Live Now Live Now

News Highlights: தமிழ்நாடு முழுவதும் அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது

Tamil News Today : சென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.92.90-க்கும், டீசல் ரூ.86.31-க்கும் விற்பனை

By: Feb 25, 2021, 7:50:23 AM

Tamil News Today : 4-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் தொடங்கினர்.

 

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த தினம் இன்று. இந்த ஆண்டு முதல் அரசு விழாவாகவும் கொண்டாடுப்படுகிறது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று இறுதி செய்கிறது தேர்தல் ஆணையம். டெல்லியில் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின்பு தேதி அறிவிக்கப்படும்.

கொரோனா வைரஸின் 2வது அலை எதிரொலியாக வளைகுடா நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று காலையில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூா், மலேசியா நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் அந்தந்த நாடுகளில் எடுத்த கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மருத்துவ சான்றிதழை காட்டிவிட்டு செல்லலாம்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசிதழில் செய்தி வெளியீடு. குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு என தகவல்

Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
22:37 (IST)24 Feb 2021
அகமதாபாத் டெஸ்ட்: இங்கிலாந்து 112-க்கு ஆல் அவுட்; இந்தியா 99/3

அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் சர்மா 57 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் நிற்கிறார்கள்.

சுப்மான் கில் (11 ரன்கள்), புஜாரா (0 ரன்), கோலி (27 ரன்) ஆகியோர் அவுட் ஆனார்கள். ஜாக் லீச் பந்தில் புஜாரா, கோலி ஆகியோர் முறையே எல்.பி.டபிள்யு, போல்ட் முறையில் வீழ்ந்தனர். கில், ஆர்ச்சர் பந்தில் கேட்ச் ஆனார். முன்னதாக பேட் செய்த இங்கிலாந்து 112 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 7 விக்கெட் கைவசம் வைத்திருக்கும் நிலையில் 13 ரன்களே பின் தங்கியிருக்கிறது. வியாழக்கிழமை 2-ம் நாள் ஆட்டம் நடைபெறும்.

21:07 (IST)24 Feb 2021
அனைத்து பஸ்களும் இயங்கும்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அரசு பஸ் ஊழியர்கள் புதன்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருக்கும் நிலையில் அனைத்து அரசு பஸ்களும் இயங்கும் என அறிவித்திருக்கிறார் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். பொதுமக்களுக்கு சிரமம் இன்றி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

18:56 (IST)24 Feb 2021
இன்று நள்ளிரவு முதல் பஸ் ஸ்டிரைக்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டன. 95% தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறினர். வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

18:47 (IST)24 Feb 2021
112 ரன்களில் இங்கிலாந்து ஆல்- அவுட்

அகமதாபாத்தில் இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் இந்திய ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய தரப்பில் அக்ஸர் பட்டேல் 6 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் எடுத்தனர். உள்ளூர் வீரர் பும்ராவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இங்கிலாந்து தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் கிராவ்லி மட்டுமே குறிப்பிடும்படி விளையாடி, 53 ரன்கள் எடுத்தார்.

17:17 (IST)24 Feb 2021
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார்; விசாரிக்க குழு அமைத்தது தமிழக அரசு

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க, விசாகா கமிட்டி குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

17:14 (IST)24 Feb 2021
போக்குவரத்து பணியாளர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை 

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நாளைமுதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து பணியாளர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசுபோக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

16:54 (IST)24 Feb 2021
சசிகலாவுடன், சரத்குமார் மரியாதை நிமித்தமான சந்திப்பு

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சசிகலாவை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சமக அறிக்கை வெளியிட்டுள்ளது.

16:11 (IST)24 Feb 2021
சசிகலா அறிக்கையில் அதிமுக கொடி, பொதுச்செயலாளர் என இடம்பெற்றதால் சர்ச்சை

சசிகலா வெளியிட்ட அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் என்றும் அதிமுக கொடியும் இடம்பெற்றுள்ளது சர்ச்சை எழுந்துள்ளது.

14:59 (IST)24 Feb 2021
புதுச்சேரி அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை - துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு


புதுச்சேரியில் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார் 

14:50 (IST)24 Feb 2021
"ஏப்.15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும்" - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவு


"ஏப்.15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும்" என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

14:32 (IST)24 Feb 2021
அகமதாபாத் டெஸ்ட் போட்டி - டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பகல் - இரவாக நடக்கும் இந்த டெஸ்ட் போட்டியில்  பிங்க் நிற பந்தை இந்தியா வீசுகிறது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணி விபரம் - ரோஹித் சர்மா, சுபம் கில், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், சுந்தர், அஷ்வின், அக்‌ஷர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா

14:14 (IST)24 Feb 2021
திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி


மேற்கு வங்க  முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார். எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 

13:59 (IST)24 Feb 2021
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாராயணசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து அமைச்சரவை ராஜினாமா கடிதம் துணை நிலை ஆளுனர் தமிழிசையிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

13:35 (IST)24 Feb 2021
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு மோடி பெயர் வைக்கப்பட்டிருக்கிறது

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா மைதானத்தில் தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான இதன் பெயரை நரேந்திர மோடி மைதானம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

13:14 (IST)24 Feb 2021
முரண்பாடுகளுக்கும் எதிராக வெல்லும் உறுதியும் கொண்ட பெண் - குஷ்பு ட்வீட்

"தைரியம், விடாமுயற்சி, தைரியம், பொறுமை மற்றும் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக வெல்லும் உறுதியும் கொண்ட ஒரு பெண். அவருக்கு இன்று 73 வயதாக இருந்திருக்கும். ஒரு ஆணால் கூட கனவு காண முடியாததை அடையக்கூடிய ஒரு பெண்" என்று ஜெயலலிதாவை பற்றி ட்வீட் செய்திருக்கிறார் குஷ்பு சுந்தர்.

12:43 (IST)24 Feb 2021
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழிசை புகழாரம்

மக்கள் பணியில் இனிமையான கரும்பாக இருந்தவர், அரசியல் சவால்களை எதிர்கொள்வதில் உறுதியான இரும்பாக இருந்தவர் ஜெயலலிதா என தமிழிசை செளந்தரராஜன், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கூறியுள்ளார்.

12:24 (IST)24 Feb 2021
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு கமல் ட்வீட்

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று துவங்குவதை முன்னிட்டு ட்வீட் செய்திருக்கிறார் கமல்ஹாசன்.

12:21 (IST)24 Feb 2021
உடன்பிறவா சகோதரியை பார்த்து உடல் நலம் விசாரித்தோம்- ராதிகா சரத்குமார்

சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா மற்றும் சரத்குமார் சசிகலாவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தோம் என்றும் உடன்பிறவா சகோதரியை பார்த்து உடல் நலம் விசாரித்தோம் என்றும் தெரிவித்தனர்.

11:39 (IST)24 Feb 2021
பிரதமர் மோடி ட்வீட்!

ஜெயலலிதாவை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 

நலிந்த மக்களுக்காவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடனான சந்திப்பு என்றுமே நினைவிற்கு கூறியது எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

11:35 (IST)24 Feb 2021
கனிமொழி ட்வீட்

அதிமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

11:33 (IST)24 Feb 2021
73 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாட்டம்!

ஜெயலலிதா 73ஆவது பிறந்தநாளையொட்டி, 73 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுடன் உற்சாக கொண்டாட்டம். 

11:19 (IST)24 Feb 2021
துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கடிதம்!

புதுச்சேரி அரசியல் சூழல் குறித்து உள்துறை அமைச்சருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கடிதம்  எழுதியுள்ளார். நாராயணசாமி முதல்வர் பதவியை ராஜினமா செய்ததையடுத்து, புதுச்சேரி அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக காணப்படுகிறது. 

11:15 (IST)24 Feb 2021
டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி பேரணி!

வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் 4 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்துவோம் என்று பஞ்சாபில் போராடும் விவசாயிகள் சங்க தலைவர்  ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். 

11:08 (IST)24 Feb 2021
சசிகலா பேட்டி!

சென்னை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்திய பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது” ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்; விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளேன்” என கூறினார். 

10:38 (IST)24 Feb 2021
ஈபிஎஸ் - ஓபிஎஸ் விருப்பமனு!

சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும்; போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் மீண்டும் போட்டியிட இன்று விருப்பமனு அளிக்கின்றனர் 

10:14 (IST)24 Feb 2021
ஜெயலலிதாவுக்கு மரியாதை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

09:42 (IST)24 Feb 2021
இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ந!

வரும் 25, 26, 27ம் தேதிகளில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். 

09:41 (IST)24 Feb 2021
கருணாநிதிக்கு சிலை!

மதுரை சிம்மக்கல் பகுதியில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வருகிறது. 

09:40 (IST)24 Feb 2021
இடஒதுக்கீடு கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

பட்டப்படிப்பை மட்டும் தமிழில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது; தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. 

Tamil News Today : தலைமைச் செயலகத்தில் ஓமந்தூரார், சுப்புராயன், வ.உ.சி உருவ படங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

நேற்றைய செய்திகள்

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட இளம் சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ரூ.1 லட்சம் பிணை தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

அமமுக செயற்குழு கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவிப்பு

Web Title:Tamil news today live jayalalitha birthday admk vk sasikala merina election smk stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X