Tamil News Today: தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
காலை 11 மணியளவில் இக்கூட்டம் கூடுகிறது. இதில் துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் உள்ளிட்ட உறுப்பினர்களும் இடம் பெறுகின்றனர்.
சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி அசோக்குமார் தூக்கு போட்டு தற்கொலை. ஜாமின் கிடைக்காத விரக்தியில் கைதி தற்கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை திறந்து வைக்கிறார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக, புதிய அம்சங்களுடனும், நவீன வசதிகளுடனும் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா ஸ்டேடியம் தயார்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.92.90-க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.86.31-க்கு விற்பனை
குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் எஸ்ஆர்-எஸ்ஏஎம் ஏவுகணை சோதனை வெற்றி. இந்திய கடற்படைக்கான உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணை ஒடிசா கடற்கரையில் சோதிக்கப்பட்டது
Tamil News Today : பாகிஸ்தானில் இருந்து இலங்கை செல்வதற்கு இந்திய வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி என தகவல்
சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு, அரசு சார்பில் நிலம் வாங்கி, இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
Web Title:Tamil news today live tn budget 2021 cm ops cm edappadi petrol price dmk mk stalin tamil news
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையை தெடங்கியபோது, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் முதல்வர் ஆன பின் மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் என்று திமுகவினர் சபதம் எடுத்து்ளளனர்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்திற்குரியது. உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்து, அதிமுக அரசு இரட்டை வேடமிடுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"தேமுதிகவுடன் பாமகவிற்கு எந்த கருத்து முரண்பாடுகளும் இல்லை"என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்
தமிழக அரசின் கடன் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, பணி ஓய்வு பணப் பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்-25 ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு குறித்து பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படததால் வேலை நிறுத்தம் செய்யப்பபோவதாக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டூல் கிட் வழக்கில் திஷா ரவிக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு இரு நபர் உத்தரவாதத்துடன் தலா ரூ.1 லட்சம் செலுத்த உத்தரவிட்டுள்ளது . சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.
பட்ட படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறி தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டினை பழைய முறைப்படி தொடர கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
2016 - 17-ம் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2.75 லட்சமாக இருந்த கடன், தற்போது 5.70 லட்சமாக உள்ளது. தமிழக அரசின் கடன் சுமையை அதிகரித்ததே எடப்பாடி அரசின் சாதனையாக உள்ளது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுவின் கட்டணத்தை தேசிய தேர்வு ஆணையம் உயர்த்தியுள்ளது
"தமிழக அரசின் கடன் சுமை ஒரே ஆண்டில் ரூ.1.7 லட்சம் கோடி அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது" என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பண்டிகை கால சிறப்பு ரயிகள் என்ற பெயரில் மறைமுகமாக ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில் கட்டணத்தை உயர்த்துவது மக்களை வஞ்சிக்கும் செயல் என்று கூறி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
டாஸ்மாக் மூலம் 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இடைத்துள்ளதாக நிதித்துறை செயலர் கிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளன என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
"கடன் வாங்குவதில் ஜிடிபி மற்றும் 15ஆவது நிதிக்குழு அளித்த வரம்பை தமிழகம் மீறவில்லை. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.02%ஆக இருக்கும். அதோடு தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது" என்று நிதித்துறை செயலர் கிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.
பிப்.25 முதல் பிப்.27 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது அமளியில் ஈடுபட்ட திமுக கட்சியினர், பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தமிழக தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும்போது மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் என்று கூறியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராதாபுரம் தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை விபரங்களை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணை மார்ச் 16க்கு ஒத்திவைத்து உள்ளது.
"சென்னை மாநகராட்சிக்காக தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சி திட்டங்கள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. ரூ.3,140 கோடி மதிப்பீட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ரூ.144.33 கோடி நிதியில் 2,749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
3,016 கோடி செலவில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் கூறியுள்ளார்.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
'நிர்ணயித்த இலக்கிற்கு முன்னதாகவே, சாலை மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. சாலை மேம்பாட்டு திட்டத்தின் 2ஆம் கட்ட பணி ரூ.5,171 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது' என்று பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மேற்கூரை அமைப்பதற்கான மானியம் ரூ.70,000 ஆக உயர்வு துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
"தமிழக வரலாற்றில் கடன் வாங்கி கடனுக்கு வட்டி கட்டும் ஒரே அரசு அதிமுக அரசுதான்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வீட்டு வசதி துறைக்கு நிதியுதவியாக உலக வங்கியிடம் இருந்து, சுமார் 1,492 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு என துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகளுடன் மருத்துவ காப்பீடு திட்டத்தை நீடிக்க முடிவு செய்துள்ளதாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பலவ்வேறு நிதிகளை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை என சட்டமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் நலனுக்கு ரூ.229.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இடைக்கால பட்ஜெட் உரையில் துணைமுதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அறிவித்துள்ளார்.
திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடியில் தங்கம் வழங்கப்பட்டுள்ளது எனவும் திருமண உதவித் திட்டத்தில் ரூ.4,371 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அறிவித்துள்ளார்.
காவல்துறையை நவீனமயப்படுத்தும் வகையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைக்க மத்திய அரசுக்கு பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.
பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். 15-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வருகின்றன.
இதுக்குறித்த முழு செய்திகள் இங்கே
தமிழக அரசு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் உள்ளிட்ட ஊதியங்களை உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஊதிய மறு சீரமைப்புக் குழுவின் பரிந்துரையின்படி நியாய விலைக்கடை புதிய ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.5.000லிருந்து ரூ.6,250 ஆகவும், அதேபோல கட்டுநர்களுக்கு ரூ.4,250லிருந்து ரூ.5,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ள
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை சுகாதாரத் துறையில் பணிபுரியும் தற்காலிக ஆய்வக பணியாளர்கள் முற்றுகை.. பணி நிரந்தம் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம்.
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்; சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமமுக தொண்டர்களுக்கு தினகரன் மடல் அனுப்பியுள்ளார். திமுகவை தலையெடுக்கவிடாமல் செய்து, தமிழகத்திற்கு புதிய விடியலை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.