Tamil News : டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு காவல் துறை சிறப்பு பிரிவினர் குவிப்பு. நேற்று நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும் .மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் பதிவு.
புதிய நியமன எம்.எல்.ஏ.வாக பாஜகவின் மாநில துணைத்தலைவராக உள்ள விக்ரமனை நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
காந்தி நினைவு தினம் . மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி வரும் இந்தியாவுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் பாராட்டு
நாளை நடைபெற இருக்கும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Tamil News Today : ரூ.52,257 கோடிக்கு புதிய முதலீடுகள் - தமிழக அமைச்சரவை ஒப்புதல்.தமிழ்நாடு தொழில் கொள்கை 2021" வெளியிடவும் அனுமதிமுதலீட்டு திட்டங்கள் மூலம் 93,935 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தகவல்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார் .பொருள்செயல்வகை அதிகாரத்தில் உள்ள 753-வது குறள் இடம் பெற்றுள்ளது
Web Title:Tamil news today live mk alagiri birthday jp natta madurai israel embassy gandhi polio drops tamil
இன்று மதுரை வந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவை ஆர்.பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜு சந்தித்து பேசினர்.
முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார்.
இன்று மட்டும் 3 அதிமுக அமைச்சர்கள் ஜே.பி நட்டாவை சந்தித்துள்ளனர். ஆனால், விஜயபாஸ்கர் தனியாகவும், மற்ற 2 அமைச்சர்கள் தனியாகவும் சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் ஆக்கிரமிப்பு, வாழிடக் குறைப்பு, உணவின்மை, வேட்டை போன்ற காரணங்களால் பலி ஆகியிருக்கின்றன. கோயில்யானைக்கான அக்கறையைக் காட்டுயானைக்குக் காட்டக்கூடாதா? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாமக நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளாக ஆஜராகாததை முன்னிட்டு இயக்குனர் சங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாகப் பிடிவரண்ட் பிறப்பித்தது.
வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட எந்தவொரு பிரச்சினை குறித்தும் திறந்த மனதுடன் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், 5,72,060 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 72.46 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், 3வது இடத்தில் ராஜஸ்தானும் உள்ளன.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.71 லட்சமாக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.60 சதவீதம்.
பழனி சென்று ஆண்டவன் பழனிசாமியை தரிசிக்க மதுரை விமான நிலையம் வந்தபோது தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களை எதிர்பாராத விதமாக சந்தித்தது மகிழ்ச்சி என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டரில் பதிவிட்டார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை: உச்சநீதிமன்ற காலக்கெடு என்ன ஆனது? ஆளுநரின் ஒப்புதல் எப்போது? இன்று நள்ளிரவுக்குள் நல்ல முடிவு வெளியாகுமா? 7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
போராடும் விவசாயிகள் மீது பாஜக அரசு மனிதாபிமானமற்ற அட்டூழியங்கள் நிகழ்த்திவருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையில் இருந்து சசிகலா கடந்த 27ம் தேதியன்று விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாடு முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளை நடைபெறுகிறது. இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார்.
கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுபடுத்த, அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு உத்தரவை குஜராத் அரசு பிறப்பித்துள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயாராக உள்ளது. கூட்டணி அமைக்கும் பட்சத்தில், பாமக இல்லாத கூட்டணியில் தான் தேமுதிக கட்சி இடம்பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற இருப்பதால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் கிருமி நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நிதிநிலை அறிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை மெய்நிகர் கூட்டமாக பிரதமர் தலைமையேற்று நடத்தினார். அதில் பங்கேற்ற தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் தன்னுடைய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சீரம் நிறுவனத்தின் தலைவர் பூனவல்லா இன்று, நோவாவாக்ஸின் கோவாவாக்ஸ் என்ற தடுப்பூசியை பெறுவதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறினார். மேலும் இது ஜூன் 2021ன் போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்றும், இங்கிலாந்தில் நடத்தபப்ட்ட சோதனைகளில் 89.3% செயல்திறன் கொண்டது இந்த தடுப்பூசி என்றும் அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் சிங்கு, காஸிப்பூர், திக்ரி மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் இணைய சேவையை நிறுத்தியுள்ளது. 29ம் தேதி நள்ளிரவு 11 மணியில் துவங்கி 31ம் தேதி இரவு 11 மணி வரை இந்த சேவை நிறுத்தம் நீடிக்கும் என்று அறிவிப்பு.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்; மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க உறுதியேற்போம் என்று மதுரை டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட கோயிலை திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி பேச்சு
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மதுரை டி. குன்னத்தூரில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் முன்னாள் முதலவர் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கோவிலை திறந்து வைத்தனர்.
துணை முதல்வரோடு பயணிப்பதில் பெருமை என்று குஷ்பு ட்வீட்.
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை. பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்பு.
66-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடும் டெல்லி சிங்கு பகுதியில் பாதுகாப்பு தொடர்ந்து அதிகரிப்பு.
டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கூடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
என் வாழ்க்கையே என் செய்தி' என வாழ்ந்து உலகிற்கு ஒளியூட்டிய காந்தியாரின் நினைவைப் போற்றுவோம். உயர்ந்த லட்சியங்களை எட்ட காந்திய வழியை விட பலம் மிக்க பிறிதொன்றில்லை!'
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், மாடுபிடி வீரர் கண்ணனுக்கு முதல் பரிசு வழங்க இடைக்காலத் தடை. 2-வது பரிசு பெற்ற கருப்பண்ணன் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மகாத்மா காந்தி சிலை சேதம்; இந்தியா கண்டனம்; உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாஷிங்டனில் உள்ள தூதரகம் மூலம் கோரிக்கை; விரைவில் நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க அரசு உறுதி.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றார். ஆனால், விருதை அவர் உரியவர்களின் கையில் வழங்காமல், மேசை மீது வைத்தார். மேசையிலிருந்து உரியவர்கள் தங்கள் விருதுகளை எடுத்துச் சென்றனர். இதன்மூலம், கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தினார்.
மாணவர் சேர்க்கை நிறுத்தம் *நடப்பாண்டிற்கான எம்.டெக்., தொழில்நுட்பவியல் மற்றும் எம்.டெக்., பயோடெக்னாலஜி பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிபுஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்கக் கோரிய பரிந்துரை வாபஸ். பெண்களை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தொல்லை இல்லை என கருத்து தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்ற கொலிஜியம் உத்தரவு.
வரும் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் .அனைத்து மாவட்டங்களிலும் பிப்.3ம் தேதி முதல்கட்ட சோதனைகள் நிறைவடையும் .தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் .
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது .ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக உள்ளது .கடந்த 4 நாட்களாக, செயற்கை சுவாசம் இன்றி, இயல்பாக சுவாசிக்கிறார் என விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் .சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் மற்றும் கை கழுவுதல் கட்டாயம் என சுகாதாரத்துறை அறிவுருத்தல்.