Advertisment

Tamil News Updates: நாடாளுமன்ற நிலைக் குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

Tamil Nadu News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Updates: நாடாளுமன்ற நிலைக் குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

ஸ்ரீபெரும்புதூரில் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான சோதனை மையம்

Advertisment

ஸ்ரீபெரும்புதூரில் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான சோதனை மையம்

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

திருச்சிக்கு சிறந்த மாநகராட்சி விருது

சுதந்திர தின விழாவில் சிறந்த மாநகராட்சி விருதை திருச்சி மாநகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ரூ.50 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் பெற்றுக்கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:37 (IST) 16 Aug 2023
    அ.தி.மு.க மாநாடு நடத்துவதை தெரிந்தே தி.மு.க உண்ணாவிரதம் அறிவித்துள்ளது - இ.பி.எஸ் விமர்சனம்

    கோவையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர்

    எடப்பாடி பழனிசாமி பேட்டி: “அ.தி.மு.க மாநாடு நடத்துவதை தெரிந்தே, நீட் தேர்வை மையமாக வைத்து தி.மு.க உண்ணாவிரதம் அறிவித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க எந்த முயற்சியும் செய்யவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.



  • 22:10 (IST) 16 Aug 2023
    தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் - கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ட்வீட்

    பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ட்வீட்: “தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கர்நாடக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி, மாநிலத்தின் உண்மை நிலையை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்” என கேட்டுக் கொள்கிறேன்.



  • 21:54 (IST) 16 Aug 2023
    கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

    கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 9136 கன அடியாக வெளியேற்றப்பட்ட நிலையில், 13,473 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கே.ஆர்.எஸ். மற்றும் கபிணி அணைகளில் திறக்கப்படும் நீரின் அளவு 14,136ல் இருந்து 18,473 கன அடியாக அதிகரித்துள்ளது.



  • 21:53 (IST) 16 Aug 2023
    ஸ்ரீபெரும்புதூரில் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான சோதனை மையம்

    இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான சோதனை மையம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 2.3 பரப்பளவில் அமைகிறது. ஆளில்லா விமான உற்பத்தியில் தமிழ்நாடு சர்வதேச மையமாக திகழ இது வழிவகுக்கும். ஒன்றிய அரசின் மானியத்துடன் இத்திட்டத்தை 4 நிறுவனங்கள் டிட்கோ உடன் இணைந்து ரூ. 45 கோடி மதிப்பீட்டில் அமைக்க உள்ளது.



  • 21:50 (IST) 16 Aug 2023
    சென்னையில் ‘ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் 2023’ போட்டிகள் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

    சென்னையில் ‘ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் 2023’ போட்டிகள் டிசம்பரில் நடக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    செஸ் ஒலிம்பியாட், சர்வதேச ஸ்குவாஷ் போட்டி, ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை, சர்வதேச அலைச்சறுக்கு போட்டியை தொடர்ந்து அனைத்து சர்வதேச போட்டிகளும் நடக்கும் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளது.



  • 21:07 (IST) 16 Aug 2023
    மதுரையில் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் உருவச்சிலையை திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்

    டி.எம்.எஸ். நூற்றாண்டை முன்னிட்டு, மதுரையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அமைக்கப்பட்ட மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜனின் உருவச்சிலையை

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



  • 20:42 (IST) 16 Aug 2023
    அ.தி.மு.க மதுரை மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு

    ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    மாநாட்டிற்கு மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை என குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மாநாடு நடைபெற உள்ள இடம் விமான நிலையத்தின் அருகில் உள்ளதால் வான வேடிக்கை வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்படலாம் என சிவகங்கை, காரைக்குடியை சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.



  • 20:41 (IST) 16 Aug 2023
    அ.தி.மு.க மதுரை மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு

    ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல்

    செய்துள்ளார்.

    மாநாட்டிற்கு மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை என குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மாநாடு நடைபெற உள்ள இடம் விமான நிலையத்தின் அருகில் உள்ளதால் வான வேடிக்கை வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்படலாம் என சிவகங்கை, காரைக்குடியை சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.



  • 20:39 (IST) 16 Aug 2023
    அ.தி.மு.க மதுரை மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு

    ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    மாநாட்டிற்கு மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை என குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மாநாடு நடைபெற உள்ள இடம் விமான நிலையத்தின் அருகில் உள்ளதால் வான வேடிக்கை வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்படலாம் என சிவகங்கை, காரைக்குடியை சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.



  • 20:04 (IST) 16 Aug 2023
    5 மாநில சட்டமன்ற தேர்தல்: பா.ஜ.க. ஆலோசனை

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடந்தது.

    இந்தக் கூட்டத்தில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.



  • 20:02 (IST) 16 Aug 2023
    காவாலா பாட்டுக்கு நடனம் ஆடிய ஜப்பான் தூதர்

    ‘ஜெயிலர்’ காவாலா பாட்டிற்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஸுகி நடனம் ஆடினார். இந்த வீடியோ வைரலாகிவருகிறது.



  • 19:29 (IST) 16 Aug 2023
    திருக்கோவலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து? காவல்துறை விளக்கம்

    திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் பரவி வருகிறது; அந்த வீடியோ 2021ம் ஆண்டு ஊட்டியில் நடந்தது; அமைதியை குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.



  • 18:51 (IST) 16 Aug 2023
    'Tweet Deck'-ஐ பயன்படுத்த சந்தா கேட்கும் எக்ஸ் நிறுவனம்

    'Tweet Deck'-ஐ பயன்படுத்த எக்ஸ் நிறுவனம் சந்தா கேட்கிறது. இதனையடுத்து RIPTWEETDECK எனும் ஹாஸ்டாக்கை பயனாளர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்



  • 18:30 (IST) 16 Aug 2023
    ஸ்ரீபெரும்புதூரில் ஐபோன்-15 உற்பத்தியை விரைவில் தொடங்கும் பாக்ஸ்கான்

    சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தொழிற்சாலையில் ஆப்பிள் ஐபோன்-15 உற்பத்தியை பாக்ஸ்கான் நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது



  • 18:21 (IST) 16 Aug 2023
    பதுக்கி வைக்கப்பட்ட அரசின் விலையில்லா கிரைண்டர்கள்

    காஞ்சிபுரத்தில் காவலர் குடியிருப்பில் அரசின் விலையில்லா கிரைண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. காவலர் குடியிருப்பின் ஒரு பகுதியில் உள்ள 3 அறைகளில் கிரைண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது



  • 18:04 (IST) 16 Aug 2023
    பட்டா வழங்கியதை எதிர்த்து தீர்மானம்; பஞ்சாயத்து தலைவர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

    மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பட்டா வழங்கியதை எதிர்த்து பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய விவகாரத்தில், கடலூர், நைனார்குப்பம் கிராம பஞ்சாயத்து தலைவர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 17:47 (IST) 16 Aug 2023
    தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டம் அறிவிப்பு

    மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றி மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரும் 21ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன



  • 17:29 (IST) 16 Aug 2023
    10,000 மின்சார பேருந்துகளை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    10,000 மின்சார பேருந்துகளை வாங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பேருந்து கொள்முதல் மற்றும் பராமரிப்பு ஆகியவை PPP (அரசு, தனியார் பங்களிப்பு) முறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது



  • 17:16 (IST) 16 Aug 2023
    அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது - ஐகோர்ட்

    அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது. தன்னுடைய சொத்துகளை ஆளவந்தார் அறக்கட்டளை பெயருக்கு அதன் நிர்வாகிகள் மாற்றிவிட்டதாகக் கூறி, பட்டாவை ரத்து செய்ய கோரி கே.எம்.சாமி என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 17:14 (IST) 16 Aug 2023
    பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளிலே வழங்கப்படும் - தேர்வுத்துறை

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது



  • 16:38 (IST) 16 Aug 2023
    திருநெல்வேலி: கடலில் மூழ்கி 3 சிறுவர்கள் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    திருநெல்வேலி மாவட்டத்தில் கடலில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் ட்விட்டரில், “திருநெல்வேலி, ராதாபுரம் தொகுதி, நாவலடியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் ஆகாஷ், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ராகுல், எட்டாம் வகுப்பு படிக்கும் முகேஷ் ஆகிய மூவரும் 15.8.2023 அன்று கடலில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி இறந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன். பலியான மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மகன்களை இழந்து தவிக்கும் மூவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசை

    கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 16:34 (IST) 16 Aug 2023
    குடிநீர் அலகில், குழாய்கள் உடைந்து தண்ணீர் சேதம் : மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

    சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அலகில், குழாய்கள் உடைந்து தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது இதனால் விரைவில் சீரமைக்க வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை



  • 16:33 (IST) 16 Aug 2023
    சந்திரமுகி-2 டப்பிங் பணியை நிறைவு செய்த வடிவேலு

    சந்திரமுகி-2 திரைப்படத்திற்காக தனது டப்பிங் பணியை நிறைவு செய்தார் நடிகர் வடிவேலு! பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் விநாயகர் சதுர்த்தியன்று‌ வெளியாக உள்ளது



  • 16:32 (IST) 16 Aug 2023
    ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை : இங்கிலாந்து அணி அறிவிப்பு

    ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஓய்வை திரும்பப் பெற்ற பென் ஸ்டோக்ஸ், அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் அணியில் இடம்பெறவில்லை



  • 16:32 (IST) 16 Aug 2023
    ஓய்வு பெற்றதை திரும்ப பெற்றார் பென் ஸ்டோக்ஸ்

    ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றதை திரும்ப பெற்றார் இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளார்



  • 16:10 (IST) 16 Aug 2023
    PM-E-Bus சேவை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    எலக்ட்ரிக் பேருந்து சேவைக்கான PM-E-Bus சேவை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இத்திட்டம் ₨57,613 கோடியில் செயல்படுத்தப்படும், தனது பங்காக மத்திய அரசு ₨20,000 கோடி வழங்கும்



  • 16:08 (IST) 16 Aug 2023
    இந்தியா வந்தடைந்தது ஐசிசி உலகக்கோப்பை

    இந்தியா வந்தடைந்தது ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான கோப்பை தாஜ்மஹாலில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது



  • 15:22 (IST) 16 Aug 2023
    விபத்துக்கு பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட்

    விபத்துக்கு பிறகு முதல்முறையாக ரசிகர்கள் முன்னிலையில் பேட்டிங் செய்த இந்திய வீரர் ரிஷப் பண்ட்! கர்நாடகாவின் விஜயநகரில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு பேட்டிங் செய்துள்ளார்



  • 14:42 (IST) 16 Aug 2023
    கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க உத்தரவு

    திருநெல்வேலி, கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவு



  • 14:13 (IST) 16 Aug 2023
    நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற கோரி மனு தந்தை தரப்பில் மனு

    சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற கோரி மனு சித்ராவின் தந்தை காமராஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் . சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்துவருவதாக மனுவில் குற்றச்சாட்டு முதுமை காரணமாக வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வர சிரமமாக இருப்பதாக சித்ராவின் தந்தை மனுவில் தகவல்



  • 13:20 (IST) 16 Aug 2023
    நரிக்குறவ பெண் அஸ்வினி கைது

    சக நரிக்குறவ இன பெண்ணை கத்தியால் தாக்கிய புகாரில், நரிக்குறவ பெண் அஸ்வினி கைது கொலை முயற்சி வழக்கில் அஸ்வினியை கைது செய்த மாமல்லபுரம் போலீசார் வெளியூரில் இருந்து வந்து எப்படி வியாபாரம் செய்யலாம் என நதியா என்ற நரிக்குறவ இன பெண்ணை மிரட்டியதாக புகார் கோயிலில் அன்னதானம் சாப்பிட அனுமதிக்கவில்லை என பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் அஸ்வினி ஏற்கனவே வியாபாரிகளை மிரட்டியதாக அஸ்வினி மீது புகார் உள்ள நிலையில், கொலை முயற்சி வழக்கில் கைது



  • 13:20 (IST) 16 Aug 2023
    மாணவி சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    விமானத்தில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷம் எழுப்பிய விவகாரம் மாணவி சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 2018ல் பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜகவுக்கு எதிராக விமானத்தில் கோஷம் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர் - அரசு தரப்பு வாதம் தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது அதற்கான அதிகாரம் இல்லை - அரசு தரப்பு வாதம் அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவு



  • 13:19 (IST) 16 Aug 2023
    6 மாத குழந்தையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காலில் போட்டு கோரிக்கை வைத்த ஓட்டுநர்

    தேனிக்கு பணி மாறுதல் கேட்டு 6 மாத குழந்தையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காலில் போட்டு கோரிக்கை வைத்த ஓட்டுநர் ஓட்டுநர் கண்ணன் மனைவி முனிதா டெங்கு காய்ச்சல் வந்து உயிரிழந்து விட்டதால் பணி மாறுதல் வேண்டி கோரிக்கை



  • 12:43 (IST) 16 Aug 2023
    ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக் கோயிலில் குவிந்த பக்தர்கள்

    ஆடி அமாவாசை வழிபாடு - சதுரகிரி மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

    கடுமையான சோதனைக்கு பின்னரே பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி



  • 12:36 (IST) 16 Aug 2023
    ஹிஜாவு மோசடி வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி

    ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் துணை நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வியின் ஜாமின் மனு தள்ளுபடி-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    பொதுமக்களிடம் ரூ. 4,620 கோடி அளவிற்கு முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக ஹிஜாவு நிறுவனம் மீது வழக்கு

    வழக்கில் கைது செய்யப்பட்ட துணை நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி ஜாமின் கோரி மனு

    மீட்க வேண்டிய தொகை அதிகமாக உள்ளதால் ஜாமின் வழங்க கூடாது என காவல்துறை எதிர்ப்பு



  • 12:28 (IST) 16 Aug 2023
    மத்திய அரசு, ஆளுநரை கண்டித்து போராட்டம்

    நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரை கண்டித்து வரும் 20ம் தேதி திமுக உண்ணாவிரத போராட்டம்

    திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு



  • 12:27 (IST) 16 Aug 2023
    நீட் தேர்வு: திமுக உண்ணாவிரதம் அறிவிப்பு

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பு

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணி சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிப்பு



  • 12:08 (IST) 16 Aug 2023
    முல்லை பெரியாறு வழக்கு: உச்ச நீதிமன்றத்தை அணுக ஆணை

    இரு மாநிலங்கள் தொடர்புடைய பிரச்சனை என்பதால் உச்ச நீதிமன்றத்தை அணுக உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு.

    முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் பெற 2-வது சுரங்கப் பாதை அமைக்க கோரிய வழக்கில் உத்தரவு



  • 11:58 (IST) 16 Aug 2023
    சுற்றுலா தலங்களில் மதி அங்காடி

    சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க ரூ. 25,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இலக்கையும் தாண்டி ரூ.25,642 கோடி அளவிற்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

    சிறப்பு சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் வழங்கப்பட உள்ளன

    மதி திணை உணவகங்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளன. உதவிக்குழு பொருட்களை விற்க சுற்றுலா தலங்களில் மதி அங்காடி - முதல்வர்



  • 11:53 (IST) 16 Aug 2023
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அதிகாரிகள் ஆய்வு

    சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அதிகாரிகள் ஆய்வு

    சமீபத்தில் பெய்த கனமழையின் போது, ஜி.எஸ்.டி சாலையில் மழைநீர் தேங்கியது மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜான் லூயிஸ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மழைநீர் தேங்குவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை "கிளாம்பாக்கம் வெள்ளம் - ஏரிகளில் தண்ணீரை திருப்பிவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"



  • 11:30 (IST) 16 Aug 2023
    ஸ்டாலின் ஆலோசனை

    வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

    மத்திய அரசின் பங்களிப்புடன் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்கும் குழு

    இந்தக் குழுவில் அமைச்சர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்

    தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்களும் உள்ளனர்

    ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது



  • 10:58 (IST) 16 Aug 2023
    சென்னையில் மாடு கணக்கெடுக்கும் பணி

    சென்னையில் மாடு மற்றும் மாட்டு உரிமையாளர்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.

    சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க 2 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் 5 மாட்டு தொழுவங்கள் புதிதாக உருவாக்கப்படும்;அரும்பாக்கத்தில் சிறுமி மீது மாடு முட்டியதற்கு பிறகு சாலையில் சுற்றி திரிந்த 126 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது- மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி



  • 10:56 (IST) 16 Aug 2023
    சந்திரயான் -3 சுற்றுவட்டபாதை மேலும் குறைப்பு

    நிலவை சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை 4வது முறையாக வெற்றியடைந்துள்ளது குறைக்கப்பட்டது. 153×163 கிலோமீட்டர் தாழ்வான சுற்றுவட்ட பாதையில் நிலவை சுற்றி வருகிறது. சந்திரயான் அடுத்த சுற்றுவட்ட பாதை குறைப்பு நிகழ்வு நாளை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.



  • 10:11 (IST) 16 Aug 2023
    சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில், இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாதாந்திர பூஜை முடிவடைந்து வரும் 21ம் தேதி இரவு நடை சாத்தப்படும்.



  • 10:03 (IST) 16 Aug 2023
    மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

    தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.



  • 10:01 (IST) 16 Aug 2023
    டிரம்ப் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது அமெரிக்க நீதிமன்றம்

    கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜியாவில் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்றதாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான குற்றச்சாட்டை அந்நாட்டு மாகாண நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.



  • 10:01 (IST) 16 Aug 2023
    கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின் ட்வீட்

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி மற்றும் முன்னேற்றம் நிறைந்ததாக அமையட்டும்- மு.க.ஸ்டாலின் ட்வீட்



  • 08:51 (IST) 16 Aug 2023
    பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக தேர்தல் குழு கூட்டம்

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து, டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது



  • 08:50 (IST) 16 Aug 2023
    கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு

    கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல்கட்டமாக சிறப்பு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது



  • 08:06 (IST) 16 Aug 2023
    இன்று வாஜ்பாய் நினைவு தினம்

    இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



  • 08:02 (IST) 16 Aug 2023
    குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    சென்னை அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் 2 நாளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    முழுமையாக படிக்க

    https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-water-supply-disruption-august-17-wednesday-kodambakkam-t-nagar-koyembedu-739026/



  • 07:42 (IST) 16 Aug 2023
    ஆடி அமாவாசை- நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்!

    இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரகணக்கான மக்கள், புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், நெல்லை தாமிரபரணி நதிக்கரை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரை, முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.



  • 07:42 (IST) 16 Aug 2023
    சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

    பராமரிப்பு பணிக்காக சென்னையின் தி.நகர், ஆவடி, பொன்னேரி பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-power-cut-today-august-16-wednesday-t-nagar-739243aavadi/



  • 07:41 (IST) 16 Aug 2023
    இன்றைய ராசிபலன்! (16/08/2023)

    தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளுங்கள்.

    https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-today-wednesday-16-august-2023-739222/



  • 07:41 (IST) 16 Aug 2023
    ஐசிசி உலகக்கோப்பை தொடர் டிக்கெட் முன்பதிவு

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

    போட்டிகளை காண்பதற்கு டிக்கெட் பெற விரும்புபவர்கள் https://www.cricketworldcup.com/register என்ற வலைப்பக்கத்தில் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. 25ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.



  • 07:40 (IST) 16 Aug 2023
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்

    மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்துவைக்க உள்ளார். நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.



Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment