News Highlights : திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் – விவசாயிகள் சங்கம்

Tamil News : தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல் காந்தி

Tamil News Today : ஜனவரி 26ஆம் தேதி திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம். நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்

கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.பிரேசிலுக்கு, 20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும், புகைப்படத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பிரேசில் அதிபர் போல்சனேரோ, அதில் தட்டுப்பாட்டு சூழ்நிலையில் தடுப்பூசி வழங்கியதற்கு, பிரதமர் மோடிக்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார்.

80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.80வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம் என்றும் விருப்பமில்லாதவர்கள் ஓட்டுச்சாவடிக்கே வந்து ஓட்டு போடவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்

Live Blog

Tamil News Live : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.


21:19 (IST)23 Jan 2021

போலீசாருக்கு ஆயுஷ்மான் காப்பீடு திட்டம்

மத்திய ஆயுதப்படை போலீசார் பயன்பெறும் வகையில் ‘ஆயுஷ்மான் சிஏபிஎஃப்’ காப்பீடு திட்டத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார்

19:47 (IST)23 Jan 2021

திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் – விவசாயிகள் சங்கம்

டிராக்டர் பேரணி குறித்து போலீசாருக்கும், விவசாய பிரதிநிதிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டாலும், திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

19:45 (IST)23 Jan 2021

தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைவு

ஜன.23 இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

19:44 (IST)23 Jan 2021

நோட்டாவிற்கு கீழ்தான் பாஜக – சீமான் விமர்சனம்

ஜெ.பி.நட்டா வந்தாலும் தமிழகத்தில் பாஜக நோட்டாவிற்கு கீழ்தான் இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

19:09 (IST)23 Jan 2021

யானைக்கு தீ வைத்த விவகாரம் – ஸ்டாலின் கருத்து

நீலகிரியின் யானைக்கு தீவைத்த விவகாரத்தில், மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி தண்டிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.

17:54 (IST)23 Jan 2021

நேதாஜி விழாவில் உரையாற்ற ம‌ம்தா மறுப்பு

கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையிலான நேதாஜி பிறந்தநாள் விழாவில் உரையாற்ற முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.

17:53 (IST)23 Jan 2021

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் கோவை

பெண்கள் பாதுகாப்பாக வாழும் நகரம் கோவை, பெண்களுக்கு அரணாக அதிமுக அரசு உள்ளது திமுகவிடம் இருந்து பெண்களை பாதுகாப்பதுதான் மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது என தேர்தல் பிரச்சாரத்தில், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

17:52 (IST)23 Jan 2021

கொல்கத்தா சென்றடைந்தார் பிரதமர்

நேதாஜியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா சென்றடைந்தார் 

17:48 (IST)23 Jan 2021

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடக்கம்

மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்

17:47 (IST)23 Jan 2021

4 மீனவர்களின் உடலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டுவரபட்ட நிலையில், அவர்களின் உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தினார்.

16:57 (IST)23 Jan 2021

மீனவர்களின் உடல்கள் கோட்டைபட்டினம் துறைமுகம் கொண்டு வரப்பட்டது

இலங்கை கடற்கடையில் கரை ஒதுங்கிய 4 தமிழக மீனவர்களின் உடல்கள் கோட்டைபட்டினம் துறைமுகம் கொண்டு வரப்பட்டது. 

16:48 (IST)23 Jan 2021

திண்டுக்கல் அருகே 10ம்வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா தொற்று

திண்டுக்கல் அருகே சின்னகாந்திபுரம் அரசு பள்ளி  10ம்வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.   

15:55 (IST)23 Jan 2021

உழைக்கும் விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார் ஸ்டாலின் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நான் விவசாயி என்று கூறினால் மு.க. ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது ? ரத்தத்தை வியர்வையாக சிந்தி இரவு, பகல் பாராமல் உழைக்கும் விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார் ஸ்டாலின் என முதல்வர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்தார்.  

15:38 (IST)23 Jan 2021

அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் – மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்திற்கு சேதமான பயிர்கள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டு வரும் பணி மூன்று நாட்களில் நிறைவடையும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

15:25 (IST)23 Jan 2021

ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம்

வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இன்று,கோவையில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.   

14:37 (IST)23 Jan 2021

சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி

சசிகலாவைத் தொடர்ந்து, பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.    

14:13 (IST)23 Jan 2021

மீண்டும் தேர்வெழுதும் வாய்ப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் – மு. க ஸ்டாலின்

UPSC Prelims தேர்வு கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டு கடந்த அக்டோபரில் நடந்தது.கடைசி வாய்ப்பாக இத்தேர்வை எழுத இருந்த பலர் தொற்று சூழலால் தேர்வெழுதவில்லை.எனவே 2-ம் வாய்ப்பு கேட்கின்றனர்.இது தொடர்பான வழக்கில் 2ம் வாய்ப்பு தரமுடியாதென மத்திய அரசு சொல்வது அதன் அலட்சியத்தை காட்டுகிறது.

UPSC தேர்வில் வெற்றி என்பது ஏழை-எளிய-பிற்படுத்தப்பட்ட-பட்டியலின பிள்ளைகளின் வாழ்வையே மாற்றுகிற ஒன்று. இதற்காக கடுமையாக உழைக்கும் தேர்வர்களை உதாசீனப்படுத்தி அவர்களின் குடிமைப்பணி கனவை தகர்க்காமல் மீண்டும் தேர்வெழுதும் வாய்ப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்தார்.  

14:09 (IST)23 Jan 2021

மு. க ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் பரிசு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அம்மையார்குப்பம் கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வேத விற்பனர்கள் மாலை அணிவித்து வெள்ளி வேல் வழங்கினர்.

13:48 (IST)23 Jan 2021

ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தி , வரிக்குறைப்பு செய்யும் மாற்றத்தினைக் கொண்டு வருவோம் – ராகுல் காந்தி

ஐந்து அடுக்கு சிக்கல்களை கொண்டது தற்போதைய GST ! 
மத்தியில்காங்கிரஸ் ஆட்சி அமையும்போது இதனை எளிமைப்படுத்தி , வரிக்குறைப்பு செய்யும் மாற்றத்தினைக் கொண்டு வரும் என ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார்.  

13:46 (IST)23 Jan 2021

இடஒதுக்கீடு அவதிக்கு கிரண் பேடிதான் காரணம் – புதுவை முதல்வர்

நீட் தேர்வில் புதுச்சேரி மாணவர்கள் இடஒதுக்கீடு பெற முடியாமல் அவதியுறுவதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிதான் காரணம் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.  

13:23 (IST)23 Jan 2021

அசாமில் உள்ள பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நில உரிமை!

அசாமில் உள்ள பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நில உரிமை, அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்யும் பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை காப்பாற்ற அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சொனோவல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

13:22 (IST)23 Jan 2021

பாஜக மாநில தலைவர் முருகன் சவால்!

காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்து போட்டியிட முடியுமா? – பாஜக மாநில தலைவர் முருகன் சவால் விடுத்துள்ளார். மேலும்,  ராகுல் காந்தியால் ஒரு திருக்குறளையாவது சொல்ல முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

13:21 (IST)23 Jan 2021

முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி!

நேதாஜியின் 125-வது பிறந்தநாளையொட்டி மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைப்பெற்று வருகிறது. 

13:06 (IST)23 Jan 2021

கோவையில் ராகுல் காந்தி சூளுரை!

இன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி,கோவையில் பிரச்சாரத்தை துவக்கினார். “தமிழக மக்களிடம் இருந்து இந்தியாவின் பிற பகுதி மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . தமிழகத்திடம் எனக்கு உள்ள உறவு, அரசியல் ரீதியான உறவு அல்ல நான் தமிழகத்திற்கு எந்தவித சுயநலத்துடனும் வரவில்லை.

அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும் . வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கிறார் பிரதமர் மோடி ” என்றார்.  

12:37 (IST)23 Jan 2021

தீ வைத்த சம்பவம் குறித்து கமல்ஹாசன் ட்வீட்!

உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? – நீலகிரியில் யானைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கேள்வி

11:58 (IST)23 Jan 2021

தமிழகம் வந்த ராகுல் காந்தி!

சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக தமிழகம் வந்த ராகுல் காந்தி எம்.பி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். 

11:54 (IST)23 Jan 2021

பிரதமர் மோடி  ட்வீட்!

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட நேதாஜியின் தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுக்கூறும் பிரதமர் மோடி ட்வீட்.  

11:40 (IST)23 Jan 2021

காவல்துறையினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு!

ஓசூர் கொள்ளை விவகாரத்தில் 18 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். 

10:02 (IST)23 Jan 2021

மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்!

நாடு முழுவதும் உள்ள 3-ம் பாலினத்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் . அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. 

10:00 (IST)23 Jan 2021

5 கிலோ தங்கம் பறிமுதல்!

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

09:23 (IST)23 Jan 2021

பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்!

விசாரணைக்கு ஆஜராக மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன். இயேசு அழைக்கிறார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் ஆவணங்கள் சிக்கின. ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil News Today : ராகுலின் தமிழ் வணக்கம்’: தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி

குடிநீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் தர மறுப்பதாக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மீது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மாணவர்கள் புகார் .கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி 45ஆவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.

நேற்றைய செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக வெளிவரும் தகவல்கள் தவறானது என ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு.

“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும் என தமிழக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live raghul gandhi kovai dmk admk vk sasikala health condition elephant death

Next Story
பெற்ற மகனை இழந்தது போல் துடித்தேன் – உருகும் பெல்லன்!It felt like my personal loss says the caretaker of deceased elephant
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express