Advertisment

News Highlights: விவி மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை

Tamil News Today : சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி

author-image
WebDesk
New Update
News Highlights: விவி மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை

Tamil News Today Live : மத்திய அரசு அதிகாரிக்கு ரூ. 4 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விவி மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி கஉள்ளது. வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

சென்னையில் அதிகபட்ச மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அடுத்தடுத்து 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - காங். அரசுக்கு நெருக்கடி.6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை தொடர்ந்து, கூட்டணி எம்.எல்.ஏக்களுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

யானை ஜெயமால்யதாவை தாக்கிய பாகன் வினில் குமார் பணியிடை நீக்கம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாகம்

அதிரடி நடவடிக்கை பாகனுக்கு உதவியாக இருந்த சிவபிராகசம் என்பவரும் பணியிடை நீக்கம்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும், என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆவது தொடக்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு.

சமீபத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து முடிந்திருந்த நிலையில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் சில இடங்களில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.



























Highlights

    23:19 (IST)22 Feb 2021

    ஒடிசா கடற்கரையில் சோதிக்கப்பட்ட எஸ்ஆர்-எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி

    குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் எஸ்ஆர்-எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி. இந்திய கடற்படைக்கான உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணை ஒடிசா கடற்கரையில் சோதிக்கப்பட்டது - டிஆர்டிஓ

    20:32 (IST)22 Feb 2021

    சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு, அரசு சார்பில் வீடு - முதல்வர் பழனிச்சாமி

    சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு, அரசு சார்பில் நிலம் வாங்கி, இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    19:13 (IST)22 Feb 2021

    தனது மனைவி மற்றும் மகளுடன் நடராஜன்

    தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நடராஜன்! 

    19:09 (IST)22 Feb 2021

    காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும் - எல்.முருகன்

    காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கைப்படி தென் மாநிலத்திலும் பாஜகவுக்கு வெற்றிதான் என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    19:08 (IST)22 Feb 2021

    புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் கட்சியில் இருந்து நீக்கம்

    புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

    19:01 (IST)22 Feb 2021

    பாஜக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - வைகோ

    புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இழந்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரியில் ஜனநாயக படுகொலையை அரங்கேறியுள்ளது, வரும் தேர்தலில், பாஜக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என வைகோ தெரிவித்துள்ளார்.

    17:31 (IST)22 Feb 2021

    ’என் இல்லம் அம்மாவின் இல்லம்’ என்று நினைத்து விளக்கேற்றுங்கள் : ஓபிஎஸ் - ஈபிஎஸ்

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப். 24ஆம் தேதி தொண்டர்கள் அவரவர் வீடுகளில் ’என் இல்லம் அம்மாவின் இல்லம்’ என நினைத்து விளக்கேற்றி மாலை 6 மணிக்கு உறுதிமொழி ஏற்க வேண்டும் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    17:29 (IST)22 Feb 2021

    திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

    தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன், திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது என்றும்,  தமிழகத்தில் அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    17:26 (IST)22 Feb 2021

    பிப்.24ம் தேதி திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி

    பிப்.24ம் தேதி திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

    17:25 (IST)22 Feb 2021

    புதுச்சேரியில் எம்.எல்.ஏ. வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

    புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்ப்பட்டுள்ளார்.

    16:59 (IST)22 Feb 2021

    மாணவி திஷா ரவிக்கு மேலும் ஒருநாள் போலீஸ் காவல்

    விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டூல்கிட் தயாரித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 22 வயது மாணவி திஷா ரவிக்கு மேலும் ஒருநாள் போலீஸ் காவல் நீடிக்கப்பட்டுள்ளது. 

    16:33 (IST)22 Feb 2021

    அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை

    அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நாளை மறுதினம் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி, தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். 

    16:18 (IST)22 Feb 2021

    புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

    புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

    16:12 (IST)22 Feb 2021

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ட்வீட்

    "புதுச்சேரி  மாநில முதலமைச்சராக நாராயண சாமி தேர்வு செய்யப்பட்ட அதே சமயத்தில் தான் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அரசியல் உள்நோக்கத்தோடு நியமிக்கப்பட்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றது முதற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர் தான் கிரண்பேடி. துணைநிலை ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து ஒரு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அவரது மாளிகையின் நுழைவாயிலுக்கு வெளியே இரவு-பகல் என்று பாராமல் அங்கேயே உறங்கி தொடர் போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலை வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

     

    15:53 (IST)22 Feb 2021

    அமமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் பிப். 25ஆம் தேதி அறிவிப்பு

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:47 (IST)22 Feb 2021

    தேர்தலையொட்டி ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரம்

     தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    15:44 (IST)22 Feb 2021

    ரூ.46 கோடி மதிப்பில் கால்நடை இனப்பெருக்க ஆராயச்சி மையம் - முதல்வர் பழனிசாமி உறுதி!

    ஊட்டியில் ரூ.46 கோடி மதிப்பில் கால்நடை இனப்பெருக்க ஆராயச்சி மையம் துவங்கப்படும் என்றும், கருமந்துறையில் ரூ.100 கோடி மதிப்பில் கலப்பின பசுக்கள் ஆராய்ச்சி மையம் ஒன்றும் துவக்கப்பட உள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார். 

    15:39 (IST)22 Feb 2021

    காங்கிரஸ் - திமுக கூட்டணி பேச்சுவார்த்தை

    காங்கிரஸ் - திமுக கூட்டணி பேச்சுவார்த்தை வரும் 25ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு - புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார். 

     

    15:12 (IST)22 Feb 2021

    "திமுகவிடம் இருந்து தூது வந்தது" - கமல்ஹாசன்

    திமுகவில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் தலைமையிடம் இருந்து அழைப்பு வந்தால் மட்டுமே ஏற்று கொள்ள முடியும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    15:02 (IST)22 Feb 2021

    ஆஸ்திரேலியா - நியூசிலாந்து டி20 போட்டி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது. 

    14:44 (IST)22 Feb 2021

    பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்போம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

    பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசிற்கு உரிய நேரத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என்று தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார். 

    14:41 (IST)22 Feb 2021

    விஜய் ஹசாரே கோப்பை போட்டி - 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்ரீசாந்த்

    விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரள வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    14:35 (IST)22 Feb 2021

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை சந்தித்து வரும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இரண்டு கோடி ரூபாய் முன்பணம் செலுத்தி விட்டு வெளிநாட்டிற்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

    14:35 (IST)22 Feb 2021

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை சந்தித்து வரும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இரண்டு கோடி ரூபாய் முன்பணம் செலுத்தி விட்டு வெளிநாட்டிற்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

    14:26 (IST)22 Feb 2021

    திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன், திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

    14:09 (IST)22 Feb 2021

    "புதுச்சேரியில் நடந்துள்ளது, மத்திய பாஜக அரசின் ஜனநாயக படுகொலை" -மு.க.ஸ்டாலின்

    “ஜனநாயக படுகொலையையே லட்சியமாக கொண்டுள்ள மத்திய பாஜக அரசு புதுச்சேரியிலும் அதனை செய்துள்ளது. பாஜகவின் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    13:59 (IST)22 Feb 2021

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு - திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சின் பொதுசெயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    13:44 (IST)22 Feb 2021

    "பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள்" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு ,

    தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அ.தி.மு.க, ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளது. பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள். மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம்" என்று அ.தி.மு.க மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். 

    13:36 (IST)22 Feb 2021

    அதிமுகவினருக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் கடிதம்

    'அதிமுகவை காப்பாற்றுவேன் என பிப்.24ல் தீபம் ஏற்ற வேண்டும்' என அதிமுகவினருக்கு முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னிர்செல்வம் கடிதம் எழுதியுள்ளனர்.  

    12:50 (IST)22 Feb 2021

     என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் - நாராயணசாமி பேட்டி

    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு செய்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக பாஜக ஆகிய எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.” என்று கூறினார்.

    12:47 (IST)22 Feb 2021

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வழக்கு

    அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது  வழக்கு

    ஹரிஹரசுதன் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    12:42 (IST)22 Feb 2021

    தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் யாருக்கும் அனுமதி இல்லை - அறநிலை துறை அதிகாரிகள் உத்தரவு

    ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் யானையை பாகன்கள் தாக்கும் வீடியோ வெளியான நிலையில், தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் பத்திரிகையாளர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    12:40 (IST)22 Feb 2021

    பீமா கொரேகான் வழக்கில் கைதான வரவர ராவுக்கு 6 மாதம் நிபந்தனை ஜாமின்

    2018-ல் பீமா கொரேகான் பேரணியின்போது நடந்த வன்முறாஇ தொடர்பாக கைது செய்யபப்ட்ட தெலங்கானா எழுத்தாளர் வரவர ராவுக்கு மருத்துவ காரணத்துக்காக 6 மாதம் நிபந்தனை ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    11:56 (IST)22 Feb 2021

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி; முதல்வர் நாராயணசாமி ராஜினாமா

    புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதையடுத்து சபாநாயகர் சிவக்கொழுந்து முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததாக அறிவித்தார். இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். 

    11:30 (IST)22 Feb 2021

    முதல்வர் நாராயணசாமி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கேள்வி

    புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, “புதுச்சேரி சட்டமன்றத்தில் அரசால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானம் படுதோல்வியடைந்தது. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது பேசிய முதல்வர் நாராயணசாமி தனது அரசு அவர் ஆண்ட காலங்களில் தனது சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டதைப் பற்றி கூறாமல் மத்திய அரசைப் பற்றி குறை சொல்லை பேசியுள்ளார். எங்களுடைய கேள்வி நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.  

    11:23 (IST)22 Feb 2021

    புதுச்சேரியில் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் அறிவிப்பு

    புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவிப்பு

    11:21 (IST)22 Feb 2021

    புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளி

    புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். 

    எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் அமளியால் முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்

    11:16 (IST)22 Feb 2021

    மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி

    புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி உரை: “மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை செயல்படவிடாமல் தடுப்பது ஏன்? எதிர்ப்பை காட்டினால் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுகிறது மத்திய அரசு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    11:13 (IST)22 Feb 2021

    பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஈரோடு அந்தியூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

    பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் கோஷம்

    11:09 (IST)22 Feb 2021

    புதுச்சேரியில் மத்திய அரசு அனைத்து திட்டங்களுக்கும் மூடுவிழா நடத்துகிறது - முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது முதல்வர் நாராயணசாமி ஆவேச பேச்சு

    புதுச்சேரியில் மத்திய அரசு அனைத்து திட்டங்களுக்கும் மூடுவிழா நடத்துகிறது - முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

    11:06 (IST)22 Feb 2021

    முதல்வர் நாராயணசாமி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்து பேச்சு 

    புதுச்சேரி சட்டப் பேரவையில் முதல்வர் நாராயணசாமி உரை

    பிரதமர் அறிவித்த பணமதிப்பிழப்பு விமர்சித்துப் பேசினார் முதல்வர் நாராயணசாமி

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் சிரமப்படுவதற்கு கிரண் பேடி காரணம் என்று நாராயணசாமி குற்றச்சாட்டு 

    11:01 (IST)22 Feb 2021

    புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேரி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்று கூறினார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்

    10:58 (IST)22 Feb 2021

    மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்தது - முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

    புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேச்சு: “மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து வந்தது. மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம்தான் ஆனால் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி 10.20 சதவீதம்” என்று கூறினார்.

    10:53 (IST)22 Feb 2021

    ‘ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது’- புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேச்சு

    புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேச்சு: “மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம்.” என்றூ கூறினார்.

    10:45 (IST)22 Feb 2021

    மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்தேன் - புதுச்சேரி முதல்வர் பேச்சு

    புதுச்சேரி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்தேன். கடந்த ஆட்சி செய்யத் தவறிய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். கொரோனா காலத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது” என்று கூறினார்.

    09:21 (IST)22 Feb 2021

    முதலமைச்சர் நாராயணசாமி ராஜினமா?

    துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    09:20 (IST)22 Feb 2021

    முதல்வர் நாராயணசாமி துணை சபாநாயகர் சந்திப்பு!

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துணை சபாநாயகர் பாலனுடன் சந்தித்து பேசி வருகிறார். 

    09:05 (IST)22 Feb 2021

    மோடி பயணம்!

    பிரதமர் மோடி இன்று பல்வேறு திட்டப் பணிகளுக்காக அசாம் மற்றும் மேற்கு வங்கம் செல்கிறார் . அசாமில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் முக்கியமான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்

    Tamil News Today : கரூரில் 100 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றியதுடன் அக்கட்சி சார்பில் நிறுவப்பட்ட அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

    .

    நேற்றைய செய்திகள்<

    புதுவை, கடலூர் மட்டுமல்லாது விழுப்புரம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment