Tamil News Today : காவலர் முத்துராஜ் கைது, ரேவதி 5 மணி நேரம் வாக்குமூலம்: சாத்தான்குளம் அப்டேட்

Tamil news today : சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீதும் கொலை வழக்கு பதிவு

By: Jul 4, 2020, 8:24:56 AM

Tamil News Today Updates: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ், தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன்பு இன்று ஆஜர் படுத்தப்படவுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, நீதிபதி குடியிருப்புக்கு முத்துராஜ் அழைத்து செல்லப்பட்டார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்ர் முத்துராஜ் தலைமறைவாகினார். சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் டி.எஸ்.பி உட்பட 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கான்பூர் அருகே முன்னாள் அமைச்சரின் கொலையில் தொடர்புடைய ரவுடிகளை, பிடிக்க சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாத்தான்குளம் வணிகர்கள் கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகியோர் வரும் 16-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரட்டை கொலை வழக்கில் நீதி நிலைநாட்டப்படும், என்ற நம்பிக்கையை சிபிசிஐடி நிலைநாட்டியுள்ளது என, ஆய்வாளர் இரு எஸ்.ஐ-க்களை அதிரடியாக கைது செய்ததற்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கான்பூர் என்கவுன்டர் : ரவுடி கும்பல் சுட்டதில் 8 போலீசார் பரிதாப மரணம்

சாத்தான்குளம் சம்பவத்தில் காட்சியளித்த பெண் காவலர் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரின் அச்சத்தைப் போக்க தொலைபேசியில் அழைத்துப் பேசி, நீதிபதிகள் தைரியம் கூறினர். தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 4343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 98,000-ஐ கடந்துள்ளது. மக்கள் நெருக்கமாக உள்ள பகுதிகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த, 75,000 படுகைகள் தயார் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:50 (IST)03 Jul 2020
சாத்தான்குளம் சம்பவம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

சாத்தான்குளம் சம்பவம் மற்றும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒட்டுமொத்த காவல்துறையின் நற்பெயரையும் களங்கப்படுத்தும் வகையில், சாத்தான்குளம் சம்பவம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

22:47 (IST)03 Jul 2020
சீனாவை குறிப்பிட்டு பேச தயங்குவது ஏன் ? - ப .சிதம்பரம் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்த கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? என்று அவர் வினவி உள்ளார். பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

22:26 (IST)03 Jul 2020
காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார். அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளத்தில் வைத்து போலீசார் கைது செய்த‌னர்.

22:06 (IST)03 Jul 2020
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு - முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் தலைமைக் காவலர் ரேவதி ஆஜர்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான வழக்கில் அப்ருவராக மாறிய ரேவதி, நீதிமன்ற விசாரணைக்குப் பின் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் அழைத்து செல்லப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முத்துராஜ் என்ற காவலர் தலைமறைவாக உள்ளார். வழக்கில் அப்ரூவராக உள்ள தலைமை காவலர் ரேவதி , தூத்துக்குடி முதன்மை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜராகி சுமார் 5 மணி நேரம் விளக்கம் அளித்தார். அதனை தொடர்ந்து சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். ஏற்கெனவே கோவில்பட்டி முதன்மை நீதிபதி பாரதிதாசனிடம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அவருக்கு பாதுகாப்பு வழங்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

21:58 (IST)03 Jul 2020
காவலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் பறிமுதல்

சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. விளாத்திகுளம் அருகே கீழமங்கலம் காட்டு பகுதியில் கேட்பாரற்று கிடந்த முத்துராஜின் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

21:17 (IST)03 Jul 2020
கொரானா தொடர்பாக அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

கொரானா தொடர்பாக அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும், மக்கள் அதிகமாக வசிக்கும் நெருக்கமான குடிசைப்பகுதிகளில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை புதுப்பேட்டையில் நடைபெற்றுவரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்

21:15 (IST)03 Jul 2020
ராணுவ வீரர்களின் பெயர்

இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா சிறப்பு மருத்துவமனையின் வார்டுகளுக்கு கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர் சூட்டப்படும் என DRDO அறிவித்துள்ளது.

20:57 (IST)03 Jul 2020
1,92,900 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் மேலும் 6,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

* பாதிப்பு எண்ணிக்கை 1,92,900 ஆக உயர்வு

20:27 (IST)03 Jul 2020
கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 1,694 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது; மேலும் 21 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

இதுவரை 19,710 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 293 பேர் உயிரிழப்பு.

20:17 (IST)03 Jul 2020
நரி சூழ்ச்சிகளால் களங்கப்படுத்த முடியாது

'நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் உள்ள வழக்கில் அவதூறு விதைக்க கூடாது'

முதல்வர் எடப்பாடியின் நல்லாட்சியை நரி சூழ்ச்சிகளால் களங்கப்படுத்த முடியாது

- தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்

20:16 (IST)03 Jul 2020
மலிவான அரசியலை செய்கிறது திமுக

'அரசு, விசாரணை அமைப்புகளின் மீது பழி போட்டு மலிவான அரசியலை செய்கிறது திமுக'

* போலீசாரின் நடவடிக்கைகள் மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார் ஸ்டாலின்

- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

19:56 (IST)03 Jul 2020
சாத்தான்குளம் விவகாரத்திலும் பின்பற்றப்படுகிறது

முதல்கட்ட விசாரணை, சாட்சி சேகரித்தல், ஆதாரம் திரட்டுதல் முடிந்து குற்றவாளி உறுதி செய்யப்படுகின்றனர்

* இந்த குற்றவியல் சட்ட நடைமுறை சாத்தான்குளம் விவகாரத்திலும் பின்பற்றப்படுகிறது

* சாத்தான்குளம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

19:54 (IST)03 Jul 2020
நீட் தேர்வு - செப்டம்பர் 13, 2020

நீட் தேர்வு - செப்டம்பர் 13, 2020

JEE main தேர்வு - செப்டம்பர் 1-6, 2020

JEE Advanced தேர்வு - செப்டம்பர் 27, 2020

மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவிப்பு

19:52 (IST)03 Jul 2020
நீட் தேர்வு ஒத்திவைப்பு

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

* ஜூலை மாதம் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

19:26 (IST)03 Jul 2020
பாதிப்பு எண்ணிக்கை 4,964

கேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4,964 ஆக அதிகரித்துள்ளது.

19:15 (IST)03 Jul 2020
பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

கொரோனா நோயை தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

கொரோனாவுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

காவல் துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

போலீஸ் வாகனம் மூலம் மக்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்படுகிறது

19:04 (IST)03 Jul 2020
கொரோனா பாதிப்பில் 1,000 கடந்த மாவட்டங்கள்

சென்னை-64,689
செங்கல்பட்டு-6,139
திருவள்ளூர்-4,343
மதுரை-3,423
காஞ்சிபுரம்-2,272
திருவண்ணாமலை - 2,181
வேலூர் -1,667
ராமநாதபுரம் -1,143
கடலூர் -1,143
சேலம் -1,127
கள்ளக்குறிச்சி -1,102
தூத்துக்குடி -1,055
விழுப்புரம் -1,020

18:49 (IST)03 Jul 2020
காவலர் மகாராஜன் ஆஜர்

தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜர்

விசாரணை நீதிபதி பாரதிதாசனை ஒருமையில் பேசியவர் காவலர் மகாராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

18:48 (IST)03 Jul 2020
இன்று அறிவிக்கப்பட்ட கொரோனா உயிரிழப்பு மாவட்டம் வாரியாக..

சென்னை - 33
செங்கல்பட்டு - 9
மதுரை - 8
திருவள்ளூர் - 4
ராமநாதபுரம் - 3
விழுப்புரம் - 2
காஞ்சிபுரம் - 1
தேனி - 1
திருவண்ணாமலை - 1
ஈரோடு - 1
திண்டுக்கல் - 1
சேலம் - 1

இன்று மட்டும் - 64 | மொத்த பலி - 1,385

18:36 (IST)03 Jul 2020
இன்றைய கொரோனா பாதிப்பு: மாவட்ட வாரியாக

திருச்சி- 47
நெல்லை- 41
கோவை- 36
விழுப்புரம் - 33
திருப்பத்தூர் - 33
தூத்துக்குடி - 27
கடலூர் - 20
புதுக்கோட்டை - 18
திருவாரூர் - 17
நாகை - 17
திண்டுக்கல் - 17
ஈரோடு - 14
கிருஷ்ணகிரி - 14
தர்மபுரி - 14
தஞ்சை - 13
திருப்பூர் - 5
தென்காசி - 4
கரூர் - 4
நாமக்கல் - 4
நீலகிரி - 1

18:27 (IST)03 Jul 2020
126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

5 உயிரிழப்புகள் உட்பட மொத்த பாதிப்பு 927ஆக உயர்வு.

18:26 (IST)03 Jul 2020
இன்றைய கொரோனா பாதிப்பு: மாவட்ட வாரியாக

சென்னை - 2,082
செங்கல்பட்டு - 330
மதுரை - 287
திருவள்ளூர் - 172
தி.மலை - 151
வேலூர் - 145
தேனி - 126
காஞ்சிபுரம் - 121
சேலம் - 99
ராணிப்பேட்டை - 90
க.குறிச்சி - 85
ராமநாதபுரம் - 73
விருதுநகர் - 65
சிவகங்கை - 53
குமரி - 53

18:26 (IST)03 Jul 2020
எண்ணிக்கை 1,000 நெருங்கியது

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்கியது!

இன்று சென்னையில் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

18:13 (IST)03 Jul 2020
2,357 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று மேலும் 2,357 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,378 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

மாநிலத்தில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக உயர்வு.

18:03 (IST)03 Jul 2020
4,329 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று

* 2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது

* கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்வு

* தமிழக சுகாதாரத்துறை தகவல்

17:56 (IST)03 Jul 2020
ஒரு லட்சம் கொரோனா பாதிப்பு

இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

* சென்னையிலும் இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டியதாக தகவல்

17:24 (IST)03 Jul 2020
ஃபிட் இந்தியா புரோகிராமில் 2.5 லட்சம் பள்ளி மாணவர்கள்

கடந்த 2 மாதங்களில் 2.5 லட்சம் பள்ளி மாணவர்கள் ஃபிட் இந்தியா புரோகிராமில் தங்களை இணைத்துக் கொண்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜு அறிவித்துள்ளார்.

17:18 (IST)03 Jul 2020
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாவட்ட பொறுப்பாளராக நியமனம்
Caption

விருதுநகருக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படும் வரை ராஜேந்திர பாலாஜி அந்த பதவியில் நீடிப்பார் என்று அதிமுக சார்பில் அறிவிப்பு

17:12 (IST)03 Jul 2020
Fit Hai to Hit Hai India - மாணவர்களுடன் உரையாடலை துவங்கினார் மனிதவளத்துறை அமைச்சர்
17:11 (IST)03 Jul 2020
மாணவர்களுடன் லைவ்வில் பேசுகிறார் அமைச்சர்

விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜ்ஜூ மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோருடன் ஃபிட் ஹே டூ ஹிட் ஹே இந்தியா என்ற வெப்பினார் லைவ்வில் நீட் தேர்வுகள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17:02 (IST)03 Jul 2020
JEE Main exam and advanced exams

ஜெ.இ.இ. மெய்ன் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் ஜெ.இ.இ. அட்வான்ஸ் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. மே மாதமே நடைபெற இருந்த ஜெ.இ.இ. அட்வான்ஸ் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

16:53 (IST)03 Jul 2020
நீட், ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் எப்போது?

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று மாலை நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள் குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட உள்ளார். நீட் தேர்விற்கு 16 லட்சம் மாணவர்களும், ஜே.இ.இ. மெயின் தேர்வுகளுக்கு 9 லட்சம் மாணவர்களும் விண்ணப்பத்திருக்கும் நிலையில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் இன்றைய அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

16:23 (IST)03 Jul 2020
மாரடைப்பு காரணமாக ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் அவர் தஞ்சையில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

16:16 (IST)03 Jul 2020
கொரோனா சிகிச்சையின் போது உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி

கொரோனா சிகிச்சையின் போது உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியை நேரில் சென்று வழங்கினார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

15:38 (IST)03 Jul 2020
சேலத்தில் கொரோனா நிலவரம்

சேலத்தில் ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1134 ஆக உயர்ந்துள்ளது. சேலத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு.

15:26 (IST)03 Jul 2020
அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ராஜா என்பவர் மீது போக்சோ மற்றும் கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

15:20 (IST)03 Jul 2020
லடாக்கில் மோடி

லடாக் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் பிரத்யேக புகைப்படங்கள் 

15:17 (IST)03 Jul 2020
ஜூலை மாதத்திற்கும் ரேஷன் பொருட்கள் இலவசம்

தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஜூலை 6 முதல் 9 வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த டோக்கன்களில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

14:46 (IST)03 Jul 2020
கொரோனாவை வென்றார்கள் ஷாகித் அஃப்ரிடி குடும்பத்தினர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா வைரஸ் கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூவரும் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாக ஷாகித் ட்வீட் செய்துள்ளார்.

14:39 (IST)03 Jul 2020
கீழடி ஆய்வில் புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அதில் இரண்டு தரை தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு வண்ண பானைகள், சிறிய வகை உலை கலன், பாசி, பெரிய விலங்கின் எலும்பு, இணைப்பு குழாய் பானைகள் ஆகியவையும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

14:16 (IST)03 Jul 2020
லடாக்கில் பிரதமர் மோடி பேச்சு

”இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது" என லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு. 

13:52 (IST)03 Jul 2020
திருப்பதி கோயில் அர்ச்சகர்கள் 10 பேருக்கு கொரோனா

திருப்பதியில் அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

13:40 (IST)03 Jul 2020
சரணடைகிறாரா முத்துராஜ்?

சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ், சரணடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஏற்கனவே போலீசார் 4 பேர் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

13:18 (IST)03 Jul 2020
முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. செக்காரக்குடியில் இறந்த பாண்டி, இசக்கிராஜ், தினேஷ், பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

13:09 (IST)03 Jul 2020
காவலர் ரேவதி விளக்கம்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு காவலர் ரேவதி ஆஜராகியுள்ளார். நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜராகி காவல்நிலையத்தில் நடந்தது குறித்து காவலர் ரேவதி விளக்கம் அளித்து வருகிறார். 

12:45 (IST)03 Jul 2020
நாகர்கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

நாகர்கோவில் வடிவீஸ்வரம் கீழரத வீதி மற்றும் கணேசபுரம் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில்  மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில்  பாதிக்கப்பட்டவர்கள்  வசிக்கும் வீடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சுகாதார ஆய்வாளர் திரு. மாதவன் பிள்ளை அவர்கள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி  மாத்திரைகள்  வழங்கப்பட்டது. 

12:32 (IST)03 Jul 2020
இலவச ரேஷன் பொருட்கள் வாங்க கால அவகாசம்

ரேஷனில் ஜூன் மாதத்திற்கான இலவசப் பொருட்களை பெற இம்மாதம் 10ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

12:05 (IST)03 Jul 2020
மோடி லே, லடாக் விசிட்

கால்வானில் சீன வீரர்களுடனான வன்முறை மோதல்களில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டு சில வாரங்களான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை லடாக், லே, எல்லை மோதலை மறுஆய்வு செய்ய வந்தார். மே மாத தொடக்கத்தில் எல்லை பிரச்னை ஏற்பட்டதிலிருந்து, முதல்முறையாக அங்கு விசிட் செய்திருக்கிறார் மோடி 

12:01 (IST)03 Jul 2020
ரேவதியிடம் இன்று விசாரணை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ரேவதியிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது. தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

11:49 (IST)03 Jul 2020
சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டி

கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சில பதிவுகள் கிடைத்துள்ளன; சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் முத்துராஜ் 2 நாட்களுக்குள் பிடிபடுவார்; கொலை வழக்கில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிக்க திட்டம் என சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டியளித்துள்ளார். 

Tamil nadu news today updates : ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

Web Title:Tamil news today live covid 19 8 up cops killed sathankulam custodial murder case

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X