News Highlights: சட்டமன்றத் தேர்தல் வியூகம்; ஜன,9-ல் அதிமுக பொதுக்குழு

Tamil news : ஒரு மணி நேரத்தில் முடிந்த இந்தியாவின் ஆட்டம்

Tamil News, EPS - OPS

Tamil news Today : ஜனவரி 9-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்த முக்கிய வியூகங்கள், வேட்பாளர் தேர்வு, கூட்டணி ஆகியவை குறித்து முக்கிய ஆலோசனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா , கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டும் அதே வானகரம் வெங்கடாசலபதி மகாலில்தான் இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோரும் பொதுக்குழுவை கூட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மகளிரணி இன்று ஆர்ப்பாட்டம்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று தான் ஆக வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்களும் பூமிக்கு அருகே ஒரே நேர்க்கோட்டில் வரும் ஒருங்கமைவு இன்று நிகழ உள்ளது. 2வதாக, தென்கோடி பகுதிக்கு சூரியன் சென்று ஒளிர்ந்து மீண்டும் வடக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கிறது. 3வதாக இன்று ஓர்சிட்ஸ் என்ற எரிகற்கள் பொழிவும் நிகழ உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்.ட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள். , அவலாஞ்சி, பைக்காரா போன்ற சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ளன. அரசு தாவரவியல் பூங்காவில் புல்வெளிகளில் அமர்ந்தவாறு, பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் மழை ரயில்களில் பயணம் செய்து இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.

Live Blog

News In Tamil : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்


21:37 (IST)21 Dec 2020

புரெவி புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகிறது

புரெவி புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகிறது என்று உள்துறை அமைச்சர் ட்வீட் செய்தார்.  

20:47 (IST)21 Dec 2020

நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது

நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். நாட்டில் உள்ள சிறுத்தைகள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் இன்று வெளியிட்டார்.

20:46 (IST)21 Dec 2020

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 5ம் தேதி வரை மீண்டும் இரவு நேர ஊரடங்கு

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 5ம் தேதி வரை மீண்டும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அமலில் இருக்கும்

20:01 (IST)21 Dec 2020

மோதிலால் வோரா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

காங்கிரஸின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு மோதிலால் வோரா அவர்கள், மிக நீண்ட அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான அனுபவம் கொண்டவர். அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும் நலன் விரும்பிகளுக்கும் அனுதாபங்கள் ஓம் சாந்தி என்று பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.  

19:49 (IST)21 Dec 2020

கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது – கனிமொழி

”உலக நாடுகள் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்கும் நிலையில் – பாஜக அரசு மட்டும் தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம் சாட்டினார்.  

19:48 (IST)21 Dec 2020

காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா மரணம்

காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நீண்டகாலம் பொறுப்பு வகித்து மோதிலால் வோரா மரணமடைந்தார். இவரது, மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ் அழகிரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, முதலமைச்சராக, மத்திய அமைச்சராக, ஆளுநராக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நீண்டகாலம் பொறுப்பு வகித்து காங்கிரஸ் கட்சிக்கு பெருமை சேர்த்த மூத்த தலைவர் திரு. மோதிலால் வோரா அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இயக்க நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.  
 

19:01 (IST)21 Dec 2020

ஜனவரி 9ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் – அதிமுக அறிவிப்பு

ஜனவரி 9ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் வானகரம்  வெங்கடாசலபதி பேலஸில் பொதுக்குழு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

 

18:46 (IST)21 Dec 2020

பிரிட்டன் – இந்தியா விமான சேவைகள் நிறுத்திவைப்பு

பிரிட்டனில் தற்போது நிலவும் கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, பிரிட்டன் – இந்தியா விமான சேவைகள் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு முடிவு தெரிவித்தது. 

 

18:42 (IST)21 Dec 2020

மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

இம்மாதம் 31 -ஆம் தேதி இரவு ஜனவரி 1-ஆம் தேதி அன்றும் அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட அனுமதி கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

18:25 (IST)21 Dec 2020

விவசாயம் தொடர்பான செயல்பாடுகள் மின்னணு நிர்வாக திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்

விவசாயம் தொடர்பான செயல்பாடுகள் அனைத்தையும் தேசிய மின்னணு நிர்வாக திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியுள்ளார்

18:24 (IST)21 Dec 2020

அரசாணை திரும்பப் பெறப்படும் – மின்துறை அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு செய்வது தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்

18:22 (IST)21 Dec 2020

தேர்தல் ஆணையத்தின் உயர்நிலைக்குழு இன்று சென்னையில் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் உயர்நிலைக்குழு இன்று சென்னையில் ஆலோசனை மேற்கொண்டனர். தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலர் திரு. உமேஷ் சின்ஹா, துணை ஆணையர்கள்  சுதீப் ஜெயின், ஆஷிஷ் குண்டர்  பீகார் தலைமைத் தேர்தல் அதிகாரி சீனிவாசா உள்ளிட்டோர் இந்தக்குழுவில் இடம் பெற்றனர். இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,வருமானவரித்துறை அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
.

18:21 (IST)21 Dec 2020

கருப்பு கருணா இறப்பு அதிர்ச்சி அளிக்கிறது – பா. ரஞ்சித்

பா. ரஞ்சித் இரங்கல்:   தமுஎகச -வின்‌  மாநில துணை பொதுச்செயலாளர்,  தோழர் கருப்பு கருணா அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், அனைத்து இயக்க தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று பா. ரஞ்சித் இரங்கல்  தெரிவித்தார்  

16:55 (IST)21 Dec 2020

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கனிமொழி தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் திமுக எம்.பி கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

15:48 (IST)21 Dec 2020

மு.க.ஸ்டாலின் நாளை ஆளுநருடன் சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் என்ரு தகவல் வெளியாகி உள்ளது.

15:46 (IST)21 Dec 2020

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிச.31 வரை தடை

இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிச.31 வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

15:44 (IST)21 Dec 2020

இளையராஜாவை அனுமதிக்க முடியாது; பிரசாந்த் ஸ்டுடியோ ஐகோர்ட்டில் திட்டவட்டம்

பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டுடியோ தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

15:10 (IST)21 Dec 2020

ஜனவரி 9ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு நடைபெறும் என அறிவிப்பு

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஜனவரி 9ம் தேதி காலை 8.50 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பங்கேற்கும் அதிமுக பரப்புரை கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

14:52 (IST)21 Dec 2020

மதுரை நடுப்பட்டி கிராமத்தில் மயான சாலை இல்லை; விசாரணைக்கு ஏற்றது ஐகோர்ட்

மதுரை மாவட்டம் நடுப்பட்டி கிராமத்தில், மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை என்ற விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் குடிநீர், சாலை வசதிகள் உள்ளதா? என்று தமிழக அரசிடம் ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

14:49 (IST)21 Dec 2020

மின்வாரிய ஊழியர்கள் அவுட்சோர்சிங் அரசாணை வாபஸ் – அமைச்சர் தங்கமணி

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது. தொழிற்சங்கங்கள் வழக்கை வாபஸ் பெற்றால், 10 ஆயிரம் பேர் உடனடியாக பணி நியமனம் செய்யப்படுவர்.” என்று தெரிவித்துள்ளார்.

13:24 (IST)21 Dec 2020

ஸ்டாலின் அறிக்கை!

மின்வாரியத்தின் ஒரு பகுதியை திட்டமிட்டு தனியாருக்கு தாரை வார்ப்பதா? *.மின்வாரியத்தில் தனியார் மயத்தை உடனே கைவிட வேண்டும் .தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல் .  ஐடிஐ படித்த தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு அநியாயமாக பறிபோகும் . தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஸ்டாலின் அறிக்கை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குறைந்த கூலிக்கு வேலைக்கு வர தயாராக இருப்பதால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து. 

13:22 (IST)21 Dec 2020

ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

சாதி வாரியான விவரங்களை வழங்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி . தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் தர கோரி வழக்கு .  இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல  என உயர்நீதிமன்றம் கருத்து. 

13:17 (IST)21 Dec 2020

நிர்மலா சீதாராமன் ஆலோசனை!

டெல்லியில் உட்கட்டமைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறை நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை . 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை

13:16 (IST)21 Dec 2020

ரஜினிகாந்துக்கு சம்மன்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன்- ஜனவரி 19ம் தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக உத்தரவு

12:38 (IST)21 Dec 2020

அரசாணை வெளியீடு!

பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியீடு . பிரசாரத்தின் போது முதல்வர் அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியீடு *அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது

12:37 (IST)21 Dec 2020

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிக்கை!

ம்ஜிஆரின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 24-ம் தேதி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் . ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிக்கை

12:33 (IST)21 Dec 2020

பொங்கல் பரிசு!

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி 

11:12 (IST)21 Dec 2020

திமுக சார்பில் கிராம சபை கூட்டம்!

வரும் 23ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் *்.குன்னம் கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் .  நாளை மறுநாள் முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த திட்டம். 

11:11 (IST)21 Dec 2020

அதிமுகவுடன் கூட்டணி!

பாஜகவிற்கென்று தனிக்கொள்கை இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கின்றோம் -. பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி. 

11:11 (IST)21 Dec 2020

அதிமுகவுடன் கூட்டணி!

பாஜகவிற்கென்று தனிக்கொள்கை இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கின்றோம் -. பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி. 

11:09 (IST)21 Dec 2020

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை. !
இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதே நோக்கம்ப்படும் .சிறு தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் . வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு அமைப்பதே நோக்கம் . இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் திட்டம் கொண்டு வரப்படும் . மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை. 

11:08 (IST)21 Dec 2020

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள்!

: சென்னை தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி . சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி 2019 – 2020 ஆண்டில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கினார் முதல்வர். 

10:07 (IST)21 Dec 2020

அவசர ஆலோசனை. !

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ், இத்தாலியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல். புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் டெல்லியில் இன்று மாலை அவசர ஆலோசனை. 

09:23 (IST)21 Dec 2020

நீட் தேர்வு பயிற்சி!

அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 405 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்  அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 

09:20 (IST)21 Dec 2020

கொரோனா தடுப்பூசி!

ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல். 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் தகவல். 

09:19 (IST)21 Dec 2020

உண்ணாவிரதப் போராட்டம்!

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், இன்றுமுதல் விவசாயிகள் சங்கிலி தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

09:16 (IST)21 Dec 2020

தேர்தல் ஆணையத்தின் குழு இன்று சென்னை வருகை!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையத்தின் குழு இன்று சென்னை வருகை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை

Tamil news : இந்திய அணி டெஸ்ட் வரலாற்றில் தன் மோசமான ஆட்டத்தை பதிவு செய்துள்ளது. உலக அரங்கில் இந்த ஸ்கோர் 2 வது மோசமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. 1955 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 26 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்த மோசமான தோல்வியால் வார்த்தையால் விவரிக்க முடியாத அளவு வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்தார். 2 நாட்களாக விளையாடிய சிறப்பான ஆட்டம், 1 மணி நேரத்தில் நொறுங்கி விட்டது என அவர் தெரிவித்தார்.

நேற்றைய செய்திகள்

சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51, டீசல் ரூ.79.21க்கு விற்பனை

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today dmk magalirani protest kamalhassan election campaign cm edappadi admk

Next Story
கிறிஸ்தவர்கள் புனித பயணம் நிதி: ரூ.37,000 ஆக முதல்வர் அறிவித்தார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express