மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டுக்கு பாஜக ஆதரவு: மு.க.ஸ்டாலின் நன்றி

மருத்துவக்கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

By: Jun 14, 2020, 7:24:09 AM

Tamil News Today chennai lockdown : மருத்துவக்கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு விவகாரத்தில், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள் வீட்டில் இருந்தால், அவர்களை பராமரிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 30 மருத்துவர்களுக்கு அறிகுறி ஏதும் இல்லை என சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.சென்னை சென்று திரும்பிய கோவில்பட்டி தபால் நிலைய ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் பணிபுரிந்த தபால் அலுவலகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக வரும் 16ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் வழங்க இரண்டாயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய தற்காலிக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு கடன் உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 9 பெண்களுக்கு சிறப்பு கடன் உதவிக்கான சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கினார். இதேபோல், எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கபடும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

அண்டை மாவட்டங்களுக்கும் இ-பாஸ்: திணறும் சென்னைவாசிகள்

Live Blog
Tamil News Today chennai :சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:13 (IST)13 Jun 2020
இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு மு.க.ஸ்டாலின் நன்றி

இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்தை தாமதமாக தெரிவித்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு நன்றி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

20:45 (IST)13 Jun 2020
நாளை காணொலிக் காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

20:21 (IST)13 Jun 2020
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் தயார் நிலையில் இருக்கும்படி பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட மற்றும் நகர அளவில் படுக்கைகள், தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

20:20 (IST)13 Jun 2020
நேபாள வரைபடத்தில் மாற்றம் - இந்தியா கண்டனம்

இந்திய பகுதிகளை சேர்த்து நேபாளம் தனது வரைபடத்தை மாற்றி அமைத்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நேபாளம் வரைபடம் மாற்றியது பற்றி இந்தியா அதிகாரப்பூர்வமாக தனது நிலையை தெரிவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நேபாள வரைபடம் மாற்றம் பற்றி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

19:47 (IST)13 Jun 2020
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 3,427 பேருக்கு கொரோனா தொற்று; 113 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 3,427 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 113 பேர் உயிரிழந்தனர். இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,568 ஆகவும், பலி எண்ணிக்கை 3,830ஆகவும் அதிகரித்துள்ளது.

19:28 (IST)13 Jun 2020
சென்னையில் மட்டும் இன்று 1984 பேருக்கு கொரோனா தொற்று

சென்னையில் மட்டும் இன்று 1984 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,444 ஆக அதிகரித்துள்ளது.

18:06 (IST)13 Jun 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தொற்று; 30 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 1989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று புதிதாக 30 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இதுவரை  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது.

17:32 (IST)13 Jun 2020
ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். கண்ணன் மறைவால் இந்த உலகம் ஒருகணம் நிறமிழந்து போனதாய் நெஞ்சுடைகிறேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

17:13 (IST)13 Jun 2020
அதிமுக எம்.எல்.ஏ பழனி நலமடைந்து மக்கள் பணியாற்ற வரவேண்டும்- மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ‘CoronaVirus தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக MLA திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!’ என குறிப்பிட்டிருக்கிறார்.

16:56 (IST)13 Jun 2020
இதுவும் கூட கொரோனாவாக இருக்கலாம்.

வாசனை, சுவை தெரியவில்லை எனில் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், இந்த இரண்டும் கூட கொரோனாவின் அறிகுறிகளாக இருக்கலாம், எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

16:13 (IST)13 Jun 2020
ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

16:08 (IST)13 Jun 2020
அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா உறுதி

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

15:45 (IST)13 Jun 2020
பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார். பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் கண்ணன் (69) வடபழனி தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இயக்குநர் பாரதிராஜாவின் மண்வாசனை, முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை ஆகியப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

14:55 (IST)13 Jun 2020
சென்னையில் இன்று 9 பேர் மரணம்

சென்னையில் கொரோனாவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழப்பு. ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி மரணம். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழப்பு. ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 77 வயது முதியவரும் மரணம் அடைந்துள்ளார்.

14:10 (IST)13 Jun 2020
இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

ராணிப்பேட்டையில் மூன்று நாட்களில் கொரோனா நோய் தொற்று அதிகரித்ததை அடுத்து,  மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது இ- பாஸ் இல்லாமல் சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை நோக்கி சென்ற ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பியனுப்பினர். இ பாஸ் பெற்று வருபவர்கள் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

13:46 (IST)13 Jun 2020
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

”கேரளா, கர்நாடக கடலோரப் பகுதி, லட்சத் தீவு பகுதிகளில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கோவை, நெல்லை, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு” என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

13:23 (IST)13 Jun 2020
தமிழக மக்களை காப்பாற்றுங்கள் ஸ்டாலின் வேண்டுக்கோள்!

கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களைக் காக்க நேரத்தை செலவிட வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அரசு கடமையை தவறியதால் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்துக்குச் சென்று இருக்கிறது என  குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், கொரோனா பாதிப்பு பற்றி சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி தரும் தகவல்கள் முரண்பாடாக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காலத்துக் கொள்ளைகளும் குறையேதும் இல்லாமல் நடக்கின்றன எனவும் டெண்டர் இறுதி மற்றும் பாஜக அரசை மகிழ்விக்கும் நேரத்தில் சிறிய பகுதியையாவது மக்களுக்காக செலவிட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

13:15 (IST)13 Jun 2020
சென்னையில் ஸ்மார்ட் பைக் சேவை!

சென்னையில் ஸ்மார்ட் பைக் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இன்று முதல் பொதுமக்கள் ஸ்மார்ட் பைக் சேவையை காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

13:10 (IST)13 Jun 2020
TNPSC தேர்வு செயலாளர் நந்தக்குமார் பேட்டி!

TNPSC தேர்வு இப்போதைக்கு நடத்த வாய்ப்பு இல்லை என்றும், தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று TNPSC தேர்வு செயலாளர் நந்தக்குமார் பேட்டியளித்துள்ளார். சூழல் சரியானதும்,காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார். 

12:20 (IST)13 Jun 2020
தமிழகத்தில் மழை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடற்கரை பகுதியில் சூறாவளி காற்று வேகமாக வீசகூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

12:02 (IST)13 Jun 2020
பழங்காலத்து மண்பானை கண்டுப்பிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் அகரம் கிராமத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் பழங்காலத்து மண்பானை போன்ற அமைப்புடைய இரண்டு பானைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதல் முறையாக முழு வடிவிலான பானை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான பானை போன்ற அமைப்புடைய இந்த இரண்டு மண் பானைகளையும் முழுவதுமாக எடுப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன

11:50 (IST)13 Jun 2020
ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழக்கு!

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே, திமுக அதன் கூட்டணி கட்சிகள் இடஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்துள்ள வழக்கில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்ற இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

11:28 (IST)13 Jun 2020
மூத்த கிரிக்கெட் வீரர் மரணம்!

இந்தியாவின் மிக மூத்த முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி இன்று மும்பையில்  காலமானார், அவருக்கு வயது 100. தெற்கு மும்பையில் சந்தன்வாதி இடுகாட்டில் இவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது. இந்தியாவின் மிக மூத்த கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி மரணம் கிரிகெட் வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.  

11:23 (IST)13 Jun 2020
தூய்மை பணிக்காக அரசு அலுவலங்கள் மூடல்!

கிருமி நாசினி தெளித்து அலுவலங்களை சுத்தப்படுத்துதல் பணிக்காக தலைமைச் செயலகத்தை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களும் இன்று மூடப்பட்டுள்ளது.  அதே போல், தூய்மை பணிகளுக்காக சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் முழுவதும் மூடப்பட்டது.

10:39 (IST)13 Jun 2020
இந்தியாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,535லிருந்து 3,08,993ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,47,195 லிருந்து 1,54,330ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,498லிருந்து 8,884ஆக உயர்வு எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10:29 (IST)13 Jun 2020
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அவர் கூறியிருப்பதாவது, “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 2,000 செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 4,821 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  அதிகமுள்ள மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது. சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன ” என்றார். 

09:40 (IST)13 Jun 2020
முதல்வர் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் திங்கட் கிழமை காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். வரும்17ஆம் தேதி பிரதமர் உடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனை  நடைபெற உள்ளது

Tamil News Today Live : ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் வரும் 16ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். "கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏஜி, மற்றும் மேட்டல் இங்க்" ஆகிய நிறுவனங்களின் தலைமை அலுவர்களுக்கு, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு முதலமைச்சர் கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

70 எம்.எம்.சி முதுநிலை மருத்துவர்களுக்கு கொரோனா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மத்திய அரசின் திட்டமான எட்டு வழிச்சாலைக்கு, தேவையான உதவிகளை மட்டும் தான் மாநில அரசு செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். போக்குவரத்துக்கு ஏற்றவாறு நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், விபத்தை குறைக்க சாலை விரிவாக்கம் தேவை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Web Title:Tamil news today live chennai lockdown corona cases updates cm edappadi radhakrishanan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X