மாவட்டங்கள் இடையே இ- பாஸ் கட்டாயம்: லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை மண்டல போக்குவரத்து முறைக்கு தடை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

By: Updated: June 25, 2020, 12:21:06 PM

கடந்த மே 31ம் தேதி தமிழகத்தின் ஐந்தாவது கட்டமாக  ஊரடங்கை தமிழக அரசு ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்தது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில், ” சில கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும்”  என்று தெரிவிக்கப்பட்டது.

சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நிலை என்ன?   மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்து ஜூன 30 வரை 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. 7 மற்றும் 8வது மண்டலங்களைத் தவிர்த்து, முதற்கட்டமாக மண்டலத்திற்குள் மட்டும் பொதுப் போக்குவரத்து இயக்கப்பட்டன. உதரணமாக மதுரையில் இருந்து ராமநாதபுரம் நேரடியாக பேருந்து வசதிகள் இருந்து வந்தது.  மண்டலத்திற்குள் அணைத்து (பஸ், கார், இரண்டு சக்கர வாகனம்) வகையான பயணத்திற்கும்  இ- பாஸ் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

 

தற்போது, இந்த மண்டல முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில், ” தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை மண்டல போக்குவரத்து முறைக்கு தடை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. உதாரணமாக, ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனைத்து வகையான பயணத்தையும் மேற்கொள்ளலாம். அரசு பேருந்தும் மாவட்டத்திற்குள் இயக்கப்படும். ஆனால், அடுத்த மாவட்டமான சிவகங்கைக்கு செல்ல முடியாது. அரசுப் போக்குவரத்து இயக்கப்படாது. தனியார் வாகனங்களில் செல்ல நினைப்போர் காட்டாயம் அரசிடம் இ- பாஸ் வாங்கி செல்ல வேண்டும்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்:  கடந்த மே-30ம் தேதி வெளியான ஊரடங்கு தளர்விலும் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் போன்ற மாவட்டங்களுக்கு பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. எனவே, காஞ்சிபுரத்தில் இருது ஒருவர் சென்னைக்கு செல்ல வேண்டுமெனில் இ- பாஸ் வாங்குவது கட்டாயமக்கப்பட்டது. இருப்பினும், காஞ்சிபுரம்  மாவட்டத்திற்குள்  தனியார் வாகனத்தில் ஒருவர் எதற்காகவும் பயணிக்கலாம் என்ற தளர்வு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தான், பெருநகர சென்னை  காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சில பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்ப்பட்ட பகுதிகளில் ஜூன் 19 முதல் 30 தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் அறிவித்தார். இந்த ஊரடங்கு உத்தரவால், சில அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகலைத் தவிர்த்து    வாகனங்களில் செல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே அதாவது 2 கி.மீ தொலைவிற்குள் மட்டும் நடந்த சென்று பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முழு ஊரடங்கு இருக்கும் பகுதிகளில், திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படுகிறது.  முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆத்ரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கி இருக்கும் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவி புரிவோர் மற்றும் அரசு, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படுகிறது.

இன்று முதல் முழு ஊரடங்கு: சென்னையில் அனுமதிக்கப்பட்ட பணிகள் முழுப் பட்டியல்

இ-பாஸ் பெறுவது எப்படி?

https://tnepass.tnega.org வலை தளங்களுக்கு சென்ற பின்,

விண்ணப்பதாரர் பயணம் செய்யும் தேததிகளை மட்டுமே குறிப்பிட வேண்டும், தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரரும் பயணம் செய்கிறார் என்றால்,
விண்ணப்பதாரர் பெயரும் (Members Travelling) பயணம்
செய்வோரின் பட்டியலில் தெரிவிக்கப்பட தவண்டும்

தொடர்புடைய ஆவணங்களை இணைக்க வேண்டும், தவறும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும்,
விண்ணப்ப குறிப்பு எண்ணுடன் (SMS) குறுஞ்செய்தி மற்றும் (Email) மின்னஞ்சல் அனுப்பப்படும் .

ePASS அங்கீகரிக்கப்பட்டதும் ePASS பதிவிறக்க
இளணப்புடன் மற்றொரு (SMS) குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu transport zone cancelled tamilnadu e pass mandatory for within district news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X