Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
சீமான் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி
சீமான் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி வாபஸ் வாங்கினார். சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அப்போது, “புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, தனி ஒருவராக போராட முடியவில்லை" என விஜயலட்சுமி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சனாதனம் சமத்துவம் சமூக நீதிக்கு எதிரானது: துரை வைகோ
சனாதன தர்மம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இது குறித்து அவர், “முகலாயர்கள், பிரிட்டிஷ்காரர்களால் அழிக்க முடியாததை திராவிட அரசியல் செய்து காட்டியது.
சமத்துவம், சமூக நீதிக்கு எதிரான சனாதன தர்மத்தை வேறோடு அகற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர் காலில் விழுந்த அமைச்சர்
புதுக்கோட்டை திமுக மாவட்ட செயலாளர் காலில் அமைச்சர் ரகுபதி விழுந்துார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகிவருகின்றன.
மெட்ரோ ரயில் திட்ட நிலத்தை தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி காலி செய்ய ஐகோர்ட் உத்தரவு
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி காலி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூகநீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள் மக்கள் விருப்பத்தை மதிக்க வேண்டும்; வீடில்லா ஏழை மக்களுக்கு வழங்கும் நத்தம் நிலத்தை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீங்கள் ஏன் பா.ஜ.க.வில் இணையக்கூடாது? செந்தில் பாலாஜியிடம் கேட்ட இ.டி - கபில் சிபல் வாதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில், “நீங்கள் ஏன் பா.ஜ.க.வில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டது” என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் பரபரப்பு வாதிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா? இல்லையா என்பதை விசாரணை அமைப்பு தான் நிரூபிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டுள்ளார். செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது 20ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 6வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு: 20ஆம் தேதி தீர்ப்பு - நீதிபதி அல்லி உத்தரவு
ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது வரும் 20ம் தேதி தீர்ப்பு என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
ரொம்ப சீரியஸான ஆளு: சீமான் பேச்சு
"2 லட்சுமி வெடியை வைத்து பெரிய மலையை தகர்க்க பார்க்கிறார்கள். இப்போது அழைப்பாணை வழங்கும் காவல்துறை 13 ஆண்டுகளாக என்ன செய்தது?. நான் யார் என்று தெரியுமா? எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது.
சிரிக்க சிரிக்க பேசுபவன் என்று நினைக்க வேண்டாம்... ரொம்ப சீரியஸான ஆளு. ஒரு லட்சம் துப்பாக்கிகளை கடந்து சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்து வந்தவன் நான். என்னிடம் தனலட்சுமியும் தான்யலட்சுமியும் தான் இல்லை. முடிந்தால் 10 பேரை அனுப்பி வையுங்கள். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது - எனக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது" என்று சீமான் கூறியுள்ளார்.
தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து விஏஒ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவருக்கு ஆயுள் சிறை மற்றும் 3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்வம் உத்தரவு பிறப்பித்தார்.
வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பயனாளிகளுக்கு ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரி இளம் பகவத் ஐ.ஏ.எஸ் தெரிவித்துளளார்.
1.06 பயனாளிகளுக்கும் இந்த மாதத்திற்கான தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது. வங்கிகள் மற்றும் ஏடிஎம்களை பயன்படுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
திருச்சியில் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழப்பு
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்தார். திருவானைக்காவலை சேர்ந்த கனகவள்ளி (38) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே தமிழக அரசு அடுத்த நடவடிக்கை எடுக்கும்
காவிரி நதி நீர் ஆணையம் கூறியும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை - அமைச்சர் துரைமுருகன்கர்நாடக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதால் எந்த அழுத்தமும் ஏற்படாது. காவிரி பிரச்னை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 21ல் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே தமிழக அரசு அடுத்த நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் துரைமுருகன்
சனாதன சர்ச்சை ரிட் மனு தாக்கல்
" "சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது. அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க கோரி ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல். சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு கோரப்பட்டுள்ளது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, சிலவற்றை எதிர்க்க முடியாது, ஒழித்துதான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார். சனாதன மாநாட்டில் உதயநிதி பேசியது நாடு முழுவதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது – மனு.
ஒன்றியமே திரும்பிப் பார்க்கும் திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளது: உதயநிதி
அண்ணா சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
சென்னை, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை. பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்- தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சிபுரத்தில், மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை வழங்கினார்
ICC ODI தரவரிசை பட்டியல்
ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார். பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் முதலித்தில் தொடர்கிறார்.
தமிழகத்தில் முதல்முறை
தமிழகத்தில் முதன்முறையாக மூன்று பெண்களுக்கு- கோவில் அர்ச்சகர்களாக தமிழக அரசு பயிற்சி அளித்துள்ளது.
எஸ். ரம்யா, எஸ். கிருஷ்ணவேணி, என். ரஞ்சிதா ஆகியோர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலுடன் தொடர்புடைய அர்ச்சகர் பயிர்ச்சி பள்ளியில் பயிற்சி பெற்றனர்.
முழுச் செய்தியும் படிக்க: கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்
திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் பொறிக்கப்படும் - கவிஞர் வைரமுத்து
பேரறிஞர் அண்ணாவின்
— வைரமுத்து (@Vairamuthu) September 15, 2023
பிறந்த நாளில்
பிறந்த மண்ணில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடங்கி வைக்கும்
கலைஞர் மகளிர்
உரிமைத் தொகைத் திட்டம்
தாய்க்குலத்தின்
சுதந்திரத்திற்கும்
சுயமரியாதைக்கும்
பக்கபலமிருந்து
தக்கபயன் நல்குவதாகும்
திராவிட இயக்க வரலாற்றில்
இந்த நாள்
குறிக்கப்படுவது மட்டுமல்ல… pic.twitter.com/NWby8WqVpW
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாதுரையின் பிறந்த நாளான இன்று (செப். 15), அவர் பிறந்த இடமான காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.
அட்டைகள் அனைவரையும் சென்றடையும் முன், உடனடியாக பணம் எடுப்பதற்கு வசதியாக பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.
தொடர் விடுமுறை: மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
திங்கள்கிழமை (செப்.18) விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று 15.09.2023 மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இலங்கை அணி, ஞாயிற்றுக் கிழமை இந்திய அணியை எதிர்கொள்கிறது!
மைக் வெடித்து சிறுமி காயம்
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த சீனா மைக் சிறுமி காயம் கேரள மாநிலம் பாலக்காடு அருகே பாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியின் கையில் இருந்த சீனா மைக் வெடித்ததால் பரபரப்பு
இயக்குநர் பி.வாசுவின் 69வது பிறந்தநாள்
இயக்குநர் பி.வாசுவின் 69வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சந்திரமுகி-2 படக்குழு! உதவி இயக்குனர்களுக்கு ₹1 லட்சம் மதிப்பிலான லேப்டாப்களை பரிசாக வழங்கினார் இயக்குநர் பி. வாசு
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துகிறது தெலங்கானா அரசு
வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் 1-10 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியீடு. சமீபத்தில் அம்மாநில அதிகாரிகள் சென்னை வந்து இத்திட்டத்தை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இடியுடன் கனமழை
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான சந்தைப்பேட்டை, மணலூர் பேட்டை, பகண்டை கூட்டுச்சாலை, ஆலூர், ஆவியூர், சைலோம், வடக்குநெம்பிலி, சுந்தரேச புரம், குன்னத்தூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த காற்று இடியுடன் கனமழை!
டிஎன்பிஎஸ்சி நேர்காணல் - புதிய நடைமுறை
விண்ணப்பதாரரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் மறைக்கப்படும் ஏ.பி.சி.டி என கோட் செய்து, நேர்முக அறைக்குள் அனுமதி என புதிய நடைமுறை. நேர்காணலில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.