Tamil News Upadates: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லாமல் வெள்ளிக்கிழமை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்பட்டது.
போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும்
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் .
வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைய உதவ வேண்டும்.
சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும்
போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் உடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
-
Jan 05, 2024 22:08 ISTஉலக முதலீட்டாளர்கள் மாநாடு 1 ட்ரில்லியன் பொருளாதாரக் கனவை எட்ட உதவும் - மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்: “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும். சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்களின் மாநாட்டில் 50 நாடுகளின் பங்கேற்கின்றனர். ஒரு ட்ரில்லியன் பொருளாதார கனவை எட்ட முதலீட்டாளர்கள் மாநாடு சிறந்த வாய்ப்பாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jan 05, 2024 22:05 ISTமு.க. ஸ்டாலினிடம் ரூ.20 லட்சம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய திருவாவடுதுறை ஆதினம்
திருவாவடுதுறை ஆதீனம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
-
Jan 05, 2024 20:48 ISTஇலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 21 மீனவர்கள்; சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 21 தமிழ்நாடு மீனவர்கள், இன்று மாலை விமான மூலம் சென்னை வந்தடைந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில், மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று அரசு வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
-
Jan 05, 2024 20:46 ISTதிருப்பூரில் ஜன. 19-ல் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
திருப்பூரில் ஜன. 19-ல் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக திருப்பூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Jan 05, 2024 20:10 ISTஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியமாக ரூ. 3,000 வரை வழங்கப்படும்; மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊழியம் பெறும் முழு மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும். சி மற்றும் டி பிரிவு ஓய்வுதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ. 500 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
Jan 05, 2024 20:06 ISTசோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இந்தியர்கள் மீட்பு
சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 15 இந்திய மாலுமிகள், 6 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடற்கொள்ளையர்கள் தப்பி ஓடினர். கப்பல் முழு சோதனைக்குப் பின் புறப்பட்டது.
-
Jan 05, 2024 19:44 ISTநெல்லை-திருச்செந்தூர் ரயில் பாதை ஜன. 6-ம் தேதி சோதனை - தெற்கு ரயில்வே அறிவிப்பு
ரயில்பாதை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நெல்லை - திருச்செந்தூர் பிரிவில் நாளை (ஜனவரி 06) சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Jan 05, 2024 19:05 ISTவிஜயகாந்த் நினைவிடத்தில் கௌதம் கார்த்திக் அஞ்சலி
கேப்டன் விஜயகாந்துக்கு நடிகர் கௌதம் கார்த்திக் இன்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரின் வீட்டில் உள்ள படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
Jan 05, 2024 18:41 IST“கருத்து ஆழமிக்க புத்தகங்கள் கொண்டுவாங்க, பூங்கொத்தை தவிருங்கள்”: எடப்பாடி பழனிசாமி
அதிமுக அதிகாரப்பூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள அறிக்கையில், “கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் என்னை நேரில் சந்திக்கும்போது பூங்கொத்து வழங்குவதை அவசியம் தவிர்க்குமாறு எடப்பாடி பழனிசாமி அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் என்னை நேரில் சந்திக்கும்போது பூங்கொத்து வழங்குவதை அவசியம் தவிர்க்குமாறு அன்பு வேண்டுகோள் !
— AIADMK (@AIADMKOfficial) January 5, 2024
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/j0r98EDS8d -
Jan 05, 2024 18:32 ISTநெல்லை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நெல்லை, கோவை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில், “மிதமான மழை பெய்யும்” எனத் தெரிவித்துள்ளது. -
Jan 05, 2024 18:02 ISTதிட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்- தொழிற்சங்கம்
அமைச்சர் சிவசங்கர் கால அவகாசம் கேட்டுள்ள நிலையில் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம்; வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவர் அறவித்துள்ளார். -
Jan 05, 2024 17:43 ISTஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை- சிவசங்கர்
போக்குவரத்து துறை தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.7) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். -
Jan 05, 2024 17:15 ISTகேப்டனுக்கு இதயப்பூர்வ அஞ்சலி: மோடிக்கு நன்றி கூறிய பிரேமலதா
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அதில், “கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Thanking the honorable prime minister Shri. Narendra modi ji for the heartfelt tribute for the demise of our Founder - President Captain Vijayakant@narendramodi | @PMOIndia pic.twitter.com/mPDPP2u3Q8
— Vijayakant (@iVijayakant) January 5, 2024 -
Jan 05, 2024 17:08 ISTமாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை
மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட மழை வெள்ள மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். -
Jan 05, 2024 16:41 ISTகொடநாடு கொலை கொள்ளை வழக்கு - இ.பி.எஸ் தரப்பில் விளக்கம்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜனவரி 30, 31ம் தேதிகளில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பொங்கல் விடுமுறை மற்றும் சட்டப்பேரவை கூட்டத்திற்கு பிறகு ஆஜராக தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்ட மேத்யூ சாமுவேலுக்கு எதிராக ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கோரி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக விலக்கு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு செய்து இருந்தார்.
-
Jan 05, 2024 16:06 ISTசென்னையில் போயிங் நிறுவனம்
அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து சென்னையில் போயிங் நிறுவன மையம் அமைய உள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Jan 05, 2024 15:34 ISTஇ.பி.எஸ் ஆஜராக உத்தரவு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jan 05, 2024 14:39 ISTமேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜீக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
Birthday greetings to the Hon'ble Chief Minister of West Bengal and my beloved sister Selvi @MamataOfficial Didi!
— M.K.Stalin (@mkstalin) January 5, 2024
Wishing you a year of good health, happiness, and positive strides, contributing to the flourish of democracy in #INDIA.@AITCofficial pic.twitter.com/nr9E9jve2U -
Jan 05, 2024 14:21 ISTதனியார் பங்கு தாரர்களுக்கு அனுப்பிய சம்மனை செயல்படுத்தவும் தடை விதித்து உத்தரவு
தனியார் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை செயல்படுத்த தடை சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்ய கோரி தனியார் நிறுவன பங்குதாரர்கள் மனு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்துள்ள நிலையில் தனியார் பங்கு தாரர்களுக்கு அனுப்பிய சம்மனை செயல்படுத்தவும் தடை விதித்து உத்தரவு
-
Jan 05, 2024 14:01 ISTமகளிர் உரிமைத்தொகை: மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு ஜன.10ல் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு ஜன.10ல் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் - தமிழ்நாடு அரசு 11.85 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்திருந்த நிலையில் 2 லட்சம் பேருக்கு இம்மாதம் உதவித்தொகை கிடைக்கும் மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தகவல் ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் வரும் 10ஆம் தேதி 1.15 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்
-
Jan 05, 2024 13:39 ISTஅயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்கிறார் ரஜினிகாந்த்
வரும் 22ஆம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவுடன் பங்கேற்கிறார் ரஜினிகாந்த் . வரும் 21ஆம் தேதி அயோத்தி செல்லும் ரஜினி, 22ஆம் தேதி கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முடித்து கொண்டு வரும் 23 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்/ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு
-
Jan 05, 2024 13:36 IST5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்
"தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jan 05, 2024 13:36 IST5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்
"தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jan 05, 2024 13:26 ISTவிஜய் சேதுபதி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
நடிகர் விஜய் சேதுபதி, மகா காந்தி தாக்கிக் கொண்ட விவகாரத்தில், கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு; தன் மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை கோரி விஜய் சேதுபதி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது; எந்த விவகாரமாக இருந்தாலும் விசாரணை நீதிமன்றத்தின்முன் வைக்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
-
Jan 05, 2024 13:25 ISTதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்: 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ய்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ய்பு; நீலகிரி ,கோயம்புத்தூர் திருப்பூர் ,தேனி , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மற்றும் திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று(ஜன. 5) மற்றும் நாளை(ஜன. 6) கனமழை பெய்ய வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jan 05, 2024 13:25 ISTதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்: 10-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ய்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ய்பு; நீலகிரி ,கோயம்புத்தூர் திருப்பூர் ,தேனி , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மற்றும் திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று(ஜன. 5) மற்றும் நாளை(ஜன. 6) கனமழை பெய்ய வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Jan 05, 2024 13:24 ISTகொடநாடு வழக்கு: சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையிலான குழு அகமதாபாத்தில் முகாம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையிலான குழு அகமதாபாத்தில் முகாம். கனகராஜ், சயான் உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்கள், வாட்ஸ் ஆப் பரிமாற்ற விவரங்கள் அகமதாபாத்தில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 10 கால் ரெக்கார்ட் டிரைவ்களில் பதிவான தகவல்களை பெற கால தாமதம் ஆனதால் அதனை பெற அகமதாபாத் விரைந்த சிபிசிஐடி போலீசார் இந்த தகவல்கள் கிடைக்க பெற்றால் அடுத்த கட்ட விசாரணை தீவிரமடையும் என சிபிசிஐடி போலீசார் தகவல்.
-
Jan 05, 2024 12:55 ISTபோக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு அரசு மீண்டும் அழைப்பு
பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு. விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்.
வரும் 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள போக்குவரத்து ஊழியர்கள். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக அமைச்சர், செயலாளருடன் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
Jan 05, 2024 12:54 ISTதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலினின் தாயார் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார் - மனுவில் தகவல். பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரிக்கை. ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என 5 ஆண்டுகள் காத்திருந்தோம் - மனுதாரர்
-
Jan 05, 2024 12:51 ISTவிஜயகாந்த் குடும்பத்தினருக்கு சூர்யா, கார்த்தி நேரில் ஆறுதல்
விஜயகாந்த் இல்லத்திற்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி வருகை
விஜயகாந்த் படத்திற்கு மலர்தூவி மரியாதை - பிரேமலதா விஜயகாந்திற்கு நேரில் ஆறுதல்
-
Jan 05, 2024 12:46 ISTமனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரானார் தமிமுன் அன்சாரி
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தமிமுன் அன்சாரி இனி மாநில தலைவராக தொடர்வார் என அறிவிப்பு
-
Jan 05, 2024 12:46 ISTஇம்மாதம் 10-ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு இம்மாதம் 10ம் தேதியே தொகை வரவு வைக்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 கோடியே 15 லட்சம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ.1000 தொகை பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் 10-ம் தேதியே வரவு வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
Jan 05, 2024 12:42 ISTசென்னையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்- முதன்மை கல்வி அலுவலர்
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிப்பு.
4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் - சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
ஜனவரியில் 2 சனிக்கிழமைகள், பிப்ரவரியில் 2 சனிக்கிழமைகள் பள்ளி வேலை நாள் ஜன. 6, ஜன. 20, பிப். 3, பிப். 17 ஆகிய 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.
-
Jan 05, 2024 12:39 ISTபொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்: ஸ்டாலின் அறிவிப்பு
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கருப்புடன் ரூ.1000 ரொக்கப் பணம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.
-
Jan 05, 2024 12:09 ISTபோக்குவரத்துத் துறை அமைச்சருடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், செயலாளருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜன.9 முதல் வேலை நிறுத்தம் செய்ய போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்
-
Jan 05, 2024 12:06 ISTதிட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
பணியாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்ட நிலையில் திட்டவட்டம்
வரும் 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன
முறையான ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியே வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது - தொழிற்சங்கங்கள்
போக்குவரத்து துறையின் உத்தரவு எந்த வகையிலும் வேலைநிறுத்த போராட்டத்தை பாதிக்காது - தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவிப்பு
-
Jan 05, 2024 12:05 ISTஆளுநர் உத்தரவு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது - நீதிபதிகள்
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்த மேல்முறையீடு மனு மீதான விசாரண
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியே எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்
இந்த விவகாரத்தில் முதல்வர்தான் முடிவு எடுக்க வேண்டும் - நீதிபதிகள்
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார் - மனுதாரர் எம்.எல். ரவி
ஆளுநர் உத்தரவு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது - நீதிபதிகள்
-
Jan 05, 2024 11:19 ISTமேற்கு வங்கம்: இ.டி அதிகாரிகள் குழு மீது மக்கள் சரமாரி தாக்குதல்
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் நடந்த சோதனையின் போது அமலாக்கத்துறை குழு மீது சரமாரி தாக்குதல்
ரேஷன் ஊழல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாஜஹான் ஷேக் என்பவரது வீட்டில் சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்
சந்தேஷ்காலி பகுதியில் உள்ளூர் மக்களால் அமலாக்கத்துறை அதிகாரிகள் விரட்டி அடிக்கப்பட்டதால் பரபரப்பு
200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவ படை வீரர்களை சுற்றி வளைத்து தாக்குதல்
அதிகாரிகள் சிலருக்கு தலையில் பலத்த காயம் - வாகனங்கள் சேதம்
ரேஷன் ஊழல் தொடர்பாக மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த பல மாதங்களாக சோதனை நடத்தி வருகின்றனர்
-
Jan 05, 2024 11:01 ISTவிஜயகாந்த் நினைவிடத்தில் சூர்யா கண்ணீர் பேட்டி
அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது. பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
முதல்நாளிலேயே என்னை அழைத்து அவருடன் சாப்பிட வைத்தார். அவரின் தட்டில் இருந்து சாப்பாட்டை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார்
- விஜயகாந்த் நினைவிடத்தில் சூர்யா கண்ணீர் பேட்டி
-
Jan 05, 2024 11:00 IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைவு
ஒரு கிராம் தங்கம் ரூ.5,860க்கும், ஒரு சவரன் ரூ.46,880க்கும் விற்பனை
-
Jan 05, 2024 10:58 ISTவெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார் ராகுல்காந்தி
தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார் ராகுல்காந்தி
- கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்கியபின் சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
-
Jan 05, 2024 10:53 ISTபுர்ஜ் கலீஃபா எப்படி உலகின் மிக உயரமான விளம்பர பலகை ஆனது?
துபாயின் புர்ஜ் கலீஃபா வியாழக்கிழமை (ஜனவரி 5) 14 வயதை எட்டியது. உலகின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான Emaar Properties ஆல் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒரு சொகுசு ஹோட்டல், சொகுசு குடியிருப்புகள், உணவகங்கள் மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன.
-
Jan 05, 2024 10:37 ISTஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு
ஈரான் நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 84 பேரை பலி கொண்ட இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு
-
Jan 05, 2024 10:34 ISTகுற்றவாளிகள் நெல்லை மாவட்ட எல்லையில் பிடிபட்டனர்
ஈரோடு பெருந்துறை அருகே குள்ளம்பாளையத்தில் கொலை குற்றவாளியை பிடிக்கச் சென்ற நெல்லை போலீசாரை, ரவுடி கும்பல் அரிவாள் காட்டி மிரட்டியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு தப்பியோடிய குற்றவாளிகள் நெல்லை மாவட்ட எல்லையில் பிடிபட்டனர்.
நெல்லை அரசு மருத்துவமனையில் குற்றவாளிகள் அனுமதி - போலீசார் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை
கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிவசுப்ரமணி உள்ளிட்ட 5 பேரை தேடி வந்த நெல்லை போலீசார்
-
Jan 05, 2024 10:11 ISTஅரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
திருவள்ளூர் நகரில் ரூ. 51 கோடி மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
தாலுகா அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான 80 செண்ட் நிலத்தில், 20 ஆண்டுகளாக தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது
மாவட்ட வருவாய் அலுவலகர் தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது
-
Jan 05, 2024 09:40 ISTஅமைச்சர் சேகர் பாபு பேட்டி
சென்னை பூவிருந்தவல்லி அருகே கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி
-
Jan 05, 2024 09:30 ISTசுகாதாரத் துறை வேலை வாய்ப்பு
கரூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 23 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 23 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!
-
Jan 05, 2024 09:16 ISTதுப்பாக்கிச்சூட்டில் தப்பிய ரவுடி கும்பல்
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவசுப்பு உள்ளிட்ட 4 பேர், பெருந்துறை அருகே பதுங்கி இருந்த நிலையில், நெல்லை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர்
உதவி ஆய்வாளரை ஆயுதம் கொண்டு தாக்க முயற்சித்ததால், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. எனினும், இதில் இருந்து தப்பிய ரவுடி கும்பல் அங்கிருந்து ஓடினர்
-
Jan 05, 2024 09:16 ISTமேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 555 கன அடியாக அதிகரிப்பு
இன்று காலை நிலவரப்படி அணையில் நீர் மட்டம் 71.23 அடியாக உள்ளது
குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது
-
Jan 05, 2024 08:58 ISTஈரோடு அருகே ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு
ஈரோடு பெருந்துறை அருகே குள்ளம்பாளையத்தில் கொலை குற்றவாளியை பிடிக்கச் சென்ற நெல்லை போலீசாரை, ரவுடி கும்பல் அரிவாள் காட்டி மிரட்டியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்
நெல்லை களக்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஈரோட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அவர்களை பிடிப்பதற்காக சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
கொலை உட்பட 18 வழக்குகளில் தொடர்புடைய சிவசுப்ரமணி உள்ளிட்டோரை பிடிக்க துப்பாக்கிச்சூடு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.