Tamil News Today : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகிய மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சல பிரதேசம் மாநிலமாக உதயமான நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலாசாரம், நாட்டின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பில் அருணாச்சல பிரதேச மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் பாராட்டு.
நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.காணொலி காட்சி வாயிலாக, காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியில் இருந்து விலகியதற்கு, பாஜக காரணம் அல்ல முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இல்லாததன் காரணமாக விலகினரே தவிர, பாஜக எதையும் செய்யவில்லை என்றார்.
மஜூலி ஆற்றிடை தீவுக்கு பாலம் அமைக்க அடிகல் நாட்டிய பிரதமர் மோடிக்கு அப்பகுதி மக்கள் விளக்கு ஏற்றி நன்றி தெரிவித்தனர்.
Tamil News Today : புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் வரும், திங்கட் கிழமை காலை 10 மணிக்கு கூடுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவிட்ட நிலையில் சிறப்பு கூட்டம் கூடுகிறது.
மதுரையில் ரத யாத்திரை அனுமதி வழங்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு. 100 வார்டுகளிலும் நிபந்தனைகளுடன் அனுமதி
வழங்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
Web Title:Tamil news today live madurai kamaraj university china video petrol price kalaimamani awards list tamil
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இடம்பெறாத தமிழக வீரர் டி.நடராஜன் இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
கோயில் நிலங்களை பயன்படுத்துவோருக்கு கிரையமாக கொடுங்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 7,000 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது என கூறியுள்ள சத்யபிரதா சாகு தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிகள் எப்போதும் சிறப்பாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மாற்றம்... கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக பாஜக பிரமுகர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. எம்பிபிஎஸ் படிப்பிற்கு 13 ஆயிரத்து 610 ரூபாய் கட்டணமாக நிர்ணயம். மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அரசு கட்டணம் நிர்ணயம்
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில், தேர்வான கலைஞர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்
நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்
ஓசூர்: மினி கிளினிக் திறப்புவிழா - கேபி முனுசாமிக்காக 3 மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணிகள்
பொதுத்தொகுதியில் விருப்பமனு கட்டணமாக ₨10,000, தனித்தொகுதி மற்றும் பெண்களுக்கு ₨5,000 நிர்ணயம்
தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட, வரும் 23ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் வரும் 26-ஆம் தேதி வரை விருப்பமனு தாக்கல் செய்யலாம்
கட்சி முடிவு செய்தால் தேர்தலில் போட்டியிட தயார் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் "ஒப்புகை சீட்டு எண்ண பரிசீலிக்க முடியாது" என உயர்நீதிமன்றம் அறிவுரை தெரிவித்துள்ளர்.
"அதிமுக அரசு வெற்றி பாதையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து திசை திருப்பும் செயலுக்கு செவி சாய்க்க தயாராக இல்லை; ஓபிஎஸ் என்றுமே நல்லவர்களுடன் தான் இருப்பார்" என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
திருச்சி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசியின் 2வது முறையாக தடுப்பூசி டோஸை செலுத்திக்கொண்டார்
"பெட்ரோல் விலை என்பது மிகப்பெரிய பிரச்சனை, எந்த பதில் கூறினாலும் யாரையும் திருப்தி படுத்த முடியாது. விலை குறைவை தவிர மக்கள் வேற எந்த பதிலும் ஏற்க மாட்ட்டார்கள்" என்று நிதியமைச்சர் நிர்மலசீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளது. அதோடு காணாமல் போன 142 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்ததோடு, லதா- ரஜினி தம்பதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திருமண நாள் வாழ்த்து தெரிவித்தாகவும், இந்த சந்திப்பின் போது, அரசியல் பேசப்படவில்லை எனவும் ரஜினி தரப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பு மேற்கொண்டதையடுத்து, தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்பு மேற்கொண்டதையடுத்து, தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
விஜய்ஹசரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில், மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஜார்க்கண்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் 94 பந்துகளில் 19 பவுண்டரிகளையும் 11 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு 173 எடுத்துள்ளார். இதனால் அந்த அணி 50 ஓவர்களில் 422 ரன்களைச் சேர்த்துள்ளது.
போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டில் நடிகர் ரஜினியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு நடத்தி வருகிறார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ள நிலையில், இந்த சந்திப்பில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளது.
எதிர் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வதற்காக, பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டுள்ளது என திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள புகலூரில் இருந்து கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மடக்கத்தரா வரை 165 கி.மீ நீளத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுத்த உள்ளது. 5 ஆயிரத்து 70 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும், இந்த மின்சார விநியோகத் திட்டம் சுமார் 2,000 மெகா வாட் மின்சாரத்தை தங்கு தடையின்றி எடுத்துவரும் திறன் கொண்டதாக உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூரில் தர்ணாவில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்கும் கலையரசன் குழு கடந்த 11 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் கலையரசன் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட்டது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வரும் 23ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். .
தென்காசி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் குற்றால பெயின் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது, நீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது..
அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய தேடல் குழு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் தேடல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி அயோக்கின் 6 ஆவது நிர்வாக கூட்டத்தில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பங்கேற்கவில்லை. காணொலி மூலம் நடைபெற்று வரும் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்பு
சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 2 கி.மீ முதல் 5 கி.மீ வரை கட்டணம் ரூ.20 5-12 கி.மீ வரை கட்டணம் ரூ.30 என அறிவிப்பு.
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு வரும் பிப்.21-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
நாசா’வின் பெர்சீவரன்ஸ் ரோவர் செவ்வாய் கோளில் தரையிறங்கிய புகைப்படம் மற்றும் செவ்வாய் கோளின் மேற்பரப்பின் வண்ணபுகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில் 100 கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததாக பாஜக இளைஞரணியைச் சேர்ந்த நடிகை பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை எதிரொலியாக, வரும் 25ஆம் தேதி துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை தர உள்ளனர். விரைவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி வெளியாக உள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.