Tamil News Today gandhi jayanthi : கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.
மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை.கொரோனா காலத்தில் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வகுப்புகள் செல்லும் . ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி இல்லை என மருத்துவ கவுன்சில் கூறியதற்கு தேசிய மருத்துவ ஆணையம் விளக்கம்.
இந்தியா, சீனா இடையே லடாக் எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில், சுமூகத் தீர்வு காண, இரு நாட்டு ராணுவமும் 7 ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றன.
தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை காமராசர் . காமராசரின் 45வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி புகழாரம் . உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் . பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும். மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளையொட்டி ராகுல் காந்தி ட்வீட்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today : முக்கியத் தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் நீங்கள் காணலாம். அரசியல், சமூகம், விளையாட்டு, வானிலை உள்பட அத்தனை அப்டேட்களுடன்!
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வருகை . காமராசரின் 45வது நினைவு தினத்தையொட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.ஆண்டுதோறும் நடைபெறும் கிராமசபைக் கூட்டம், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவில்லை. இந்த நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர், அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உத்தரப் பிரதேச அதிகாரிகளை காவல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களுக்கான ‘வைபவ்’ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த உச்சி மாநாட்டில், உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் பலர் தங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை
வழங்கினர்.
உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “அணு சக்தியை அதிகரிக்க புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. பல வரலாற்று கேள்விகளுக்கு விஞ்ஞானத்தின் மூலமாக விடை கிடைத்துள்ளது. பூஜ்ஜியத்தை பற்றி பேசும் போது, உலகம் முழுவதும் இந்தியாவை பற்றி பேசும். இந்தியாவின் பண்டைய வரலாறு என்பது பல விஞ்ஞானிகளை கொண்டுள்ளது. சுயசார்பு இந்தியாவை உருவாக்க விஞ்ஞான ரீதியாக பல முயற்சிகளை செய்து வருகிறோம். விண்வெளித்துறையில் அன்மையில் பல புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலகளவில் இந்திய தூதுவர்கள், இந்தியாவின் மதிப்பை எடுத்து கூறுகின்றனர்.” என்று கூறினார்.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ஹாத்ராஸ் பாலியல் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,695 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 67 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,695 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 67 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரேமலதா விஜயகாந்தும் இன்று வீடு திரும்பினார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹத்ராஸில் தலித் பெண்ணை கூட்டு பாலியல் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அந்த குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
‘சென்னையில் அத்தியாவசிய சேவையில் இருப்போருக்கு மட்டும் அக்.5 முதல் புறநகர் ரயில் சேவை.’ அக்.5 ஆம் தேதி முதல் குறைந்த எண்ணிக்கையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தேர்தல் நேரத்தில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியேறுவதும், புதிய கட்சிகள் சேருவதும் இயல்பு எனவும் திமுகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
கட்சி எம்.எல்.ஏக்களை கட்சி அலுவலகம் வர சொல்லக்கூடியதில் விஷேசம் ஏதுமில்லை. எம்.எல்.ஏக்களை 6-ம் தேதி அவசரமாக சென்னை வரச் சொன்னதாக வெளியாகியுள்ள தகவலில் ஊர்ஜிதம் இல்லை. எனக்கே அந்த தகவல் வரவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சியில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு. சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பஞ்சாயத்து தலைவர் கந்தபாபு மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 143, 188 ஆகிய பிரிவின் கீழ் வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, நாளை முதல், கிஷான் யாத்ரா செல்ல உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் உரிமைகளுக்காக போராடும் காங்கிரஸ் கட்சியை பாஜகவால் தடுத்து நிறுத்த முடியாது என கூறியுள்ளார்.
காந்தி ஜெயந்தியான இன்று இந்திய, வெளிநாட்டு விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் தொடர்பான உச்சிமாநாட்டை இன்று மாலை 6.30 மணிக்கு காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் வளர்ந்து வரும் சவால்களை தீர்ப்பதற்கான உலகளாவிய இந்திய ஆராய்ச்சியாளரின் நிபுணத்துவத்தையும், அறிவையும் மேம்படுத்துவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.
இந்தி திணிப்பை நிறுத்துங்கள்; இல்லையெனில் இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழகம் சந்திக்கும் என மு.க.ஸ்டாலின் ட்வீட்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரைவில் குணமடைய விரும்புவதாக பிரதமர் மோடி ட்வீட். ட்ரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து எம். எல். ஏக்களும் அக்டோபர் 6ம் தேதி சென்னை வரும்படி அதிமுக தலைமை உத்தரவு. வரும் 6 ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தலைமை இந்த உத்தரவை பிற்பித்துள்ளது.
கமுதி அருகே மருதங்கநல்லூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் *. 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு
சென்னையில் உள்ள இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை சந்திப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பல சவால்கள் இருந்ததால் கிராம சபை கூட்டம் ரத்து என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்.
அயப்பாக்கம் ஊராட்சியில் டி.ஆர்.பாலு தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்து வருகிறது புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் கிராம சபை கூட்டங்களை நடத்துகின்றனர்
காஞ்சிபுரம் : கிராம சபை கூட்டத்தை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்து வயலில் இறங்கி மக்கள் போராட்டம் . உத்திரமேரூர் திமுக எம்.எல்.ஏ சுந்தர் தலைமையில் தம்மனூர் கிராம மக்கள் வயலில் இறங்கி போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு.
காமராஜர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா . டிரம்ப் ஆலோசகருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது . கொரோனா உறுதியான நிலையில் தனிமைப்படுத்தி கொண்டேன் என ட்ரம்ப் ட்வீட்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆனையூர் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் . மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்.
காமராசரால் தனி மாவட்டமாக உதயமான தருமபுரிக்கு இன்று 56வது பிறந்த நாள்.