Purevi News Highlights:வலு இழந்த புரெவி; தமிழகம் முழுவதும் மழை

Tamil News Today : நிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடுமப்ங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்

By: Dec 5, 2020, 7:46:24 AM

Tamil News Today cyclone nivar fund இந்தியா டுடே பத்திரிகை சார்பாக, 12 பிரிவுகளின் கீழ் நடத்திய கணக்கெடுப்பில், ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கான சிறந்த மாநிலத்திற்கான விருதினை, தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது வருடமாக பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தியா டுடே சார்பில் 2020 ஆம் ஆண்டுக்கான State of The States விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில், இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில், தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து செயல்படும் மாநிலம் என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.நிவர் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

நிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடுமப்ங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
21:18 (IST)28 Nov 2020
மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் 30ம் தேதி ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை

வரும் 30ம் தேதி, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.  

21:16 (IST)28 Nov 2020
வரும் 30-ஆம் தேதி மத்தியக்குழு தமிழகம் வரவுள்ளது

நிவர் புயல் சேதங்களை பார்வையிட வரும் 30-ஆம் தேதி மத்தியக்குழு தமிழகம் வரவுள்ளது.
மத்திய உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

19:52 (IST)28 Nov 2020
மாஸ்டர் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும்; படக்குழு உறுதி

மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.  இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட நம்பத்தகுந்த ஒடிடி தளம் ஒன்று விருப்பம் தெரிவித்திருந்தாலும், மாஸ்டர் திரைப்பட்டத்தை தியேட்டரில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். தமிழ் சினிமாத் துறையை மீட்டெடுக்க திரைப்பட உரிமையாளர்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது. 

19:31 (IST)28 Nov 2020
கோவிட்-19 தடுப்பு மருந்து இலவசமாக அளிக்கப்படும் - விஜயபாஸ்கர்

கோவிட்-19 தடுப்பு மருந்து பொதுமக்களுக்கும் இலவசமாக அளிக்கப்படும் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

18:25 (IST)28 Nov 2020
கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல்

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் (சி எஸ் ஐ ஆர்) உறுப்பு ஆய்வகமான, ஹைதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சி சி எம் பி) உருவாக்கியுள்ள கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதுள்ள தங்க தரச்சான்று பெற்ற ஆர்டி-பிசிஆர் முறையை சற்றே மாறுதலுக்கு உட்படுத்தி செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் உருவாக்கியுள்ள நேரடி டிரை ஸ்வாப் (காய்ந்த மூக்கு திரவம்) ஆர்டி-பிசிஆர் சோதனையை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதை செயல்படுத்துவதன் மூலம் புதிதாக எந்த முதலீடும் செய்யாமல் பரிசோதனைகளின் அளவை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரிக்கலாம். இதற்கு தேவைப்படும் குறைந்த செலவு மற்றும் நேரத்தை கருத்தில் கொண்டு, இந்த பரிசோதனையை பின்பற்றுவதற்கான அறிவுரையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு வழங்கியுள்ளது.

18:23 (IST)28 Nov 2020
ஓய்வூதியதாரர்கள் ஜீவன் பிரமாண் பத்திரத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதி நீட்டிப்பு

கொவிட்- 19 பெருந்தொற்றின் காரணமாக மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதியான இபிஎஃப்ஓ, ஜீவன் பிரமாண் பத்திரம் என்னும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2021 பிப்ரவரி 28 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக ஓய்வூதியதாரர்கள் இந்த பத்திரத்தை சமர்ப்பிக்க நடப்பாண்டு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது.

18:22 (IST)28 Nov 2020
ஜிஎஸ்டி பற்றாக்குறை விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்திருப்பதாக பஞ்சாப் அறிவிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செயல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய இரு விருப்பத் தேர்வுகளில் விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்திருப்பதாக பஞ்சாப் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களும் (தில்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ளதால், ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சிறப்பு சாளரம் மூலம் இம்மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும்.

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இந்த சாளரத்தின் மூலம் இம்மாநிலங்களின் சார்பாக இந்திய அரசு ரூ 24,000 கோடியை கடனாக வாங்கி, அதை நான்கு தவணைகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது.

17:49 (IST)28 Nov 2020
3 கலெக்டர்கள் இடமாற்றம்

ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டு வசதித்துறை முதன்மை செயலராக இருந்த ராஜேஷ் லக்கானி ஆவண காப்பக முதன்மை செயலராக நியமனம். 

17:24 (IST)28 Nov 2020
இறங்கு முகத்தில் இந்திய பொருளாதாரம்

பொது முடக்கத்தால் 2020-21 நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்திய பொருளாதாரம் 23.9 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. செப்டம்பரில் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஆனால், உற்பத்தி துறை 0.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, முதல் காலாண்டில் 39 சதவீதம் சரிவை சந்தித்திருந்தது. விவசாய துறை 3.4 சதவீதம், மின்சக்தி மற்றும் எரிவாயு துறை 4.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.

17:21 (IST)28 Nov 2020
புதுவை முதல்வர் கோரிக்கை

புதுவைக்கு ரூ.100 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார். 

16:31 (IST)28 Nov 2020
அசுதோஸ் தலைமையிலான குழு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அசுதோஸ் தலைமையிலான குழு நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த வரும் 30 ஆம் தேதி தமிழகம் வருகிறது!

16:05 (IST)28 Nov 2020
முதல்வர் ஆலோசனை நிறைவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவக் குழுவினருடன் முதல்வர் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. 

15:10 (IST)28 Nov 2020
காணொலி வாயிலாக முதல்வர் ஆய்வு
14:20 (IST)28 Nov 2020
மு.க.ஸ்டாலின் ட்வீட்
14:20 (IST)28 Nov 2020
மத்தியக்குழு தமிழகம் வருகை

நிவர் புயல் பாதிப்புகளை டிசம்பர் 1-ம் தேதி ஆய்வு செய்கிறது மத்தியக் குழு. 30-ம் தேதி தமிழகத்துக்கு வரும் மத்தியக்குழு, டிசம்பர் 1-ம் தேதி ஆய்வுகளை தொடங்குகிறது. தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆய்வு செய்யப்படுகிறது. 

13:20 (IST)28 Nov 2020
கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனை

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் 3ஆம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்குவதாக எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி முதல்வர் சுந்தரம் தெரிவித்துள்ளார். 

12:32 (IST)28 Nov 2020
சூரப்பா தொடர்பான விசாரணை!

சூரப்பா மீது மின்னஞ்சலில் வந்துள்ள புகார்கள் குறித்து விசாரணையை தொடங்கினார் ஒய்வு பெற்ற நீதிபதி கலையரசன்

12:20 (IST)28 Nov 2020
மோடி ஆய்வு!

ஜைடஸ் பயோடெக் பார்க் நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஜை கோவிட்- டி தடுப்பு மருந்தின், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக இந்த ஆய்வகத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் தற்போது எந்த நிலையை எட்டியுள்ளது என விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார்.

12:15 (IST)28 Nov 2020
2000 மினி கிளினிக்!

டிசம்பர் 15ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் துவக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். நிவர், புயலின் போது சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், அமைச்சர்களையும் முதல்வர் பழனிசாமி பாராட்டினார்.

11:26 (IST)28 Nov 2020
காற்றழுத்த தாழ்வு நிலை!

இன்று காலை உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை .  தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை . இன்று காலை 8.30 மணியளவில் உருவானது என தகவல். அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும். அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு. புயலாக மாறினால் ' புரெவி ' என பெயர் வைக்கப்படும்.

11:22 (IST)28 Nov 2020
பாடத்திட்டம் குறைப்பு அறிக்கை!

பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை நாளைமறுநாள் முதல்வரிடம் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

11:17 (IST)28 Nov 2020
மோடி நேரில் ஆய்வு!

அகமதாபாத் சைடஸ் பயோடெக் நிறுவனத்தில், கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

09:32 (IST)28 Nov 2020
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாவதால் டிச.1 மற்றும் 2ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

08:48 (IST)28 Nov 2020
கல்லூரிகள் திறக்கப்படும்!

முதுநிலை 2-ம் ஆண்டு அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்  தகவல். 

08:47 (IST)28 Nov 2020
மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் நிலை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

Tamil News Today cyclone nivar fund : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்ட முதலமைச்சர், புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிதியில் இருந்து தலா 4 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 6 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய முக்கிய செய்திகள்

மேலும் புயலால் உயிரிழந்த 61 பசுக்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், 5 எருதுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், 65 கன்றுகளுக்கு தலா 16 ஆயிரம் ரூபாயும் வழங்கவும், உயிரிழந்த 114 ஆடுகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கவும் ஆணையிட்டதாக தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

Web Title:Tamil news today live cyclone nivar fund cm edappadi pm modi oneday match mk stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X