சென்னையில் கொரோனா தடுப்பு: முதல்வர் தலைமையிலான 5 அமைச்சர்கள் குழு கண்காணிக்கும்

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆ‌ர். விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், உதயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,176 ஆக அதிகரிப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த 7 பேரில் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 2 பேரும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 4 பேரும், 36 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,16,919 லிருந்து 2,26,770 ஆக அதிகரிப்பு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,075 லிருந்து 6,348 ஆக உயர்வு. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,107 லிருந்து 1,09,462 ஆக அதிகரிப்பு. கொரோனாவால் பாதித்த 1,10,960 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், 67% மட்டுமே இன்று தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Live Blog

Tamil News Today Live : இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.

22:25 (IST)05 Jun 2020
தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை: ஸ்டாலின் கண்டனம்

மங்காத்தா சூதாட்டம் போல், தமிழகத்தில் மின்கட்டண வசூலில் கெடுபிடி காட்டப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

22:09 (IST)05 Jun 2020
மேனகா காந்தி மீது வழக்குப் பதிவு

கேரள மாநிலத்தில் கர்ப்பிணி யானை அன்னாசிப் பழத்தில் வெடி வைத்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி அவதூறாகப் பேசியதாக அம்மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

21:32 (IST)05 Jun 2020
திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ரேலா விளக்கமளித்துள்ளார்.

20:38 (IST)05 Jun 2020
தமிழக வீரர் மரணம் – முதல்வர் இரங்கல்

ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் உயிரிழந்தார். மதியழகனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

20:02 (IST)05 Jun 2020
ரூ.2 கோடி அபராதமாக வசூல்

சென்னையில் மட்டும் முகக் கவசம் அணியாமல் வெளியே திரிந்தவர்களிடம் இருந்து ரூ. 2 கோடியே 10 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

19:39 (IST)05 Jun 2020
மத வழிபாட்டு தலங்கள் திறப்பு

கேரள மாநிலத்தில், ஜூன் மாதம் 9ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 ம்தேதி ஊழியர்களுக்காகவும். 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்காகவும், 11ம் தேதி முதல் அனைவருக்காகவும் திறந்துவிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

18:56 (IST)05 Jun 2020
தமிழக அரசு மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் தமிழக அரசு மறைக்கவில்லை; வெளிப்படைத்தன்மையும் தகவல்கள் பகிரப்படுகின்றன. தமிழக அரசின் கொரோனா செய்திக்குறிப்பை ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

18:51 (IST)05 Jun 2020
கேரள யானை கொலை - விசாரணைக்குழு அமைப்பு

கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க நீண்டகால செயல் திட்டத்தை சமர்ப்பிக்க இக்குழுவுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அமைதிப் பள்ளத்தாக்கு வனக் காப்பாளர் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு, தகுந்த திட்டங்களை வகுக்க வேண்டும் என உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஏற்கனவே திட்டம் வகுத்திருந்தால், அது எந்த நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இக்குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

18:07 (IST)05 Jun 2020
ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 12 பேர் பலியாகி உள்ளதால், கொரோனா பலி எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

17:39 (IST)05 Jun 2020
திமுகவினர் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை விடுதலை செய்து, வழக்குகளை திரும்ப பெற வேண்டும். கோவையில் நடைபெறும் நடவடிக்கைகள் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்துள்ளன என திமுக தலைவர் ஸ்டாலின் வெளி்யிட்டுள்ள அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:35 (IST)05 Jun 2020
இஞ்ஜினியரிங் படிப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு தேர்வு ஒத்திவைப்பு

இஞ்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கொரோனா நெருக்கடியால், ரத்தான சிறப்பு தேர்வு வகுப்புகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்வு ஒத்திவைக்கப்படாலும், ஏற்கனவே கட்டணம் செலுத்திய மாணவரக்ள் மீண்டும் செலுத்த தேவையில்லை என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. 

16:58 (IST)05 Jun 2020
சிவில் சர்வீஸ் முதனிலை தேர்வு அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் - UPSC

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் முதனிலை தேர்வு, அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த தேர்வு, மே 31ம் தேதி நடைபெற இருந்தது  கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முதன்மை தேர்வு, 2021 ஜனவரி 8ம் தேதி நடைபெற உள்ளது.

16:34 (IST)05 Jun 2020
தனியார் மருத்துவமனைகள் ஏன் இலவச கொரோனா சிகிச்சை வழங்க கூடாது - உச்ச நீதிமன்றம் கேள்வி

மத்திய அரசிடம் சலுகையில் நிலம் பெற்ற தனியார் மருத்துவமனைகள், ஏன் கொரோனாவுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

16:14 (IST)05 Jun 2020
இனி புதிய அறிவிப்புகள் இல்லை - நிதி அமைச்சகம் அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிக அளவில் பணம் செலவிடப்பட்டு வருவதால் இனி இந்த ஆண்டில் புதிய திட்டம் ஏதும் நிதி அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.in

16:11 (IST)05 Jun 2020
10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா - அமைச்சர் கருத்து

மாணவர்களின் உடல் நிலை குறித்து பெற்றோர்களுக்கு தான் தெரியும். உடல்நிலை சரியில்லாத மாணவர்களுக்க்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

15:21 (IST)05 Jun 2020
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு அறிவிப்பு

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆ‌ர். விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், உதயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

14:58 (IST)05 Jun 2020
முன்பதிவு கட்டண தொகையை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்

மார்ச் 31ம் தேதி வரை ரயில்வே மூலம் தங்களின் பயணங்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் தங்களின் கட்டண தொகையை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

14:56 (IST)05 Jun 2020
ஒளிரும் தமிழ்நாடு

ஒளிரும் தமிழ்நாடு காணொளி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாட்டினை நாளை முதல்வர் துவங்கி வைத்து பேச உள்ளார். 500க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது குறித்து நாளை பேசப்பட உள்ளது.

14:37 (IST)05 Jun 2020
கொரோனாவுக்கு எதிரான போரில் நாமே தீர்வாவோம்

சாதி, மொழி, சமய வேறுபாடுகளை மறந்து கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றிணைந்து, சென்னையை காப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டிருக்கும் வீடியோ 

14:06 (IST)05 Jun 2020
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

14:02 (IST)05 Jun 2020
தமிழகத்தில் மழை

தமிழகத்தில் சென்னை, நாகை, திருவள்ளூர், காஞ்சி, சேலம், மற்றும் காரைக்கால் உட்பட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

13:58 (IST)05 Jun 2020
ஜெ. அன்பழகன் : நேரில் சென்று நலம் விசாரித்த விஜயபாஸ்கர்

திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே முதல்வர், அவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று ட்வீட் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் முதல்வர் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

13:51 (IST)05 Jun 2020
ஒளிரும் மாநாடு!

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் மாநாடு என்ற காணொலியில் நடைபெறும் மாநாட்டை நாளை காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.  அத்துடன் , தலைமை உரையாற்றும் முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டின் தொழில்வளம் பற்றிய கையேட்டையும் வெளியிடுகிறார். 

13:14 (IST)05 Jun 2020
எடப்பாடி பழனிசாமி ட்வீட்:

ஜெ.அன்பழகன் விரைவில் குணமடைந்து பூரண நலம்பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

13:05 (IST)05 Jun 2020
முதல்வர் பழனிசாமி!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். கவலைக்கிடமாக இருந்த அன்பழகனின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துள்ளார். 

12:51 (IST)05 Jun 2020
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை!

திமுக எம்.எல். ஏ அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று நலம் விசாரித்தார். 

12:01 (IST)05 Jun 2020
புலம்பெயர் தொழிலாளர்கள் வழக்கு!

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப எடுக்கப்பட்ட நடவடிக்கை மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.சுமார் 3.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புலம் பெயர் தொழிலாளர்களுக்காக இதுவரை சுமார் ரூ. 163 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 212 முகாம்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன என்றும் தமிழக அரசு பதில் மனுவில் விவரித்துள்ளது. 

11:56 (IST)05 Jun 2020
ஐநா-வின் நல்லெண்ண தூதர்!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மதுரை மாணவி ஐநா-வின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மாநாட்டில் வறுமை தொடர்பாக பேசவும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. மதுரை மாணவி புகழ் ஐ.நா வரை ஒலிக்க உள்ளது. 

11:13 (IST)05 Jun 2020
கொரோனா உயிரிழப்பு!

பொன்னேரியை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், அவருடன் நேரடி தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10:54 (IST)05 Jun 2020
ஈரோட்டில் சோகம்!

இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்த வருத்தத்தில் 3 மாத குழந்தையை கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

10:53 (IST)05 Jun 2020
கொரோனா கூடுதல் மருத்துவர்கள்

கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இன்று முதல் கூடுதலாக 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்று சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் பணிபுரிய புதியதாக இன்று முதல் 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

10:48 (IST)05 Jun 2020
ரயில் டிக்கெட்டு முன்பதிவு தொகை!

பொதுமுடக்க காலத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்கான தொகை இன்று முதல் திரும்ப வழங்கப்படுகிறது.  மார்ச் 24 முதல் 31வரை பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இன்று வழங்கப்படும்.  ஏப்ரல் 1 முதல் 14 வரை பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு ஜூன் 12 திரும்ப அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10:42 (IST)05 Jun 2020
யானை கொலை வழக்கு!

உலகையே உலுக்கிய அன்னாச்சி பழத்தில் வெடி மருந்து வைத்து கேரள யானை கொல்லப்பட்ட வழக்கில் கேரள வனத்துறை ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil News Today : உலகளவில் 67 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு. மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடங்கிய பேருந்து போக்குவரத்தினால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று  மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்படியே போனா சென்னை நிலைமை இதுதான்! அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு  எடுக்கக்கோரி, 8 வழிச்சாலை திட்ட மேலாளர், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸ் தமது ஆசிரமித்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 குழந்தைகள் தற்போது குணமடைந்து திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். தமது ஆசிரம குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகள், மருத்துவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Web Title:

Tamil news today live covid 19 cases chennai lockdown today tamilnadu news 196576

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close