் அழகாகத் தெரிந்து வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
- 17:30 (IST) 06 Jul 2021மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சாமி மறைவுக்கு ஐ.நா. இரங்கல்
மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சாமி மறைவுக்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளது. அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்தியதற்காக யாரையும் கைது செய்யக்கூடாது என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே ஸ்டான் சாமி கைதுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
- 17:24 (IST) 06 Jul 2021கொரோனா விதிமுறைகளை மீறினால் தளர்வுகள் ரத்து - மத்திய அரசு எச்சரிக்கை
மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வோர், கொரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பதில்லை. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதது தொடர்ந்தால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் எச்சரித்துள்ளார்.
- 17:00 (IST) 06 Jul 2021நாட்டில் 24 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதே இல்லை
நாட்டில் 24 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதே இல்லை எனவும், 45% பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை எனவும், 63% பேர் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
- 16:49 (IST) 06 Jul 2021தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் - மத்திய சுகாதாரத்துறை
நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பில் 80 சதவீதம் 90 மாவட்டங்களில் இருந்து மட்டுமே கண்டறியப்படுகிறது என்றும் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- 16:41 (IST) 06 Jul 2021சிங்கார சென்னை 2.0 - தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கூவம், அடையாறை சீரமைப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- 16:36 (IST) 06 Jul 2021டெல்லியில் மேலும் 79 பேருக்கு கொரோனா
டெல்லியில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 4 பேர் உயிரிழப்பு. டெல்லியில் கொரோனாவுக்கு தற்போது 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 16:23 (IST) 06 Jul 2021யார் தடுத்தாலும் மேகதாது அணை கட்டுவோம் - எடியூரப்பா திட்டவட்டம்!
யார் தடுத்தாலும் மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக கூறியுள்ளார். அணை விவகாரத்தில் சட்டம் தங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
- 15:58 (IST) 06 Jul 2021ஒலிம்பிக்கிற்கு தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களுக்கு சரத்குமார் வாழ்த்து
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தமிழகத்தின் ரேவதி, தனலட்சுமி, சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தேர்வானதில் மகிழ்ச்சி, தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக வெற்றி பெற வாழ்த்துகிறேன் என - சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
- 15:56 (IST) 06 Jul 2021ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு உதவும் - அமைச்சர் மெய்யநாதன்
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
- 14:51 (IST) 06 Jul 2021மீண்டும் ரான்சம்வேர் தாக்குதல்
கெசியா என்ற மென்பொருள் நிறுவனத்துக்கு சொந்தமான சேவைத்தளங்களில் வைரஸ் தாக்குதல் நடந்து இருப்பதாக, அதன் நிர்வாக இயக்குனர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதல் நடத்திய ஹேக்கர்கள், பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 500 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
- 14:50 (IST) 06 Jul 2021மீண்டும் ரான்சம்வேர் தாக்குதல்
கெசியா என்ற மென்பொருள் நிறுவனத்துக்கு சொந்தமான சேவைத்தளங்களில் வைரஸ் தாக்குதல் நடந்து இருப்பதாக, அதன் நிர்வாக இயக்குனர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதல் நடத்திய ஹேக்கர்கள், பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 500 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
- 14:45 (IST) 06 Jul 2021சுமார் 37 கோடி தடுப்பூசிகள் விநியோகம் - மத்திய அரசு தகவல்
மாநிலங்களுக்கு இதுவரை 37 கோடியே 7 லட்சத்து 23 ஆயிரத்து 840 கொரோனா தடுப்பூசிகளை விநியோகித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மேலும், சுமார் 35 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஒன்றரை கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் இருப்பதாகவும் கூறுகிறது.
- 14:06 (IST) 06 Jul 2021என் கணவர் பப்ஜி விளையாடவில்லை - மதன் மனைவி பேட்டி
"தடை செய்யப்பட்ட விளையாட்டை எனது கணவன் மதன் விளையாடவில்லை. அவர் 20 மணி நேரம் வேலை செய்து பணம் சம்பாதித்தார். பப்ஜி விளையாடி சொத்து சேர்க்கவில்லை. என்னுடைய வங்கி கணக்கை மட்டுமே மதன் பயன்படுத்தி வந்தார். ஆனால், அது தற்போது முடக்கப்பட்டுள்ளது. வீட்டு சாவியும் போலீசாரிடம் உள்ளது" என்று பப்ஜி மதன் மனைவி பேட்டியளித்துள்ளார்.
- 13:11 (IST) 06 Jul 202110 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 12:53 (IST) 06 Jul 20218 மாநில ஆளுநர்கள் மாற்றம்
கர்நாடகா மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு மங்குபாய் சகன்பாய் படேல், ஹரியானா மாநிலத்திற்கு பண்டாரு தத்தாத்ரேயா, மிசோரம் மாநிலத்திற்கு ஹரிபாபு, ஹிமாச்சல் மாநிலத்திற்கு ராஜேந்திரன் விஸ்வநாத், கோவாவிற்கு ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா மாநிலத்திற்கு சத்யதேவ் நாராயன் ஆரியா, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ரமேஷ் பயஸ் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
- 12:18 (IST) 06 Jul 2021மத்திய அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
- 11:31 (IST) 06 Jul 2021ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு மசோதா - முதல்வர் கடிதம்
ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு மசோதா குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். திரைப்பட தணிக்கை சான்றிதழ் குழு தணிக்கை செய்திருந்தாலும் அந்த படங்களை மறுதணிக்கை செய்ய மத்திய அரசை அனுமதிக்கும் வகையில் திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்களின் கருத்துகளை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 11:13 (IST) 06 Jul 2021டெல்லி செல்கிறார் துரைமுருகன்
மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர் தொடர்பாக ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து பேச இருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
- 11:09 (IST) 06 Jul 2021வெள்ளை அறிக்கை வெளியிட தயார்
தடுப்பூசிகளின் விவரத்தை தினம் தோறும் வெளிப்படையாக தெரிவிக்கின்றோம். இதற்கு மேலும் வெளிப்படைத் தன்மை வேண்டும் எனில் வெள்ளை தாளில் அறிக்கையாக எழுதி தருகிறேன் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
- 10:56 (IST) 06 Jul 2021விமானம் மாயம்
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 28 பேருடன் பறந்து கொண்டிருந்த விமானம் மாயம். கட்டுபாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக தகவல்
- 10:35 (IST) 06 Jul 2021யூடியூபர் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு
யூடியூப் சேனல்களில் பெண்களை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட யூடியூப் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 10:28 (IST) 06 Jul 2021தலைமை பொறியாளர்கள் 4 பேர் பணியிட மாற்றம்
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட தலைமை பொறியாளர் பி.ஆர். குமார் நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை திட்ட தலைமைப் பொறியாளர் சந்திரசேகர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திட்ட தலைமை பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை - கன்னியாகுமரி தொழில்தட சாலை திட்ட தலைமை பொறியாளராக இருந்த பாலமுருகன் தேசிய நெடுஞ்சாலை திட்ட தலைமை பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். அதே போன்று நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநராக இருந்த கீதா நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்ட தலைமை பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- 10:19 (IST) 06 Jul 20218 இடதுசாரி எம்.பி.க்களுக்கு லட்சத்தீவு நிர்வாகம் அனுமதி மறுப்பு
லட்சத்தீவிற்கு செல்ல 8 கேரள எம்.பிகளுக்கு லட்சத்தீவு நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
- 10:17 (IST) 06 Jul 2021காலாவதியான பொருட்கள் ரேசன் கடைகளில் இருந்தால் ஆய்வு அலுவலரே பொறுப்பு
ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, வரவு, விற்பனை ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்று மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை. காலாவதியான பொருட்கள் கடைகளில் இருந்தால் அப்பகுதி ஆய்வு அலுவலரே முழு பொறுப்பு என அறிவிப்பு
- 10:15 (IST) 06 Jul 2021Coronavirus latest updates
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,703 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாள்ளில் 51,864 நபர்கள் மருத்துவமனையில் இருந்து நலம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 553 இறப்புகள் பதிவாகியுள்ளது. தற்போது 4, 64, 357 நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 09:55 (IST) 06 Jul 2021தளர்வுகள் அளிப்பதில் கவனம் வேண்டும் - WHO அறிவுறுத்தல்
கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிப்பதில் கவனம் வேண்டும் என்றும் உலக நாடுகள் மிகவும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும் என்று WHO அறிவுறித்தியுள்ளது.
- 09:33 (IST) 06 Jul 2021அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகின்ற 9ம் தேதி அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
- 09:14 (IST) 06 Jul 2021கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய நோவக் ஜோகோவிச், ரோஜர் ஃபெடரர்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்டோர் காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்
- 09:13 (IST) 06 Jul 2021சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை துவங்கியது. வருகின்ற 15ம் தேதி அன்று ஆனித் திருமஞ்சன் திருவிழா நடைபெற உள்ளது
- 09:12 (IST) 06 Jul 2021செமஸ்டர் தேர்வு முறையை கொண்டு வரும் சி.பி.எஸ்.இ
10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் 2 பருவ தேர்வுகள் நடத்தி அதன் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்க சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது. தலா 90 நிமிடங்கள் இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 08:47 (IST) 06 Jul 2021Village Cooking Channel : ராகுல் வாழ்த்து
வில்லேஜ் குக்கிங்க் சேனல் அடைந்த உயரத்திற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள். தமிழக அரசுக்கு கொரோனா நிதி அளித்ததிற்கும் வாழ்த்துகள், மீண்டும் உங்களை சந்திக்க காத்திருக்கின்றேன் என்று வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
- 08:42 (IST) 06 Jul 2021கேட் மிடில்டனுக்கு கொரோனா
கொரோனா வைரஸின் தாக்கம் இங்கிலாந்தில் படிப்படியாக குறைந்து வருகின்ற நிலையில் ஜூலை 3வது வாரத்தில் இருந்து ஊரடங்கை நீக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோருக்கு வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.