/tamil-ie/media/media_files/uploads/2020/09/New-Project-2020-09-11T185543.535.jpg)
Tamil News Today: தமிழகத்துக்கு 6வது தவணையாக ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி ஆந்திரா, கேரளா உள்பட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி ஒதுக்கீடு.
இணைய வழி மூலமாக, நடத்தப்படும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பள்ளி கல்வியை பற்றிய இரண்டு நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார் .. பிரதமர் மோடி நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்., இந்த மாநாட்டில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்,.
கொரோனா தொற்றால் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளவர்களுக்கு டெக்ஸா மெதாசோன் மருந்து நல்ல பலனை தருவதால், அதனை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். மற்றவை நிரூபிக்கப்படாத நிலையில், உலகம் முழுவதும் 180 தடுப்பூசிகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் 35 தடுப்பூசிகள் மனிதர்களிடம் சோதனை நடத்தும் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today Updates: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம்
* புதுச்சேரி, கோவா மாநிலங்களையும் தினேஷ் குண்டுராவ் கவனிப்பார் என காங்கிரஸ் அறிவிப்பு
* தெலங்கானா பொறுப்பாளராக தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூர் நியமனம்
* ஒடிசா மாநில பொறுப்பாளராக செல்லகுமார் எம்.பி. நியமனம்
* தமிழக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளராக நியமனம்
தமிழக அரசு 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கு துணை செயலாளராக அம்ரீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வேட்பாளர்களின் குற்றப் பிண்ணணியை செய்தித்தாள்களிலும் அந்தந்த கட்சிகள் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறியை வெளியிட்டுள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.26 லட்சம் மீண்டும் திரும்பப்பெறப்பட்டுள்ளது. இதுவரை 4300 பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழகத்தில் மருத்துவ குழுவின் அறிக்கைக்குப் பின்னரே திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆட்சியாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் இருமொழிக் கொள்கை தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.
மதுரை வடக்கு மாசி வீதியில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வேட்டு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கல்வெட்டில் குலசேகர பாண்டிய மன்னர் பெயர் உள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “நோய் பரவலைத் தடுக்கத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுகின்றனர். ஆனால், அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்ரபாணியின் மகன் எம்.சி. சந்திரன் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலை பதிவு செய்துள்ளார் முதல்வர்.
புரட்சித்தலைவர் Dr.MGR அவர்களின் சகோதரர் திரு.M.G.சக்ரபாணி அவர்களது மகன் திரு.M.C.சந்திரன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அறிந்து வேதனையுற்றேன்.
அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். pic.twitter.com/B66KIXouLH
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 11, 2020
மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எதிர்கட்சிகள் அரசை குறை கூறி வருகின்றனர். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள் அர்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இறப்பு விகிதமும் குறைந்துவிட்டது, 100 க்கு மேல் சென்ற பலி எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது. நேரடியாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவும் என்று அவர் கூறியுள்ளார்.
வருகின்ற 21ம் தேதி முதல் புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அட்டவணைகள் பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருந்த கபெ ரணசிங்கம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் விஜய் சேதுபதி. ஜீப்ளக்ஸில் வெளியாக இருக்கும் இந்த படம் ஐந்து இந்திய மொழிகளிலும், 10 தேசிய மொழிகளிலும் 150 நாடுகளிலும் ஓட உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay home, stay safe, we're bringing #KaPaeRanasingam HOME TO YOU on @ZeeplexOfficial 🎥📺🍿 Releasing in 5 Indian languages, subtitled in over 10 International languages, streamed in over 150 countries! It's going to be MASSIVE! #KaPaeRanasingamOnZee @kjr_studios pic.twitter.com/7YxQzt6odA
— VijaySethupathi (@VijaySethuOffl) September 11, 2020
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியவர் செவிலியர் விஜயகுமாரி. அவர் மீது மணிகண்டன் மற்ற்றும் விஜய்குமார் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்விருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது நாமக்கல் நீதிமன்றம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் இன்று வரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் சென்றுள்ளனர். மாநகர பேருந்துகள் மூலம் 1,01,23,000 பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பாரதியார் நினைவு தினமான இன்று அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் காங்கிரஸ் கட்சியினர்.
மகாகவி பாரதியார் நினைவு தினமான இன்று சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. pic.twitter.com/LpDtnWB96q
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) September 11, 2020
மத்திய அரசின் நல்ல திட்டஙக்ளுக்கு அதிமுக ஆட்சி பச்சை கொடி காட்டும். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் திட்டங்களுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும். இது தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணெய் கிணறுகளை தோண்ட ஒ.என்.ஜி.சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதில் மனு மற்றும் நியமனம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் செப்டம்பர் 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் . வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. நீட் தேர்வு தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் நடராசன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்.
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசரும், சமுதாய உணர்வு மிக்கவருமான திரு.K.M.நடராசன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவர், செங்கல்வராயர் அறக்கட்டளையின் தலைவர் போன்ற பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர். pic.twitter.com/FV0OsVvql1
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) September 11, 2020
வடிவேல் பாலாஜி மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் வடிவேல் பாலாஜியின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது நடிகர் கார்த்தி ட்வீட்.
நடிகர் வடிவேல் பாலாஜி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
— Actor Karthi (@Karthi_Offl) September 11, 2020
புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய யுகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கையை அமைத்திருக்கிறோம். புதிய கல்விக்கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்து பல கேள்விகள் எழும். கல்விக்கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவசியம். புதிய கல்விக் கொள்கையால் பல திட்டங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வசதி கிடைக்கும். இளைஞர்கள் சக்தி மிகவும் அவசியமாக இருக்கிறது. குழந்தைப் பருவம் எப்படி இருக்கிறதோ அதுபோலவே அவர்களது எதிர்காலம் அமையும். எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த மனிதராக உருவாக்கும் வகையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவியும் அளித்தார். வடிவேல் பாலாஜியின் உடலுக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், கட்சி அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளித்தும், எந்த விசாரணையும் நடத்தாமல், தன்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் கு.க. செல்வம் மனுவில் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த 17வது நகர உரிமையியல் நீதிமன்றம், செப்டம்பர் 18-க்குள் பதிலளிக்க தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9500 பேர் மீண்டும் பரிசோதிக்கப்படாமல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதாக பத்திரிகையில் வெளியான செய்தியை, இணைத்துள்ளார். தமிழகத்தில்தான் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகம் என்று அரசு சொல்வது முழுக்க பொய்யோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights