/tamil-ie/media/media_files/uploads/2020/09/aiadmk-row-cm-candidate.jpg)
Tamil News Today Live gandhi jayanthi
Tamil News Today : அதிமுக 49வது ஆண்டு தொடக்கவிழா வரும் 17ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக தொடங்கி 48 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17.10.2020 சனிக்கிழமை 49வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்படுகிறது.
அன்று காலை 10.30 மணிக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமை கழகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளனர்.
அஇஅதிமுக 49-ஆவது ஆண்டு தொடக்க விழா. pic.twitter.com/X2AsgbasvY
— AIADMK (@AIADMKOfficial) October 13, 2020
முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள்(93) காலமானார். சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடலுக்கு உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி
முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, தொலைபேசியில் தொடர்புக்கொண்டு ஆறுதல் கூறிய துணைமுதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆறுதல் கூற சேலம் செல்கிறார். முதல்வரின் தாயார் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்.முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன்.அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கல். என திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்.
முதலமைச்சர் திரு.பழனிசாமி அவர்களின் தாயார் திருமதி.தவசாயி அம்மாள் மறைவெய்திய செய்தியால் மனவேதனைக்கு உள்ளானேன்.
அவரைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தேன்.
அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் @CMOTamilNadu, குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபமும் ஆறுதல்களும்! pic.twitter.com/qnZfbvZaC1
— M.K.Stalin (@mkstalin) October 13, 2020
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today : அரசியல், சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
வீட்டுக்காவலில் இருந்து மெகபூபா முப்தி விடுவிக்கப்பட்டார்.
பொது பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் இரண்டாவது முறையாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை, கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மூன்றுமாதங்கள் நீட்டித்தது.
பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரே அரசியல் தலைவர் மெகபூபா முப்தியின் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் நவம்பர் 2020-இல் நிறைவடைகிறது. இந்த, 11 காலியிடங்களுக்கான தேர்தல் நவம்பர் 9 அன்று நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க ஆளும் பாஜக அரசு முடிவெடுத்திருக்கிறது.
நீட் தேர்வின் மூலம் நம் மாணவ செல்வங்களின் மருத்துவ கனவை எப்படி சிதைத்தார்களோ, அதே போல பொறியியல் கனவையும் அழித்தொழிக்க முயற்சி செய்கின்றனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 7வது சந்திப்பின் கூட்டறிக்கையை பாதுக்காப்பு அமைச்சகம் வெளியிட்டது.
இதுகுறித்து வெளியிட்ட கூற்றைகையில், " இந்தியா மற்றும் சீனா ராணுவ உயர் அதிகாரிகளின் 7வது கூட்டம் லடாக் அருகேயுள்ள சுசூல் பகுதியில் அக்டோபர் 12ம் தேதி நடந்தது. இந்தியா-சீனா எல்லை பகுதியின் மேற்கு பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து இரு தரப்பினரும், உண்மையான மற்றும் ஆக்கப்பூர்வமான வகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கருத்து பரிமாற்றம் நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது. இருதரப்பினரின் நிலைப்பாட்டில் உள்ள புரிதலையும் அதிகரித்தது. ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, ராணுவ நடவடிக்கையை குறைக்கும் விதத்தில் பரஸ்பர தீர்வை, கூடிய விரைவில் ஏற்படுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டன" என்று தெரிவிக்கப்பட்டது.
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் செய்வது இன்று தொடங்கியது. 15 மாவட்டங்களில் உள்ள 78 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் ஏழாம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன
— Chennai Super Kings (@ChennaiIPL) October 13, 2020
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்ததுள்ளது.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,65,930 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 19, அரசு மருத்துவமனைகளில் 38 என மொத்தம் 57 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,371-ஆக அதிகரித்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசிக்க நவம்பர் 3ம் தேதி தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
சென்னையில் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரன் கே.கே.நகர் திமுக அலுவலகத்தில் இருந்த போது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். அப்போது அங்கே அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணும் அரிவாள் வெட்டில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த தனசேகரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு குறித்து ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கொரோனா வைரஸ் தொற்று பரவும் இந்த நேரத்தில் பண்டிகை கால பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவலை விழிப்புணர்வு மட்டும் போதாது பழக்க வழக்கம் மாற்றம் அவசியம்” என்று கூறினார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது. நாளை நமதே!” என்று ட்வீட் செய்துள்ளார்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர், சென்னையில் உள்ள தேமுதிக விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் விஜயகாந்த் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. * கிருஷ்ணகிரி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாஜகவில் இணைந்தபின் சென்னை திரும்பிய நடிகை குஷ்பு விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கடந்த 6 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். காங்கிரஸில் இருந்து நான் வெளியேறும்போது நான் நடிகையாகத்தான் இருந்தேன் என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். அவருக்கு, 6 வருடங்களுக்குப் பிறகுதான் நான் நடிகை என தெரிந்ததா. நான் ஏன் கட்சியில் இருந்து வெளியேறினேன் என்று யோசிக்க முடியாத மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாகத்தான் அது இருக்கிறது. திமுகவில் இருந்து வெளியேறிய போதும், நான் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. காங்கிரஸில் இருந்து வெளியேறும்போதும் நான் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை. ஆனால், தவறாக விமர்சிக்கப்படும்போது அதற்கு பதிலடி கொடுத்துதான் ஆக வேண்டும்” என்று கூறினார்.
பாஜகவில் இணைந்தபின் சென்னை திரும்பிய நடிகை குஷ்பு விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பாஜக தலைவர் முருகன் என்னிடம் பேசியதால்தான் நான் இன்று இந்த கட்சியில் சேர்ந்திருக்கிறேன். கட்சிப் பணிகளுக்காக, தலைவர் எல்.முருகன் ஒவ்வொருத்தரிடமும் பேசி இந்த கட்சியில்தான் நாட்டுக்கு நல்லது செய்ய முடியும் என்று பேசி புரியவைத்து அழைக்கிறார். 6 வருடமாக அந்த கட்சியில் இருந்தபோது இப்போது வெறும் தனிமையாகத்தான் பார்ப்பதாகச் சொன்னார். அங்கே கட்சியில் இருப்பவர்களுக்கும் மரியாதை கிடையாது. கட்சியில் இருந்து வெளியில் போகிறவர்களுக்கும் மரியாதை கிடையாது. ஏன் கட்சியில் இருந்து வெளியே போகிறார்கள் என்று யோசிக்கும் திறமையும் கிடையாது.” என்று கூறினார்.
மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல். ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு. மெரினாவில் நடைபயிற்சி மேற்கொள்ள மாநகராட்சி ஆணையருக்கும், காவல் ஆணையருக்கும் அறிவுறுத்தல்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயி அம்மாள், நள்ளிரவில் காலமானார். தாயாரின் மறைவு செய்தி கேட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு காரில் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவசாயி அம்மாள் உடலுக்கு அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்திய நிலையில், தவுசாயி அம்மாளின் இறுதிச் சடங்குகள் இன்று காலை நடைபெற்றது. வீட்டில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் நடந்து சென்றனர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் மயானத்துக்கு இறுதி ஊர்வலம் சென்றடைந்ததும், அங்கு தவுசாயி அம்மாளின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. தவுசாயி அம்மாள் இறுதி ஊர்வலத்தில் திரளான மக்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம் . இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு . .இடைக்கால தடையை எதிர்த்து சட்டப்பேரவை செயலாளர், உரிமைக்குழு தொடர்ந்த வழக்கில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு.
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கொரோனாவிலிருந்து குணமடைந்தார். பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வை, படுத்துக்கொண்டும், டீ குடித்துக் கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும், ஆப்சென்ட் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.வன்னியர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சீர்மரபினருக்கு தனித்தனி இடஒதுக்கீடு வழங்குக. முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights