Tamil News Today : தமிழகத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று மதியம் சென்னை வருகை . டிச.8 வரை தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர் .
ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கு, மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டு உள்ளது.இது தொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பது போன்ற விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
விளம்பரங்களை ஒளிபரப்பும் போது, நிதி சார்ந்த அபாயம் இருக்கிறது என்ற வாசகத்தை இடம்பெறச் செய்யவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர் – காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஜடேஜா விலகல். ஜடேஜாவுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்ப்பு
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மைசூரில் உள்ள பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முடிவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோது சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கப்பட்டதாகவும், அது திமுக ஆட்சி இருக்கும் வரை தமிழ்மொழி வளர்ச்சிக்காக தீவிரமாக செயல்பட்டு வந்ததாகவும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்து 86 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளபடி, மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தமிழக மருத்துவப்பணிகள் கழகம் என மொத்த 2 ஆயிரத்து 600 இடங்களில் கொரோனா தடுப்பூசிகளை சேமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை நடைபெறவுள்ளது.
வரும் 10 ஆம் தேதி, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று புதுதில்லியில் நடைபெற்றது.இதில், சுமூகமான முடிவுகள் எட்டப்படாததால், மீண்டும் வரும் 9ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.
இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி தொடங்குகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பின்னரே மற்ற பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆறு, திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 1,366 பேருக்கு உறுதி. 15 பேர் உயிரிழப்பு. சென்னையில் இன்று மட்டும் 353 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு
முந்நீர் சூழ் உலகு என்பார்கள். மழைநீர், ஆற்றுநீர், சாக்கடை என்று இப்போது தமிழகம் முழுதும் சூழ்ந்திருக்கும் நீர் பெருமைக்குரியது அல்ல. கோவிட் தொற்றுக்காலத்தில் இது பீதிக்குரியது உள்ளாட்சி நிர்வாகத்தின் உறக்கத்தைக் குறிப்பது. கோடீஸ்வரப் பகுதிகளைப் போல், குப்பத்துப் பகுதிகளும் சுகாதாரமாக இருக்க, அரசு என்ன செய்யப்போகிறது? என்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
வருகிற 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ள இம்மாதம் 20-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
நுகர்வோர் நலன்களை பாதுகாப்பதற்காக, ஆன்லைன் மற்றும் ஃபேண்டஸி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் தவறாக வழிநடத்தும் வகையில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து ஊடகங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை மத்திய குழு ஆய்வு செய்கிறது.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பினால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக சிறப்பு கடனுதவி பெரும் திட்டத்தை ஜார்கண்ட் தேர்வு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதர மாநிலங்கள் அனைத்தும் இந்த முறையை தேர்வு செய்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
சென்னையில் நிவர் மற்றும் புரெவி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடிசை பகுதி மக்களுக்கு இலவச உணவு திட்டம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். இதன் கீழ், டிசம்பர் 6 முதல் 13ஆம் தேதி வரை 5.3 லட்சம் குடும்பங்களில் உள்ள 26 லட்சம் பேருக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள இருக்கிறது.
பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தர முதலமைச்சர் உத்தரவு. புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே 4 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவுற்ற நிலையில் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்கள் விவசாயிகள். கடந்த முறை போன்றே இப்போதும் தங்களுக்கு தேவையான உணவுகளை தாங்களே எடுத்து வந்துள்ளனர் விவசாயிகள்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வருகின்ற 10ம் தேதி அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
கட்சி துவங்கிய பிறகு தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும். ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும் மத அரசியலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையில் ஏதும் பேசவில்லை என்றும் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.
புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமனம் செய்து அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. சென்னை மாவட்டத்தில் அமைச்சர் ஜெயகுமார், மாபா.பாண்டியராஜன் இப்பணிகளை மேற்கொள்வார்கள். கடலூர் மாவட்டம் – அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத் மற்றும் திருவாரூர் – அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், காமராஜ் ஆகியோர் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்வார்கள்.
33 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நிற்கும் புரெவி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூனமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் பங்கேற்பு. புதிய கட்சியின் துவக்க விழா குறித்து ஆலோசனைய் நடைபெறுவதாக தகவல்.
ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு தலைவி திரைப்படத்தின் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார் நடிகை கங்கனா ரானாவத்.
தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புரெவி புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகராமல் இருந்ததால் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு கனமழை பெய்தது. நாகை, காரைக்கால் பகுதிகளில் 16 செ.மீ மழையும், கொடைவாசல், புவனகிரியில் 15 செ.மீ மழையும் பதிவானது.
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மிகவும் நேர்மையானவர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு. சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நானும் என் கட்சியும் சும்மா இருக்காது. ஊழலுக்கு ஒத்துழைக்க மறுப்பதால், சூரப்பாவின் அடையாளத்தை அழிப்பதா? என்றும் கமல் ஹாசன் கேள்வி.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் .சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மரியாதை . துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்
சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து நீர்திறப்பு 500 கனஅடியில் இருந்து 284 கனஅடியாக குறைப்பு
கடலூர் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து 2,300 கனஅடியாக உள்ள நிலையில் நீர்திறப்பு 5,700 கனஅடியாக உள்ளது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. போராட்டத்தில் பங்கேற்க செல்லும் திமுகவினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தம் ஓமலூர், அயோத்தியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் திமுகவினர் சாலை மறியல்
டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை திருவாரூர், குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி நாகை வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, ஆயக்காரன்புலம் மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி பகுதிகளில் தொடர் கனமழை.
அடுத்த 12 மணி நேரத்தில் புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு . அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு . காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 30 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது .
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அயப்பாக்கத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.