Tamil Nadu News Today Updates : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளனர். 17 பேர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மீட்பு பணிகளை முதன்முறை இன்று நேரில் பார்வையிட்டார். அவருடன் ஆளுநர் ஆரிப் முகமது கான் வந்திருந்தார். சுமார் 82 பேர் வசித்து வந்த அந்த இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 55 பேர்களது உடல்கள் ஒவ்வொன்றாக இதுவரை எடுக்கப்பட்டுள்ளன
இந்நிலையில், மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். நிலச்சரிவில் இறந்த, உயிரோடு மீட்கப்பட்டோரின் குழந்தைகளது கல்விச் செலவை அரசே ஏற்கும் எனவும் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை காண மக்கள் யாரும் நேரில் வர வேண்டாம்; டி.வி, வானொலியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், நாளை மறுநாள் நடைபெற உள்ள இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்களின்றி நடைபெறும் என்பது தெரியவந்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். தனது தந்தை பிரணாப் முகர்ஜி நலமுடன் உள்ளார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா ரேஷன் கடைகளைத் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படும் இடம், நேரம், நாட்களுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் திறக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. நடமாடும் ரேஷன் கடைகள் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இறுதிக்கட்டமாக 2,000 பேருக்கு பரிசோதனையை தொடங்கிய நிலையில் எப்படி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது என்று உலக சுகாதார நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
Web Title:Tamil news today live updates coronavirus pranab mukherjee cm palaniswami
விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எந்த தடையும் விதிக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
தமிழக அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தியன்று மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
முன்னதாக, கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, நீர்நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.
நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர், அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் உள்ளதால், சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றவர்கள் சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியது. ஐ.பி. எல் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் கலந்து கொள்வதற்காக சென்னை வரும் தோனிக்கு முன்னதாக கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
டார்லிங், யாகாவாராயினும் நா காக்க , மரகத நாணயம் , கலகலப்பு - 2 உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நிக்கி கல்ராணி தனக்கு கொரோன தொற்று இருப்பதாக தெரிவித்தார்.
நாட்டின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்த 4-வது பிரதமர் என்ற சிறப்பை நரேந்திர மோடி பெற்றுள்ளார். இது குறித்து தேசிய செய்திப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், " நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பண்டித ஜவஹர்லால் நேருவும், அவரைத் தொடர்ந்து, இந்திரா காந்தி மற்றும் டாக்டர் மன்மோகன்சிங் ஆகியோர் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்துள்ளனர்.
இவர்களுக்குப் பிறகு அடல் பிஹாரி வாஜ்பேயி, 2,268 நாட்கள் பிரதமராக பதவி வகித்து, இந்தப் பட்டியலில் 4-ம் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்றுடன் வாஜ்பேயை விட அதிக காலம் பணியாற்றிய பிரதமர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். அத்துடன், மிக அதிக காலம் பணியாற்றிய காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற சிறப்பையும் திரு. நரேந்திர மோடி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன், வேலூர் மாவட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப் பொறியாளர் சீனிவாசன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் திருக்கோயிலில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த ஆவணி மூலத்திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணாமாக ரத்து செய்யப்படுவதாக அதன் நிர்வாக தெரிவித்துள்ளது.
கேராள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் அமைந்திருக்கும் பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த, நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு, நிலம் வழங்கி புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்தார். மேலும்,நிலச்சரிவில் உயிரிழந்த மற்றும் உயிரோடு மீட்கப்பட்டோரின் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.
இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி? முக்கிய காரணங்கள் என்னென்ன?
தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்! என்று தமிழக துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மாவட்ட வாரியாக கோவிட்-19 தொற்றால் பாதித்தவர்களின் விவரம் :
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,397-ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,146-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,61,459-பேர் (81.62%) குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,355 ஆக அதிகரித்துள்ளது
நாளை (வெள்ளிக்கிழமை), அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் (பாஜக) குலாப் சந்த் கட்டாரியா தெரிவித்தார். ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், ஆன்லைனில் மட்டுமே பள்ளிக் கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும். ஆன்லைனில் பள்ளிக் கட்டணத்தை வசூல் செய்ய கட்டமைப்பு வசதிகளை உடனே ஏற்படுத்த வேண்டும். பெற்றோரில் நேரில் வரவழைப்பது பாதுகாப்பானது அல்ல என்று தெரிவித்துள்ளது.
தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நுங்கம் பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் அளித்த புகாரின் பேரில், தேசிய கௌரவ பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் ரவுடிகும்பலை ஒழிக்க மகாராஷ்டிரா போல் ஏன் தனிச்சட்டத்தை கொண்டுவரக்கூடாது?
குற்றப்பின்னணியுடன் அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் எத்தனை பேர்?
கடந்த 10ஆண்டுகளில் எத்தனைபேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்
- புதுச்சேரி அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கடனுக்கான தவணையை வசூலிக்க இடைக்கால தடை கோரிய வழக்கில் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்
வசூலிக்கப்பட்ட கடன் தவணையை திரும்ப வழங்கவும், வசூலித்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோபாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நோட்டீஸ்.
குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்குள் நுழைந்து கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது வேதனையளிக்கிறது
* குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு கட்சியில் இடமளிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கக்கூடாது
- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: சிறையில் இருக்கும் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் வெயில் முத்து ஆகியோர் ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு.
10 மற்றும்12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மழலையர் வகுப்பு முதல், ஒன்று, ஆறு, மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கு வரும் 17ஆம் தேதி முதல் சேர்க்கை தொடங்குகிறது. வரும் 27ஆம் தேதி இட ஒதுக்கீடு அடிப்படையில் 11ஆம் வகுப்பு சேர்க்கை தொடங்க உள்ளது. இதனிடையே, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு, வரும்16ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், ஆன்லைன் பதிவு முடிந்துவிட்ட நிலையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாம் முடிந்துவிட்டது. 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான சேர்க்கைக்கு www.tndalu.ac.in என்ற இணையதளம் வழியாகவும், நேரடியாகவும் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கவும், செப்டம்பர் 4ஆம் தேதி கடைசிநாள். 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பில் சேர வரும் 17ஆம் தேதி முதல் ஆன்லைன் பதிவு துவங்குகிறது. பி.எட்., கால்நடை மருத்துவ படிப்பு ஆகியவற்றில் சேர்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
சித்தா, யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ ஆராய்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?
* மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை அரசின் திட்டங்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடிந்தது. ஆனால் தற்போது சவாலாக உள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் துணை நிற்கின்றனர் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில துணைத் தலைவர் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி அவசியமில்லை என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் முருகன் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை ஒத்துக்கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
EIA எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தமிழில் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது
- உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, நீர்நிலைகளில் கரைக்கவோ அனுமதியில்லை
கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை
திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கு.க.செல்வம் நீக்கம் - திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
கு.க.செல்வம், திமுக தலைமை நிலைய செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி வகித்து வந்தார்
ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் கோபால் தாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தாக்கல் செய்த பதில் மனுவில், நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள, அமைச்சர் சி.வி. சண்முகம், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல் அதிமுக ஆகிவிட்டது. தமிழக அரசு மாநில உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக்கொடுத்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கிசான் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதா என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
வெளிப்படையான வரிவிதிப்பு மற்றும் நேர்மையை கவுரவித்தல் என்ற புதிய பிரதமர் மோடி தளத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
வெளிப்படையான வரிவிதிப்பு முறை மற்றும் நேர்மையானவர்களை கவுரவித்தல் என்ற புதிய வரிவிதிப்பு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
வெளிப்படையான வரிவிதிப்பு முறை மற்றும் நேர்மையாக செலுத்துபவர்களை கவுரவித்தல் என்ற புதிய வரிவிதிப்பு திட்டத்தை இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டின் தரம் உயர்த்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு விழுப்புரம் தொகுதி விசிக எம்.பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,96,637ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,95,982ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 5 காவலர்கள் உள்பட மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,811 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரத்தில் இதுவரை கொரோனாவால் 46 பேர் இறந்துள்ளனர்.