Tamil News Today : மெரினா கடற்கரை சாலையில் 72வது குடியரசு தின விழா தொடங்கியது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார் .
ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்
நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து .குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆவலாக இருந்தேன், ஆனால் கொரோனா காரணமாக பங்கேற்க முடியவில்லை என போரிஸ் ஜான்சன் வருத்தம்.
முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு.
3 நாள் தமிழக பயணத்தை முடித்து கொண்டு, மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் ராகுல் காந்தி.மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்காரம்… ஜொலிக்கும் விமான நிலையம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியல் வெளியீடப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் பட்டியல் அரசிதழில் வெளியீடு.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.
Tamil News Today : திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று;
கொரோனா உறுதியான நிலையில் 2 மாணவர்கள், ஒரு மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
டெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர்கள்: பிரம்மாண்ட பேரணியை தொடங்கிய விவசாயிகள் .
தமிழகத்தில் வீரதீர செயல்களை புரிந்த 3 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
Web Title:Tamil news today live republic day 2021 cm edappadi delhi republic day modi tamil news
டெல்லியின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பொதுமக்கள் வாகனங்கள் தடையின்றி இயங்குகிறது.
அரசு செலவில், சுயநல நோக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் வேறு எதுவும் இருக்க முடியாது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்ல. இன்றைக்குத் துணை முதலமைச்சராக இருக்கிற பன்னீர்செல்வம் தான். குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில், இதுவரை நேரில் சென்று வாக்குமூலம் அளித்து, மரண விபரம் வெளிவர உதவாத பன்னீர்செல்வத்துக்கு, ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புவிழாவுக்கு முன்னிலை வகிக்க வெட்கமாக இல்லையா? உள்ளத்தில் உறுத்தல் ஏற்பட வில்லையா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இன்று போராட்டம் கையாளப்பட்ட விதம் வருந்தத்தக்கது. நாங்கள் அனைவரும் (எதிர்க்கட்சிகள்) விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். நீங்கள் (விவசாயிகள்) அந்தந்த பகுதிகளுக்கு அமைதியாக திரும்பிச் செல்ல வேண்டும். உங்களைக் குறை கூற அரசுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கக்கூடாது என்ற வேண்டுகோளை விடுக்கின்றேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் 9102 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. முன்னதாக கடந்த 2020 ஜூன் 4-ஆம் தேதி நாளொன்றுக்கு புதிய பாதிப்புகள் 9304 ஆக இருந்தது.
8 மாதங்களுக்குப் பிறகு நாளொன்றுக்கு நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 120 க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 117 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
‘சிறுமியின் மார்பகத்தை ஆடைக்குமேல் பிடித்தால் அது போக்ஸோ சட்டத்தின்கீழ் குற்றம் ஆகாது’ என மும்பை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு இதனால் கேள்விக்குறி ஆகியுள்ளது என விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்தார்.
கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் பிரதமர் மோடி என எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
உயிர்வாழ உணவளிக்கும் விவசாயிகளை தடி கொண்டு தாக்கி உயிரைப் பறித்த கொடுங்கோல் பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
கார்ப்பரேட் முதலாளிகளை குளிர்விக்க விவசாயிகளை உயிர்பலி கொடுக்க துணிந்துவிட்டார் பிரதமர் மோடி என முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், " தமிழகத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு, ஸ்டர்லைட் போராட்டங்களை எப்படி வன்முறையாக்கினார்களோ, அதேபோல வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியையும் அங்குள்ள காவல்துறையினர் வன்முறைக் களமாக்கியுள்ளனர். வன்முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரச்சினையையும் பேசி தீர்க்க முடியும் என்ற நிலையில், மத்திய அரசாகட்டும், இங்குள்ள அடிமை அரசாகட்டும் மக்கள் போராட்டங்களை துப்பாக்கி மூலம் அடக்க முயற்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளன. ஜனநாயகத்தை போற்றுகிற குடியரசு தினத்தில் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. 'நானும் விவசாயி' என்று நாடகம் போடுபவர்கள் அமைதி காக்கலாம். உண்மையான விவசாயிகளும், பொதுமக்களும் இந்த அக்கிரமங்களை சகித்துக் கொள்ளமாட்டார்கள்" என்று பதிவிட்டார்.
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் ‘நகரும் மாமல்லபுரம் கடற்கரை கோயில்’ தமிழக அலங்கார ஊர்தி நடைபெற்றது.
"விவசாயிகள் செங்கோட்டைக்குச் சென்றது தவறான காரியம்" என புதுவை முதல்வர் நாராயணசாமி , தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்த உள்ளதாகவும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் போராட்டம் நடந்து வரும் எல்லைப் பகுதிகளில் போராட்டம் மேலும் தீவிரம் அடைவதை தடுக்கும் நோக்கில் இணையதள சேவை துண்டிப்பு என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு்ளளது.
எந்தவொரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வல்ல நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கரஸ் கட்சியின் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சை மத்திய அரசு நடத்தி இருக்கிறது இந்த அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராடும் உரிமைகளை புதைகுழிக்கு அனுப்பலாமா? நடப்பது கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியா? என்று திராவிட இயக்கத்தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா? என திமுக எம்.பி ஆராசா முதல்வர் பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக மும்பை ஆசாத் மைதானத்தில் திருநங்கைகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் ரயில் நிலைய கொடிக்கம்பத்தில் ரயில்வே நிர்வாகம்: தேசியக் கொடியை ஏற்றாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் டிராக்டர் பேரணியில், விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளே நுழைவதை தடுக்க போலீசார் சாலையில் அமர்ந்துள்ளனர்.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் டிராக்டர் பேரணியில், விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளே நுழைவதை தடுக்க போலீசார் சாலையில் அமர்ந்துள்ளனர்.
டெல்லியில் இன்று நடைபெற்ற டிராக்டர் பேணியில், போலீசாராகுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் இந்த போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடி நடத்திய போலீசார். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை அறிவுறுத்திய வழித்தடங்களில் மட்டும் டிராக்டர் பேரணியை நடத்துமாறு விவசாய சங்கங்கள் கூறிய நிலையில் சில விவசாய குழுக்கள் மத்திய டெல்லியை நோக்கி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம்; திருச்சி, கடலூரில் இருசக்கரவாகனத்தில் சென்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!.
டெல்லி ராஜபாதையில் பறந்த அதிநவீன ரபேல் போர் விமானம் . ரபேல் விமானத்துடன் பறந்து செல்லும் ஜாகுவார் ரக விமானங்கள் . 900 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் பறந்த ரபேல் விமானம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மாற்றங்கள் இருக்கும் .இந்தாண்டு பொதுத்தேர்வு எளிமையாகவே இருக்கும் .பொதுத்தேர்வு மாற்றங்கள் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் -என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
டெல்லியில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் .பாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற்றப்பட்டு, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
டெல்லி புதிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி ஆற்றினார்.
சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை .சசிகலா உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது .சசிகலா உடலில் சர்க்கரை அளவு 178-ஆகவும், ஆக்சிஜன் அளவு 97-ஆகவும் குறைந்துள்ளது.கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
தமிழக அரசின் வீரதீர செயலுக்கான 'அண்ணா பதக்கம்' ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஆசிரியை முல்லைக்கு வழங்கப்பட்டது
கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்' கோவையைச் சேர்ந்த அப்துல் ஜப்பாருக்கு வழங்கப்பட்டது
தமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான கோப்பை வழங்கப்பட்டது. முதலிடம் - சேலம் நகர காவல்நிலையம், இரண்டாமிடம் - திருவண்ணாமலை நகர காவல்நிலையம், மூன்றாமிடம் - கோட்டூர்புரம் காவல்நிலையம் .
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கான 'காந்தியடிகள் காவலர் பதக்கம்' வழங்கப்பட்டது . பெண் ஆய்வாளர் மகுடீஸ்வரி, உதவி ஆய்வாளர் செல்வராஜ், தலைமைக் காவலர்கள் சண்முகநாதன், ராஜசேகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசின் வீரதீர செயலுக்கான 'அண்ணா பதக்கம்' கால்நடை மருத்துவர் பிரகாசுக்கு வழங்கப்பட்டது .
நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்; ஜெய்ஹிந்த்.
நாடு முழுவதும் 72-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது .டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
தமிழக அரசின் வீரதீர செயலுக்கான 'அண்ணா பதக்கம்' மதுரையைச் சேர்ந்த ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கு வழங்கப்பட்டது