Advertisment

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரை: நேரலை இணைப்பு

மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

author-image
WebDesk
New Update
Narendra Modi crosses 60 million followers on Twitter

Tamil News Today Live : இந்திய சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

Advertisment

டெல்லி செங்கோட்டைக்கு வரும் முன்பாக பிரதமர் மோடி, பாரம்பரிய வழக்கப்படி டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசப்பிதா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு சுதந்திர தின சிறப்பு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

மோடி உரை நேரலை:

ஆகஸ்ட் 15ல் நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் ஈரோடு, கரூர் பகுதியிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலம் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி மக்களவை உறுப்பினர் பல்லிதுர்கா பிரசாத் ராவ்-க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

விழுப்புரத்தில் 4 காவலர்கள் உள்பட மேலும் 128 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,034 ஆக அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 12,591 ஆக அதிகரித்துள்ளது. புதுக்கோட்டையில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3,813 ஆக அதிகரித்துள்ளது.

நெல்லையில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7,250 ஆக அதிகரித்துள்ளது.

மூணாறில் வீடுகளை இழந்தவர்களுக்கு நிலம், புதிய வீடுகள்

கொரோனாவுடன் போராடுவதற்கான புதிய கருவிகளுக்காக உலகம் குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர்களை உலகம் செலவிட வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today Live : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:09 (IST)14 Aug 2020

    எஸ்பிபி உடல்நலம் பெற இளையராஜா பிரார்த்தனை

    கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் உடல்நலம் பெற வேண்டி, இசைஞானி இளையராஜா வீடியோ வெளியிடடுள்ளார்.

    21:48 (IST)14 Aug 2020

    சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

    சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, இளங்கலை 2 வது மற்றும் 4 வது செமஸ்டருக்கான தேர்வு முடிவுகளும், முதுகலை 3 வது செமஸ்டர் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எம்சிஏ 3வது மற்றும் 4 வது செமஸ்டர் தேர்வு முடிவுகளும்  வெளியிடப்பட்டுள்ளன. இதனை www.results.unom.ac.in ,     www.ideunom.ac.in e    governance.unom.ac.in ஆகிய இணையதள பக்கங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

    21:33 (IST)14 Aug 2020

    அழியாத தைரியத்திற்கு வணக்கம்

    இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    20:55 (IST)14 Aug 2020

    முதல்வர் பழனிசாமியை முன்னிறுத்தியே தேர்தல்

    2021ம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல், முதல்வர் பழனிச்சாமியை முன்னிறுத்தியே இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    20:32 (IST)14 Aug 2020

    கேரள தங்க கடத்தல் - என்ஐஏ சோதனை

    கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

    20:11 (IST)14 Aug 2020

    தமிழக அரசு உத்தரவு

    சுற்றுச்சூழல்தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இந்த குழுவில், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், பொதுப்பணித்துறை தலைமை செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்

    19:40 (IST)14 Aug 2020

    ஜனாதிபதியின் சுதந்திர தின உரை

    நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, சுதந்திர போராளிகளின் தியாகங்களை நன்றியுடன் நினைவில் கொள்வோம். கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற சுகாதார ஊழியர்களுக்கும் தேசம் கடன்பட்டுள்ளது. அடர்த்தியான மக்கள்தொகை, மாறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்ட இந்தியா, கொரோனா சவாலை எதிர்கொள்கிறது.உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் செயல்படுகின்றன, பொதுமக்கள் முழு ஆதரவை வழங்கினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    19:06 (IST)14 Aug 2020

    சென்னை வந்தடைந்தார் தோனி

    ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.பயிற்சிக்காக  சி.எஸ்.கே. கேப்டன் தோனி சென்னை வந்தடைந்தார்

    18:33 (IST)14 Aug 2020

    மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு

    சென்னை-1,187

    திருவள்ளூர்-495

    செங்கல்பட்டு- 437

    கோவை-385

    தேனி-367

    காஞ்சிபுரம்- 315

    கடலூர்-221

    சேலம்-191

    ராணிப்பேட்டை-178

    வேலூர்-178

    புதுக்கோட்டை-155

    திண்டுக்கல்-138

    குமரி-128

    ஈரோடு-128

    விழுப்புரம்-127

    நெல்லை-117

    விருதுநகர்-90

    18:17 (IST)14 Aug 2020

    5890 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று மேலும் 5890 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 3,26,245 ஆக அதிகரித்துள்ளது. ரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது. 

    18:04 (IST)14 Aug 2020

    இ-பாஸ் : ஸ்டாலின் வலியுறுத்தல்

    இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே நான் வலியுறுத்தி வந்தேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க எளிய மக்களுக்கு அதிக சிரமம் உள்ளது.  இப்போதும் இ-பாஸ் முறையை முற்றிலும் அகற்றுங்கள் என்றே வலியுறுத்துகிறேன் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

    17:58 (IST)14 Aug 2020

    குணமடைந்தார் அமித் ஷா

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. தான் குணடைய பிரார்த்தித்த அனைவருக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    17:56 (IST)14 Aug 2020

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் மற்றும் இறைச்சி கடைகளை மூடக் கோரி வழக்கு தொடர்பாக, ஆகஸ்ட் 18-க்குள் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    17:36 (IST)14 Aug 2020

    மீண்டார் கவர்னர் புரோகித்

    கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீண்டுள்ளார். கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    publive-image

    17:00 (IST)14 Aug 2020

    எஸ்.பி.பி. உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

    பாடகர் எஸ்.பி, பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உடல்நிலை மீண்டும் மோசமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பு தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    publive-image

    16:53 (IST)14 Aug 2020

    பினராயி விஜயன் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டார்

    கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை 

    16:32 (IST)14 Aug 2020

    அசோக் கெலாட் வெற்றி

    ராஜஸ்தான் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி

    16:23 (IST)14 Aug 2020

    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்

    புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது; தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை; அரசை குறைசொல்லாமல் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

    15:46 (IST)14 Aug 2020

    இன்றைய தங்கம் விலை

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.5,100-க்கு விற்பனையாகிறது. 

    15:33 (IST)14 Aug 2020

    மூணாறு நிலச்சரிவு

    கேரள மாநில ராஜமலை எஸ்டேட் நிலச்சரிவில் மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு! நிலச்சரிவில் மண்ணில் புதையுண்ட 82 பேரில் இதுவரை 56 உடல்கள் மீட்பு!

    15:06 (IST)14 Aug 2020

    இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் - தமிழக அரசு அரிவிப்பு

    ஆதார் அல்லது குடும்ப அட்டை மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் தாமதமின்றி இ-பாஸ் அனுமதி, வரும் 17 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு

    14:44 (IST)14 Aug 2020

    உரிமை மீறல் நோட்டீஸ் விவகாரம் - தீர்ப்பு 3 நாட்கள் தள்ளி வைப்பு

    உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் தொடர் விசாரணை முடிந்ததை அடுத்து தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு. 

    14:28 (IST)14 Aug 2020

    வீட்டில் சூதாட்டம் அதிமுக நிர்வாகி கைது!

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  10 லட்சம் ரூபாயை பட்டினப்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர்.  சூதாட்ட கிளப் நடத்தி வந்த அதிமுக நிர்வாகி உள்ளிட்ட இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  சூதாட்டம் நடந்த வீடு கேரள முன்னாள் ஆளுநருக்கு சொந்தமானது எனற தகவலும் வெளியாகியுள்ளது. 

    13:48 (IST)14 Aug 2020

    மு.க ஸ்டாலின் வேண்டுகோள்!

    கல்லூரி இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வினை ரத்து செய்து, ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் பட்டம் வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மத்திய பா.ஜ.க. அரசு 'ஈகோ' பார்க்காமல் மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவு செய்து  கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இறுதியாண்டில், "கேம்பஸ் இன்டர்வியூவில்" தேர்வு பெற்றவர்கள் வேலையில் சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    13:35 (IST)14 Aug 2020

    பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வேண்டுக்கோள்!

    விநாயகர் சிலைகளை நிறுவி, சமூக இடைவெளியோடு மக்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும்  என்று  பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகளைத் தகர்க்கும் கடவுளான விநாயகருக்கே தடை போடுவது வேதனையளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

    13:33 (IST)14 Aug 2020

    எம்.எல்.ஏ கு.க செல்வம் பேட்டி!

    திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். '“திமுக, ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உதயநிதியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கட்சியின் பல மூத்தவர்கள் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து வெளியே வருவார்கள். என்னுடனும் நிறைய எம்எல்ஏ, எம்பிக்கள் தொடர்பில்தான் உள்ளனர். அவர்கள் யார் என்பதை இப்போது சொல்ல மாட்டேன். ஆனால், திமுகவிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள். என் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த முகாந்திரமும் இல்லை. என்னுடைய பிரச்னையைப் பொறுத்தவரை, அதற்கு முழுக் காரணமும் உதயநிதிதான்” 

    இப்போதைக்கு நான் எந்தக் கட்சியில் சேர்வது என்பது குறித்து முடிவெடுக்கவில்லை. சட்டமன்றத்தில் நான் கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன். என்று தெரிவித்தார். 

    13:06 (IST)14 Aug 2020

    மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

    மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்தாண்டே வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நட்ப்பாண்டில் செயல்படுத்த வாய்ப்பு உள்ளதா? என கேட்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    12:32 (IST)14 Aug 2020

    பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்!

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்தின் துணையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்  என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

    12:30 (IST)14 Aug 2020

    சிறப்பு ரயில் சேவை ரத்து!

    தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில்களின் சேவை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாக தெரிவித்துள்ளது.

    12:25 (IST)14 Aug 2020

    பிரசாந்த் பூஷண் குற்றவாளி என அறிவிப்பு!

    நீதிபதிகள் செயல்பாடு தொடர்பாக சமூகவலைதளத்தில் விமர்சித்திருந்தார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விவரங்கள் தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    12:21 (IST)14 Aug 2020

    மாணவர் சேர்க்கை!

    ஒன்று முதல் பத்தாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை வரும் 17ஆம் தேதி துவங்கவும், பதினோராம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை வரும் 24ஆம் தேதி துவங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு காலையில் 20 மாணவர்களுக்கும், பிற்பகலில் 20 மாணவர்களுக்கும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

    11:32 (IST)14 Aug 2020

    முதல்வர் சிறப்பு பதக்கங்கள்!

    சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  நெல்லை சட்டஒழுங்கு காவல் துணைஆணையர் சரவணன் உள்ளிட்டோருக்கு முதல்வர் பதக்கம் சேலம் எஸ்.பி. தீபா கணிகர், மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜெகன்நாத் ஆகியோருக்கு பதக்கம். 

    10:38 (IST)14 Aug 2020

    எம்.எல்.ஏ கு.க.செல்வம் பேட்டி!

    கட்சி சார்பற்ற எம்.எல்.ஏவாக எனது பணிகள் தொடரும் என்று  திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். 

    10:30 (IST)14 Aug 2020

    வாகன சேவை!

    கொரோனா விழிப்புணர்வுக்காக எல்இடி திரையுடன் கூடிய வீடியோ வாகன சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனாவில் இருந்து குணமடைந்த 1 லட்சம் பேருக்கு செல்போனில் முதல்வர் வாழ்த்து கூறும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.  சென்னையில் 10 லட்சம் இல்லங்களுக்கு கொரோனா, டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    10:22 (IST)14 Aug 2020

    முதல்வர் சுதந்திர தின வாழ்த்து!

    தமிழகத்தை முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திட மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் முழுமையாக மீண்டு வெற்றிநடை போடும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி சுதந்திர வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

    Tamil News Today : இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும் என்றும், எவ்வளவு விளைவுகள் ஏற்பட்டாலும் நடத்தியேத்திருவோம் என, இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்து உள்ளார்.

    10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டதில் எந்த குளறுபடியும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணி நியமனம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கானொலி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்.2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அஇஅதிமுகவின் இலக்கு என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

    Tamil Nadu Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment