Tamil News Today Live : இந்திய சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
டெல்லி செங்கோட்டைக்கு வரும் முன்பாக பிரதமர் மோடி, பாரம்பரிய வழக்கப்படி டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசப்பிதா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு சுதந்திர தின சிறப்பு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
மோடி உரை நேரலை:
ஆகஸ்ட் 15ல் நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் ஈரோடு, கரூர் பகுதியிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலம் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
விழுப்புரத்தில் 4 காவலர்கள் உள்பட மேலும் 128 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,034 ஆக அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 12,591 ஆக அதிகரித்துள்ளது. புதுக்கோட்டையில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3,813 ஆக அதிகரித்துள்ளது.
நெல்லையில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7,250 ஆக அதிகரித்துள்ளது.
மூணாறில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம், புதிய வீடுகள்
கொரோனாவுடன் போராடுவதற்கான புதிய கருவிகளுக்காக உலகம் குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர்களை உலகம் செலவிட வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today Live : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் உடல்நலம் பெற வேண்டி, இசைஞானி இளையராஜா வீடியோ வெளியிடடுள்ளார்.
Maestro #Ilayaraja Wishes #SPBalasubrahmanyam For a Speedy Recovery And Good Health. #GetWellSoonSPB @PRO_Priya pic.twitter.com/h3E2JfOX6s
— SPP Media Communication (@spp_media) August 14, 2020
சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, இளங்கலை 2 வது மற்றும் 4 வது செமஸ்டருக்கான தேர்வு முடிவுகளும், முதுகலை 3 வது செமஸ்டர் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எம்சிஏ 3வது மற்றும் 4 வது செமஸ்டர் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனை www.results.unom.ac.in , www.ideunom.ac.in e governance.unom.ac.in ஆகிய இணையதள பக்கங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, சுதந்திர போராளிகளின் தியாகங்களை நன்றியுடன் நினைவில் கொள்வோம். கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற சுகாதார ஊழியர்களுக்கும் தேசம் கடன்பட்டுள்ளது. அடர்த்தியான மக்கள்தொகை, மாறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்ட இந்தியா, கொரோனா சவாலை எதிர்கொள்கிறது.உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் செயல்படுகின்றன, பொதுமக்கள் முழு ஆதரவை வழங்கினர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க எளிய மக்களுக்கு அதிக சிரமம் உள்ளது. இப்போதும் இ-பாஸ் முறையை முற்றிலும் அகற்றுங்கள் என்றே வலியுறுத்துகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. தான் குணடைய பிரார்த்தித்த அனைவருக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீண்டுள்ளார். கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் எஸ்.பி, பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உடல்நிலை மீண்டும் மோசமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பு தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது; தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை; அரசை குறைசொல்லாமல் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் தொடர் விசாரணை முடிந்ததை அடுத்து தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 லட்சம் ரூபாயை பட்டினப்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர். சூதாட்ட கிளப் நடத்தி வந்த அதிமுக நிர்வாகி உள்ளிட்ட இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சூதாட்டம் நடந்த வீடு கேரள முன்னாள் ஆளுநருக்கு சொந்தமானது எனற தகவலும் வெளியாகியுள்ளது.
கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வினை ரத்து செய்து, ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் பட்டம் வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசு 'ஈகோ' பார்க்காமல் மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இறுதியாண்டில், "கேம்பஸ் இன்டர்வியூவில்" தேர்வு பெற்றவர்கள் வேலையில் சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விநாயகர் சிலைகளை நிறுவி, சமூக இடைவெளியோடு மக்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகளைத் தகர்க்கும் கடவுளான விநாயகருக்கே தடை போடுவது வேதனையளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். '“திமுக, ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உதயநிதியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கட்சியின் பல மூத்தவர்கள் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து வெளியே வருவார்கள். என்னுடனும் நிறைய எம்எல்ஏ, எம்பிக்கள் தொடர்பில்தான் உள்ளனர். அவர்கள் யார் என்பதை இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், திமுகவிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள். என் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை. என்னுடைய பிரச்னையைப் பொறுத்தவரை, அதற்கு முழுக் காரணமும் உதயநிதிதான்”
இப்போதைக்கு நான் எந்தக் கட்சியில் சேர்வது என்பது குறித்து முடிவெடுக்கவில்லை. சட்டமன்றத்தில் நான் கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன். என்று தெரிவித்தார்.
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்தாண்டே வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நட்ப்பாண்டில் செயல்படுத்த வாய்ப்பு உள்ளதா? என கேட்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிபதிகள் செயல்பாடு தொடர்பாக சமூகவலைதளத்தில் விமர்சித்திருந்தார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விவரங்கள் தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் பத்தாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை வரும் 17ஆம் தேதி துவங்கவும், பதினோராம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை வரும் 24ஆம் தேதி துவங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு காலையில் 20 மாணவர்களுக்கும், பிற்பகலில் 20 மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை சட்டஒழுங்கு காவல் துணைஆணையர் சரவணன் உள்ளிட்டோருக்கு முதல்வர் பதக்கம் சேலம் எஸ்.பி. தீபா கணிகர், மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜெகன்நாத் ஆகியோருக்கு பதக்கம்.
கொரோனா விழிப்புணர்வுக்காக எல்இடி திரையுடன் கூடிய வீடியோ வாகன சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனாவில் இருந்து குணமடைந்த 1 லட்சம் பேருக்கு செல்போனில் முதல்வர் வாழ்த்து கூறும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. சென்னையில் 10 லட்சம் இல்லங்களுக்கு கொரோனா, டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திட மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் முழுமையாக மீண்டு வெற்றிநடை போடும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி சுதந்திர வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டதில் எந்த குளறுபடியும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணி நியமனம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கானொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அஇஅதிமுகவின் இலக்கு என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights