Advertisment

Tamil News Highlights: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது

Tamil Nadu News, Tamil News LIVE, Australia enter the finals, Madhya Pradesh, Chhattisgarh Election 2023, Tamilnadu Rains Today – 17 November 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN Assembly Session

Tamil News

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates 

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடிவு

கர்நாடக சட்டசபை : 6 மாதத்திற்கு பிறகு எதிர்கட்சி தலைவர் தேர்வு

பெங்களூருவில் நடந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பாஜக எம்எல்ஏ ஆர்.அஷோக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியான நிலையில், 6 மாதங்கள் கழித்து எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளது பாஜக

டிக்கெட் மோசடியில் ஈடுபட்ட நடத்துனரின் போக்குவரத்து அதிகரிகள் விசாரணை

சேலத்திலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், பயணிகளிடம் கொடுத்த டிக்கெட்டை இறங்கும்போது வாங்கிக்கொண்டு, அடுத்து ஏறும் பயணிகளிடம் அதே டிக்கெட்டைகொடுத்து மோசடியில் ஈடுபட்ட நடத்துனர் நேரு. வடலூர் அருகே போக்குவரத்து கழகத்தின் டிக்கெட் பரிசோதகர்களிடம் கையும் களவுமாக சிக்கினார். இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

6 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து: மு.க. ஸ்டாலின்

செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்தை கைவிட வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் 

மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும்  திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு நிலங்களில்  சிப்காட் வளாகங்களை அமைக்க வேண்டும்.  தொழில்திட்டங்களுக்காக வேளாண்மை விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்பதை கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன ரனதுங்கவின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தது இலங்கை அரசு

பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா குறித்து இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுன ரனதுங்கா கூறிய கருத்துக்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. தனது பதவியைப் பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட்டை ஜெய்ஷா சிதைப்பதாக அர்ஜுன ரனதுங்கா பேசியது சர்ச்சையான நிலையில், அப்பேச்சு தவறானது எனக் கூறி இலங்கை அமைச்சர் விஜேசேகரா வருத்தம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பிற பல்கலைக்கழகங்களிலும் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தும் திட்டமிருந்தால் கைவிட வேண்டும். மாணவர்களின் நலனை கருத்தில் கொன்டு தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

மாலை 5 மணி வரை மத்தியப் பிரதேசத்தில் 71%, சத்தீஸ்கரில் 67% வாக்குகள் பதிவு

மாலை 5 மணி நிலவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் 71.11% வாக்குகளும், சத்தீஸ்கரில் 67.34% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மேல்மா விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது ஏன்? அமைச்சர் ஏ.வ. வேலு விளக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் ஏ.வ. வேலு கூறுகையில், “யாரோ தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரியில் இருந்து போராட்டம் நடத்துவது சரியா? நிலம் கையப்படுத்தாமல் தொழிற்சாலையை எங்கே அமைப்பது.” என்று கூறினார்.

ஏ.ஐ., டீப்ஃபேக் தொழில்நுட்பங்களின் அபாயம் குறித்து மோடி கவலை

பிரதமர் மோடி “ஏ.ஐ., டீப்ஃபேக் தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களின் உண்மைத் தன்மையை ஆராயாமல் மக்கள் பலரும் அதனை நம்பிவிடுகின்றனர். இந்த போக்கு சமூகத்தில் மிகப்பெரிய சவாலை உண்டாக்கும். மக்களுக்கு ஏ.ஐ., டீப்ஃபேக் குறித்து புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும். நான் கர்பா நடனம் ஆடுவது போன்ற போலி வீடியோவை நானே பார்த்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது நடவடிக்கை 

அ.தி.மு.க ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையின்படி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மதியம் 3 மணி வரை: மத்திய பிரதேசத்தில் 60%, சத்தீஸ்கரில் 55% வாக்குகள் பதிவு

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் 60.45% வாக்குகளும், சத்தீஸ்கரில் 55.31% வாக்குகளும் பதிவாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 230 இடங்களுக்கும், சத்தீஸ்கரில் 70 இடங்களைக் கொண்ட இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள திமானி சட்டமன்றத் தொகுதியில் வெள்ளிக்கிழமை காலை இரு குழுக்களுக்கு இடையே கல் வீச்சு நடந்ததில் ஒருவர் காயமடைந்தார் என்று காவல்துறை கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக கோப்பையின் நிறைவு விழாவில் இந்திய விமானப் படை நிகழ்த்தவுள்ள சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை: இன்று நடைபெற்றது 

உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னர் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் நரேந்திர மோடி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிக்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் விமான சாகசங்களை நிகழ்த்த திட்டம் இன்றும் நாளையும் ஒத்திகையை நடத்தும் இந்திய விமானப்படை

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நவ. 20-ம் தேதி நடைபெறும்

“அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நவ. 20-ம் தேதி நடைபெறும்” - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க: உத்தரவு

 சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்

விவசாயிகள் மீது குண்டாஸ் ஏன்? - காவல்துறை விளக்கம்

 குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள். அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள். திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் போராட்டத்தில் 7 விவசாயிகள் கைது குறித்து காவல்துறை விளக்கம்

 மாநில உரிமைகளை மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது- ஸ்டாலின்

அரசியல் மாண்புகளையோ, மாநில உரிமைகளையோ மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச்  சிதைக்கின்றன- ஸ்டாலின்  

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.  குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு, எதிர்வரும் செமஸ்டர் தேர்வுக்கு பொருந்தாது: பொன்முடி

 அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு, எதிர்வரும் செமஸ்டர் தேர்வுக்கு பொருந்தாது. அண்ணாமலை பல்கலை.யில் எந்த தகுதியும் இல்லாதவர்களை நியமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தகுதி குறைவாக நியமிக்கப்பட்ட 56 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தகுதிக்கேற்ப பணி வழங்க அரசு முடிவு செய்யும்- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம்

7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு : பாஜக கண்டனம்

விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - பாஜக கண்டனம். திருவண்ணாமலையில் தமிழக அரசை கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும் - அண்ணாமலை அறிவிப்பு. செய்யாறு பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டாஸ். விவசாயிகள் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை திரும்ப பெற அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தல் 

டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்பு: யூடியூப்-ல் ஒளிபரப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை இணைய வழியில் ஒளிபரப்ப உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு. பயிற்சி வகுப்புகள், AIM TN என்ற இணைய பக்கத்திலும், யூடியூப் சேனலிலும் ஒளிபரப்பாகும் என அறிவிப்பு  

மருத்துவ சீட் வரம்பு - புதிய கல்லூரி வருவது தடையாகும்

மருத்துவ சீட் வரம்பு - புதிய கல்லூரி வருவது தடையாகும். புதிய மருத்துவ பணியிடங்கள் குறித்து தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை வெளியிட்ட விவகாரம். இந்த அறிவிப்பை செயல்படுத்தினால் தமிழகத்திற்கு புதிய மருத்துவ கல்லூரி வருவது தடைப்படும். தமிழ்நாட்டில் இன்னும் 6 மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டி உள்ளது-மா.சுப்பிரமணியன் 

செந்தில் பாலாஜி உடல் நிலை: அமைச்சர் விளக்கம் 

செந்தில் பாலாஜிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் நோய் பாதிப்பு, சிகிச்சை குறித்த தகவல்கள் வெளி வரும். புதிய மருத்துவ பணியிடங்கள் குறித்து தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை வெளியீடு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

தமிழ் திரையுலகம் கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினிக்கு அழைப்பு 

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா. நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிர்வாகிகள். நிச்சயம் கலந்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பதும் உறுதி செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் பங்கேற்பு

அண்ணா பல்கலை. தேர்வு கட்டணம் 50% உயர்வு 

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% உயர்வு - மாணவர்கள் கடும் அதிர்ச்சி. அண்ணா பல்கலை. தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்தது. தேர்வுக்கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225ஆக மாற்றம்

ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2050 கட்ட வேண்டிய சூழல். இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்ய ரூ.600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் ரூ.900ஆக உயர்வு.50% தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மாணவர்கள் கோரிக்கை

விவசாயிகள் மீது குண்டாஸ்: ஈ.பி.எஸ் கண்டனம் 

விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். செய்யாறு தொகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டாஸ் 

விவசாயிகள் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இல்லையெனில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்  - எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்

சிறப்பு சட்டமன்ற கூட்டம்: பா.ஜ.க புறக்கணிக்க முடிவு

நாளை நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை பாஜக புறக்கணிக்க முடிவு. ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற நாளை சிறப்பு சட்டமன்றம் கூடுகிறது

துணைவேந்தரை மாநில அரசே நியமனம் செய்வதற்கான பல்கலை. திருத்த மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர் மாளிகை. மசோதாக்களை எந்த திருத்தமுமின்றி நிறைவேற்றும் விதமாக சிறப்பு சட்டமன்றம் நாளை கூடுகிறது

ஆளுநருக்கு எதிராக உள்ளதால் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிக்க பாஜக முடிவு. கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளதாக தகவல்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு ரயில் இயக்கம்

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை ஒட்டி சென்னையில் இருந்து இன்று (நவ.17) சிறப்பு ரயில் இயக்கம். சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்புக் கட்டணத்தில் இன்று இரவு 11.55க்கு ரயில் புறப்படும். சூரசம்ஹாரம் முடிந்து நாளை (நவ.18) இரவு 10.10 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் புறப்படும். 

இ.பி.எஸ். வலியுறுத்தல்

செய்யாறு தொகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டத்தில் ஈடுபட்ட, அப்பாவி விவசாயிகள் 7 பேர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மத்திய பிரதேசம் தேர்தல்- வெடித்த வன்முறை

Credit: Sun News Twitter 

தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவானது 'மிதிலி' புயல்

வடமேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு மிதிலி (MIDHILI) என பெயரிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலைக்குள் மிதிலி புயல் வங்க தேசத்தின் மோங்லா- கேபுபரா இடையே கரையை கடக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவிற்காக 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை - திருநெல்வேலிக்கு இன்று (நவ.17) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நாளை நண்பகல் 12:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

திருச்செந்தூர் முதல் தாம்பரம் வரையில் நாளை (நவ.18) இரவு 10.10 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு நவம்பர் 19 நண்பகல் 12.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்- தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

குடும்பத்துடன் வாக்களித்த சிவராஜ் சிங் சவுஹான்

மத்திய பிரதேச மாநிலத்தின் புத்னி தொகுதியில் உள்ள ஜெயித் கிராமத்தில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.

போக்குவரத்து மாற்றம்

சென்னை தீவுத்திடல் பகுதியில் இரவு வேளையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

முழு செய்தியும் படிக்க: சென்னையில் இன்று முதல் இரவு நேரத்தில் போக்குவரத்து மாற்றம்

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா வெற்றி

Credit Sun News Twitter

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்.

Tiruvannamalai

அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. 

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி

50 ஓவர் உலககோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நவம்பர் 19ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில்,  இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது ஆஸ்திரேலியா.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கார் சட்டப் பேரவை தேர்தல்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது.

சத்தீஸ்காரில் ஏற்கனவே 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படுகிறது.

மாபெரும் ஜனநாயகத் திருவிழா- பிரதமர் மோடி

மத்திய பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள், ஆர்வத்துடன் வாக்களித்து இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவார்கள் என நம்புகிறேன். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு எனது சிறப்பு வணக்கம் -பிரதமர் மோடி

ஆவின் டிலைட் விலை உயர்த்தப்படவில்லை

Aavin

ஆவின் டிலைட் 500 மி.லி பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கம்

தமிழ்நாட்டில் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தின் 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் விவரம் வருமாறு:

சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம்.

மது விலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை செயலாளராக ரத்னா நியமனம்.

சிஎம்டிஏ தலைமை நிர்வாக அலுவலகராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனராக விஜயகார்த்திகேயன் நியமனம்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனராக ஸ்ரேயா பி.சிங் நியமனம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment