/tamil-ie/media/media_files/uploads/2020/12/latha-rajinikanth-1.jpg)
Tamil News Today : ரஜினிகாந்த் மனைவிக்கு சொந்தமான ஆஸ்ரம் பள்ளி தொடர்பாக வாடகை பாக்கி இல்லை; நீதிமன்றம் கண்டிக்கவும் இல்லை என லதா ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
கரூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்புப் பணி குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 21வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்.
சென்னை ஐஐடி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.நேற்றுவரை 183 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் சென்னை ஐஐடியில் ராதாகிருஷ்ணன் ஆய்வு. வாடகை பாக்கி விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
விருதுநகரில் கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று.அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, ஐ.ஐ.டி இயக்குனர் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீன் பதவிகள், துணைவேந்தர் பதவிக்கு இணையானது என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் சொன்ன காரணங்களையும், உறுதியையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 2021 ஏப்ரல் வரை காலி செய்ய அவகாசம் கொடுத்திருக்கிறது. மேலும், இந்த இடத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என்றும், புதிய இடத்தில் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. அதனால், லதா ரஜினிகாந்த் எந்தவிதமான நீதிமன்ற அவமதிப்பையும் செய்யவில்லை என்றும், அப்படிச் செய்ததாக வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல, எங்கள் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே பரப்பப்படுகின்றன. மாணவர்களின் நலனை மனதில் வைத்து சரியான இடத்தைத் தேடி வருகிறோம். நீதிமன்றத்தில் நாங்கள் கொடுத்த உறுதியின்படி செயல்படுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிண்டியில் ஆஷ்ரம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தைக் காலி செய்யாத விவகாரத்தில் நீதிமன்றத்தை லதா ரஜினிகாந்த் அவமதித்து விட்டதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறோம். கரோனா நெருக்கடி காரணமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடியாத காரணத்தினாலும் உடனடியாக அந்த வளாகத்தைக் காலி செய்ய முடியாது என்றும், ஏப்ரல் 2021ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வேண்டும் என்றும் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நாங்கள் கோரியிருக்கிறோம். மேலும், வாடகை, வரி என எந்த வித பாக்கியும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மருத்துவர்கள் நாடி பிடித்து நோய்களை கண்டறிவது போல மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர் முதல்வர் பழனிசாமி. இந்தியாவின் சூப்பர் ஃபாஸ்ட் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருகிறார். முதல்வரைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் பயமல்ல; கொரோனாவுக்கும் பயம்தான்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோய் தாக்கியதற்கு விவசாய நிலத்தில் பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்தே காரணம் என்று எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடலில் ஈயம், நிக்கல் எவ்வாறு கலந்தது என்பது பற்றிய பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் திடீரென 30 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு *இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில மொழியில் தொழில்துறை சார்ந்த படிப்புகளை கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். மாநில மொழிகளில் தொழில்துறை படிப்புகளை பயில்வதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே பணிபுரிய முடியும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதனால், சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்துள்ளது. சஞ்ஜீப் பானர்ஜி தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், கட்சி அறிவிப்பு தொடர்பாக ரஜினியின் மூலம் செய்தி வந்தால் மட்டுமே, அது உண்மையான செய்தி என்று தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக ஆதரித்தது. நீட் தேர்வை தடை செய்வதற்கு அதிமுக போராடுகிறது. ஏழை மாணவர்கள் பயன்பெறுவதற்காகவே நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம். அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கி உள்ளோம். அடுத்த ஆண்டு புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கும்போது கூடுதலாக 1,650 இடங்கள் கிடைக்கும். அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் தற்போதும் தொடர்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான பிரசாரங்களை பரப்பி வருகின்றனர். புதிய வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்காது” என்று கூறினார்.
“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை; ஏழை - எளிய மக்களுக்கு உணவு வழங்கியதாக அதிமுக அரசு ரூ.312 கோடி முறைகேடு செய்துள்ளது" என்று மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார் .
பாகிஸ்தானுக்கு எதிராக 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றிபெற்றதன் ஐம்பதாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் நாடு உருவாக்கப்பட்டது. மேலும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் மிகப்பெரிய அளவில் அந்நிய நாட்டு படையினர் சரணடைந்தனர்.
"ஐஐடி கல்வி நிறுவனங்களின் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் நியமனங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும் என்றும், 'ஐஐடி நிறுவனங்களை உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்க வேண்டும்' என்றும் மத்தியக் கல்வியமைச்சகம் நியமித்துள்ள ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு அளித்திருக்கும் பரிந்துரைக்கு திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்களில், ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழிலக்கியத்தின் தலைமகன் புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலியில் ஒரு சிலை அமைக்கவேண்டும் என்பது பல தசாப்தங்களாக நீடிக்கும் கோரிக்கை. ஒரு தெருவிற்கு அவர் பெயர் வைப்பதற்கே 72 ஆண்டுகள் இவர்களுக்குத் தேவைப்பட்டது.எங்கள் ஆட்சியில் புதுமைப்பித்தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார்.
ஐ.ஐ.டி.யில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வகுப்புகளைத் தள்ளி வைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை என்பது காவிக் கொள்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய அவர், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights