Tamil News Today : காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது; சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பொதுமுடக்க விதி மீறல் ரூ.15.65 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 5,55,806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 6,82,385 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . தடையை மீறி வாகனங்களில் சுற்றிய 7,44,688 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401லிருந்து 5,08,953ஆக உயர்வு . கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,637லிருந்து 2,95,881ஆக உயர்வு . கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,301லிருந்து 15,685ஆக உயர்வு .
கொரோனா பாதிப்பு: தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மரணம்
சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை 9 மணி வரை கொரோனாவால் 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னையில் தீவிரமாகிவரும் கொரோனா பாதிப்பு. வரும் திங்கட்கிழமை மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி உரையாட உள்ளார்.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பினால்,சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Live Blog
Tamil News Today : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மனிதம் எங்கே?- சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கேள்வி.
அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம்.இனத்துக்காக, மதத்துக்காக,நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்.கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே#JusticeforJayarajAndFenix
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 27, 2020
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கொரோனா பரவல் குறித்து சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ‘Save Trust’ அமைப்பின் தன்னார்வலர்கள் நடத்தும் விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை… அண்ணா பல்கலைக்கழகத்தில் 1500 படுக்கைகள் தயார்!
மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதியில் 2வது முறையாக
₹1000 நிவாரணம் வீடு வீடாக வழங்கப்பட்டது, நிவாரண தொகையுடன் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்வர வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அவர் தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரிவித்தார்.
புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2 நாட்களுக்கு அலுவலகம் மூடப்படுகிறது என்றும் யாரும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த 7 சிறப்பு ரயில்களின் சேவையை ஜூலை 15ம் தேதி வரை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த 1,025 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு உயிர் காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி, மருந்துகள் ஆகியவற்றை மருத்துவ பணிகள் சேவைக் கழகம் மூலம் உடனடியாக கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.பாதி மருந்துகள் வந்த நிலையில் மீதி மருந்துகள் ஓரிரு நாட்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், remdesivir உள்ளிட்ட விலை உயர்ந்த மருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறு தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக திமுக இளைஞர் அணி செயலாலர் உதயநிதி ஸ்டாலின், “ஆறப்போடுவோம் அமைதியாகிவிடுவார்கள் என நினைக்காதீர்கள் முதல்வர் அவர்களே. அந்த குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், தவறிழைக்க நினைப்பவர்களை எச்சரிக்கும் வகையிலும் உங்களின் நடவடிக்கைகள் அமையும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவுக்கும் முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
சென்னையில் இதுவரை 49,690 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 4,651 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,580 பேரும் மதுரையில் 1,477 பேரும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அடுத்த செங்குன்றத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 6 வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் 24,449 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் 24,449 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
வேலூரில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1123 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 127 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1619 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பால் இதுவரை 9 பேர் பலியாகி உள்ள்னார்.
நம்பிக்கை, பாலினம், ஜாதி, மதம் அல்லது மொழி என எந்த பாகுபாடையும் மத்திய அரசு பார்ப்பதில்லை. 130 கோடி இந்தியர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இந்திய அரசியல்சாசனம் தான் எங்களுக்கு வழிகாட்டி என்று பிரதமர் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்றுகான நாம் பாதுகாப்பை கைவிட முடியாது. உண்மையில், நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கூட்டமான இடங்களை தவிரப்பது ஆகியவை முக்கியம் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவில் இந்த வைரஸின் பாதிப்பு மிக கொடூரமாக இருக்கும் என இந்தாண்டு தொடக்கத்தில் சிலர் தங்கள் கணிப்பை தெரிவித்திருந்தனர். ஊடரங்கு, அரசு எடுத்த பல நடவடிக்கைகள், போராட்டத்தில் மக்களின் ஒத்துழைப்பு ஆகியவை காரணமாக, இந்திய பல நாடுகளைவிட சிறந்த நிலையில் உள்ளது. இந்தியாவின் குணமடைவோர் வீதம் அதிகரித்து வருகிறது. மக்கள் ஒத்துழைப்புடன் கூடிய போராட்டம், இதுவரை நல்ல முடிவுகளை அளித்துள்ளது என்று மோடி தெரிவித்தார்.
புனித தந்தை டாக்டர் ஜோசப் மார் தோமா மெட்ரோபொலிடனின் 90வது பிறந்தாள் விழாவை முன்னிட்டு பிரதமர் நேரலையில் உரையாற்றினார். அப்போது, “நமது சமூகம் மற்றும் நாட்டு நலனுக்காக, தனது வாழ்க்கையை டாக்டர். ஜோசப் மார் தோமா அர்ப்பணித்து உள்ளார். குறிப்பாக வறுமையை ஒழிப்பதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் அவர் ஆர்வமாக உள்ளார்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஏசு கிறிஸ்துவின் தூதரான செயிண்ட் தாமஸின் உன்னதமான கொள்கைகளுடன், மார் தோமா தேவாலயம் நெருங்கிய தொடர்புடையது என்று கூறிய மோடி, நமது சக இந்தியர்களின் வாழ்க்கையில், சாதகமான மாற்றத்தை கொண்டு வர, மார் தோமா தேவாலயம் பணிவுடன் பணியாற்றியுள்ளது. இதேபோல், சுகாதாரத்துறை மற்றும் கல்வியிலும் அவர்கள் செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
பாரத் நெட் டெண்டர் திட்டம் ரத்து தொடர்பாக முதல்வர் பழனிசாமி உரிய விளக்கத்தை உடனே தர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டது. டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி மத்திய வர்த்தக அமைச்சம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுக் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு நாளுக்கு நாள் தள்ளிக் கொண்டே செல்கிறது. இதனால் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் தற்போது இருக்கும் கொரோனா நிலையைக் கண்டால் தற்போது பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமியுடன் பேசி 2 நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் செங்கோட்டையன் குறியுள்ளார்.
சென்னையில் கொரோனா நிவாரணமாக வீடு வீடாக 1000 ரூபாய் வழங்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இதுவரை ரூ. 1000 பெறாவதர்கள் ரேஷன் கடைகளில் இன்று முதல் ரூ. 1000 பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் தங்களது ரேஷன் கடைகளில் நிவாரண தொகையை பெறலாம்.
தண்டையார்பேட்டை மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, “ சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பரிசோதனை செய்யப்படுகிறது.முகக் கவசம் அணிவது மட்டுமே கொரோனா வராமல் தடுக்கும் வழி.பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கபசுரக்குடி நீர், ஜிங்க் மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அலோபதி மருத்துவமும் பின்பற்றப்படுகிறது மக்கள் நினைத்தால் கொரோனாவை விரைவில் விரட்டலாம். வீடு தோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ” என்றார்.
திமுகவை சேர்ந்த செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி அரசு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் நலம் பெற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் இறந்தது வேதனை தருகிறது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சாத்தான்குளம் கொடூரம்- குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.