News Highlights: முதல்வர் பழனிசாமி 2 நாள் டெல்லி பயணம்; ஜெ. நினைவக திறப்பு விழாவுக்கு மோடியை அழைக்கிறார்

Tamil News: பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு

Tamil News Today : ஜெயலலிதா நினைவிடம் இந்த மாத இறுதியில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும்படி நேரில் அழைப்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 18ம் தேதி டெல்லி செல்கிறார்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு. வரும் 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விஹாரி விலகல்.ஆஸி.க்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து உடல்நிலை பாதிப்பு காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்

இந்தியாவில் சில மாதங்களில், 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதல்வர்களை, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

கர்நாடகாவில், கார் விபத்தில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் படுகாயம்.மத்திய அமைச்சரின் மனைவி மற்றும் பணியாளர் விபத்தில் உயிரிழந்தனர். காயமடைந்த மத்திய அமைச்சர், சிகிச்சைக்காக கோவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாடப்பகுதிகளின் அளவு குறைப்பு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வி துறை தகவல்.கனமழை எதிரொலி: காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Live Blog

Tamil News Updates : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.


06:55 (IST)13 Jan 2021

deleting_message

22:40 (IST)12 Jan 2021

எடப்பாடிக்கு டாட்டா காட்ட மக்கள் தயார் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை கொளத்தூரில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “எடப்பாடி பழனிசாமி டேட்டா கார்டு வழங்கினாலும் மக்கள் அவருக்கு டாட்டா காட்ட தயாராகிவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

22:30 (IST)12 Jan 2021

சித்ரா இல்லாவிட்டாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நம்பர் ஒன்-தானா?

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியாவுக்கு 85 வது இடம் கிடைத்துள்ளது. பிறநாடுகளுக்கு எளிதில் விசா அனுமதி கிடைப்பதை வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜப்பான் பாஸ்போர்ட்டுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

21:09 (IST)12 Jan 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் உடல்நலக்குறைவால் மரணம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

20:23 (IST)12 Jan 2021

கன்னியாகுமரியில் போட்டியிட தயார் – பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி குறியது சரியானதுதான். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார். பாமகவின் வன்னியர் உள் ஒதுக்கீடு கோரிக்கையில் தமிழக அரசின் முடிவை நாங்கள் ஏற்போம்.” என்று கூறினார்.

18:55 (IST)12 Jan 2021

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் – விவசாய சங்கங்கள் அறிவிப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு, மறு உத்தரவு வரும் வரை இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசித்த பின், 32 விவசாய சங்கங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். வேளாண் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர். 

17:49 (IST)12 Jan 2021

இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

17:15 (IST)12 Jan 2021

மிளகு ரசம், பூண்டு ரசம் – கொரோனா வைரஸ் ஓடி ஒளிந்து, செத்து விடும்

மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா வைரஸ் ஓடி ஒளிந்து, செத்து விடும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.  

17:14 (IST)12 Jan 2021

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – ராமதாஸ் இரங்கல்

தஞ்சை மாவட்டம் திருவையாற்றை அடுத்த வரகூரில் தனியார் பேருந்து பயணிகள் மீது மின்கம்பி உரசியதில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார்.  

17:11 (IST)12 Jan 2021

தெலுங்கானா பள்ளிகள் திறப்பு – முதல்வர் முக்கிய அறிவிப்பு

9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

17:09 (IST)12 Jan 2021

உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  

16:44 (IST)12 Jan 2021

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

தமிழகத்தில் வருகிற ஜனவரி 19ம் தேதி 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், பள்ளிகளை திறக்க அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “கொரோனா இன்னும் ஓயவில்லை. கல்வியைவிட குழந்தைகளின் உயிர் மிகவும் முக்கியம். பள்ளிகளைத் திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

16:09 (IST)12 Jan 2021

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு

கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலும் 3 நாட்களுக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

16:05 (IST)12 Jan 2021

விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி – மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் நாடு முழுவதும் போராடி வரும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.

16:02 (IST)12 Jan 2021

திமுகவினர் பிள்ளைகள் மட்டும் இந்தி – நடிகை குஷ்பு

தமிழகத்தில் இந்தி மொழிக்கு எப்போதும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், “திமுகவினர் பிள்ளைகள் மட்டும் இந்தி படிக்லாமா என  திமுக மீது நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு குற்றச்சாட்டியுள்ளார்.

14:53 (IST)12 Jan 2021

திமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எல்.முருகன் கேள்வி

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என சி.டி.ரவி கூறியது சரியான கருத்துதான் என்று கூறியுள்ள, தமிழக பாஜக தலைவர்  எல்.முருகன் திமுக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

14:51 (IST)12 Jan 2021

விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி – புதுச்சேரி முதலமைச்சர்

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

14:05 (IST)12 Jan 2021

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம்

வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைகால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

13:07 (IST)12 Jan 2021

மன்னிப்பு கேட்ட வார்னர்

சிட்னியில் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில், எழுந்த இனவெறி சர்ச்சைக்குக்கு தான் மன்னிப்பு கேட்பதாக ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் வார்னர் தெரிவித்துள்ளார்.

13:05 (IST)12 Jan 2021

சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று

இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13:03 (IST)12 Jan 2021

குற்றாலத்தில் குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை  விதிக்கப்பட்டுள்ளது.

12:53 (IST)12 Jan 2021

நதிகளை மீட்டெடுக்க போராடுவோம் – கமல்ஹாசன்

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நதிகளை மீட்டெடுக்க போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

12:50 (IST)12 Jan 2021

ராணுவ தளபதி நாரவனே பேட்டி

எந்த விதமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தளபதி நாரவனே கூறியுள்ளார்.

12:49 (IST)12 Jan 2021

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் – பிரதமர் மோடி

குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவரவும், ஜனநாயகத்தை காப்பற்றவும் இனைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

12:14 (IST)12 Jan 2021

டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி!

2 நாள் பயணமாக வரும் 18ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி .பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

11:44 (IST)12 Jan 2021

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

ஜன.14ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகம் வருகிறார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி .  பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வரும் அதே நாளில் ராகுல் காந்தியும் தமிழகம் வருகிறார் எனப்து குறிப்பிடத்தக்கது. 

10:57 (IST)12 Jan 2021

கொரோனா தடுப்பு மருந்து!

புனேவில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து இன்று காலை  தமிழகம் வந்தது.  மத்திய தொகுப்பில் இருந்து முதற்கட்டமாக 5.56 லட்சம் தடுப்பு மருந்து டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது.  வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகிறது தமிழகம். 

10:13 (IST)12 Jan 2021

மிக கனமழை பெய்யும்!

தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும்” என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் . ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது. 

10:12 (IST)12 Jan 2021

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.  ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படலாம் .பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி. கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க கோரியதால் தமிழக அரசு பள்ளிகள் திறப்பை அறிவித்துள்ளது. 

Tamil News Today : கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ₨3.48 கோடி அபராதம் வசூல் சென்னை மாநகராட்சி தகவல்.

மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின், துத்தநாக மாத்திரைகள் வழங்கவும் தமிழக அரசு ஆணை

நேற்றைய செய்திகள்

னேவில் இருந்து விமானத்தில் 5,56,036 கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு காலை 10.30 மணிக்கு கொண்டு வரப்படுகின்றன .சீரம் நிறுவனத்தின் 5.36 லட்சம் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live school reopen date corona vaccine tn rain master movie news

Next Story
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் ஜன. 25 வரை நீட்டிப்புpongal, pongal parisu, pongal prize, pongal prize collection, tamil nadu govt, பொங்கல் பரிசு தொகுப்பு, பொங்கல் பரிசு, ஜனவரி 25 வரை அவகாசம் நீட்டிப்பு, tn govt extended time, ration card holders may receive pongal prize collection with rs 2500, january 25
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com