Tamil News Today : துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

News Today :நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தை ரத்து செய்வது எதிர்க்கட்சியின் பங்களிப்பை நசுக்குவதாகும்

Tamil News Today : மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் இன்று காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனை. செப்டம்பர் 9ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வாக உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துக்கிறாஅர்.

ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் டிஎஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தை ரத்து செய்வது எதிர்க்கட்சியின் பங்களிப்பை நசுக்குவதாகும் என்று பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11.70 லட்சம் மாதிரிகளில் கொரோனா பரிசோதனை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் சுப்பிரமணியன்(70) கொரோனாவால் உயிரிழந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


21:30 (IST)03 Sep 2020

ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கி அரசு காப்பாற்றியுள்ளது – பிரதமர் மோடி பேச்சு

அமெரிக்க இந்திய உத்திகள் வகுத்தல் மட்டும் பங்கேற்றல் அமைப்பு மூன்றாவது வருடாந்திர தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா மற்றும் மழை வெள்ளத்துக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு இதுவரை இல்லாத அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரொனா பலி குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கி அரசு காப்பாற்றியுள்ளது. 2020 ஆம் ஆண்டு எப்படி அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போதை நிலை புதிய சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது” என்றுகூறினார்.

20:30 (IST)03 Sep 2020

துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

திமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனுக்கும்ம், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலுவுக்கும் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் துரைமுருகனுக்கும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் டி.ஆர். பாலுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

19:57 (IST)03 Sep 2020

நான் அரசியலுக்கு வரவேண்டும் என தந்தையின் நண்பர்கள் விருப்பம்; வசந்தகுமார் மகன் பேட்டி

மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மகன் விஜய் வசந்த், கன்னியாகுமரி அருகே மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நான் அரசியலுக்கு வரவேண்டும் என தந்தையின் நண்பர்கள் விருப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவோம். கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுவேன்” என்று அறிவித்துள்ளார்.

18:21 (IST)03 Sep 2020

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் – ஐகோர்ட் உத்தரவு

மருத்துவ மேற்படிப்பு காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஆகஸ்ட் 31-க்குள் மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை முடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தவிட்டுள்ளது. மேலும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18:08 (IST)03 Sep 2020

தமிழகத்தில் இன்று புதிதாக 5,892 பேருக்கு கொரோனா; 92 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 5,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 92 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

16:55 (IST)03 Sep 2020

எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்; சரண் வீடியோ

பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கள்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். எஸ்.பி.பி.மகன் சரண் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், “கடந்த 4 நாட்களாக எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது. அதனால், எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கள்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

15:53 (IST)03 Sep 2020

துரை முருகன் பேட்டி

திமுகவில் சாதாரண தொண்டனாக இருந்து பொதுச் செயலாளர் பதவியை அடைந்துள்ளேன். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், அன்பழகன் இருந்த பதவியில் நானும் போட்டியிடுகிறேன் என்பதே சிறப்புமிக்கது” என பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தபின் துரைமுருகன் பேட்டி. 

15:21 (IST)03 Sep 2020

அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிட கூடாது?  பொறுப்பில் இருப்பவர்களின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதில் என்ன தவறு உள்ளது? நிர்வாகிகளின் விவரங்களை கோவில் அறிவிப்பு பலகையில் ஏன் வெளியிட கூடாது? ஆகிய கேள்விகளுக்கு செப்டம்பர் 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

14:41 (IST)03 Sep 2020

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டாலும் ஒவ்வொரு துறையின் பாதிப்பும் வெவ்வேறாக உள்ளதால் பொருளாதாரத்தை வலுவிழக்கும் வகையில் முடிவெடுக்க முடியாது என, இ.எம்.ஐ.-க்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

14:19 (IST)03 Sep 2020

வானிலை மையம் அறிவிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

13:52 (IST)03 Sep 2020

மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்

தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். எதிர்காலத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

13:51 (IST)03 Sep 2020

திருப்பதி தேவஸ்தான் கணக்கை தணிக்கை செய்ய ஒப்புதல்

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. பாஜக எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், 5 ஆண்டு கால திருப்பதி கோயில் கணக்கை தலைமை கணக்கு கண்காணிப்பாளர் தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. 

13:23 (IST)03 Sep 2020

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்கும், உதவியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

13:19 (IST)03 Sep 2020

ரேஷன் கடைகளில் டோக்கன்!

சென்னையில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் டோக்கனில் இன்றைய தேதி குறிப்பிடப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் காத்திருந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.  கடந்த மாதம் முதல் இலவசங்கள் ரத்து செய்யப்பட்டதால், கட்டணம் செலுத்தி, ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கினார்கள்.

13:18 (IST)03 Sep 2020

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது!

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 325 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  வரும் ஏழாம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விருது வழங்க உத்தரவுவிடப்பட்டுள்ளது. 

13:17 (IST)03 Sep 2020

ஸ்டாலின் அறிவுருத்தல்!

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் , * 13 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து செயல்படுவது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில்  ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  

12:32 (IST)03 Sep 2020

முதல்வர் நிதியுதவி!

தமிழகத்தில் பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 27 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி  முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.  

12:28 (IST)03 Sep 2020

செமஸ்டர்கள் தேர்வுகள்!

பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் முதலாம், 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம்  என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  

12:25 (IST)03 Sep 2020

காவல் உதவி ஆணையர் உள்பட 7 பேருக்கு சிபிசிஐடி சம்மன்!

சென்னை ரவுடி சங்கரை என்கவுன்ட்டர் செய்த காவல் ஆய்வாளர் நடராஜனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. ஆய்வாளர் நடராஜன், கீழ்ப்பாக்கம் காவல் உதவி ஆணையர் உள்பட 7 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

12:24 (IST)03 Sep 2020

மெட்ரோ ரயில் சேவை!

சென்னையில் செப்டம்பர் 7 முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிப்பு. அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்; மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 

11:17 (IST)03 Sep 2020

டி.ஆர்.பாலு போட்டியிட வேட்புமனு தாக்கல்!

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு போட்டியிட வேட்புமனு தாக்கல் .  துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்காக ஆலந்தூர் திமுக எம்.எல்.ஏ அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

11:16 (IST)03 Sep 2020

வைரமுத்து கருத்து!

சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு தற்கொலை; அதை தவிர்க்க அதன் காரணங்கள் களையப்பட வேண்டும் – கவிஞர் வைரமுத்து * தற்கொலையில் தமிழகம் இரண்டாமிடம் என்பதை குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து

10:07 (IST)03 Sep 2020

சி.இ.ஓ நியமனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரயில்வே வாரியத்துக்கு முதல்முறையாக சி.இ.ஓ நியமனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது .மறுசீரமைப்பு நடவடிக்கையாக ரயில்வே வாரிய தலைவரான வி.கே.யாதவை சி.இ.ஓ வாக மத்திய அரசு நியமித்துள்ளது. 

Tamil News Today : நாடாளுமன்றத்தில், கேள்வி நேரத்தை ரத்து செய்வது, ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான எதிர்க் கட்சிகளின் பங்களிப்பை நசுக்குவதாகும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத இந்த பெருந்தொற்றுக் காலத்தின் மத்தியில், வெளிப்படையான தகவல்களை குடிமக்கள் அறிந்துகொள்ள, கேள்வி நேரம் மிக முக்கியமானது என தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். கேள்வி நேரத்தை ரத்து செய்வது என்ற முடிவினை, உடனடியாகத் திரும்பப் பெற, பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கம் செய்யப்பட்டது. பிரதமரின் ட்விட்டர் கணக்கு பாதுகாப்பானதாக மாற்றப்படும் என ட்விட்டர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க

ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், கடந்த வாரத்தில் மட்டும் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக திமுக எம்.பி கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார்.சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live dmk committee meeting corona updates indian railways modi twitter

Next Story
5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்!CMBT at Koyambedu cmbt reopen
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com