Advertisment

Tamil News Updates: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

Tamil Nadu News, Tamil News, Praggnanandhaa, Magnus Carlsen, Chandrayaan 3 live updates, ISRO– 26 August 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
Aug 26, 2023 07:46 IST
Tamil News

Tamil News

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

கிரீஸ் நாட்டில் பிரதமர் மோடி பேச்சு

நிலவில் இந்திய தேசிய கொடியை பதித்ததன் மூலம் இந்தியாவின் திறமையை உலகுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம். சந்திரயான் 3ன் மாபெரும் வெற்றிக்கு இந்திய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கிரீஸ் நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 22:52 (IST) 26 Aug 2023
  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - பிரனாய் தோல்வி

  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி 21-18, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் பிரனாய் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார் • 21:56 (IST) 26 Aug 2023
  ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவருக்கு தடை

  மகளிர் கால்பந்து உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம் ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ்-க்கு 90 நாட்களுக்கு தடை விதித்து சர்வதேச காலபந்து சம்மேளனம் உத்தரவு • 21:56 (IST) 26 Aug 2023
  செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 பேர் பலி

  திருவள்ளூர், செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க வந்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்த நிலையில் 2 பேர் உயிரிழப்பு • 21:34 (IST) 26 Aug 2023
  வேலூரில் கனமழை

  வேலூர் = சத்துவாச்சாரி, கிரீன் சர்க்கில், பெருமுகை சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், தற்போது கனமழை - மக்கள் மகிழ்ச்சி • 21:33 (IST) 26 Aug 2023
  கலைஞர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

  திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்! • 19:47 (IST) 26 Aug 2023
  சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி

  சாலை விபத்தின் வலி எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் என்னுடைய தந்தையை இழந்தது சாலை விபத்தில்தான்" சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர்! • 19:46 (IST) 26 Aug 2023
  ரயிலில் சிலிண்டர் வைத்து சமையல் : பழனிவேல் தியாகராஜன்

  ரயிலில் ஒரு வாரமா சிலிண்டர் வச்சு சமச்சிருக்காங்க" -மதுரை ரயில் விபத்து குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி • 18:58 (IST) 26 Aug 2023
  ஆகஸ்ட் 30 முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்

  ஆகஸ்ட் 30 முதல் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். தண்ணீர் எடுக்கும் போர்வெல் அனுமதிக்கு அரசு நடவடிக்கை எடுக்காததால் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது • 18:38 (IST) 26 Aug 2023
  சந்திரயான் - 3 ரோவரின் செயல்பாடுகள் சீராக உள்ளது - இஸ்ரோ அறிவிப்பு

  லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளின் செயல்பாடுகளும் சீராக உள்ளது. பிரக்யான் ரோவர் மூலம் அறிவியல் பூர்வ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சந்திரயான் - 3 திட்டத்தின் 2 குறிக்கோள்கள் நிறைவேறியுள்ளதாக டிக் குறியிட்டு இஸ்ரோ அறிவித்துள்ளது • 18:28 (IST) 26 Aug 2023
  இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று

  ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குசல் பெரேரா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது • 18:00 (IST) 26 Aug 2023
  மதுரை ரயில் விபத்து: தெற்கு ரயில்வே ஏ.டி.ஜி.பி விளக்கம்!

  "ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைகளுக்கான சாத்தியம் ஏதும் இல்லை. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது.

  பிரேத பரிசோதனை முடிந்தவுடன் 7 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு, விமானம் மூலம் உ.பி. அனுப்பி வைக்கப்படும்" என்று மதுரை ரயில் விபத்து தொடர்பாக, தெற்கு ரயில்வே ஏ.டி.ஜி.பி வனிதா கூறியுள்ளார். • 17:46 (IST) 26 Aug 2023
  மதுரை ரயில் தீ விபத்து - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை ஆலோசனை!

  மதுரை ரயில் தீ விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

  ஆவணங்கள் அல்லது வீடியோ காட்சிகள் இருந்தால் நேரில் வந்து சம்ர்பிக்கலாம் எனவும், விபத்து தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விரும்பினால் நேரில் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. • 17:28 (IST) 26 Aug 2023
  மண் அள்ளப்படுகிறதா? - அறிக்கை அளிக்க உத்தரவு!

  திருவள்ளூர், கோளூரில் உள்ள பெரிய ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மண் அள்ளப்படுகிறதா? எனபதை ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.

  185 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரியில் நிபந்தனையை மீறி, ஒப்பந்ததாரர் பரத் மண் அள்ளுவதாக பொன்னேரி தாலுகா கோளூரைச் சேர்ந்த விவசாயிகள் ஆனந்தன், சரவணன் வழக்கு தொடர்ந்தார். • 17:26 (IST) 26 Aug 2023
  மதுரையில் ரயில் தீ விபத்து: தெற்கு ரயில்வே ஏடிஜிபி ஆய்வு!

  மதுரையில் ரயில் தீ விபத்து நடந்த இடத்தில் தெற்கு ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி வனிதா நேரில் ஆய்வு செய்தார். • 16:39 (IST) 26 Aug 2023
  ரயில் தீ விபத்து - உடற்கூராய்வு தொடங்கியது!

  மதுரையில் ரயில் தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடற்கூராய்வு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கியது • 16:05 (IST) 26 Aug 2023
  திருமண தகவல் இணையதளம்: அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

  திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  'திருமண இணையதள மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே ஏமாற்றப்படுகின்றனர். இணையதளங்களை கட்டுப்படுத்த எந்த ஒரு சட்டமோ, விதிகளோ உருவாக்கப்படவில்லை. பதிவு செய்வோர் பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி இருந்திருந்தால், மோசடிகள் தடுக்கப்படும்' என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. • 15:48 (IST) 26 Aug 2023
  மதுரை ரயில் தீ விபத்து: சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப்பதிவு!

  உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த பேசின் (Bhasin) டிராவல்ஸ் நிறுவனம் மீது தெற்கு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை கைது செய்ய லக்னோ போலீசாருக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளனர். • 15:47 (IST) 26 Aug 2023
  'மோடியின் ஊக்கம்தான் சந்திரயான் - 3 வெற்றிக்கு காரணம்': தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

  "பிரதமர் நரேந்திர மோடியின் ஊக்கம்தான் சந்திரயான் - 3 வெற்றிக்கு காரணம். நீட் தேர்வு அவசியமான ஒன்று. தமிழ்நாட்டில் மட்டும்தான் தேவையில்லாத ஒன்றாக பேசப்படுகின்றது" என்று கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். • 15:20 (IST) 26 Aug 2023
  மதுரை ரயில் விபத்து: உயிரிழந்த 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் - அமைச்சர் மூர்த்தி

  மதுரை ரயில் விபத்தில், உயிரிழந்தவர்களின் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களை ரெயில்வே நிர்வாகத்துடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்து அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார் • 14:52 (IST) 26 Aug 2023
  மதுரை ரயில் தீ விபத்து; உரிய நிவாரணம் வழங்க இ.பி.எஸ் வலியுறுத்தல்

  மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லக்னோ - ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன். அது மட்டுமில்லாமல் ரயிலில் பயணித்த பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமனவும், ரயில் தீ விபத்தில் இறந்த பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும், காயமுற்றோருக்கு மத்திய-மாநில அரசின் நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் • 14:27 (IST) 26 Aug 2023
  சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்

  சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது • 13:50 (IST) 26 Aug 2023
  மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு

  மதுரை ரயில் தீ விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். • 13:32 (IST) 26 Aug 2023
  நாளை 10 மாவட்டங்களில் கனமழை

  தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்

  தகவல் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு • 13:01 (IST) 26 Aug 2023
  ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் சோதனை

  மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் சோதனை

  தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி சோம்நாத் தலைமையிலான குழுவும் நேரில் ஆய்வு

  விபத்து குறித்து விசாரணை செய்ய ரயில்வே போலீசார் சார்பில், தெற்கு ரயில்வே காவல் கூடுதல் இயக்குனர் வனிதா மதுரை விரைகிறார் • 12:44 (IST) 26 Aug 2023
  4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

  தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம்

  தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்க, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

  மகளிர் சுய உதவிகளுக்கான கடன்கள் வழங்குவதில் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

  அரசு திட்டங்களை எந்த தொய்வும் இன்றி செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை

  ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு • 12:34 (IST) 26 Aug 2023
  திமுக இளைஞரணி 2-வது மாநாடு தேதி அறிவிப்பு

  திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு டிசம்பர் 17ந் தேதி நடைபெறும்

  சேலத்தில் இளைஞரணி 2வது மாநாடு நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு

  2007, டிச.15ந் தேதி வரலாற்றில் முத்திரை பதித்து திருப்புமுனை ஏற்படுத்தியது திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாடு- திமுக தலைமை • 12:32 (IST) 26 Aug 2023
  செப்.2-ல் ஆதித்யா எல் 1 ஏவுதல்

  சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்துகிறது

  இஸ்ரோ சந்திரயான் 3ஐ தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த அதிரடி • 12:07 (IST) 26 Aug 2023
  ரயில் விபத்து ரூ.3 லட்சம் நிவாரணம்- ஸ்டாலின்

  மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்.

  சுற்றுலா ரயில் தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது.

  உரிய மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு.

  காயமடைந்தவர்களுக்கு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல், • 11:39 (IST) 26 Aug 2023
  மதுரை ரயில் தீ விபத்து: 10 பேர் கொண்ட குழு விசாரணை

  மதுரை ரயில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை

  தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் தகவல்

  சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தின் உண்மை தன்மையை அறிய குழு அமைப்பு • 11:32 (IST) 26 Aug 2023
  விஜய் மக்கள் இயக்கத்தின் ஐ.டி அணி ஆலோசனைக் கூட்டம்

  விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம்

  பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை

  ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சமூக வலைதளங்களில் அடையாளம் காணப்பட்ட 1,000 பேர் பங்கேற்பு

  சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்களும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்

  சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்களும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் • 11:02 (IST) 26 Aug 2023
  மதுரை ரயில் தீவிபத்து

  மதுரை ரயில் தீவிபத்தைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரை விரைகின்றனர். விபத்து நடந்த இடத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். • 10:28 (IST) 26 Aug 2023
  SI பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது

  தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 750, SI பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, மாநிலம் முழுவதும் 45 மையங்களில் தொடங்கியது. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது • 10:25 (IST) 26 Aug 2023
  மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம்

  தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.

  இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். • 09:41 (IST) 26 Aug 2023
  'திரங்கா'

  சந்திரயான் -2 லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கிய இடம், 'திரங்கா' என அழைக்கப்படும் - பிரதமர் மோடி • 09:40 (IST) 26 Aug 2023
  மதுரை ரயில் விபத்து- ரூ. 10 லட்சம் நிவாரணம்

  மதுரை ரயில் விபத்து- உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. • 09:40 (IST) 26 Aug 2023
  தேசிய விண்வெளி தினம்- பிரதமர் மோடி அறிவிப்பு

  சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தடம் பதித்த நாள், இனி தேசிய விண்வெளி தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். • 08:54 (IST) 26 Aug 2023
  லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி’ என பெயர் சூட்டிய மோடி

  நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் -3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி’ என அழைக்கப்படும்- பிரதமர் மோடி அறிவிப்பு • 08:00 (IST) 26 Aug 2023
  இஸ்ரோ மையத்திற்கு வந்த பிரதமர் மோடி

  சந்திரயான்-3 மிஷனில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளை சந்திக்க பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி வந்தார்.

  பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு சந்திரயான்-3 மிஷன் குறித்து விளக்குகிறார் இஸ்ரோ தலைவர் சோமநாத் • 07:57 (IST) 26 Aug 2023
  மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து

  மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்

  விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்; சுற்றுலா ரயிலின் சமையல் கோஸில், டீ தயார் செய்வதற்காக சிலர் முயற்சித்தபோது சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்த பயணி தகவல். • 07:51 (IST) 26 Aug 2023
  இன்றைய ராசிபலன்

  தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

  முழுமையாக படிக்க

  https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-today-saturday-26-august-2023-744089/ • 07:50 (IST) 26 Aug 2023
  சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

  பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

  முழுமையாக படிக்க

  https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-power-cut-today-august-26-saturday-annasalai-aavadi-743991/ • 07:49 (IST) 26 Aug 2023
  மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து

  மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்

  விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரயிலில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்; சுற்றுலா ரயிலின் சமையல் கோஸில், டீ தயார் செய்வதற்காக சிலர் முயற்சித்தபோது சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்த பயணி தகவல். • 07:48 (IST) 26 Aug 2023
  பெங்களூரு வந்தார் பிரதமர் மோடி

  சந்திராயன் 3 வெற்றி, இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் பாராட்ட பிரதமர் மோடி இன்று காலை பெங்களூரு வந்தார்.

  இன்றைய விடியலை பெங்களூரு நகரில் இத்தனை உற்சாகமாக பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகளை உடனடியாக சந்திக்க முடியவில்லை. அதனால்தான் நாடு திரும்பிய உடனே, பெங்களுரூ வந்திருக்கிறேன்.

  விஞ்ஞானிகளை சந்திக்க வருவதால், முதலமைச்சர், துணை முதலமைச்சர் வரவேண்டாம். முறைப்படி நான் பெங்களூரு வரும்போது, அரசு நடைமுறைகளை பின்பற்றினால் போதும் என கூறினேன்.#India #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment