Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
இன்று முதல் ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனை
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கியது. டிக்கெட்டுகளை வாங்க அதிகாலையிலேயே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.
சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை டிக்கெட்டுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எழுத்தாளர் ஷோபா சக்தி நேர்காணல்
சீமான் ஈழத்துக்கு வந்திருந்தபோது, போரால் கடுமையான உணவுப் பஞ்சமும் அங்கே நிலவியபோதும் சீமானுக்கு மூன்று வேளையும் உணவளித்துத் தடபுடலாக விருந்தோம்பியிருக்கிறோம். துப்பாக்கி சுடுவதற்கு, கப்பலைக் கடத்துவதற்கு எல்லாம் கற்றுக்கொடுத்துள்ளோம்.
முழு செய்தியும் படிக்க: ஈழத் தமிழர்கள் ஓரணியாக திரளாவிட்டால் மொத்த இலங்கையும் பவுத்த மயமாகும்: ஷோபா சக்தி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை மகாதேவ் ஜாதவ் புனே அருகே கோத்ருத் பகுதியில் இன்று காலை முதல் காணவில்லை; போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ள‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பார் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குண்டு வைப்போம் என மிரட்டல் விடுத்த பா.ஜ.க நிர்வாகியும் முன்னாள் ராணுவ கர்னலுமான பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவாரம் திருவல்லிகேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியில், ‘மக்களைத் தேடி மேயர்' என்ற திட்டம் செயல்படுத்தப்படும்; சென்னையில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள புகார்களை நேரடியாக மேயரிடம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கி சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட லட்சுமி சங்கரிடம் சார் ஆட்சியர் விசாரணை நடத்தினார்.
கர்நாடகாவில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ விருப்பாக்ஷப்பா கைது செய்யப்பட்டார். விருப்பாக்ஷப்பா முன்ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ விருப்பாக்ஷப்பா கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே கடந்த 2016 ம் ஆண்டு குடித்து விட்டு பேருந்தை ஓட்டி 2 பேர் இறப்புக்கு காரணமான தனியார் பேருந்து ஓட்டுநர் ராமுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட பெண் சிவிங்கிப்புலி ஷாஷா உயிரிழந்தது. மத்தியப் பிரதேசம் மாநிலம், குணோ தேசிய விலங்கியல் பூங்காவில், விடப்பட்ட இந்த சிவிங்கிப்புலிக்கு சிறுநீரக கோளாறு இருந்ததாக அம்மாநில வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீது உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளிக்க உள்ளார்
வி.சி.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இணைய வழியில் நடந்தது. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ZOOM செயலி மூலம் பங்கெடுத்தனர்.
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்தார்.
இதையடுத்து அவர் அரசுப் பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ரூ.30 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ள நிலையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.3.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் விலகிய நிலையில், அணியின் கேப்டனாக நிதிஷ் ராணா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ₹7.53 கோடி அபராதம் வசூலித்து உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பொன்னியின் செல்வன் – 2” இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், 29-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
'பொன்னியின் செல்வன்-2' படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது
ராகுல்காந்தியின் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மார்ச் 31ல் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் அரைமணி நேரத்தில் விற்று தீர்ந்தது. நேரடி டிக்கெட் விற்பனை சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஐபிஎல் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்களை வாங்கினர்
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் நியாய விலைக்கடைகளில் 2 கிலோ சக்கரை, கோதுமை, சிறுதானியங்களை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணி துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வழக்கறிஞர் ஜெயகணேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான 3 பேரையும், வழக்கறிஞர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என விழுப்புரம் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. அமைச்சரவை இட ஒதுக்கீடு முடிவுக்கு எதிராக போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஷிமோகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது
சேலம், ஆத்தூர் அருகே நீட் கோச்சிங் சென்டர் விடுதியில் சந்துரு(18) என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் பற்களை பிடுங்கியதாக புகாரில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்விவகாரத்தில் உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்கையில், “மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பல்வேறு வகைகளில் விலைமதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்” என்று அவர் கூறினார்.
காரைக்கால் தனியார் தங்கும் விடுதியில் காதல் ஜோடி கழுத்து, கைகளில் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் காதலர்கள் தற்கொலை முயற்சி என முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
சென்னையில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என்பதை சட்டவிரோதமாக கண்டறிந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக கருவின் பாலினத்தை தெரிவிக்க ரூ.26,400 வசூல் செய்தும் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2021ல் யாஷிகா ஓட்டிச்சென்ற கார், மாமல்லபுரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவரது தோழி உயிரிழந்தார். அந்த வழக்கில் ஆஜராகாததால் யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சி மாவட்டம் மணப்பாறை அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வில்சன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் 4 லட்சத்தை இழந்து கடனாளி ஆனதால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 49-ஆவது தற்கொலை இது. திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த 20-ஆவது தற்கொலை. புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த இரண்டாவது தற்கொலை. இது தொடர்கதையாகிவிடக்கூடாது.
ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் மீண்டும் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுனருக்கு வேறு வாய்ப்பில்லை. அரசியல் சட்டப்படியான அந்தக் கடமையை ஆளுனர் உடனடியாக செய்ய வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்
மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில் குமரன் நேற்று நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை கொலை செய்யப்பட்டார்
சென்னையில் உள்ள பள்ளிகளில் மாலை நேர வகுப்புகளில் ஸ்நாக்ஸ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு மேயர் பிரியா தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
நடிகர் அஜித்தின் தந்தை மறைவு – சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு சென்று நடிகர்கள் சூர்யா, கார்த்தி நேரில் ஆறுதல்
தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார்.
TNPSC தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில் குமரன் நேற்று நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை பேசாமல், கட்சி பிரச்னையை பேசுவது வேதனையளிக்கிறது. பாஜகவும், பாஜக தலைவர்களும் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள்; நீதிமன்ற தீர்ப்பில் தலையிட்டது கிடையாது- சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
குரூப் -4 தேர்வு குறித்து பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்
ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றது சர்ச்சையாகியுள்ளது.
குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்று உள்ளது: உரிய விசாரணை தேவை – இ.பி.எஸ்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10,12-ம் வகுப்பில் 100 தேர்ச்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.1500-இ இருந்து ரூ.3000-ஆக உயர்த்தி வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை பள்ளிகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்
ராகுல் காந்தி மீதான நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் கறுப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றம் வருகை தந்தனர்.
10, 12 ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா ஊக்கத்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் தொடங்கியது. மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து வருகை தந்தனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களின் சுகாதார செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
திருச்சி, மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியால் வில்சன்(26) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே 11 பேர் உயிரிழந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.