Tamil News Today: கொரோனா தடுப்பு மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி – நிதியமைச்சர்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக இதுவரை 6,837 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

By: Jun 25, 2020, 10:41:50 PM

Tamil News Today: கொரோனா உலகம் முழுவதும் எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 39,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,63,170 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 806 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை 1,24,279 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,56,183-லிருந்து 4,73,105 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685-லிருந்து 2,71,697 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476-லிருந்து 14,894 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்த 1,86,514 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டங்கள் இடையே இ- பாஸ் கட்டாயம்: லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு 16,922 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 418 பேர் உயிரிழந்துள்ளனர். 13,012 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று மதுரை பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பரவிய கொரோனா தொற்றால், 2000 பேரை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் மாவட்ட எல்லையில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. வேலூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
Tamil nadu news : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:22 (IST)25 Jun 2020
கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தப்படும் வெண்டைக்காய்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் போதிய விலை கிடைக்காததால் வெண்டைக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. சந்தைக்கு கொண்டு செல்லப்படும் வெண்டகாய் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

21:57 (IST)25 Jun 2020
சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

* யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர், கபில், தீரஜ், ரோஷ்ணி கபூர் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

21:32 (IST)25 Jun 2020
தீவிரமடையும் பருவமழை

நாளை முதல் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்ளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

21:08 (IST)25 Jun 2020
4,841 பேருக்கு கொரோனா

'மகாராஷ்டிராவில் மேலும் 4,841 பேருக்கு கொரோனா'

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 4,841 பேருக்கு கொரோனா தொற்று; 192 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

20:52 (IST)25 Jun 2020
ரயில் சேவை ரத்து

ஆகஸ்ட் 12 வரை ரயில் சேவை ரத்து

கால அட்டவணைப்படி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில்கள், ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை ரத்து

நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே வாரியம் அறிவிப்பு

20:44 (IST)25 Jun 2020
ஆகஸ்ட் மாதம் விடுதலையாகிறாரா சசிகலா?

வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் எனத் தகவல்

* ஆக.14 ஆம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் தகவல்

20:37 (IST)25 Jun 2020
பிரதமர் மோடி இரங்கல்

'இடி, மின்னல், மழையால் உயிரிழந்த 83 பேருக்கு பிரதமர் இரங்கல்'

பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களில் இடி மின்னல், கனமழையால் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

20:37 (IST)25 Jun 2020
சுப்பிரமணிய ஆதித்தன் காலமானார்

'எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் காலமானார்'

திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் (72) உடல்நலக்குறைவால் காலமானார்

* திருச்செந்தூர் தொகுதியில் 1984 முதல் 1989 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் சுப்பிரமணிய ஆதித்தன்

20:18 (IST)25 Jun 2020
தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி

‘மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி’

கொரோனா தடுப்பு மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது

- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

*ஏப்ரல் மாதத்தில் இருந்து தமிழகத்துக்கு ரூ.6,600 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது

20:11 (IST)25 Jun 2020
திருச்சி - புதுக்கோட்டை எல்லையில் தீவிர வாகன சோதனை

திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூரில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையும் வாகனங்களை சோதித்து, இ-பாஸ் இருந்தால் மட்டுமே அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர். இ-பாஸ் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.ஆனால் இரு மாவட்ட எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் நடந்து சென்று பயணிகள் பேருந்தில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.

19:47 (IST)25 Jun 2020
ரூ.4 லட்சம் நிவாரணம்

பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்

- முதல்வர் நிதிஷ்குமார் தகவல்

19:47 (IST)25 Jun 2020
83 பேர் உயிரிழப்பு

'பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழப்பு’

பீகாரில் இன்று இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்; இதில் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

- மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்

19:33 (IST)25 Jun 2020
திருமழிசை காய்கறி சந்தையை வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

திருவள்ளூர்: திருமழிசையில் உள்ள காய்கறி சந்தையை வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தர் ரெட்டி ஆய்வு

* மழையால் சந்தைப் பகுதியில் தேங்கியுள்ள நீரை அகற்றி சீரமைப்பு பணி மேற்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுரை

19:33 (IST)25 Jun 2020
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-க்கு பாராட்டு

கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஊக்குவிக்க முயற்சி செய்து வரும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-க்கு பாராட்டு

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட உயிர்த்தியாகம் செய்த துணிச்சலான இதயங்களுக்கு வணக்கம்

- பிரதமர் மோடி

19:13 (IST)25 Jun 2020
ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

ஜூலை 5ம் தேதியன்று நடத்தப்பட இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்க முடிவு

- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

19:11 (IST)25 Jun 2020
கொரோனா உயிரிழப்புகள் - மாவட்டம் வாரியாக

இன்று அறிவிக்கப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் - மாவட்ட வாரியாக

சென்னை - 28
செங்கல்பட்டு - 5
திருவள்ளூர் - 4
திருவண்ணாமலை - 3
மதுரை - 2
விருதுநகர் - 2
திருச்சி - 1

மொத்தம் - 45

18:46 (IST)25 Jun 2020
அதிக கொரோனா பாதிப்பை பதிவு செய்த மாவட்டங்கள்

இன்று அதிக கொரோனா பாதிப்பை பதிவு செய்த மாவட்டங்கள்!

சென்னை - 1,834

மதுரை - 204

செங்கல்பட்டு - 191

வேலூர் - 172

திருவள்ளூர் - 170

ராமநாதபுரம் - 140

காஞ்சிபுரம் - 98

சேலம் - 89

தேனி - 72

தி.மலை - 55

கன்னியாகுமரி - 53

விழுப்புரம் - 40

18:29 (IST)25 Jun 2020
இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

* தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 45 பேர் உயிரிழப்பு

* உயிரிழப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்வு

18:26 (IST)25 Jun 2020
3,509 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது

* தமிழகத்தில் மேலும் 3,509 பேருக்கு கொரோனா

* முதல் முறையாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது

* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக உயர்வு

* தமிழக சுகாதாரத்துறை தகவல்

17:51 (IST)25 Jun 2020
அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார், முதலமைச்சர் பழனிசாமி

அத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம்

* குடிநீர் உள்ளிட்ட பலன்கள் மக்களுக்கு கிடைக்கும்

* திட்டத்தின் மூலம் ஏராளமான ஏரிகள், குளங்களை பவானி ஆற்று நீரால் நிரப்பவும் திட்டம் - முதலமைச்சர்

17:48 (IST)25 Jun 2020
47 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 770ஆக உயர்வு

17:16 (IST)25 Jun 2020
வேலூர் மாவட்டத்தில் இன்று 68 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

வேலூர் மாவட்டத்தில் இன்ரு மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 888 ஆக உயர்ந்துள்ளது.

16:40 (IST)25 Jun 2020
சாத்தான்குளம் லாக்அப் மரணம்: தந்தை - மகன் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நீதிமன்றக் காவலில் உயிரிழந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் ஆகிய இருவரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

16:10 (IST)25 Jun 2020
கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின் - முதல்வர் கேள்வி

கோவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, “கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு சுமத்துகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை ஸ்டாலின் கூறவில்லை. கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

15:06 (IST)25 Jun 2020
சேலம் அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சேலம் அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முலம் சேலம் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரகள் மொத்தம் 280 பேர் உள்ளனர். அதே போல, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

14:59 (IST)25 Jun 2020
கோவையில் அரசு திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது - முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: கோவையில் அரசு திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து வசதிகளையும் கொண்ட மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. அரசு அறிவித்த திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

14:55 (IST)25 Jun 2020
தமிழக அரசின் நடவடிக்கையால் கோவையில் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது கொரோனா - முதல்வர்

முதல்வர் பழனிசாமி தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பொதுப்பணித் துறை சார்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

14:39 (IST)25 Jun 2020
நாடு முழுவதும் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து

நாடு முழுவதும் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

14:28 (IST)25 Jun 2020
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு

கொரோனா காலத்தில் முகக்கவசம் அணியாமலும், உரிய அனுமதி இல்லாமலும் காரில் சுற்றியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ராபின்சிங் மீது சென்னை சாஸ்திரி நகர் போக்குவரத்துப் பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

14:19 (IST)25 Jun 2020
மதுரையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

மதுரையில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் 162 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இதுவரை வெளியான கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சம்

14:02 (IST)25 Jun 2020
ஊரடங்கை மீறிய கிரிக்கெட் வீரர்

சென்னையில் ஊரடங்கை மீறியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காய்கறி வாங்க பெசன்ட் நகரிலிருந்து திருவான்மியூருக்கு சென்றதால் ராபின்சிங் கார் பறிமுதல் செய்யப்பட்டது

14:01 (IST)25 Jun 2020
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், 8வது முறையாக மேலும் 4 மாதங்கள் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

13:36 (IST)25 Jun 2020
கவுசல்யாவின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் விடுதலையான கவுசல்யாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல். விடுதலைக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டால் தனது கருத்தை கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என சின்னசாமி கேட்டுக் கொண்டுள்ளார். 

13:24 (IST)25 Jun 2020
இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை

புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். உடல்நல பாதிப்புக்கு பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

12:52 (IST)25 Jun 2020
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்திப்பு

”சென்னையில் வீடு வீடாக சென்று அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு 3,500 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது எனவும், கொரோனா தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது” எனவும்சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

12:34 (IST)25 Jun 2020
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு சொத்து சான்றிதழ் வழங்க வேண்டாம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக அகில பாரத பிராமணர் சங்கத்தின் தலைவர் குளத்துமணி தொடர்ந்த வழக்கை ஜூன் 30-க்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

12:15 (IST)25 Jun 2020
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு விவகாரம்

சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.  மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஜெயராஜ் மனைவி, மகள்கள் வருகை புரிந்துள்ளனர். 

12:03 (IST)25 Jun 2020
கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

11:44 (IST)25 Jun 2020
செங்கல்பட்டில் மேலும் 197 பேருக்கு கொரோனா.

செங்கல்பட்டில் மேலும் 197 பேருக்கு கொரோனா. செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 4,399 ஆக அதிகரிப்பு

11:23 (IST)25 Jun 2020
கனிமொழி எம்.பி வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு வாபஸ்...!

சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழி எம்பி வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்கு போலீசார் தேவை என்பதாலும், கனிமொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டதாக போலீஸ் விளக்கம்

11:19 (IST)25 Jun 2020
தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதம்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றனர், உறவினர்கள். காவலர்கள் மீது கொலை வழக்கை அரசு பதிவு செய்யும் என ஜெயராஜின் மகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

11:18 (IST)25 Jun 2020
மேலும் ஒரு விசாரணைக்கைதிக்கு உடல்நலக்குறைவு

தூத்துக்குடி, கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த மேலும் ஒரு விசாரணைக்கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிறையில் விசாரணைக்கைதிகளாக இருந்த தந்தை மகன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

11:09 (IST)25 Jun 2020
திருவள்ளூரில் மேலும் 192 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,027-ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 45 பேர் பலியாகியிருக்கிறார்கள். 

10:47 (IST)25 Jun 2020
சென்னையில் கொரோனா விபரம்

ராயபுரம் மண்டலத்தில் 7,000-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு. ராயபுரம் - 6837, தண்டையார்பேட்டை - 5531, தேனாம்பேட்டை - 5316 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அண்ணா நகர் - 4922, கோடம்பாக்கம் - 4908, திரு.வி.க. நகர் - 3896, அடையாறு - 2777, திருவொற்றியூர் - 1755, மாதவரம் - 1383, ஆலந்தூர் - 1124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

Covid 19 Cases in Tamil Nadu: மண்டல முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், ” தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை மண்டல போக்குவரத்து முறைக்கு தடை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனைத்து வகையான பயணத்தையும் மேற்கொள்ளலாம். அரசு பேருந்தும் மாவட்டத்திற்குள் இயக்கப்படும். ஆனால், அடுத்த மாவட்டமான சிவகங்கைக்கு செல்ல முடியாது. அரசுப் போக்குவரத்து இயக்கப்படாது. தனியார் வாகனங்களில் செல்ல நினைப்போர் காட்டாயம் அரசிடம் இ- பாஸ் வாங்கி செல்ல வேண்டும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Title:Tamil news today live coronavirus covid 19 chennai sathankulam death

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X