Advertisment

News Highlights : வாக்குப்பதிவு இயந்திரங்களில் சந்தேகம் இருக்கிறது - திக்விஜய சிங்

Tamil News : அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு ரத்து

author-image
WebDesk
New Update
News Highlights : வாக்குப்பதிவு இயந்திரங்களில் சந்தேகம் இருக்கிறது - திக்விஜய சிங்

Tamil News Today Live MP By Election Results : கொரோனா தடுப்பு மருந்து சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Advertisment

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில், அமெரிக்க நிறுவனமான பைசரும், ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக்கும், இணைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 3-ம் கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளதாக, ஃபைசர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பர்லா தெரிவித்துள்ளார்.

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டிற்கு மிகவும் காலதாமதமாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

அத்தியாவசிய பொருட்களுக்கான சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" - பிரதமருக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் .

சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்த வழக்குகள் டிசம்பர் 2 ல் இறுதி விசாரணை. கு.க.செல்வத்துக்கு அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கும் இடைக்கால தடை

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    17:00 (IST)10 Nov 2020

    அரசு அனுமதிக்காத நிலையில் எப்படி யாத்திரை செல்வீர்கள்?

    வேல் யாத்திரையை தடுக்க கூடாது என பா.ஜ.க. தாக்கல் செய்த வழக்கில், அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி.

    16:58 (IST)10 Nov 2020

    15-வது நிதிக்குழு பரிந்துரை : தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது.

    15-வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதியை ஒதுக்கியது மத்திய அரசு . அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடியையும், இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.952.58 கோடியையும் ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.

    16:19 (IST)10 Nov 2020

    6வது முறையாக தோல்வி அடைந்த ஜெயந்திலால்

    காங்கிரஸில் இருந்து போட்டியிட்டு தொடர்ச்சியாக ஆறாவது முறை தோல்வியை தழுவியுள்ளார் ஜெயந்திலால் படேல். 1990, 1995, 1998, 2002 மற்றும் 2007 ஆண்டு தேர்தல்களில் மோர்பி தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார் அவர்.

    16:17 (IST)10 Nov 2020

    கன்னியாகுமரியில் திட்டப்பணிகளை துவங்கி வைத்த முதல்வர்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.60.44 கோடி மதிப்பிலான 36 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லை நாட்டினார் முதல்வர் பழனிசாமி. ரூ.153.92 கோடி மதிப்பிலான 21 முடிவுற்ற திட்டப்பணிகளையும் அவர் இன்று தொடங்கி வைத்தார்.

    16:06 (IST)10 Nov 2020

    வாக்கு இயந்திரங்கள் தான் காரணம் -திக் விஜயசிங்

    எந்த சூழலிலும் நாங்கள் இழக்கவே இல்லாத தொகுதிகளிலும் கூட 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளோம். வாக்கு இயந்திரங்கள் டெம்பெர் ப்ரூஃப் ஒன்றும் கிடையாது. இது தொடர்பாக நாங்கள் நாளை ஆலோசனை கூட்டம் நடத்துகின்றோம் என்று திக் விஜயசிங் செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு.

    15:48 (IST)10 Nov 2020

    மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள்

    அதிகாரப்பூர்வமாக இரண்டு இடங்களில் வெற்றியை உறுதி செய்தது பாஜக. சுவஸ்ரா மற்றும் மந்தட்டா பகுதிகளில் ஹர்தீப் சிங் தங் மற்றும் நாராயண் படேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    15:04 (IST)10 Nov 2020

    மக்களை ஏமாற்றிய கமல்நாத் - பாஜக குற்றச்சாட்டு

    லோக்சபா எம்.பி. மற்றும் மத்திய பிரதேச பாஜக தலைவர் வி.டி. ஷர்மா ”மக்களை கமல்நாத் அரசு ஏமாற்றிவிட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார். தற்போது அங்கு காங்கிரஸ் 6 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

    14:22 (IST)10 Nov 2020

    குஜராத் இடைத்தேர்தல் முடிவுகள்

    முன்னிலை பெறுவதற்கான வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கின்ற நிலையிலும் கூட 8 இடங்களிலும் தற்போது பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் 10 சுற்று வாக்கு எண்ணிக்கை மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    14:19 (IST)10 Nov 2020

    உ.பி. இடைத்தேர்தல்

    7 தொகுதிகளில் 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது பாஜக. பாஜகவின் சங்கீதா சௌஹான் சமாஜ்வாடி கட்சியின் ஜாவேத் அப்பாஸைக் காட்டிலும் 90 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    14:06 (IST)10 Nov 2020

    பாஜகவினர் பொறுப்பை உணராமல் செயல்படுகின்றனர் - டி.ஜி.பி.

    நவம்பர் 6ம் தேதி தடையை மீறி பாஜகவினர் வேல்யாத்திரை நடத்திய போது பாஜக மாநில தலைவர் முகக்கவசம் அணியவில்லை என்று டி.ஜி.பி. சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.

    13:43 (IST)10 Nov 2020

    ஜாமீன் மனு தள்ளுபடி!

    சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனுவை 3வது முறையாக தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

    13:41 (IST)10 Nov 2020

    வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

    13:38 (IST)10 Nov 2020

    ஸ்டாலின் வாழ்த்து!

    தமிழக வீரர் நடராஜனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

    13:33 (IST)10 Nov 2020

    சமூக வலைதளங்களுக்கு உத்தரவு!

    சர்சையாக பேசி, முன்னாள் நீதிபதி கர்ணன் வெளியிட்ட வீடியோவை அழிக்க வேண்டும் என்று, சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

    13:31 (IST)10 Nov 2020

    சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

    அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    13:27 (IST)10 Nov 2020

    இடைத்தேர்தல் முன்னணி நிலவரம்!

    குஜராத்தில் 7 தொகுதிகளில் பாஜகவும் 1 தொகுதியில் காங்கிரஸும் முன்னிலை வகித்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகளில் 4-ல் பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகியவை தலா 1 தொகுதியில் முன்னிலை வகித்து வருகின்றன.

    13:23 (IST)10 Nov 2020

    மீண்டும் பாஜக!

    மத்தியபிரதேச மாநிலத்தில், பாரதியஜனதா கட்சியின் ஆட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் நடைபெற்ற 28 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் பாஜக 17 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தில் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது உறுதியாகி உள்ளது.

    12:14 (IST)10 Nov 2020

    ஆட்சியருக்கு கொரோனா!

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    12:13 (IST)10 Nov 2020

    இடைத்தேர்தல் முடிவுகள்!

    உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் - முன்னிலை நிலவரம் - மொத்த இடங்கள் - 7 பாஜக - 5, காங்கிரஸ் - 0 மற்றவை - 2

    11:42 (IST)10 Nov 2020

    நடிகர் விஜய் ஆலோசனை!

    பனையூரில் உள்ள தனது வீட்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். மொத்தமுள்ள 200 மாவட்ட செயலாளர்களில் 50 பேரை மட்டும் அழைத்து விஜய் ஆலோசனை. 

    11:41 (IST)10 Nov 2020

    சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் ரத்து!

    சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் ரத்து.மற்ற மருத்துவ முறைகளை போன்று இந்திய மருத்துவ முறையையும் சமமாக ஊக்கவிக்க வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல். 

    11:38 (IST)10 Nov 2020

    குஷ்பு ட்வீட்!

    சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் தனித்து விடப்படும் என்று குஷ்பு ட்வீட்!

    11:33 (IST)10 Nov 2020

    மீனவர்கள் கைது!

    நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது *நேற்று நள்ளிரவு 4 மீனவர்கள் கைதான நிலையில் மேலும் 14 மீனவர்கள் கைது. 

    10:45 (IST)10 Nov 2020

    பள்ளிகள் திறப்பு!

    பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து வரும் 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வி துற்றை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

    10:13 (IST)10 Nov 2020

    முதல்வர் ஆய்வு!

    கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு நடத்துகிறார். 

    10:11 (IST)10 Nov 2020

    மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்!

    மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம். 28 தொகுதிகளில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில், பாஜக 11இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

    Tamil News Today Live MP By Election Results : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடராஜன் சேர்ப்பு - பிசிசிஐ அறிவிப்பு .ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா சேர்ப்பு.

    நேற்றைய முக்கிய செய்திகள்

    கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி. அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. தீபாவளி பண்டிகை திருச்சி, தூத்துக்குடியில் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்படுள்ளது.

    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment