News Highlights: கிணற்றில் விழுந்த யானை; நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

Tamil News : பள்ளியில் முழுமையாக பயின்ற மாணவர்களுக்கே 7.5 சதவீத இட ஒதுக்கீடு எனவும் தகவல்.

Tamil News Today indira gandhi memorial day : தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த 8 வயது பெண் யானை 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் யானையை பெல்ட் கட்டி கிரேன் மூலம் போராடி மீட்டனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்: நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை .

VPF கட்டண பிரச்சனையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவர்கள், தேர்வு செய்த கல்லூரிகளில் நாளையே சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்திருப்பதால் கலந்தாய்வில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சூரப்பா விவகாரத்தில் தமிழக அரசு விழித்துக் கொண்டது என திமுக தலைவர் ஸ்டாலின் பேசி உள்ளார். தமிழகம் மீட்போம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சருக்கு இதெல்லாம் தெரியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


21:37 (IST)19 Nov 2020

தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை உயிருடன் மீட்பு

தருமபுரி அருகே ஏழுகுண்டூர் பகுதியில் கிணற்றில் விழுந்த 8 வயது பெண் யானையை 15 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்டனர். வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் யானையை பெல்ட் கட்டி கிரேன் மூலம் போராடி
மீட்டனர்.

19:47 (IST)19 Nov 2020

மெட்ரோ ரயில் முதல்வகுப்பு பெட்டியில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி

சென்னை மெட்ரோ ரயிலில் நவம்பர் 23ம் தேதி முதல் பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்காக மெட்ரோ ரயிலில் உள்ள முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிர் மட்டுமே பயணிக்கும் பிரத்யேகப் பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. அந்த பெட்டிகளில் பெண்கள் தற்போதுள்ள சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

19:40 (IST)19 Nov 2020

தமிழகத்தில் இன்று புதிதாக 1,707 பேருக்கு கொரோனா; 19 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 1,707 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 19 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

19:37 (IST)19 Nov 2020

மாயாவதியின் தந்தை மரணம்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் தந்தை பிரபு தயாள் காலமானார். அவருக்கு வயது 95.

19:35 (IST)19 Nov 2020

காஷ்மீர் லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி

காஷ்மீர் லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் கோவில் பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி உயிரிழந்தார். உயிரிழந்த ராணுவ வீரருக்கு தமயந்த என்ற மனைவியும் 2 பெண் குழந்தைளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

17:54 (IST)19 Nov 2020

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத காவல்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்

குழந்தைகள் கடத்தல் வழக்குகளை முறையாக விசாரிக்காத தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் கடத்தல் வழக்கில் சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “சிறார் நீதி சட்ட விதிகளை பின்பற்றாமல் செயல்படும் சிறார் காப்பகங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மாநில குழந்தைகள் நல ஆணையத்தில் ஒருவர் கூட பதவியில் இல்லாதது ஏன்?

டிராபிக் சிக்னல்களில் ஏராளமான குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து வட மாநில பெண்கள் பிச்சை எடுப்பதை ஏன் தடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினர்.

16:49 (IST)19 Nov 2020

திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி; ஐசியுவில் சிகிச்சை

நெல்லை ஆலங்குலம் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பூங்கோதை ஆலடி அருணா சுயநினைவு இல்லாத நிலையில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15:07 (IST)19 Nov 2020

தடுப்பு மருந்து அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்

கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்து அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கைதெரிவித்துள்ளார்.

15:01 (IST)19 Nov 2020

கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் இந்தியாவின் Leon Luke mendonca பட்டம் வென்றார்

ஹங்கேரியில் நடைபெற்ற கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் இந்தியாவின் Leon Luke mendonca பட்டம் வென்றார். 

15:00 (IST)19 Nov 2020

டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 2000 அபராதம்- அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.  

முன்னதாக, டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நோய் தொற்று பாதிப்பு, தடுப்புப் பணிகள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

14:19 (IST)19 Nov 2020

பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திரமோடி பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டை, காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

14:12 (IST)19 Nov 2020

தமிழகத்தில் சிதிலமடைந்த கோயில்கள் – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் சிதிலமடைந்த கோயில்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14:11 (IST)19 Nov 2020

1,838 அயல்நாட்டு மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

உதகமண்டலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க ஏதுவாக வனப்பகுதியில் அமைந்துள்ள 1,838 அயல்நாட்டு மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தில் கல்லூரி அமைவதை எதிர்த்து அந்நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் மற்றும் வனத்துறைக்கான வழக்கறிஞர் வெட்டப்படவுள்ள மரங்களில் 90 சதவீதம் தைல மரங்கள் என்று கூறினர். மரங்களை வெட்ட மத்திய வனத்துறையினரிடமும் தமிழக அரசிடமும் ஒப்புதல் பெற்றுள்ளதாக தெரிவித்ததை அடுத்து அதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

14:09 (IST)19 Nov 2020

உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்

நாட்டிலேயே உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது என்று முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

13:08 (IST)19 Nov 2020

மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

வாக்காளர் பட்டியல் தில்லு முல்லுகள் இருக்கிறதா என்பதை கவனமாக பாருங்கள் , திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

12:55 (IST)19 Nov 2020

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு . சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் “மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்” என அறிவிப்பு. 

11:56 (IST)19 Nov 2020

வனவாசியில் அரசு விழா!

சேலம் அருகே வனவாசியில் அரசு விழா.  புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. முடிவுற்ற பணிகள் திறந்து வைப்பு , புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் .  ரூ.292 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்

11:53 (IST)19 Nov 2020

தேனி மஞ்சலாறு அணை திறப்பு!

தொடர் கனம்ழையால் தேனி மஞ்சலாறு அணை திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

11:27 (IST)19 Nov 2020

5 பேர் கொண்ட குழு!

மருத்துவ கலந்தாய்வில் இருப்பிடச் சான்றிதழை சரிபார்க்க 5 பேர் கொண்ட குழு அமைத்து மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

10:59 (IST)19 Nov 2020

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாராம்!

உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் .  சுமார் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உதயநிதி ஸ்டாலின் முடிவு .மறைந்த கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் நாளை பிரசாரம் தொடக்கம்

10:05 (IST)19 Nov 2020

பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருச்செந்தூர் கோயிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை .  கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளையும், திருக்கல்யாணம் நாளை மறுநாளும் நடக்கிறது. 

10:02 (IST)19 Nov 2020

சதாப்தி ரயில் சேவை!

பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சேவை நவ.30ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது . செவ்வாய்க்கிழமையை தவிர வாரம் 6 நாள்களும் இயங்கி வந்த சதாப்தி ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு

10:02 (IST)19 Nov 2020

மருத்துவ கலந்தாய்வு!

மருத்துவப் படிப்புகளுக்கான 2ஆம் நாள் கலந்தாய்வு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது

09:07 (IST)19 Nov 2020

அரவிந்தன் ஐ.பி.எஸ் ட்வீட்!

புதிதாக காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள #FacialRecognition ஆப் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக   திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் ஐ.பி.எஸ் ட்வீட்

Tamil News Today : லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சமடைய தேவையில்லை. டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி டி.என் மனோகரன் தகவல்

நேற்றைய முக்கிய செய்திகள்

7 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியை 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் அனுமதிக்க முடியாது. மாணவியின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.அரசு பள்ளியில் முழுமையாக பயின்ற மாணவர்களுக்கே 7.5 சதவீத இட ஒதுக்கீடு எனவும் தகவல்.

கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் திட்டமிட்டப்படி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்!” – தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live indira gandhi memorial day amitsha chennai cm edappadi mk stalin tamil news

Next Story
ரஷ்ய தமிழ் அறிஞர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி திடீர் மரணம்Professor Alexander Dubiansky
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express