Advertisment

Tamil News Live Updates: திராவிட மாடலுக்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி: மு.க. ஸ்டாலின்

Tamil Nadu News, Tamil News, Odisha Train Accident Live Updates, Arikomban elephant, World test championship final – 07 JUNE 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
stalin

முதல்வர் ஸ்டாலின்

Petrol an

Advertisment

சென்னை- இலங்கை சொகுசு கப்பல் சேவை தொடக்கம்

சென்னையிலிருந்து இலங்கைக்கு 5 விதமான சுற்றுலா திட்டங்களுடன் கார்டிலியா சொகுசு கப்பல் சேவை தொடங்கியுள்ளது.

செப்டம்பர் வரை இயக்கப்பட உள்ள இந்த சொகுசு கப்பல், இலங்கையின் திரிகோணமலை, அம்பாந்தோட்டை, யாழ்பாணம் சென்று மீண்டும் சென்னை திரும்பும் வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது. சுமார் 1,600 போ் பயணம் செய்யக்கூடிய இந்த கப்பலில் ரூ.45 ஆயிரம் முதல் அதிக பட்சம் ரூ.4.37 லட்சம் வரை பயண கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:10 (IST) 07 Jun 2023
    திராவிட மாடலுக்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி: மு.க. ஸ்டாலின்

    சென்னை புளியந்தோப்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசுகையில், “திராவிட மாடலுக்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி.

    கருணாநிதியின் ஆசி பெற்று ஆட்சி நடத்திவருகிறேன். திராவிடத்தை பார்த்து சிலர் பயப்படுகின்றனர். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள்” என்றார்.



  • 22:10 (IST) 07 Jun 2023
    திராவிட மாடலுக்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி: மு.க. ஸ்டாலின்

    சென்னை புளியந்தோப்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசுகையில், “திராவிட மாடலுக்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி.

    கருணாநிதியின் ஆசி பெற்று ஆட்சி நடத்திவருகிறேன். திராவிடத்தை பார்த்து சிலர் பயப்படுகின்றனர். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள்” என்றார்.



  • 20:13 (IST) 07 Jun 2023
    சென்னையில் விமான நிலையத்தில் பரபரப்பு: மாணவரிடம் துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை செல்ல இருந்த, பீகாரை சேர்ந்த விஷால் சிங் என்ற MBA மாணவர் கைப்பையில் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

    இதையடுத்து, மாணவரின் பயணத்தை ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து, அவரிடம் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.



  • 19:56 (IST) 07 Jun 2023
    ஒடிசாவில் மழைக்கு ஒதுங்கிய தொழிலாளர்கள்: ஏறி இறங்கிய சரக்கு ரயில்

    ஒடிசாவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சரக்கு ரயில் ஏறி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இவர்கள் மழைக்கு ஒதுங்கிய நிலையில், ரயில் புறப்பட்டதால் அவர்கள் மீது சரக்கு ரயில் ஏறி இறங்கியுள்ளது.



  • 19:48 (IST) 07 Jun 2023
    பிஎஸ்என்எல் 4ஜி சேவை

    நாடு முழுவதும் 4G, 5G சேவையை இனி BSNL நிறுவனம் வழங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



  • 19:29 (IST) 07 Jun 2023
    செங்கோல்- என். ராம் விமர்சனம்

    பத்திரிகையாளர் என். ராம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து செங்கோல் கொடுக்குற மாதிரி சம்பவங்கள் நடக்குது” என விமர்சித்தார்.



  • 19:17 (IST) 07 Jun 2023
    வீரணம்பட்டி கோவிலுக்கு பூட்டு; பட்டியலின இளைஞரை அனுமதிக்காததாக புகார்

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின சமூக இளைஞரை உள்ளே அனுமதிக்காததால் அதிகாரிகள் கோயிலை தற்காலிகமாக பூட்டியுள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டததால் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • 19:03 (IST) 07 Jun 2023
    கருணாநிதி நூற்றாண்டு விழா: மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.



  • 19:03 (IST) 07 Jun 2023
    கருணாநிதி நூற்றாண்டு விழா: 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை கிண்டியில் மரக்கன்றை நட்டு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    இந்த விழாவில், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



  • 19:02 (IST) 07 Jun 2023
    கருணாநிதி நூற்றாண்டு விழா: மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.



  • 18:40 (IST) 07 Jun 2023
    வேலூர் ஆவினில் ஒரே எண்ணில் 2 வாகனங்கள்: போலீசார் வழக்குப்பதிவு

    வேலூர் ஆவினில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கிய விவகாரத்தில் வாகன உரிமையாளர் சிவக்குமார், ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் ஆவின் நிர்வாகம் சார்பில் அளித்த புகாரை தொடர்ந்து சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



  • 18:30 (IST) 07 Jun 2023
    சர்வதேச புத்தக கண்காட்சி

    சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16-18ஆம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



  • 18:24 (IST) 07 Jun 2023
    கருணாநிதி நூற்றாண்டு விழா: 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

    கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை கிண்டியில் மரக்கன்றை நட்டு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    இந்த விழாவில், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



  • 18:00 (IST) 07 Jun 2023
    மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

    டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    ஜூன் 15ம் தேதி வரை போராட்டம் நடத்த மாட்டோம் என மல்யுத்த வீரர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

    டெல்லியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.



  • 17:47 (IST) 07 Jun 2023
    10ஆம் வகுப்பு பாடத்திட்டம்: சீட்டு கணக்கு நீக்கம்

    பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    சீட்டுக்கட்டு தொடர்பான விளையாட்டு பாட புத்தகத்தில் இடம் பெறுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால் நீக்கப்பட்டுள்ளது.

    வரும் கல்வி ஆண்டில் சீட்டுக்கட்டு பகுதிக்கு பதிலாக புதிய பகுதி அமலுக்கு வருகிறது.



  • 17:45 (IST) 07 Jun 2023
    இந்திரா காந்தி படுகொலை: கனடாவில் சீக்கிய அமைப்புகள் ஊர்வலம்

    இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடும் விதமாக கனடாவில் சீக்கிய அமைப்புகள் ஊர்வலம் நடத்தினர். இது கடும் கண்டனத்தை எழுப்பி உள்ளது.



  • 17:24 (IST) 07 Jun 2023
    ஆடல் பாடல் பொதுநல வழக்கு; நீதிபதிகள் கடும் எச்சரிக்கை

    திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரும் மனுக்கள் மீது 7 நாட்களில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் மனுதாரர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.



  • 17:22 (IST) 07 Jun 2023
    சிவில் கோர்ட்டில் துப்பாக்கி சூடு: அகிலேஷ் கண்டனம்

    உத்தரப் பிரதேசத்தில் சிவில் கோர்ட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார்.



  • 16:40 (IST) 07 Jun 2023
    கோர்ட்டுக்கு வெளியே ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கோர்ட்டுக்கு வெளியே கேங்ஸ்டர் சஞ்சீவ் ஜீவா துப்பாக்கியால் சுட்டார்.

    இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றரனர்.



  • 16:35 (IST) 07 Jun 2023
    16 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய குஜராத் மருத்துவர் உயிரிழப்பு

    இதய அறுவைச் சிக்சை மூலம் 16 ஆயிரம் நோயாளிகளின் உயிரை காப்பாற்றிய 41 வயதான குஜராத் மருத்துவர் காந்தி மாரடைப்பால் உயிரிழந்தார்.



  • 15:53 (IST) 07 Jun 2023
    பி.எஸ்.என்.எல்., வலுப்படுத்த திட்டம்: ரூ.89,000 கோடி ஒதுக்க ஒப்புதல்

    பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்



  • 15:24 (IST) 07 Jun 2023
    பயிர் ஆதார விலை அதிகரிப்பு: உயர்த்தி அறிவித்த மத்திய அரசு

    நிலக்கடலை ஆதார விலை ரூ.6,377 ஆகவும், சூரியகாந்தி விதை ஆதார விலை ரூ.6,760 ஆகவும், சோயா பீன்ஸ் ஆதார விலை ரூ.4,600 ஆகவும் மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.



  • 14:58 (IST) 07 Jun 2023
    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



  • 14:29 (IST) 07 Jun 2023
    மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீராங்கனைகள் சந்திப்பு

    விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூரின் இல்லத்திற்கு வெளியே காலை 11:15 மணியளவில் தொடங்கிய செய்தியாளர்கள் சந்திப்பு. சாக்ஷியும் பஜ்ரங்கும் விளையாட்டு அமைச்சரின் இல்லத்தில் சந்தித்துள்ளனர்.



  • 13:54 (IST) 07 Jun 2023
    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்



  • 13:45 (IST) 07 Jun 2023
    தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டம்

    தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2,877.43 கோடி செலவில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டம் சென்னையை அடுத்த ஒரகடத்தில் நாளை திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • 13:31 (IST) 07 Jun 2023
    5 நாள் பயணமாக உதகை சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி

    5 நாள் பயணமாக உதகை சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி உதகையில் இருந்து குன்னூருக்கு, குடும்பத்தினருடன் மலை ரயிலில் பயணம் ரயில் நிலையத்தை சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ரயிலில் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகளும், ஆளுநருடன் சேர்ந்து பயணிக்க அனுமதி



  • 13:24 (IST) 07 Jun 2023
    "முறைகேடு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்: நீதிமன்றம்

    அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு என வழக்கு "முறைகேடு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்" தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 2018, 2019ஆம் ஆண்டுகளில் சாலைகள் சீரமைக்க ரூ. 300 கோடி மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ. 290 கோடி மதிப்பிலும், 37 டெண்டர்கள் ஒதுக்கீடு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக, அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு.



  • 12:55 (IST) 07 Jun 2023
    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் தகவல்

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் தகவல். நுகர்வோர் விலைக் குறியீடு உயர்வின் அடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்துள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவியது மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர் ஜூலை முதல் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் விளக்கம்



  • 12:18 (IST) 07 Jun 2023
    ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 9 பேர் கொண்ட கண்காணிப்பு குழு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 9 பேர் கொண்ட கண்காணிப்பு குழு ஆய்வு ஆலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கான பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில் ஆய்வு ஆய்வுக்கு பின் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கழிவுகள் அகற்றும் பணி தொடங்க உள்ளது



  • 12:05 (IST) 07 Jun 2023
    மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்யுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு

    மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங்க் புனியா, சாக்‌ஷி மாலிக் சந்திப்பு



  • 12:04 (IST) 07 Jun 2023
    நடிகர் விஜய் இன்று ஆலோசனை

    மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் நடிகர் விஜய் . 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை வரும் 17ஆம் தேதி சந்திக்க உள்ள நிலையில், விஜய் இன்று ஆலோசனை



  • 11:47 (IST) 07 Jun 2023
    முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்

    10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்குகிறார் வரும் 17ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் சந்திப்பு நடைபெற உள்ளது



  • 11:11 (IST) 07 Jun 2023
    "அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம்

    "அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம்" "ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இன்று போடப்பட்டுள்ளது" வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு



  • 11:06 (IST) 07 Jun 2023
    ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன

    மத்தியப் பிரதேசம், ஜபல்பூரில் எல்.பி.ஜி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன



  • 11:06 (IST) 07 Jun 2023
    தூத்துக்குடி முத்து குளிக்கும் வீரர்கள் உதவியுடன் தங்கத்தை தேடி வரும் அதிகாரிகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கையில் இருந்து கடத்திவந்த தங்கத்தை கடலில் வீசிய விவகாரம் . தூத்துக்குடி முத்து குளிக்கும் வீரர்கள் உதவியுடன் தங்கத்தை தேடி வரும் அதிகாரிகள். 3வது நாளாக தேடுதல் வேட்டை தீவிரம்



  • 10:42 (IST) 07 Jun 2023
    தங்கம் விலை

    சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,605க்கும், சவரன் ரூ.44,840க்கும் விற்பனையாகிறது.



  • 10:38 (IST) 07 Jun 2023
    அரசு பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு

    அரசு விரைவு பேருந்துகளில் உள்ளது போல, மாநிலத்தில் 200 கி.மீ தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி இன்று முதல் அமலுக்கு வந்தது. Tnstc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.



  • 10:38 (IST) 07 Jun 2023
    ஒடிசா ரயில் விபத்து

    ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 09:46 (IST) 07 Jun 2023
    தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள்ளது.

    அதனை மீறி கல்வி கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 09:29 (IST) 07 Jun 2023
    மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்

    போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

    முழுச் செய்தியும் படிக்க

    https://tamil.indianexpress.com/sports/wrestlers-protests-anurag-thakur-bajrang-punia-sakshi-malik-689536/



  • 09:07 (IST) 07 Jun 2023
    ஓட்டுனர் உரிமம் ரத்து

    தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 20 ஆயிரத்து 668 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.



  • 08:23 (IST) 07 Jun 2023
    நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

    மன்னார் வளைகுடா, தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால், நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.



  • 08:10 (IST) 07 Jun 2023
    7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

    முழுச் செய்தியும் படிக்க:

    https://tamil.indianexpress.com/tamilnadu/7-officers-including-minerals-department-secretary-transferred-689480/



  • 08:10 (IST) 07 Jun 2023
    7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

    முழுச் செய்தியும் படிக்க: https://tamil.indianexpress.com/tamilnadu/7-officers-including-minerals-department-secretary-transferred-689480/



  • 08:10 (IST) 07 Jun 2023
    மழைக்கு வாய்ப்பு

    சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 08:09 (IST) 07 Jun 2023
    திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல்

    விழுப்புரம் மாவட்டம் பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காததால் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.



  • 08:09 (IST) 07 Jun 2023
    சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

    மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது; இதில் யாருக்கும் காயமில்லை, ரயில் சேவையிலும் பாதிப்பு இல்லை என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.



  • 08:09 (IST) 07 Jun 2023
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர், இன்று முதல் வரும் 11 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. புள்ளிப் பட்டியலின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

    லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த இறுதிப் போட்டியானது தொடங்குகிறது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.13 கோடியே 20 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.



  • 08:08 (IST) 07 Jun 2023
    தீவிர புயலாக வலுப்பெறும் பைப்போர்ஜாய்

    தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் பைப்போர்ஜாய் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 08:08 (IST) 07 Jun 2023
    7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

    முழுச் செய்தியும் படிக்க:

    https://tamil.indianexpress.com/tamilnadu/7-officers-including-minerals-department-secretary-transferred-689480/



  • 08:08 (IST) 07 Jun 2023
    எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

    2024 மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக வரும் 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த கூட்டம் இறுதியானால், மு.க.ஸ்டாலின், இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment